1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 6, 2011.

 1. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Hai friends,

  நான் உங்கள எல்லாம் கவிதைங்கற பெயராலையும், FB ங்கற பெயராலையும் கொடுமைப்டுத்தறது பத்தலையோனு தோனுச்சு :rotflஅதான் ஒரு வித்யாசமான முயற்சி, இதுக்காக இல்லாத மூளைய உங்களுக்காக ரொம்ப கஷ்ட பட்டு கசக்கி எழுதியிருக்கேன் அதுனால எல்லோரும் தயவுசெய்து படித்து நிறை,குறைகள சொல்லனும் பா....:bowdown

  உங்க கதைகள் எல்லாம் படித்த பின் என்னுள் ஓர் எண்ணம் அதில் உதித்தது தான் இந்த "நான் என்பதே நீயல்லவா" தோழிகளே படித்துவிட்டு குறை இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும் அது நான் என்னை மேம்படுத்தி கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் நன்றி!


  நான் என்பதே நீயல்லவா

  கோவை மாநகரம் காலை வேலையில் கடிகாரம் தன் செல்ல சினுங்களை வெளிப்படுத்த அதனை தட்டி அமைதிபடுத்திவிட்டு திரும்பி படுத்தான்.தன் செல்ல மகனின் செயலை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த லட்சுமியம்மாள்,
  "டேய் கும்பகர்ணா எழுந்திரி" என்றார்.
  கண்விழித்து தன் தாயின் முகம் பார்த்தான் ரிஷி(கைத்தட்டுங்க பா hero கோவிச்சுக்க போறாரு) அவரின் புன்னகை அவனையும் தொற்றிக்கொள்ள எழுந்தமர்ந்து "Good morning darling"என்றான்.
  "darling கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவ சொல்லறது "
  "நீ எனக்கு darling தான darling"
  "டேய் போக்கிரி உன்ன திருத்தவே முடியாது, சரி சரி சீக்கரம் கிளம்பு officeல முக்கியமான வேலை இருக்குனு சொன்னல"
  "அட ஆமா darling மறந்துட்டேன்" என்று கன்னத்தை தட்டிவிட்டு செல்பவனை நினைத்து சிரித்து கொண்டே தன் வேலைகளை பார்க்க சென்றார்.

  ரிஷியை பற்றின சின்ன அறிமுகம் வயது 27.சராசரிக்கும் சிறிதே அதிகமான உயரம் காந்த கண்கள் அளவான உடல் என எல்லாரும் விரும்படியான தோற்றம்.குருமுர்த்தி-லட்சுமியம்மாளின் ஓரே மகன், IT கம்பனியில் பணிபுரியும் அக்மார்க் youth.குருமுர்த்தி ஒரு ரிடைர்டு பாங்க் ஆபிசர்.மேல்தட்டு நடுத்தர குடும்பம் ரிஷியுடையது.ரிஷியை பொறுத்தவரை குருமுர்த்தியும்,லட்சுமியம்மாளும் தனது நண்பர்கள்.ஒரே பையன் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம் ஆனால் அதில் கண்டிப்பும் இருக்கும்.

  குளித்து தயாராகி வந்த தன் மகனை பார்த்த சிரித்தபடியே
  "good morning டா"என்றார் குருமுர்த்தி.
  பதிலுக்கு அவனும் கூறிவிட்டு கண்களில் குறும்புடன்
  "ஆமா அப்பா நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அந்த அன்ட்டி யாரு?"
  "எந்த அன்ட்டி"
  "அதான் பா நேத்து பைக்ல கூட்டிட்டு வந்தீங்களே?"
  "மகனே வேண்டாம் டா , உங்க அம்மா காதுல விழுந்ததுனா அவ்வளவு தான் தயவு காட்டு பா"
  "உங்கள பார்த்தா பாவமா இருக்கு பொழச்சு போங்க"
  "எல்லாம் நேரம் டா" என்று தலையில் அடித்து கொள்ள சிரித்து கொண்டே சாப்பிட்டனர் இருவரும்.
  நேரமாகவே சீக்கரம் கிளம்பினான்.

