1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 21

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Jan 27, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    மாடிக்கு சென்ற விஜியும் ரிஷியும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.ரிஷி தான் முதலில் பேசினான்.
    விஜியை கண்களில் காதலுடன் பார்த்து, தள்ளி நின்றிருந்தவளின் அருகில் சென்று

    " விஜி I LOVE U , இத சொல்ல எத்தனை கஷ்டபட்டுடேன் தெரியுமா?" என்று சோகமாய் சொல்ல அதற்கு அவளிடமிருந்து பதில் வராமல் போகவே முகத்தை நிமிர்தினான். அவளது கண்களில் இருந்து நீர் வழிந்து கன்னத்தை ஈரமாக்கி இருந்தது. அதை பார்த்து பதறியவன்

    " என்னமா எதுக்கு இப்ப கண்கலங்கற?" என்று கண்ணீரை துடைத்துவிட்டான் , அவனது கையை பிடித்தவள்

    "இதை கேட்டுவிட எத்தனை துடித்தேன் தெரியுமா?" என ரயில் நிலையத்தில் நடந்தது ஞாபகம் வர அவன் சிரித்துகொண்டே

    "தெரியுமே......." அவனது சிரிப்பை கண்ணிமைக்காமல் ரசித்தாள், அவள் முன் கையாட்டி நினைவிற்கு கொண்டுவந்தவன்

    " ஹல்லோ ...... சொன்னதுக்கு பதில் சொல்லாம dreamக்கு போய்டீங்களா?"

    "என்ன சொன்னீங்க?..."

    "I LOVE U"

    "என்ன சொல்லனும்.?.."

    "உனக்கு என்ன தோனுதோ அது சொல்லு"

    "I LOVE U TOO" சொல்லிவிட்டு திரும்பிகொண்டாள் அவன் அவளை திருப்பி முகம் பார்க்க கன்னங்கள் சிவப்பை தாங்கி இருந்தது. இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.சிறிது நேரத்திற்கு பின்

    " நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு...." விஜி சொல்ல

    "நான் இதெல்லாம் நடக்குமானு தெரியாம இருந்தேன்........ உத்ரா நடத்தி கொடுத்துட்டா......., நம்ம கல்யாணம் நடக்கபோகுதுனா அதுக்கு காரணம் உத்ராவும், அவங்க அப்பாவும் தான்"

    "என்ன மாமாக்கு தெரியுமா?"

    "தெரியுமாவா அப்பாதான் எல்லோர்கிட்டயும் பேசினதே....."

    "எனக்கு ஒன்னுமே புரியல...... என்ன நடந்ததுனு கொஞ்சம் விளக்கமாதான் சொல்லூங்களேன்..."

    "சொல்லலாம் ஆனா அதுக்கு கொஞ்சம் FEES கொடுக்கனுமே..."

    "fees அ ....?"

    "ஆமா" என்று கன்னத்தை காட்ட அவள் புரிந்து மறுக்க, இவன் அடம்பிடிக்க எப்படியோ ஒரு முத்தம் வாங்கியும் விட்டான்.

    " அப்பா...... இப்ப சொல்லலாம்..." என்று கண்ணடிக்க அவள் செல்லமாய் ஒரு குத்து வைத்தாள், அப்படியே இருவரும் அமர்ந்தனர்.ரிஷி நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

    அன்று விஜியிடம் ரயிலில் பேசிவிட்டு வந்தபிறகு உத்ராவிற்கு ஒரு யோசனை தோன்றியது, அதனை செயல் படுத்த தந்தையின் உதவியும் வேண்டுமாதலால் இதை பற்றி தந்தையிடம் பேசிவிட்டு பின் ரிஷியிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.அதன்பின் மாலை தந்தையின் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டு தனது யோசனையையும் சொன்னாள்.மல்லிகார்ஜுன் விஜியை தன் மகள் போலவே நினைப்பதால் உத்ராவிற்கு விஜியின் எதிர்காலத்தில் இருந்த அதே அக்கறை அவருக்கும் இருந்தது. அவள் சொன்ன யோசனை நல்லதாய் தோன்றவே அதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக சொல்லிவிட்டார். அடுத்த நாள் காலையே ரிஷியிடம் தன் யோசனைகளை சொன்னவள் அதன்படி அவனது தந்தையையும், தாயையும் தங்களின் வீட்டிற்கு வரசொன்னாள். ரிஷியும் அவர்களிடம் பேசிவிட குருமுர்த்தியும், லட்சுமியம்மாளும் மறுநாளே நல்ல நாள் என்பதால் அன்றே உத்ராவின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

