1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் ரசித்ததை பகிர்கிறேன் இங்கு :)

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jun 17, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    திருமண மண்டபத்தில்...

    நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாக, திருமண மண்டபம் என்றால், அலங்கார விளக்குகள், தோரணங்கள் மற்றும் பலூன்களை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நண்பர் வீட்டு திருமணத்தில், புதுமையாக, பாசிட்டீவான, உற்சாகமூட்டும் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.

    மணமேடைக்கு நேர் எதிரில், மணமக்களை வாழ்த்துவது போல், 'மணவிழா காணும் மணமக்கள் மணிவிழா காண வாழ்த்துகள்...' மற்றும் 'இறைவனை வேண்டினால் பிறப்பது ஆண் குழந்தை; இறைவனே வந்து பிறந்தால் பெண் குழந்தை...' போன்ற வாசகங்களும், வரவேற்பு இடத்தில், 'அன்பளிப்பு பொருளின் மதிப்பை காட்டிலும், அன்பளிக்கும் விதமே மதிப்பு மிக்கது...' என்றும் பொன் மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.

    நல்லன பார்ப்பதும், நல்லன கேட்பதும் அரிதாகி விட்ட அவசர யுகத்தில், இம்முயற்சி பாராட்டும்படி இருந்தது.

    உமா அரசு, திருப்பத்தூர்.
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தாயிற் சிறந்ததொரு...

    புதிதாக மாற்றலாகி வந்த எங்கள் கம்பெனி கிளைமேலாளருக்கு, வாடகைக்கு வீடு பார்க்க, வீட்டு புரோக்கரை அழைத்து சென்றிருந்தேன். புரோக்கரிடம், மேலாளர், 'எங்க வீட்ல மனைவி, ஒரு குழந்தை மற்றும் எங்க அம்மான்னு நான்கு பேர் இருக்கோம். அதுக்கு தகுந்த மாதிரி வீடு வேணும். முதல் மாடியா இருந்தாக் கூட பரவாயில்ல; ஆனா, வீட்டுக்கு பக்கத்துல பட்டரை, பண்ணை, தொழிற்சாலை இருக்கக் கூடாது. அதைவிட நூறு மீட்டர் தூரத்திற்கு கோவில், தேவாலயம், மசூதி இல்லாம பாத்துக்கங்க...' என்றார்.

    'என்ன சார்... கோவில் இல்லாத ஊரில குடியிருக்க வேண்டாம்ன்னு சொல்லுவாங்க; நீங்க என்னடான்னா அப்படியே உல்டாவா சொல்றீங்களே...' என்றார் புரோக்கர்.

    அதற்கு மேலாளர், 'எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. அதனால, பெரும்பாலும் ராத்திரி அவங்களுக்கு தூக்கம் வர்றது இல்ல; அதிகாலையில கொஞ்ச நேரமும், மதியம் சிறிது நேரமும் தான் அசந்து தூங்குவாங்க. அருகில் வழிபாட்டு தலங்கள் இருந்தா, பூஜை, வழிபாடு, திருவிழான்னு ஒலி பெருக்கி சத்தம் இருக்கும். அதனால, அவங்க உடல்நிலை இன்னும் பாதிக்கும். அவங்களோட கடைசி காலத்தில அமைதியாவும், நிம்மதியாவும் இருக்கணும்ன்னு என் மனைவி தான் இந்த நிபந்தனைகளை போட்டிருக்காங்க...' என்றார்.

    புரோக்கர் சென்றதும் மேலாளரிடம், 'இந்தக் காலத்தில தன் சுயநலத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் பெற்றோரை தனியா விட்டுட்டு தனிக்குடித்தனமோ அல்லது வெளியூரோ ஓடிப் போயிடுறாங்க. ஆனா, நீங்க உங்க அம்மா மேலேயும், உங்க மனைவி, மேலேயும் காட்டுற அக்கறை, உண்மையிலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கு சார்...' என்றேன்.

    அவர் சிரித்தபடி, 'இந்த உலகத்துல அம்மாவ விட பெரிய கடவுள் எதுங்க... அவங்களுக்கு செய்ற பணிவிடைக்கு மேல ஒரு வழிபாடு இருக்கா...' என்றார்.

    அவரது வார்த்தைகளை யோசித்த போது, என் தாயை நேசிக்க வைத்தது!

    எஸ்.அழகுசுந்தர், மாடக்குளம்.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பிக்னிக்கும், சமூக சேவையும்!

    சமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி!' என்று எழுதப்பட்டிருந்தது.

    இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, புத்துணர்வு பயணமாக, எங்கள் பள்ளி மாணவ - மாணவியரை பூங்காவிற்கு அழைத்துச் வந்துள்ளோம். இன்று, ஒருநாள் அனுமதி தர வேண்டும்...' என்றனர்.

    உடனே, எங்களது அதிகாரியிடம் பேசினேன்; அவரும் அனுமதி வழங்கினார்.

    'காலை, 10:00 மணிக்கு உள்ளே நுழைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள், முதல் வேலையாக, அங்கே கிடந்த பாலித்தின் பைகள், கப்புகள், தண்ணீர் பாட்டில்கள், உடைந்த மரக் கிளைகள் மற்றும் சருகுகளை சுத்தம் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் பூங்கா தூய்மையாகியது. மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் விளையாடிய பின், எங்களுக்கு நன்றி தெரிவித்து கிளம்பிச் சென்றனர்.

    'நம்மை சுற்றியுள்ள இடங்களை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட அம்மாணவர்களையும், குறிப்பிட்ட பள்ளியையும் பெருமைப்படுத்தும் விதமாக, எங்கள் அதிகாரி தான், நோட்டீஸ் போர்டில் எழுதி வைக்கச் சொன்னார்...' என்றார்.

    பள்ளிக் குழந்தைகளை 'பிக்னிக்' அழைத்து சென்றதோடு அவர்களுக்கு சேவை மனப்பான்மையையும் புகுத்திய அந்த ஆசிரியைகளைப் பாராட்டத் தோன்றியது.

    ஆர்.கவிதா, மதுரை.
     
    1 person likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வண்டி ஓட்டுபவரிடம் பேச்சை தவிர்க்கலாமே!

    என் அலுவலக அதிகாரி ஒருவர், தொலைபேசி அல்லது கைபேசியில் பேச ஆரம்பிக்கும் முன், 'டிரைவிங்கில் இருக்கீங்களா... பேசலாமா...' என்று கேட்ட பின் தான் பேசுவார்.

    இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'நாம தொடர்பு கொள்ளும் நபர், ஒரு வேளை வாகனத்தில் சென்று கொண்டிருக்கலாம்; சிக்னலுக்கு, 'வெயிட்' செய்திருக்கலாம். அந்நேரத்தில் நாம் பேசுவது அவருக்கு இடையூறாக இருக்கும். அதைத் தவிர்க்கவே, முதலிலேயே இவ்வாறு கேட்டு விடுகிறேன்...' என்றார்.


    இதை எல்லாருமே பின்பற்றலாமே!

    என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சமூக அக்கறை; நல்ல விஷயம் தானே!

    என் சகோதரி நடத்தி வரும், ரெடிமேட் துணி நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் சிறப்பு சலுகைபற்றி, பிட் நோட்டீஸ் அடிக்க, அச்சகத்திற்கு சென்றிருந்தேன்.

    நோட்டீசை வடிவமைத்து, அதற்கான, 'புரூபை' என்னிடம் தந்தனர். நானும், அதில் இருந்த பிழைகளை திருத்தி, சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன்.

    அதை வாங்கியதும், அச்சக உரிமையாளர், 'இதை நாங்கள் பிரின்ட்டுக்கு கொடுக்கும் போது, கீழே அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரிக்கு அருகில், 'புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; குடி குடியை கெடுக்கும்; சாலை விதிகளை மதிப்போம்; பெண் குழந்தையை படிக்க வைப்போம்...' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கண்டிப்பாக அச்சிடுவோம். உங்களுக்கு விருப்பமான, சமூக விழிப்புணர்வு வாக்கியங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்; அச்சிட்டு தருகிறோம்...' என்றார்.

    நான், 'மரம் நடுவோம்; மழை வரம் பெறுவோம்' என்ற வாசகத்தை கூற, அதையே அச்சிட்டு கொடுத்தனர்.

    முற்றிலும் வணிக நோக்கத்தில் செயல்படாமல், சேவை நோக்கமும் கொண்ட அச்சக முதலாளியையும், அங்குள்ள ஊழியர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.

    ஜி. தாரணி, மதுரை.
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உஷாரய்யா உஷாரு!

    சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.

    கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.

    நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.

    'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.

    மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.

    எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!

    வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சமயோசித புத்தி!

