1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா-3

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 8, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    நான் என்பதே நீயல்லவா-3


    காலையில் கண்விழித்த ரிஷிக்கு உற்சாகம் கரைபுரண்டது , எழுந்ததிலிருந்து ஒரு வித துள்ளலுடன் கிளம்பியவனை தொடர்ந்தன நான்கு விழிகள்.தயாராகி சாப்பாடு மேடைக்கு வந்தான்.
    குருமுர்த்தியும்,லட்சுமியம்மாளும் இவனுக்காக காத்திருந்தனர்.

    "good morning பா , good morning மா" என்றான் இருவரும் பதிலுக்கு கூறினர்.

    "இன்னைக்கு என்ன ஸ்பெஷல் darling"

    "ம்.... இட்லி"

    "ஒ சரி சரி " என்று சாப்பிட ஆரம்பித்தான்.குருமுர்த்தி மெதுவாக கேட்டார்.

    "யாரு டா அந்த பொண்ணு?"

    "தெரியல பா....... என்..ன எ..எந்த பொண்ணு?"

    "நீ எந்த பொண்ண சொன்னீயோ அந்த பொண்ணு" என்றார் லட்சுமியம்மாள்

    "அம்மா அது...... வந்து..."

    "ம் சொல்லுடா நாங்க போய் பேசட்டுமா?" என்று ஆர்வமானார் லட்சுமியம்மாள்

    "ஆமா சொல்லுடா சீக்கரம் பேசிடலாம்" (இப்படியல்லவா parents இருக்கனும்)

    "எனக்கே யாருனு தெரியாது"

    " என்னடா சொல்லற" என்றனர் இருவரும் ஒரே குரலில்

    அவனும் இரவு நடந்ததை முழுவதுமாக கூறினான் அதை கேட்டு பெற்றவர் சோர்ந்துவிட்டனர் . கல்யாணம் என்ற பேச்சை கேட்டவுடன் நழுவுபவனை இப்போதாவது திருமண கோலத்தில் பார்க்கலாம் என்று கனவு கண்டனர் அதில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை இருவரும்.இருப்பினும் ஏதோ ஒரு நம்பிகையில் அவனுக்கு அவளை மணமுடித்து வைப்பதாக கூறினர்.


    சாலையில் செல்லும் பெண்களை ஒரு முறை உற்று அவள் தானா என்று பார்த்து விட்டு செல்லும் தன்னை நினைத்தால் ரிஷிக்கு ஆச்சரியமாகவும்,சிரிப்பாகவும் இருந்தது.இப்படியே ஒரு வாரம் ஒடிவிட்டது.அவனுள் அவள் நினைவுகள் வளர்ந்து கொண்டே சென்றதே தவிர குறையவும் இல்லை.


    ஒரு நாள் காலையில் உத்ராவிற்கு கோவையில் உள்ள ஓர் வளர்ந்து வரும் IT கம்பனியில் இருந்து பணிநியமன கடிதம் வந்திருந்தது.அதை கொண்டுவந்து பூஜையறையில் வைத்தவள் அனைவரையும் தேடினாள் சரஸ்வதி மட்டுமே விட்டீலிருந்தார்.மல்லிகார்ஜுன் வேலைக்கு சென்றிருந்தார்,கீர்த்தி காலேஜ் கு சென்றிருந்தாள்.ஒடிவந்தவள் அன்னையிடம் கூறி அவரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள்.இரவு தந்தையிடமும்,தங்கையிடமும் கூறினாள்.தாய் தந்தை காலில் விழுந்து ஆசியும் பெற்றாள்.மற்றவர்களை பொறுத்த வரையில் இது அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் அன்றாட தேவைக்கே கஷ்டபட்ட இவர்களுக்கு இது மிக பெரியதாக தோன்றியது.

    "ரொம்ப சந்தோஷமா இருக்குடா, நீ இன்னும் மேன்மேலும் வளரனும் டா" என்று தழுதழுத்த குரலில் கூறினார் மல்லிகார்ஜுன்.உத்ரா அவரை கட்டிக்கொண்டாள் இதை பார்த்த சரஸ்வதிக்கும்,கீர்த்திக்கும் கண்ணீர் எட்டி பார்த்தது சூழ்நிலையை மாற்றவேண்டி தமக்கை சீண்டினாள் கீர்த்தி.

    "அழாதீங்க மா நாம என்ன பண்ண முடியும் அந்த கம்பனியொட தலையெழுத்து " இவள் இப்படி சொல்லவும் முவரும் முழித்தனர்.கீர்த்தியோ தள்ளி நின்று தொடர்ந்தாள்.