    சரஸ்வதி வந்தவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு மல்லிகார்ஜுனுக்கு போன் செய்து வரவைத்தார்( அவரிடமும் எல்லாம் சொல்லீருந்தனர்).வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ரிஷியின் தந்தையாய் வந்திருப்பது தன் கல்லூரிதோழன் என்று தெரிந்ததும் இருவரையும் கையில் பிடிக்கமுடியவில்லை.அன்று முழுவதும் தங்களின் பழைய கதைகளை ஆசைதீர பேசிமகிழ்ந்தனர். மாலை வீடு வந்த கீர்த்திக்கு அவரை அறிமுக படுத்திவைக்க அவளுக்கு நன்றாகவே தெரிந்தது அவர் யாரேன்று. எப்போதும் தன் கல்லூரிகலாட்டாக்களை தன் மகள்களிடம் சொல்லுவார் மல்லிகார்ஜுன். அதனால் சீக்கரமே அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது அவளுக்கு.உத்ராவும் ஆபிஸில் சொல்லிவிட்டு சீக்கரமே வந்துவிட அவர்களின் வீடு கலகலவென்றிருந்தது. புதிதாய் பார்ப்பவர்கள் என்ற தயக்கம் மறைந்து அவர்களை அத்தை, மாமா வென்று அழைத்தனர் கீர்த்தியும், உத்ராவும்.ஆனால் குருமூர்த்தியோ அப்பா, அம்மாவென்று உரிமையோடு அழைக்கும்படியும், ரிஷி இவர்களுக்கு அண்ணன் என்றும், நாங்கள் உங்களுக்கு தந்தை, தாயென்றும் சொல்லி நெகிழவைத்தனர். மல்லிகார்ஜுனும்- சரஸ்வதியும் ரிஷியும் தங்களின் மகன் தான் என்று உரிமைகொண்டாட அங்கு ஒரு இனிய பந்தம் உருவானது.

    விஜியின் வீட்டிற்கு அனைவருமாய் சென்றனர், கீர்த்தியை தவிர அவளுக்கும் இது surprise ஆகவே இருக்கட்டுமென்று அவர்கள் அவளிடம் எதையும் சொல்லவில்லை.கண்ணனிடமும் பிரபாவதியிடமும் விஜி-ரிஷியின் காதலை பற்றி சொல்லி அவர்களின் சம்மததை வாங்கிகொண்டனர்.பெருமாளும்- ராஜாத்தியம்மாளும் அங்கேயே இருந்ததால் அவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும், அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சி தான்.விஜி அலுவலகத்திலிருந்து வருவதற்கு முன் அனைவரும் அவரவர் வீடு திரும்பிவிட்டனர்.சரண் சென்னையிலிருந்ததால் அவனுக்கு தெரியவில்லை, தெரிவிக்கவும் வேண்டாமென்று உத்ரா தான் கேட்டுகொண்டாள், தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொள்வது தெரியாமல்.நிச்சயவேலைகள் அனைத்தும் வேகமாய் நடந்தது. இதற்கிடையில் பெங்களுரிலிருந்து திரும்பிய ரிஷி விஜிவிட்டிற்கு வந்து தன்னை அறிமுகபடுத்திகொண்டு, விஜியை நன்றாக பார்த்துகொள்வதாக உறுதிகூறி சென்றான். அதன்பின் எத்தனையோ முறை உத்ராவின் வீட்டிற்கு வந்து விஜியை அவளறியாமல் பார்த்துவிட்டு சென்றிருக்கிறான். இப்படிதான் அவர்கள் நிச்சயம் நடந்தது.

