1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 7

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 17, 2011.

 1. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  நான் என்பதே நீயல்லவா - 7
  மாலை நேரம்.

  உத்ராவுடன் ரிஷியும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான்.தூரத்திலையே ரிஷியை பார்த்துவிட்ட விஜி அவனிடமிருந்து கண்களை அகற்றவில்லை.வந்தவன் பெயருக்கு அவளிடம் "hai யும் , sorryயும்" சொல்லிவிட்டு உத்ராவிடம் தான் பேசி கொண்டிருந்தான்அலுவலக விஷயமாக தான். வாய் தான் பேசிகொண்டிருந்ததே தவிர இருவரின் கண்களும் விஜியின் மேல் தான் இருந்ததது ஆனால் வேறு வேறு சிந்தனையில். ரிஷி அவளை அனுஅனுவாக ரசித்து கொண்டிருந்தான் என்றால் உத்ரா அவளை அளவிட்டு கொண்டிருந்தாள்.விஜியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தாலும், கண்ணில் வலி தெரிந்ததை காண தவறவில்லை அவள்.

  ரயில் கிளம்ப ரிஷி இருவரிடமும் விடைபெற்றுகொண்டு புறப்பட்டான்.ரயிலில் ஏறி அமர்ந்த இருவரும் சிறிது நேரம் பேசி கொள்ளவில்லை. அவளின் மனநிலையை அறிந்து கொள்ள மெதுவாக பேச்சுகொடுத்தாள் உத்ரா.


  "விஜி ரிஷி நல்லவர் இல்ல டி"

  "அதுக்கென்ன இப்போ?"

  "இல்ல அவரு நல்லவருனு சொன்னேன்"

  "இருந்துட்டு போகட்டும்"

  "ஏய் ஏன் டி இப்படி பேசுற?"

  "பின்ன எப்படி பேச சொல்லுற?"

  "ஏதுக்கு கோவப்படற?"

  "எனக்கென்ன கோவம்"

  " நான் ரிஷிகிட்ட பேசினது தான் உனக்கு கோவமா?"

  ".................."

  "பதில் பேசு டி"

  "................"

  "நான் அவர்கிட்ட பேசுனா உனக்கேன்னடி?" அவள் கேட்டது குறும்பாக தான் ஆனால் விஜி வேறு விதமாக எடுத்துகொண்டாள்.

  "எனகென்னவா? சரி......எனகென்ன நீ எப்புடியோ போ....., எவங்கூட வேணா பேசு , என்ன வேண்ணா செய், எனக்கென்ன வந்தது" கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசி கொண்டிருந்தாள்.

  "ஏதுக்கு இப்ப கத்தற"

  "நா ஏன் கத்தனும்? நீ என்ன வேண்ணா செய் நான் ஏன் கேட்கனும்?நான் யார் கேக்கறதுக்கு?"

  "என்ன பேசுறனு தெரிஞ்சுதான் பேசறியா?"

  "தெரிஞ்சு தான் பேசுறேன்"

  "நீ எனக்கு யாரும் இல்லையா?"

  "இல்ல"

  அதற்குள் வண்டி நிற்க விடுவிடுவென வீட்டிற்கு நடந்தாள்.அவளின் மனம் உலைகளமாக கொதித்து கொண்டிருந்தது.ரிஷி எப்படி அவளுடன் சிரித்து பேசலாம்? அவன் தான் பேசினான் என்றால் இவளுக்கு அறிவு எங்கே போயிற்று?என்னை கண்டுகொள்ளாமல் அப்படி என்ன சிரித்து பேச்சு? என்று சுற்றி சுற்றி அவர்கள் இருவரும் சிரித்து பேசியது தவறு என்ற வழியிலேயே யோசித்தாள் இல்லை காதல் அவளை அப்படி யோசிக்க வைத்தது.யோசிக்க யோசிக்க அவளுக்கு அழுகையே வந்தது.வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் அவளுடய அறைக்கு சென்று கதவை சாத்திகொண்டாள்.


