1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் என்பதே நீயல்லவா - 10

Discussion in 'Stories in Regional Languages' started by theanmozhi, Dec 30, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    ரயில் நிலையத்திற்கு வந்தவர்களை நோக்கி கையாட்டி தான் அங்கிருப்பதை தெரிவித்தான் விக்கி.கீர்த்தியும் உத்ராவும் அதை பார்த்துவிட்டு அவன் அருகில் வந்தனர்.

    விக்கி கீர்த்தியை பார்த்தவுடன் தன்னை மறந்தான், சுற்றத்தை மறந்தான். விக்கி பல சமயங்களில் நினைப்பதுண்டு தான் தவறு செய்கிறோமோ என்று ஆனாலும் அவனால் கீர்த்தியை பார்காமல் இருக்கவோ நினைக்காமல் இருக்கவோ முடியவில்லை.அவள் தனக்கு எல்லாமாய் இருப்பாள் அவளாய் ஏன் நான் இழக்க வேண்டும்? அத்தையிடமும் மாமாவிடமும் நான் எடுத்து சொல்லுவேன் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று சமாதானமாவான். ஆனால் கீர்த்தி தான் அவனது மனைவி, சரஸ்வதி - மல்லிகார்ஜுன், உத்ரா சம்மததோடுதான் அவர்களது கல்யாணம் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.அதேபோல் கீர்த்தியின் கண்களில் காதல் வழிவது தெரிந்தாலும் அவள் படிப்பு முடிந்த பின் தான் தன் காதலை வெளிபடுத்த வேண்டும் என்றிருந்தான்.

    உத்ரா " விஜி வரலயா ?" என்றபின் தான் சுய உணர்வுக்கு வந்தவன்

    "என்ன கேக்கற உங்க கூட தான வருவா?"

    "ஆமா, ஆனா இன்னைக்கு வரல டா நேரா இங்க வந்துருப்பாலோ னு நினைச்சேன்"

    "ஏன் உத்தி உனக்கும் விஜியக்காவுக்கும் சண்டயா?" கீர்த்தி கேட்டாள்

    "ஆமா டி விளையாட்டுக்கு பேசினத சீரியசா எடுத்துக்கிட்டு திட்டிடா டி"

    "அப்படி என்ன பேசின?" ரயில் வர ஏறி அமர்ந்தனர்.

    "எப்பவும் போல தான் பேசினேன்"

    "சரி நீ விஜியக்காவுக்கு கூப்பிடு"

    "இல்ல நான் மாட்டேன், விக்கி நீ கூப்பிடேன்"

    "சரி" விஜியை மொபைலில் அழைத்தான் எடுத்தவள்

    "சொல்லு விக்கி"

    "எங்க இருக்க விஜி?"

    "விட்டுல, நான் இன்னைக்கு ஆபிஸ் வரல விக்கி"

    "ஏன் ?"

    "உடம்பு சரி இல்ல விக்கி கொஞ்சம் fever"

    "அச்சசோ இப்ப எப்படி இருக்கு?"

    "கொஞ்சம் rest எடுத்தா சரியாகிடும்"

    "சரி நல்லா ரெஸ்ட் எடு, ஏன் உத்ராகிட்ட சொல்லல"

    "சொல்லல" பாதி குரல் உள்ளே போக

    "சரி நல்லா ரெஸ்ட் எடு bye அப்பறம் பேசறேன்"

    "ம்" போனை வைத்தவன் உத்ராவிடம் விஜி ஏன் வரவில்லை என்பதை சொன்னான்.

    உத்ராவிற்கு குழப்பமாக இருந்தது அந்த குழப்பதோடு திரும்பியவளின் கண்ணில் யாரும் அறியாதவாறு விக்கியை பார்த்து கொண்டிருந்த கீர்த்திப்பட்டாள்.ரிஷியின் கண்களை பார்த்து கண்டுபிடிக்க தெரிந்தவளுக்கு தங்கையின் கண்களில் இருப்பது என்ன என்று தெரியாதா? ஆனால் விக்கி? என்ற கேள்வியோடு அவனை பார்த்தால் அவனும் கீர்த்தியை தான் பார்த்து கொண்டிருந்தான்.அவன் கண்களில் கள்ளமோ, கல்மிஷமோ இல்லை உரிமையும் காதலும் தான் மேலோங்கியது. ஒரு நிமிடம் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துவிட்டு வேறு இடம் திரும்பின. உத்ராவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பல்வேறு உணர்ச்சியின் பிடியில் இருந்தாள்.

