1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் ரசித்த கவிதைகள்...

Discussion in 'Regional Poetry' started by kkmalar, Dec 4, 2011.

  1. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    ஊன் சிறப்பு

    முன்பதிவு செய்த பயண தினத்தில்
    வாழும் இடம் மாறும் வைபவத்தில்

    வழியப்பனுப்ப வந்தோரில் வகைக்கு ஒன்றாய்
    ஏழு பேரேனும் தேவை இருக்கையில் இருத்த.



    முன் அனுபவம் உள்ளவர் பின் தலை பிடிக்க
    மூவிரண்டு பேர்கள் முழுவதும் தூக்க
    பச்சை மூங்கிலை படுக்கை ஆக்கி
    கச்சை புதியதாய் முழுதும் போர்த்தி
    பாராத தேசத்திற்கு போகும் - திரும்பி
    வாராது உருவம்எந் நாளும்.



    காற்றிருந்த பாதையெங்கும் காலம் அடைத்தோ
    சேர்த்திருந்த சுமைகளின் பாரம் பொருட்டோ
    உயிர் நீத்த உடலில் பன்மடங்கு கூடும் எடை
    யுகங்கள் கடந்தாலும் உண்டோ இதற்கு விடை?



    நெஞ்சில் நெய்யூற்றி நெடுந்தீ மூட்டியபின்
    மின்கலத்தின் உள்விட்டோ மிதமான விறகிட்டோ
    ஒட்டி உறவாடிய ஒருகோடி நிமிடங்களை
    கட்டிப் பொட்டலமாய் கையிலே தந்திடுவார்.



    உடல் மெல்ல சாம்பலாகும் ஒரு நொடி காட்சி
    காலமே கடவுள் என்பதன் சாட்சி
    மிஞ்சிடும் நினைவுகள் உணர்வின் மாட்சி

    இறப்புகளில் சிறப்பது இறைவனின் ஆட்சி.
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a lovely post KKMalar. Enjoyed reading it. Thanks. -rgs
     
  3. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    OMG!! Wat a beautiful usage of language!! I am pretty impressed...... Malar All the bests... God bless
     
  4. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    மழை பெய்த வீதி...

    மழையாடும் தெருவில்

    நனைந்தோடும் நாய் போல்

    அலையும் நினைவை

    கழுவும் மழை.




    மேகநீர் பாசனத்தில்

    தேகவயல் உழுது
    ஞாபகங்கள் பயிரிடும்

    வாகனம் மழை.



    வசதியான இருக்கை; வந்து தொடும் தூறல்;

    உருகும் நினைவு பருகும் மழை

    பருகிய நினைவால் பருத்த மேகம்

    நினைவின் அடர்த்தியால் கறுத்த வானம்

    மீண்டும் நினைவை மழையாய் பொழிய

    மழையை நினைவாய் நாமும் அருந்த

    மழைக்கும் நமக்கும் இருக்கும் உறவு

    மனதையும் நினைவையும் இணைக்கும் விழுது.


     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீங்கள் ரசித்தவை அனைவரும் ரசிக்க உகந்தவை.....அழகான அர்த்தம் பொதிந்த வரிகள்! :thumbsup
     
  6. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    விதி

    இணையத்தில் பதிவு செய்த பயணச்சீட்டை
    இரண்டு பிரதி எடுத்து வைக்கும் வழக்கம் சிலருக்கு;
    பத்து ரூபாய் பெறாத பொருள் என்றாலும்
    பல கடை பார்த்து வாங்கும் பழக்கம் பலருக்கு;
    முதுமை காலத்தை முன்னரே திட்டமிட்டு
    இளமையிலே சேமிக்கும் திட்டம் சிலருக்கு;
    பத்து பொருத்தம் இருந்தாலே ஒத்து வரும் என்றெண்ணி
    திருமணம் செய்து கொள்ளும் தீர்க்கம் பலருக்கு;
    அனைத்திலும் திட்டமிட்டு தவறுகளை செப்பனிட்டு
    முழுமையான அர்பணிப்பே முதன்மையான உணர்வென்னும்
    முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் நம்மில் பல பேர்
    எதிர்பாரா ஒன்றில் ஏமாறுதல் ஏனோ
     
  7. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    வயதின் சுவை...

    நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது புரிஞ்சாச்சு
    உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
    தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
    வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
    தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
    ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
    அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு

    பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு

    மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு

    நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு

    காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.
     
  8. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    வயதின் சுவை...



    நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது புரிஞ்சாச்சு
    உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
    தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
    வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
    தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
    ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
    அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு
    பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு
    மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு
    நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு
    காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.​
     
  9. kkmalar

    kkmalar New IL'ite

    Messages:
    23
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    கடிதங்கள்...


    மனதிற்குள் கையை விட்டு நாம் எடுத்த உணர்வுகளை

    மையை ஊற்றி மசிய வைத்து பிரதி எடுக்கும் வடிவங்களை

    வார்த்தைகளில் படிய வைத்து தாள்களிலே தங்க வைக்கும்
    கடிதங்கள் நமக்கு காலத்தின் உயில்கள்;




    அஞ்சல்காரர் வருகை எதிர்பார்த்த தினங்கள்

    பிடித்தவரின் கடிதம் பிரித்திட்ட கனங்கள்
    இருகடித இடைவெளியில் உருண்டோடும் நாட்களில் -
    காத்திருப்பின் வாசனையில் பூத்திருக்கும் யோசனைகள்

    அன்பிற்கு உரமாக அடிமனதில் இறங்கி விடும்

    காலத்தை கூட்டி வந்து காகிதத்தில் பூட்டி வைக்கும்

    அற்புத குணம் அத்தகைய கடிதம் தரும்;




    கடிதங்களின் கடிவாளம் காலத்தை பிடித்திழுக்க
    எழுத்தின் மீதேறி எண்ணத்தில் அமர்ந்தபடி
    ஞாபக குதிரையின் நாலுகால் பாய்ச்சலிலே
    நினைவுச் சாலையிலே நீண்ட தூரம் போய்வரலாம்;


    விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலையோ-
    பணத்தின்பின் அனைவரும் பறக்கின்ற நிலையோ-
    அன்புப் பயிரில் அவசர களையோ-
    அற்புதமான எதையும் அவமதிக்கும் கலியோ-
    மின்னஞ்சல் நன்று என்றோம் குறுஞ்செய்தி கொண்டு வந்தோம்
    கடிதம் எழுதும் கலையை கையாலே கொன்று போட்டோம்.


    இனிமேல் வாராது கடிதமெழுதும் காலங்கள்
    இருக்கின்றவற்றையேனும் பாதுகாப்போம் வாருங்கள்
    அன்பின் பசை அதிலிருக்கும் தேடுங்கள்
    ஆண்டுக்கொரு முறை அதை படித்து பாருங்கள்
    அடுத்த தலைமுறைக்கு சொத்தாக தாருங்கள்.


     

Share This Page