1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 4

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 9, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நான் என்பதே நீயல்லவா - 4


    திருப்பூர் ரயில்நிலையத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தனர் முவரும்.
    ரயிலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.தங்களை நோக்கி தெரிந்த முகமாக ஒருவன் வருவதை பார்த்தாள் உத்ரா.யாரிவன் என்று யோசித்த படியே அமர்ந்திருக்க, அருகில் வந்த விக்னேஷ்

    "நீங்க உத்ரா தானே?"

    "ஆமா, நீங்க?" என்றாள் குழம்பியபடியே

    "என்ன மறந்துட்டியா? விக்னேஷ் schoolல நாம ஒன்னா படிச்சோமே?"

    "அட ஆமா sorry da சட்டுனு ஞாபகம் வரல, எப்படி இருக்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க?"

    "இல்ல இப்போ....... 1 year ஆச்சு...... விபத்துல" கண்களில் வலியுடன்

    "sorry da, உக்காரு" பக்கதிலிருந்த சீட்டை காண்பித்தாள்.

    "பரவால்ல என்ன மறந்துட்ட இல்ல"

    "இல்ல டா முகம் பார்த்த மாதிரி இருந்தது ஆனா,ஞாபகம் வரல"

    "ம்ம் இருக்கட்டும்" என்றபடி கீர்த்தியையும் விஜியையும் பார்த்தவன் கல்லாக சமைந்தான்.என்ன ஒரு அழகு? என்னை என்னவோ செய்கிறாள் என்று எண்ணமிட்டபடியே கீர்த்தியை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தான்.

    "விக்கி ...விக்கி" உத்ரா இரண்டு முறை உலுக்கிய பின்பே நிலைக்கு வந்தவன்.

    "என்ன ஆச்சு?" என்றவளுக்குஎன்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து பின்

    "ஓன்னுமில்லை" என்றான்.

    "இது கீர்த்தி என் தங்கை, இது விஜி என் ப்ரண்ட்" என்று அறிமுகம் செய்தாள்.

    "hai" என்றான் இருவரையும் பார்த்து (முக்கியமாக கீர்த்தியிடம் தான் பார்வை இருந்தது ஆனால் யாரும் அறியாத படி)

    இருவரும் பதிலுக்கு கூறினர். பேச்சும் வளர்ந்தது,அனைவரை பற்றியும் தெரிந்து கொண்டான்(கீர்த்தியை பற்றி தான் முழுவதும்).தன்னை பற்றியும் கூறினான்.விஜிக்கு வேலை கிடைத்த இடத்தில் தான் விக்கியும் வேலைப்பார்கிறான் என்பது தெரிந்ததும் விஜியை பாதுகாப்பாக தான் பார்த்து கொள்வதாக உறுதி கூறினான்.அதற்குள் ரயில் நிற்கவும்,நால்வரும் இறங்கி பேசியபடியே வாயிலை வந்தடைந்தனர்.நால்வரும் முன்று திசையில் செல்லவேண்டியதால் விடைபெற்றனர்.

    விக்னேஷ் சராசரிக்கும் அதிகமான உயரம் அதற்கேற உடல் வாகு,மாநிறமும் இல்லாத வெள்ளையும் இல்லாத நிறம்.சிரித்தால் கன்னத்தில் குழிவிழும் அழகுடன் இருப்பான்.
    தந்தையும், தாயும் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். தனக்கு தானே துணை என்று இதுவரையில்,அவர்கள் வைத்துவிட்டு சென்ற பணத்தை கொண்டு கடைசி வருட படிப்பை முடித்து ஒரு வேலையையும் தேடிகொண்டான்.தனியாக இருப்பது நரகம் தான் என்றாலும் பழகிகொண்டான். தனிமையை போக்க சிரித்து பழகினான்.கீர்த்தியை பார்த்தவுடன் ஏனோ அவள் தனக்கு எல்லாமாய் இருப்பாள் என்று தோன்றியது அவனுக்கு.உத்ராவை கண்டதில் மிக்க மகிழ்ச்சி அவனுக்கு.(இருக்காதா பின்ன)



    கீர்த்திக்கோ தன் உணர்வுகளை என்னென்று அறிய முடியவில்லை.அவன் தனக்கென்று யாருமில்லை என்று கூறியதும் "ஏன் நான் இல்லையா?" என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.தனக்கு ஏன் அப்படி தோன்றியது? என்று குழம்பியபடியே கல்லூரிக்கு சென்றாள்.