    எப்போது ரயில் நின்றது, எப்போது விடைபெற்றாள், எப்போது அலுவலகம் வந்தாள் என்று அவளுக்கே தெரியாது . அந்தளவு யோசனைகள் அவளை ஆக்ரமித்திருந்தது.சிறிது நேரத்தில் அவளை தேடிவந்த ரிஷி

    "என்னாச்சு ? அவ என்ன சொன்னா?"

    "ஒன்னும் சொல்லல ரெண்டு பேரும் பார்த்தாங்க பார்த்துட்டு திரும்பிடாங்க" என்றாள் தன் யோசனையிலிருந்து மீளாமல்

    "என்ன? ரெண்டு பேரா?"

    "ம்" என்று அவன் முகம் பார்க்க தான் உளறியது புரிந்தது அவளுக்கு அசடுவழிந்தபடியே

    "இல்ல எதோ யோசனைல சொல்லிடேன் என்ன கேட்ட?"

    "ம் சரியா போச்சு, விஜி என்ன சொன்னா நு கேட்டேன்"

    "நல்லா திட்டினா"

    "எதுக்கு?"

    "யாருக்கு தெரியும்"

    "திட்டு மட்டும் தான் வாங்கினேன் எதுக்கு கேக்கறதுகுள்ள ஓடிட்டா, இன்னைக்கு வரல , பேசவும் இல்ல, feverநு சொன்னா விக்கிட்ட"

    "என்னால தான திட்டு வாங்கின?"

    "அப்படி எல்லாம் இல்ல, நீ அவக்கிட்ட சீக்கரம் பேசு அப்பதான் எங்கிட்ட பேசுவா"

    "விஜி நம்பர் குடு , பேசுறேன்"

    "இல்ல நேர்ல பேசு ரிஷி இல்லனா அவ convince ஆகமாட்டா" என்றாள் தனக்கு தானே தீங்கு செய்வதறியாமல்

    "சரி" அவனை மேலதிகாரி அழைப்பதாய் ஒருவன் வந்து சொல்ல விடைபெற்று கொண்டு சென்றான்.

    அந்த பின் அவளது சிந்தனைகளை அருகே வர விடாமல் வேலைகள் அவளை அழைத்தன.வேலையில் தன்னை ஆழ்த்திகொண்டவள் மாலையில் தான் மீண்டெழுந்தாள் அதற்குள் அவள் அழைக்காமலே சிந்தனைகள் அவளை ஆட்கொண்டன.தான் விஜி வீட்டிற்கு செல்வதாய் விக்கியிடம் சொன்னாள் உத்ரா.அவனும் வருவதாக சொல்ல இருவருமாய் விஜியின் வீட்டிற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு வித்யாசமான வரவேற்பு காத்திருந்தது.

    விஜியின் வீட்டுகதவை தட்டினாள் உத்ரா. சரண் தான் கதவை திறந்தான்.
    இருவரையும் மேலும்கீழுமாக பார்த்துவிட்டு

    "என்ன வேணும்?" அவன் குரலில் இருந்தது கோபமா வெறுப்பா என்று தெரியவில்லை

    "விஜி எங்க இருக்கா?" உத்ரா கேட்டாள்

    "ஏன் படுத்தினது போதாதா மறுபடியும் படுத்தனுமா?"

    அவள் எதோ கேட்க வாய் எடுக்க அதற்கு அங்கு வந்த பிரபாவதி

    " வா உத்ரா, வா பா" அவனை ஒரு உஷ்ண பார்வை பார்த்துவிட்டு சென்றாள்

    "அத்த இது விக்கி விஜியோட work பண்ணறான், என் friend"

    "வா பா, விஜி சொல்லிருக்கா எப்படி இருக்க?"