    சமீபத்தில், பக்கத்து வீட்டுக்காரரும், என் நெருங்கிய நண்பருமான ஒருவர், எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டார். அவர், அடிக்கடி நண்பர்களிடம் கை மாத்தாக பணம் வாங்குவார்; சொன்னபடி திருப்பி கொடுத்தும் விடுவார். அவருடைய, 16ம் நாள் காரியம் முடிந்த மறுநாள், அவர் கடன் வாங்கி இருப்பதாக கூறி, நண்பர்கள் சிலரும், மற்றவர்களும் வந்தனர்.

    வந்தவர்களோ அவ்வளவு, இவ்வளவு என, இஷ்டத்துக்கு கூறினர்.
    நண்பரின் மனைவி அறையினுள் சென்று, ஒரு டைரியை எடுத்து வந்து, என்ன தேதியில், எந்த சந்தர்ப்பத்தில், யாரிடம் எவ்வளவு வாங்கினார் என்ற விவரத்தையும், அதில் எவ்வளவு திருப்பி கொடுத்துள்ளார் என்பதையும் கூறினார். இதைக் கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தங்கள் கணக்குகளை சரி பார்த்து வருவதாக கூறி, நைசாக நழுவினர்.

    நண்பர் மட்டும் கடன் விவரங்களை பதிவு செய்யாமலோ, மனைவியிடம் பகிராமலோ இருந்து இருந்தால், அவரின் காப்பீடு மற்றும் இழப்பீடு பணம் எதுவும் குடும்பத்திற்கு உதவி இருக்காது.

    ஆகவே, வாசகர்களே... நம் வாழ்க்கை நிச்சயமற்றது; எனவே நம்மை சார்ந்தோரை, நம் மரணத்திற்கு பின்பும் காக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை மறவாதீர்!

    ஜெ.மகேந்திரன், கோவை.
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குடும்பத் தலைவிகள் சிந்திக்கலாமே!

    சமீபத்தில், மதுரையில் உள்ள நண்பரைக் காண அவர் வீட்டுற்கு சென்றிருந்தேன். அன்று உடல்நிலை சரியில்லாததால், நண்பர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.

    'என்ன... நீ மட்டும் தனியா இருக்கே... எங்கே உன் மனைவி...' என்று நண்பரிடம் கேட்டேன். 'வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படின்னு மூன்று நாட்களுக்கான இலவசப்பயிற்சியில கலந்துக்க போயிருக்கா...' என்றார்.
    நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, பயிற்சி முடிந்து வந்த நண்பர் மனைவி, என்னை வரவேற்று, சிறுதானியங்களில் செய்யப்பட்ட சில தின்பண்டங்களையும், 'காளான் சூப்'பும் கொடுத்தார்.

    அத்துடன், தான் சென்று வந்த பயிற்சியைப் பற்றியும், இதற்கு முன், தான் பயிற்சி பெற்ற, 'சிறு தானியங்களில், தின்பண்டங்கள் செய்வது எப்படி, வீட்டில் காளான் வளர்ப்பு' போன்ற பயிற்சிகளை பற்றியும் தெரிவித்தார்.
    'இதற்கெல்லாம் எப்படி நேரம் இருக்கு?' என்று கேட்டேன்.

    அதற்கு அவர், 'காலையில பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பயிற்சிக்கு போயிடுவேன். மாலையில் பிள்ளைங்க வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன். இப்ப உங்களுக்கு கொடுத்த காளான் சூப் கூட, எங்கள் வீட்டில வளர்ந்த காளான்ல செய்தது தான்...' என்று கூறி, வீட்டின் மூலையில் இருந்த அந்த சின்ன காளான் குடிலைக் காட்டினார்.

    மேலும், அவர் கூறும் போது, 'சிறுதானிய தின்பண்டமும், நான் தயாரித்தது தான். இதுபோன்ற பயனுள்ள இலவசப் பயிற்சிகள்ல கலந்துக்கிறதுனால, எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிச்சுறலாம்ன்னு மனசுல தன்னம்பிக்கை வருது...' என்றார்.

    குடும்பத் தலைவிகள் பகலில், 'டிவி' சீரியல்களில் நேரத்தைக் கழிக்காமல், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகள் மீதும் கவனம் செலுத்தினால், குடும்பத்துக்கு நல்லதுதானே!

    எஸ்.ராமு, திண்டுக்கல்.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    //குடும்பத் தலைவிகள் பகலில், 'டிவி' சீரியல்களில் நேரத்தைக் கழிக்காமல், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகள் மீதும் கவனம் செலுத்தினால், குடும்பத்துக்கு நல்லதுதானே!//

    கவனித்து பின்பற்றினால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது :)
     

Share This Page