    முதலில் அவன் அப்படி சொன்னதும் உத்ராவின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது, தன் நண்பனுக்காய் அடக்கிகொண்டாள்.உத்ராவும் அவனும் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒன்றாக படித்தனர்.அவளை பொறுத்த வரை விக்கி ஒரு நல்ல மனிதன், உன்னதமான நண்பன்.அவனின் தாயை அவளுக்கும்,சரஸ்வதிக்கும் நன்றாக தெரியும் பள்ளி பார்த்து பழக்கம்.சரஸ்வதியும் அவரும் நல்ல நண்பர்கள்.பள்ளி படிப்பு முடிந்த பின் உத்ரா, விக்கி இருவருக்குள்ளும் தொடர்பு இல்லாமல் போனது.இனி அவனும் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்று நினைத்துக்கொண்டாள்.அவனுக்கும் இந்த நினைப்பை வரவைக்க வேண்டும் என்றும் எண்ணினாள். விஜி அந்த நிமிடத்திலிருந்து தன் நண்பனாய் ஏற்றுகொண்டாள்.அவனும் அப்படியே.


    விக்கியின் துணை இருந்ததால் விஜிக்கு கொஞ்சம் தைரியம் கூடி, அன்றய பொழுது நன்றாக சென்றது.

    உத்ரா படபடப்புடன் சென்று மேலாரை பார்த்து ஆசிபெற்று தன் இடத்தில் அமர்ந்தாள்

    அலுவலகத்தில் நுழைந்த ரிஷி தன் வேலைகளை கவனிக்கலானான் தன் நண்பனிடம் சந்தேகம் கேட்க வந்தவன் அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்து என்ன என்று பார்க்க சென்றான் கூட்டத்தின் நடுவில் உத்ரா அமர்ந்திருந்தாள்.அவளை கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தனர் அனைவரும்.

    உத்ராவை கண்ட ரிஷிக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை என்ன செய்வதென்று அறியாத நிலை.தன் காதலே வென்றுவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

    உத்ராவின் அருகில் சென்றான். அவனை கண்டதும் உத்ரா முகம் திருப்பினால் சோர்ந்தாலும் வலிய சென்று தன்னை அறிமுகபடுத்திகொண்டான்.அன்று நடந்து கொண்டதுக்கு மன்னிப்பும் கேட்டு கொண்டான்.


    பி.கு:- சிறிது வேலை அதிகம் என்பதால் சிறிய பதிவுகளை இடுகிறேன் கோபித்து கொள்ளாதீர்கள் தோழிகளே! இரண்டு நாட்களில் பெரிய பதிவிடுகிறேன்.தங்களின் பின்னோட்டத்திற்கு பதிலும் தாமதமாகவே இடுகிறேன் மன்னிக்கவும்.





     
    1 person likes this.
    Loading...

  2. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Itz ok dear theanu....... anyways story if flowing smooth... nalla irukku... vazhthukkal
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    keerthi kum jodi vandhachu .. jolly ma...
    rishi oda sandhosam avan aaloda friend ah pathathukkaga irukkanum..
    superb....
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks lovely.......
    keep reading pa & giv ur valuable comments
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    thanks suganya pa..........
    rishi oda sandhosam ethukaka sikkaram sollaren pa......
    keep reading pa & giv ur valuable comments
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ரிஷி உத்ராவை நாடியது அவளைப் பற்றி அறியவா? அல்லது அவள் தோழியைப் பற்றி அறியவா? ஐயோ மொழி.......என்னை இப்படியே கேள்வி கேட்க பிறந்தவளா ஆக்கிடுவீங்க போல இருக்கே!:drowning
     
  7. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    hai thenu...

    indru than ungal anaithu paguthigalaiyum ondraaga padithen.. sorry pa.. latea vanthatharku.. konjam velai pazhu jasthi athan.

    thenu.. kathaiyai then pol inimaiyaaga koduthirukeenga pa..

    Viji thaan ithula villiya vara pogiraalaa.. Rishi uthravin kaathalukku..
    irunthalum Vikkikum, keerthikkum paarthavudan pacchak endru superaga ottik kondathu pa..
    supera poguthu kathai.. adutha paguthikkai waiting..

    Anu
     
  8. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நன்றி தேவா,

    சீக்கரம் சொல்லிடரேன்,
    தொடர்ந்து படிச்சு, பின்னுட்டம் தாங்க பா........
     
  9. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female

    அனு பா,

    நன்றி.......
    நீங்க ஒரு வரி நல்லா இருக்குனு சொன்னதே போதும் பா, sorry லாம் எதுக்கு...........
    ஆனா பாவம் பா விஜி அவள வில்லியாகிடீங்களே.......
    தொடர்ந்து படிச்சு, பின்னுட்டம் தாங்க பா........
     
  10. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Ayo thean kulaputreengalaey..............
     

Share This Page