  --------------------------------------------------------------------------------------------------------
  திருப்பூர் மாநகரம் காலையில் குளித்து மங்களகரமாக வரும் தனது மகளை பார்த்து கொண்டிருந்தார் சரஸ்வதி.அவருக்கு தன் மகளை பார்க்கும் போதெல்லாம் பெருமையாகவும்,ஆச்சரியமாகவும் இருக்கும்.தங்களுக்கு ஆலோசனை சொல்லும் போது பெரியவளாகவும், சின்ன விஷயங்களுக்கு அடம்பிடித்து கொஞ்சும் போது குழந்தையாகவும் தெரிபவளை பார்த்து ஆச்சரியபடாமல் அவரால் இருக்க முடியவில்லை.தன் நினைவுலகத்தில் பயணித்து கொண்டிருந்தவரை உலுக்கி நிகழ்வுலகத்துக்கு கொண்டுவந்தாள் உத்ரா.
  "என்ன மா காலையிலையே கனவா? அப்பா எங்க?"
  "கோவில் போயிருக்காரு"
  "ஆமா நம்ம வீட்டு மகாராணி எழுந்திருக்கலையா?"
  "இதோ வந்துட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கிருத்திகா.
  "மகாராணிக்கு இப்ப தான் விடிஞ்சுதோ?"
  "ஆமாம் சேவகியே தற்போது தான் எனக்கு பொழுது புலர்ந்திருக்கிறது"
  "சேவகியா?நானா?"
  "நான் மகாராணி என்றால் நீ சேவகிதானே"
  "பிசாசே காலையே கடுப்பேத்தாதடி சொல்லிட்டேன்"
  "என்ன மொழி பேசுகிறாய் நீ ! உன்னை....யாரங்கே இவளை சிறையில் அடையுங்கள்"
  "உன்ன என்ன பண்ணறேன் பாரு........" என்று இருவரும் தங்கள் காலை சண்டையை ஆரம்பிக்க
  "ரெண்டு பேரும் ஆரமிச்சுடீங்களா? உத்தி வெளில போகனும்னு சொன்னல போ கிளம்பு,கீர்த்தி காலேஜ் போகலையா மணி என்னனு பாரு" என்று அடக்கினார் சரஸ்வதி.
  "உன்னை அப்பறம் பாத்துகறேன்" என்றுவிட்டு தன் தோழி விஜியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாள் உத்ரா.
  "வேவ்வ வேவ்வ " என பழிப்புகாட்டி விட்டு சென்றாள் கீர்த்தி.

  உத்ரா கோதுமை நிறம் உயரத்திற்கேற உடல்வாகு என பார்ப்பவரை மறுமுறை பார்க்க வைக்கும் அமைதியான அழகு.இப்போது தான் படித்து முடித்து வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறாள்.அவளின் தங்கை கிருத்திகா சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் கால்பத்திருக்கிறாள்.நல்ல உயரம் மாநிறம் பார்க்கும் அனைவரின் மனதிலும் ஒட்டிகொள்பவள்.இரட்டை வால் குறும்பு.அப்பா மல்லிகார்ஜுன் ஒரு பனியன் கம்பனியில் production planner ஆக வேலை பார்ப்பவர்.அம்மா சரஸ்வதி குடும்பதலைவி.நடுதர குடும்பம்.மல்லிகார்ஜுன்-சரஸ்வதி இருவருக்கும் மகள்கள் தான் உலகம்.இவர்களுக்கும் அப்படியே.

  விஜியின் தொலைபேசி பிஸி என வர இருமுறை முயற்சி செய்துவிட்டு அவள் விட்டிற்கு செல்ல தயாரனாள்.
  விஜி சரணிடம் பேசிக்கொண்டிருந்ததால் உத்ராவின் அழைப்பை கவனிக்கவில்லை.

