1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 19

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Jan 21, 2012.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    காலை உத்ரா கண்விழிக்கும் போது மணி ஏழரை ஆகியிருந்தது.மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அவளருகில் வந்த சரஸ்வதி கடிந்து கொண்டார்.

    "இன்னைக்கு போய் இப்படி தூங்கறீயே உத்தி, எழுப்ப எழுப்ப எழுந்தறிக்காம......" என்று கோபத்தோடு பேச அவளின் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது. அதை கண்ட அன்னையின் மனம் பாகாய் உருக

    "சரி..... சரி..... சீக்கரம் கிளம்புமா..... டைம் ஆகுதுல்ல...... குளிச்சுட்டு சூடா உனக்கு பிடிச்ச Bru coffee போட்டு வைக்கறேன் வந்து குடி சரியா?... போ..."என்று சமாதானபடுத்த அவரது கண்களை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். சரஸ்வதி அவளின் தலையை வருடி விட்டவர்

    "என்னடா நைடெல்லாம் அம்மா....அம்மா னு உளறிகிட்டு இருந்த..... கெட்ட கனவு கண்டயா?........ " வேற எதும் உளறிருப்பேனா என்று பயந்தவள், எல்லாமே கனவாக இருந்தால் நன்றாகதான் இருக்கும் என்று விரக்தியோடு நினைத்தாள் எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காண்பிக்காது மறைத்தவள்,பின் அன்னையை பார்த்து

    "தெரியல மா..... சரி நான் குளிச்சுட்டு வரேன்...." என்று குளியலறை புகுந்தாள். மறுபடியும் ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், குளித்துவிட்டு வந்தாள். அன்னை தந்த காபியை தனது தெம்பிற்காய் குடித்து முடித்தாள்.


    காலை எழுந்த சரணுக்கு இரவு நடந்த அனைத்தும் ஞாபகம் வந்தது. ஒரே ஒரு நிமிடம் தவறாக பேசிவிட்டோமோ என்று நினைத்தவன், அதன் பின் தான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே எது நடந்தாலும் நடக்கட்டும் என்று அலட்சியமாக நினைத்தான். ராஜாத்தி அவனை அவசர படுத்த தயார் ஆனான்.

    விஜியும்,கீர்த்தியும் அதை எடு இதை எடு என்று அறையையே அலங்கோல படுத்திகொண்டிருக்க உத்ரா அமைதியாய் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். தாங்கள் தயாரான பின்னும் இன்னும் அவள் அப்படியே இருப்பதை பார்த்த இருவரும் சேர்ந்து அவளை அலங்கரித்து தயார்ப்படுத்தினர்.

    "ஏய் உன் ஆளு இப்போ மட்டும் இப்படி பார்த்தாரு அவ்வளவு தான்........" கீர்த்தி

    " என்ன டி நாங்க சொல்லிகிட்டே இருக்கோம் பேசவே மாட்டேங்குற ......... சரண் ஞாபகம் வந்திடுச்சா?" என இருவரும் மாறி மாறி வம்பிழுத்த போதும் ஒன்றுமே பேசவில்லை அவள். மூவரையும் பார்த்த பெற்றவர் நால்வருக்கும் கண்களில் நீர் கோர்த்தது வாழ்த்தினர்.

    மேடையில் ஆறு நாற்காலிகள் போடப்பட்டிருக்க ஆண்கள் இருவரையும் முதலில் அங்கு நிற்கவைத்தனர். பின் பெண்களிருவரையும் அழைக்க மெல்லிய ஒப்பனைகளுடன் வந்த இருவரையும் பார்த்த இருவரும் மயக்கம் போடாதது ஒன்று தான் குறை. அவர்கள் அழகில் மயங்கினர்.


    காலையிலிருந்து திருட்டுதனமாக கீர்த்தியை பார்க்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை விக்கியால் இப்போது அவளை விட்டு கண்களை அகற்ற முடியாமல் நின்றிருந்தான். அவனை பார்த்தவள் யாருமறியாமல் கண்ணடிக்க அவ்வளவுதான் அப்படியே மேடையில் பக்கதில் நண்பர்கள் மட்டும் இல்லையென்றால் அவளை ஒடிசென்று தூக்கி தட்டமாலை சுத்தி இருப்பான். கீர்த்தியை அவனருகில் கொண்டுவந்துவிட்ட உத்ராவும், விஜியும் , அவனின் நிலை கண்டு சிரிக்க அசடு வழிந்தான் விக்கி.

    உத்ராவை கொண்டு போய் சரண் அருகில் நிற்க வைத்துவிட்டு ஓரமாய் வந்து நின்றுகொண்டாள் விஜி. சரண் உத்ராவை ஒரகண்ணால் பார்க்க அவளோ அருகிலிருப்பது பெண்ணா அல்லது பொம்மையா என்று எண்ணுமளவுக்கு உணர்ச்சியின்றி முகத்தில் இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.திடீரென அவள் முகம் மலர்வதை கண்டு அவள் கண்கள் சென்ற திசையை பார்த்தான்.அவள் விஜியை ஒரு முறை பார்த்துவிட்டு பின் வாசலை பார்த்தாள், அங்கு ரிஷி வந்து கொண்டிருந்தான். இவனது முகம் கடுகடுத்தது. 'என்னை கண்டால் வராத சிரிப்பு அவனை கண்டால் மட்டும் வருகிறதோ' மனதில் அவளுக்கு அர்சனை நடத்தினான்.