  உத்ராவின் மனநிலையோ பாதி சந்தோஷமாகவும் பாதி வருத்தமாகவும் இருந்தது.ரிஷி இன்று அவளிடம் பேசிய காட்சியை மனதில் ஓட்டினாள். தன்னை நோக்கி வந்த ரிஷி பார்த்து புன்னகைத்தாள் உத்ரா.

  "உட்காரலாமா?"

  "உட்காருங்க" எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

  "என்ன உங்கள பாக்கவே முடியல?"

  "ம் கொஞ்சம் work அதான்"

  "உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்"

  "கேளுங்க"

  "தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள்ள"

  "கேளுங்க"

  "உங்க ப்ரண்ட பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..........." இதை கேட்ட உத்ரா சிரிக்கலானாள் அவன் பீடிகையிட்டதில் என்னமோ என்று நினைத்திருந்தவள் அவன் விஜியை பற்றி கேட்கவும் சிரித்துவிட்டாள்.

  "ஏன் சிரிக்கறீங்க?"

  "வாங்க போங்க வேண்டாம் சும்மா வா போனே கூப்பிடுங்க"

  "சரி ஏன் சிரிக்கற?"

  "ஒன்னும் இல்ல எந்த ப்ரண்ட பத்தி?" அவன் விஜியை தான் கேட்டான் என்று தெரியும் ஏனெனில் அலுவலகத்தில் அவ்வளவு புதியவர் யாருமில்லை அதோடு அவளுக்கு நெருங்கிய பழக்கமும் இல்லை ஆனாலும் வேண்டுமென்றே கேட்டாள்.

  "அதான் அன்னைக்கு உன் கூட வண்டில வந்தாங்களே"

  "ஓ....... விஜியா?"

  "விஜி விஜி " தனக்குள் முனு முனுத்து கொண்டான் " அவங்க தான்"

  "அவள பத்தி என்ன தெரியனும்? ஏன் தெரிஞ்சுகனும்?"

  ரிஷியை பற்றி அலுவலகத்தில் இருப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறாள் அவளும் ஒரு சில சமயம் பார்த்தும் இருக்கிறாள். பெண்களை கண்ணியமாக நடத்துவதும், சகஜமாக பேசுவதும், அவனின் தன்மையை காட்டியது. தன்னிடம் ஒரு ஆர்வத்துடன் அவன் பேச வருவது ஏன் பலமுறை யோசித்திருக்கிறாள். அதற்கான விடை இப்போது தெரிந்தது அவளுக்கு. அவனது கண்களில் இருக்கும் பயம் சொல்லியது அவன் விஜியை காதலிக்கிறான் என்று.அவனுடன் பேசிவது இல்லையே தவிர அவனிடம் மரியாதை வைத்திருந்தாள்.அவன் விஜியை காதலிப்பது தெரிந்ததும் அன்னியம் போல் தோன்றாமல் நன்றாக பேசினாள்.

  "இல்ல ......அது.........வந்து......"

  "ம் சொல்லுங்க"

  "நான்........அவள ........."

  "காதலிக்கறீங்களா, love at the first site இல்லையா?"

  "எப்படி தெரியும்?" அதித ஆச்சரியதோடு

  "உங்க கண்ணு தான் சொல்லுச்சு" வெட்கசிரிப்பு சிரித்தான் அவன்.

  உத்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது விஜிக்கு ஏத்த ஜோடி தான் ஆனால் விஜி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லையே அன்று ரிஷியை பற்றி சொன்ன போதுகூட கோபட்டாளே ஆனாலும் அன்று அவள் சந்தோஷமாக தான் இருந்தாள். அவள் என்ன நினக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள தான் இப்படி ஒரு திட்டத்தையும் போட்டாள். அதன் படி தான் அனைத்தும் நடந்தது. ஆனால் இப்படி பேசுவாள் என்று அவள் நினைக்கவில்லை. கோபத்தில் என்று எவ்வளவு தான் சமாதான படுத்த முயன்றாலும் ஏதோ ஒன்று உறுத்தியது.அதை ஒதுக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