  விஜி சிகப்பு நிறம் சராசரி உயரதோடு சிலிம்மாக அழகாக இருப்பாள்.கண்ணன்-பிரபாவதியின் சிமந்த புத்திரி.வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகம்.இவளும் படித்து விட்டு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறாள்.கண்ணன் பனியன் கம்பனியில் வேலை பார்கிறார்.பிரபாவதி வீட்டரசி.விஜி,உத்ராவின் நட்பின் வயது இரண்டு மாதங்களே ஆனால் இருநூறு ஆண்டுகள் போல் தோன்றியது இருவருக்கும்.

  சரண் விஜியின் பெரியப்பா பையன்(ரிஷிக்கு மட்டும் தான் கைதட்டுவீங்களானு....... சரண் கேட்கறான் பா நான் இல்ல).பெருமாள்-ராஜாத்தியின் செல்ல மகன்.உடன்பிறந்தவர்கள் இல்லையேன்பதால் சரண்-விஜி இருவருக்குள்ளும் பாசம் அதிகம்.சரண் சென்னையில் வேலை செய்கிறான்.

  உத்ரா விஜியின் வீட்டுக்கு வந்து ஹாரன் செய்ய உள்ளிருந்து அவரமாக வெளியே வந்தனர் விஜியும்,பிரபாவதியும்.
  "உத்ரா உள்ள வந்து காபி சாப்பிட்டு போ மா ...."
  "இல்ல அன்ட்டி டைம் ஆச்சு"
  "எப்பவும் வெளியிலையே வந்துட்டு போயிடறையே,எங்க வீட்டுகுள்ள வரமாட்டியா?"
  "அப்படியேல்லாம் இல்ல அன்ட்டி evening கண்டிப்பா வரேன்,நல்ல டிபன் செஞ்சு வைங்க வந்து ஒரு பிடி பிடிச்சுடரேன்"
  "கண்டிப்பா வரணும்"
  "கண்டிப்பா அன்ட்டி"
  "வரோம் அன்ட்டி"
  "வரோம் மா" இருவரும் கிளம்பி சென்றனர்.

  அறிமுக படலம் முடிந்தது...........
   
  4 people like this.
  Loading...

 2. lovelyme

  lovelyme Silver IL'ite

  Messages:
  388
  Likes Received:
  244
  Trophy Points:
  93
  Gender:
  Female
  Nice start...... adutha chapter eppo varum?
   
 3. AkhilaaSaras

  AkhilaaSaras Gold IL'ite

  Messages:
  1,514
  Likes Received:
  396
  Trophy Points:
  160
  Gender:
  Female
  hiya jolly next kadhai start aiduchu... idhula yar yarru jodi nu aduthadhula solidu seriya
   
 4. prana

  prana IL Hall of Fame

  Messages:
  5,231
  Likes Received:
  2,560
  Trophy Points:
  340
  Gender:
  Female
  thaen, vaazhkkaila oru nalla mudivu eduththirukka pola..
  aarambam nalla irukku..unnudaiya narrationum romba iyalba iruku..good...

  iththanai characters solli iruka..nan ovvanna manasula padhiya vaikanum ini..
  all the best..apparam varikku vari konjam gap venum madam...appadhan engalukku padikka easy a irukum...
   
 5. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Hi, Kadhai superah start aagi irukku. so many characters. Very eagerly waiting for the next update...........
   
 6. Vasupradha

  Vasupradha Gold IL'ite

  Messages:
  448
  Likes Received:
  330
  Trophy Points:
  123
  Gender:
  Female
  Hi thaen,:hiya

  Unga paer madhiri ye, intro.........is so chweet..:cheers... But triangular love, oruthar mattum azhanum,:drowning appadi illama.......... super ah .......... jolly ah.......3 beautiful pairs ooda... azhagaana romance continue pannunga..................... Best wishes!!!!!!!!!!!!!!!!:thumbsup

  Vasupradha.S
   
 7. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Thanks lovely...........
   
 8. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks aki pa.......
   
 9. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thank u very much prana pa ........,

  gap follow pannikaren pa.....
   
 10. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks priya pa.......
   

Share This Page