    விஜியை பார்த்துவிட்டு உத்ராவின் அருகில் வந்தவன், காதில் கைவைத்து தோப்புகரணம் போடுவது போல் பாவனை செய்துவிட்டு

    " சாரி ....... சாரி .....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...." என அவனை அடிக்க கை ஓங்கிவிட்டு இறக்கிகொண்டாள்.

    "சரி... போ... ஓடு ...." என்று அவனை அவசர படுத்தினாள். அவனும் தலையாட்டிவிட்டு ஒடிவிட்டான்.

    அதற்குள் அங்கு வந்த கண்ணன் நிச்சயத்திற்கு வந்திருந்தவர்களிடம் ஏதோ அறிவிப்பதை போல் பேசினார்.

    " நால்பேர் உட்காரதுக்கு எதுக்கு இங்க ஆறு chair போட்டிருக்கீங்கனு நிறைய பேர் கேட்டுடீங்க, ஏன் ஆறு chair போட்டீருக்கோம்னா ............. இப்போ நடக்க இருக்கிற நிச்சயம் ரெண்டு ஜோடிக்கு இல்ல ........... மூணு ஜோடிக்கு, மூணாவது ஜோடி யாருனா என் பொண்ணு விஜியும் " மாப்பிள்ளை கோலத்தில் வந்த ரிஷியை அழைத்து " இந்த ரிஷியும் தான்" என ஒரு சிலரை தவிர அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

    விஜி அப்படியே சிலையென நிற்க உத்ரா அவளருகில் சென்று

    " ஏய் ......." உலுக்க சுயநினைவிற்கு வந்தவள் தோழின் தோள்களில் அப்படியே சாய்ந்து கண்கலங்கினாள். கண்களை மென்மையாக துடைத்துவிட்டவள்

    "என்ன டி ..... இதுகெல்லாம் போய் கண்கலங்கிட்டு...." என்றாள். விஜிக்கு வார்த்தைகளே வரவில்லை. அவளருகில் வந்த கண்ணன்

    " சந்தோஷமா....." என அவரை கட்டிகொண்டாள் "சரி போய் அங்க நில்லு போ" என உத்ரா அவளை அழைத்து போய் ரிஷி அருகில் நிற்கவைக்கும் போது ஓடிவந்த கீர்த்தி ரிஷியிடம்

    "ரிஷி அண்ணா..... நீங்க விஜியக்காவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?... என் கிட்ட சொல்லவே இல்ல...."

    "ம்ஹும்.... அக்கா இல்ல அண்ணி சொல்லு....... எல்லாம் உங்க அக்கா கட்டளை...." என்று அவளை மாட்டி வைத்தான். கீர்த்தி அவளை முறைக்க

    "எல்லாம் விஜிக்கு ஒரு சப்ரைஸ் கொடுக்க தான் ......, ரிஷி என் ஃப்ரண்ட உன் கிட்ட ஒப்படைச்சுட்டேன்..... நீயாவது அவள நல்லா பார்த்துக்கோ என்ன?"

    "கவலையே படாத........... போ......போ... அங்க உங்க ஆள் waiting...." என இதுவரை இருந்த சந்தோஷம் வடிந்து போய் அமைதியாய் அவனருகில் நின்றாள். அவனது நிலையோ பரிதாபமாக இருந்தது. ரிஷிக்கு விஜிக்கும் நிச்சயம் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கீர்த்தி ரிஷியை அண்ணாவென்றழைத்து அதிர்ச்சியாக்கி விட்டாள்.அதிர்ச்சிக்கு அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றிருந்தான்.

    விஜிக்கு ஒரு நெக்லஸை தங்கள் பரிசு என உத்ரா குடும்பநண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி இருந்த தம்பதிகள் அணிவிக்க 'இவர்கள் ஏன் தனக்கு பரிசளிக்கின்றனர்' என்று குழப்பத்தோடு இருந்தவளிடம் ரிஷி இவர்கள் என் பெற்றோர் என்று அறிமுகபடுத்தினான். அவளை திருஷ்டி கழித்து முத்தமிட்ட லட்சுமியம்மாள்

    " ரொம்ப அழகா இருக்க டா ........ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்றார். முகுர்த்த நேரம் நெருங்குகிறது என்று ஐயர் சொல்ல நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டு மாற்றி கொள்ளப்பட்டது. விக்கியின் சார்பாய் கண்ணன் - பிரபாவதி தட்டை மாற்றிகொண்டனர். நிச்சயம் நல்லபடியாக முடிய பெரியவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மனநிறைவுடன் பேசிகொண்டிருக்க , அவர்களுக்கு பின்னால் சற்று தள்ளி இவர் ஆறு பேரும் அமர்ந்திருந்தனர்.