  சரஸ்வதி இவள் வரவை எதிர்பார்த்துகொண்டிருந்தார். உத்ரா வேலைக்கு செல்ல ஆரம்பித்திலிருந்து தன் சிறிய மகளிடம் மாற்றங்களை உணர்ந்தவர் அவளிடம் கேட்க அவள் பரிட்சை என்று காரணம் கூறினாள்,அவரும் அதை அப்படியே நம்பினார். ஆனால் தேர்வு முடிந்து வாரம் ஒன்றாகியும் அவள் அப்படியே இருக்க காரணம் கேட்ட போது மறுத்தாள் ஆனால் அதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை அவருக்கு தெரியாதா அவரது மகளைபற்றி இதை குறித்து பேச தான் உத்ராவை எதிர்நோக்கிகொண்டிருக்கிறார். அவருக்கு தன் பெரிய மகளின் முடிவு எந்த காரியத்திலும் சரியாக தான் இருக்கும் என்பதில் நம்பிகை உண்டு. அதே நம்பிகை எந்த ஒரு விஷயத்தையும் சரியாக கையாளுவாள் என்பதிலும் இருந்தது.அதோடு பெரியவர்கள் பேசுவதை காட்டிலும் சிறிவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசினால் தயக்கமில்லாமலும் இருக்கும்,தெளிவும் பிறக்கும் என்று தோன்றியது அவருக்கு.


  பி.கு: தோழிகளே தாமததிற்கு மன்னிக்கவும்.கொஞ்சம் உடல்நிலை சரியில்ல பா அதான் இவ்வளவு லேட்.இனி எப்பவும் போல அப்டேட் கொடுப்பேனு நினக்கிறேன் லேட் ஆனாலும் கொஞ்சம் பொறுத்துகுங்க மக்களே.......
   
  7 people like this.
  Loading...

 2. sowmyasri0209

  sowmyasri0209 Gold IL'ite

  Messages:
  1,639
  Likes Received:
  435
  Trophy Points:
  158
  Gender:
  Female
  me first.......comments padichchuttu apram podareyn.......
   
 3. sowmyasri0209

  sowmyasri0209 Gold IL'ite

  Messages:
  1,639
  Likes Received:
  435
  Trophy Points:
  158
  Gender:
  Female
  Hey thean...... take care of your health da... kadhaya apram kudukkalaam onnum thappilla udamba nalla paathukka.....
   
  1 person likes this.
 4. Vasupradha

  Vasupradha Gold IL'ite

  Messages:
  448
  Likes Received:
  330
  Trophy Points:
  123
  Gender:
  Female
  hi thaen,

  Take care of your health.... and super ah 3 pairs ooda kadhai naala irukku, problem illama poogudhu nu , enjoy panna, you are making frendz to fight..... No No neenga chamathu ponna, azhagaa, innum 2 posts kulla , frendz kulla chinna ladaai nu mudichudanum........... Cho sweet.......seri eppo uthra , charan meet panradhu....charan eppo propose pannuvar. Eagerly awaiting!!!!!!!!

  Vasupradha.S
   
 5. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  Hi Then,

  Take care of your health ma. Very nice update. Jodi ellam clear aayiduchu ini avangaloda vazhkai thisaiyai parpom...........
   
 6. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hai ma...
  how are you now?????
  rishi manasula viji nu solliteenga... jolly.....
  viji oda kovam super... parklam rishi epdi samalikrannu......
   
 7. priyangamurali

  priyangamurali Bronze IL'ite

  Messages:
  282
  Likes Received:
  46
  Trophy Points:
  48
  Gender:
  Female
  hai thaenu
  ellaa updates um serthu ore moochula padichen ....super pa :) :) :) kalakkureenga thaenu ....detailed feedback naalaikku tharenda :) gud going :)
   
 8. AkhilaaSaras

  AkhilaaSaras Gold IL'ite

  Messages:
  1,514
  Likes Received:
  396
  Trophy Points:
  160
  Gender:
  Female
  nice episode dear honey... continue
   
 9. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  எங்க ரொம்ப நாளா ஆள காணோம்னு பார்த்தேன் வந்துடீங்க..... thanks pa
   
 10. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  thanks sowmy pa....... now i m ok pa...... thanks pa...

  keep reading pa.....
   

Share This Page