    ரிஷி சொல்லிமுடித்துவிட்டு விஜியின் முகம் பார்த்தான், அவளோ 'தன்னை சுற்றி தன்மீது அக்கறையில்லாதவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் நினைத்திருந்தேன், ஆனால் தனக்காக எத்தனைபேர் எவ்வளவு அக்கறையோடு செயல்பட்டுள்ளானர்' என்று எண்ணி கண்ணீர் சிந்தினாள். சிறிது நேரம் பார்த்துகொண்டிருந்தவன் அவளை தன் தோளோடு சேர்த்தணைத்துகொண்டான். சிறிது நேரம் அப்படியே இருந்தவள், தனக்கு உத்ராவை இப்போதே பார்க்கவேண்டுமென்று சொல்ல இருவருமாய் உத்ராவின் அறைக்கு சென்றனர். கதவை பலமுறை தட்டியும் திறக்காமல் போகவே குரல் கொடுத்தாள் விஜி. விஜியின் குரல் கேட்கவும் தான் தன்னை சீர்படுத்திகொண்டு கதவை திறந்தாள் உத்ரா.

    உத்ராவை பார்த்தவுடன் கட்டிகொண்ட விஜி அப்படியே அழுதாள்.

    "சாரி டி...." அவளை நிமிர்த்தியவள் கண்களை மெதுவாக துடைத்துவிட்டு

    "லூசு எதுக்கு இப்ப சாரி ...... ம்...... சும்மா இதுகெல்லாமா அழுவாங்க .. வர வர அழுமூஞ்சியாகிட்ட விஜி நீ..." சூழ்நிலையை மாற்றுவதற்காக ரிஷி

    "அழுமூஞ்சி விஜி பேரு நல்லாயிருக்கே...... இனிமே நான் இப்படிதான் கூப்பிட போறேன்..."

    " ரிஷி என் ஃப்ரண்ட அப்படியெல்லாம் நீ கூப்பிட கூடாது ...................... நான் மட்டும் தான் கூப்பிடுவேன்"

    " நான் ஒன்னும் உன் ஃப்ரண்ட கூப்பிடலையே என் பொண்டாடிய தான் கூப்பிடறேன்...... "

    "ரெண்டுபேரும் எனக்கு புது பேரா வைக்கறீங்க உங்கள......." என்ற சில அடிகளை இருவருக்கும் பகிர்ந்தளித்தாள்.இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு அங்கு வந்தனர் கீர்த்தியும், விக்கியும். விக்கி

    "என்ன இங்க பிரச்சன? என்ன இங்க பிரச்சன?" என

    " வந்துட்டாரு நாட்டாமை பிரச்சனைய சொன்னவுடனே தீர்த்துடுவாரு" என்று உத்ரா கிண்டலடிக்க

    " ஏன் விக்கி தீர்க்க மாட்டாறா?" என்று கீர்த்தி சண்டைக்கு வர அனைவரும் 'ஒ' வென்று ஆர்பரிக்க கீர்த்தி நாணி தலைகுனிந்தாள். அதற்கும் அங்கு ஒரு பெரிய சத்தம் பிறந்து மண்டபத்தை அதிரவைத்தது. சந்தோஷ அலை அனைவரது மனதிலும் அடிக்க, ஒருவன் மட்டும் தன்னிடமும் அவள் இப்படி பேசி சிரிப்பாளா? என்று ஏங்கிகொண்டிருந்தான்.
     
    2 people like this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    rendu jodi nalla happy ah irukkanga....
    uthra voda kovatha kurachu saran kitta pesa vainga.....
     
  3. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Rendu jodiyum mari mari thanks sonnathu pothum pa. Uthira unga manasa purinji unggalukku help panna madiri neengalum avalukku help pannunga.....
     
  4. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    try pannaren pa...... thanks pa.....
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    help pannarangalanu parpom pa......
     

Share This Page