    விஜி உத்ராவை முறைக்க , எதற்கு முறைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட உத்ரா முத்து பற்கள் தெரிய சிரித்தாள்.

    " முறைக்காத டி ...... சும்மா........ சப்பரைஸ் .......... எப்படி இருக்கு" என அவளுக்கு இரண்டு அடிகளை கொடுத்தாள் விஜி, அதையும் வாங்கிகொண்டு சிரித்தாள் உத்ரா. அவள் சிரிப்பதையே பார்த்துகொண்டிருந்தான் சரண், அதை பார்த்த கீர்த்தி

    "என்ன மாமா இப்படி பார்க்கறீங்க...........விட்டா எங்க அக்காவ அப்படியே முழுங்கிடுவீங்க போல...."

    "ம்..... உங்க அக்காவுக்கு சிரிக்க கூட தெரியுமானு பார்க்கறேன்....."

    "ஏன் நீங்க பார்த்ததில்லையா......"

    "எங்க என்ன பார்க்கும் போது மட்டும் உம்னே இருக்கா.." என்று பெருமூச்சுவிட (நீ செஞ்சதுக்கு அதுவே ஜாஸ்தி)

    "ஏன் டி மாமா இவ்வளவு ஆசைப்படுறார் இல்ல ஒரு ரொமண்டிக் லுக் விடு" என அனைவரும் ஒருசேர நகைத்தனர். வலிய சிரிப்பை வரவழைத்து சிரித்தவள், விக்கியிடம்

    "சாரி விக்கி...... உன் கிட்ட சொல்லகூடாதுனு இல்ல ....... சும்மா ஒரு விளையாட்டுக்காக தான் சொல்லல, தப்பா நினைச்சுகாத.." என

    " ஏய் என்ன பெரியவளாட்டம் மன்னிப்பெல்லாம் கேட்குற, இதெல்லாம் சாதாரண விஷயம்......."

    "இல்ல அதுனால பின்னாடி பிரச்சனை வரகூடாது பாரு அதான்.... சரிவிடு...." சரணை பார்த்தபடியே சொன்னாள்.சிறிது நேரம் அங்கு மவுனம் நிலவியது. உத்ராவிற்கு அங்கிருப்பது என்னவோ போல் இருக்க

    " எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது.......... நான் ரூம்ல இருக்கேன்...." என்று எழுந்து சென்று விட்டாள்.


    அவள் சென்ற சிறிது நேரத்தில் சரணும் எழுந்து சென்றான். நால்வரும் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். பின் ரிஷியும் - விஜியும் மாடிக்கு நழுவினர்.கீர்த்தியும் விக்கியும் அங்கேயே அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்.
     
    3 people like this.
    Loading...

  2. LillySam

    LillySam Gold IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    274
    Trophy Points:
    160
    Gender:
    Female
    hi,
    romba nalla irukku...
     
  3. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Thean,
    Velaiyai perfectaa mudichiteenga...........
    Athu thaan Uthravain vazhkaiyil
    kuzhappam panra velaiyai solren.
    Saran, unnai Hero rolil irunthu thookittu,
    Villain pathavi thanthu irukkom.
    Pannina thappukku konjam kooda feel pannatha unnai..............
    Uthra, seekiram nalla herovai nama thedikalaam,
    friend thangachikkum parthu
    un vazhkaiyil man alli pottukaathe.
     
    2 people like this.
  4. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    udalku pin kadhal

    nadathunga
     
  5. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் தேனு மா..

    அப்பப்போ உங்கள் கதையை விடாமல் படித்து வருகிறேன்.. ஆனால் பின்னூட்டம் பதிவு செய்ய நேரமில்லை.. மன்னிக்கவும்..

    நல்ல காதல் கதையை நூற்கண்டு சிக்கலுக்குள் நுழைத்து ஒவ்வொரு முடிச்சை அவிழ்த்து அனைத்தும் சுபமாய் முடிய போகிறது... அருமை பா.. கவிதை போக கதையிலும் உங்கள் முத்திரை பதிதாயிற்று.. தொடரவேண்டும் என்று வேண்டுகிறேன்..

    அனு
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    rishi correct time la vandhutan......
    3 engegemetn um super ah midinjuthu........
    saran uthra va samadhana paduthiruvan.......
     
  7. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Ithu varaikum santhosham, Iniyum entha kolapumum varakudathu pa...
     
  8. Anu86

    Anu86 Silver IL'ite

    Messages:
    458
    Likes Received:
    143
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Meensss... herovukke appu vaikreengale nyayama...

     
  9. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Thaen,

    Moondru jodiyum serthu vechchu, peria punniyam serththu kittenga.......... chamathu ponnu..... aana charanum, rishiyum engagement ku apparam daan love ah solla poranga.So waiting .........

    Vasupradha.S
     
  10. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Superah jodi serthuteenga Then, but uthira eppadi udane samadhanam aagidurala illa Charanai enga vaikiralannu parpom...........
     

Share This Page