    "இவள்ளாம் அங்க வேலை செய்யனும்ங்கறது" என்று விட்டு உத்ரா முறைப்பதை பார்த்து ஓட தொடங்கினாள்.

    "ஏய் நில்லுடி பிசாசே நீ என்கிட்ட அடிவாங்கிட்டு தான் தூங்கபோற பாரு" என்று அவளை துரத்த ஆரமித்தாள் உத்ரா சிறிது நேரம் துரத்திவிட்டு முடியாமல் கோபத்தொடு அமர அருகில் வந்து கைகொடுத்து"congrates அக்கா" என்று அவளை அணைத்து தன் மகிழ்ச்சியையும் வெளிபடித்தினாள் கீர்த்தி.பொதுவாக கீர்த்தி உத்ராவை அக்கா என்று அழைக்க மாட்டாள் நெகிழ்ச்சியான நேரத்தை தவிர, அதனால் அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது உத்ராவுக்கு புரிந்தது.இதை பார்த்த பெற்றவர்கள் மனமோ "கடவுளே இவர்களை என்றும் இப்படியே மகிழ்ச்சியாக வைத்திருப்பா" என்று வேண்டிக்கொண்டது.

    பின் விஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினாள் பதிலுக்கு அவள் தனக்கும் வேலை கிடைத்திருக்கிறது என்ற நல்ல விஷயத்தை கூறினாள்.இருவரின் மகிழ்ச்சியில் தத்தளித்தது ஒரே வருத்தம் என்னவென்றால் இருவருக்கும் வெவ்வேறு கம்பனியில் வேலை கிடைத்திருந்தது.சரி பரவாயில்லை என்று விட்டுவிட்டனர்.

    விபத்து சம்பவத்தை இருவரும் வீட்டில் சொல்லி இருந்ததால் கண்டிப்பாக வண்டியில் செல்லகூடாது என்று இருவிட்டினரும் கண்டிப்பாக கூறிவிட்டனர் அதனால் கீர்த்தியுடன் train ல் செல்வது என்று முடிவானது.

    உத்ராவின் வீடும்,விஜியின் வீடும் கொஞ்சம் பக்கம் என்பதால் ஒன்றாக முதல் நாள் காலையில் எழுந்து கோவில் சென்று "கடவுளே இதற்கு பிறகு எங்களின் குடும்பமும் , நாங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்று வேண்டிகொண்டு புறப்பட்டனர்.

    கடவுளுக்கு இவர்களின் வேண்டுதல் கேட்டிருக்குமா? வேண்டுதல் பலிக்குமா பொறுத்திருந்து பார்போம்................
     
    2 people like this.
    Loading...

  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Me first.......... Yenna ma yedhuvum vettu vaikkatha...... Happyavey yezhudhuda.....
     
  3. bsaranya

    bsaranya Senior IL'ite

    Messages:
    56
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hai, rishi yaara virumburan?utra?
     
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    nallaa irundhadhu Theanu...

    suspense-a pogudhu... rishikku jodi yarnnu therinjukka aavalaa irukku...
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Enna Then intha Episodelayum Rishikku yaar jodinnu sollave illaye???????
    Episode vera chinnatha irunthuthupa........waiting eagerly for the next episode.......
     
  6. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஆரம்பம் நல்லா இருக்கும்மா தேனு..

    எக்கச்சக்க கேரக்டர்ஸ்..அவ்வளவு பேர் மனசுல ஓடறதையும் சரியான சமயத்துல சரியா காட்டறது சாமானியமான காரியமில்லை. ஆனா சவாலா ஆரம்பிச்சிருக்க தேனு, நல்லாவும் கொண்டு போற..இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணு.all the best.

    I like the simple flow of narration. என்னால் எல்லா எபிசோடுக்கும் பின்னூட்டம் தர முடியுமான்னு தெரியல தேன், ஆனா அப்பப்ப போடறேன். ஓ.கேவா?
     
  7. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Yar manasula yaru, Rishi manasula yarungarathuku intha episode layum theriyalayae...
     
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma....
    nice update... kovai la ye job kidachuruchu rendu perkum...
    rishi yara ninaikranu sikkaram sollunga ma...
    saran oda entry eppo???
     
  9. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    different ah iruku sketching... good madam... continue
     
  10. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi thaen,

    Super narration.... kadhai romba brisk ah, mmmmmmm... correct ., thoivu illamal, super ah poguthu....appadiye maintain pannanum....My best wishes !!!!!!!!! Awaiting to know, who s in Rishi's mind.......... Guess Viji.....????? Next episode la solliduveenga nu nenaikaraen. parkalaam......

    Vasupradha.S
     

Share This Page