    "நல்லா இருக்கேன் மா"

    "விஜி ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க, நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்"

    "ம்"

    இருவரும் விஜியின் அறைக்கு சென்றனர். இவர்கள் வருவதை பார்த்துவிட்டு கண்மூடி தூங்குவதை போல் பாவனை செய்தாள்.உத்ரா அவளருகில் வந்தமர்ந்து அவளை தொட்டு பார்த்தாள் உடல் சூடாய் இருந்தது ஆனால் அவள் தூங்குவது போல் உத்ராவுக்கு தோன்றவில்லை. விக்கி அவளை எழுப்ப வேண்டாம் என்று விட அமைதியாய் நின்றிருந்தனர். பிரபாவதி வரவும் முவரும் வெளியில் சென்றனர்.விஜிக்கு தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்றே தெரியவில்லை ஆனால் உத்ராவை தவிர்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.உத்ராவும், விக்கியும் பிரபாவதியிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றனர்.அது வரையில் சரண் அங்கு வரவில்லை.

    விக்கிக்கு இன்று கீர்த்தி பார்த்த பார்வையும் அதிலிருந்த காதலும் தான் நினைவில் வந்து உற்சாகப்படுத்தியது.கீர்த்தியும் அதே மனநிலையில் தானிருந்தாள் அவள் வேறேதுவும் யோசிக்கவில்லை எதுவானாலும் விக்கி உடனிருப்பான்,அன்னையும் தந்தையும் ஆதரிப்பர் என்றே தோன்றியது அவளுக்கு.கீர்த்தியும் விக்கியும் ஒருவருக்கொருவர் வார்தைகளால் காதலை பகிரவில்லையே தவிர கண்களால் பகிர்ந்து தான் கொண்டிருந்தனர்.

    உத்ரா தான் பாவம் அத்தனை பிரச்சனைகளையும் தன்னுள் ஏற்றிகொண்டு இருந்தாள்.வேலையின் சோர்வோடு கவலையின் சோர்வும் சேர்ந்துகொள்ள அமைதியாய் சென்று படுத்துகொண்டாள் தூக்கம் தான் வரவில்லை இரவெல்லாம் யோசித்தும் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை அவளால். இது போன்ற சமயங்களில் உத்ரா மல்லிகார்ஜுன் கையை பிடித்துகொண்டு நடந்து கொண்டே அந்த பிரச்சனைப்பற்றி அவரிடம் சொல்லுவார் பெரும்பாலான நேரங்களில் அவரே தீர்வு சொல்லிவிடுவார் அப்படி இல்லையேன்றாலும் இருவருமாய் ஆலோசித்து தீர்வு கண்டுபிடிப்பார்கள். அதையே இப்போதும் செய்யலாம் என்று முடிவு செய்தாள்.
     
    4 people like this.
    Loading...

  2. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi thaen,

    Enna edhu aniyaayam..... Ellarum (Charan, viji, rishi,keerthi, vikki.)......... love la oru vidha confusion or happiness ooda irukkanga... Uthrava mattum sikkavekkaama vittuteenga!!!!!!!!!!
    Why this partiality???? Good going dear.. Awaiting for next post!!!!

    Vasupradha.S
     
    1 person likes this.
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma..
    vikki keerthi oda padippu mudinja vudane dhan ava kitta love sollanum nu ninachadhu so nice....
    viji sogama , saran kovama irukkan...
    rendu perayum sari pannunga..
    rishi sikkaram viji kitta pesu... appo than saran oda route clear aagum...
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Hi Then, Story superah poguthu........Daily update kodungalen (a request). uthira, saran modhalla aarambichu kadhalla mudiyuma.....waiting eagerly for the next episode.........
     
  5. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female

    vasu pa,

    avathan sikka matengara naan enna seyatum......
    sikkaram maata vachuduvom kavala padatheenga......
    thanks pa........
    keep reading pa.....
     
  6. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    neega sonnatha rishi kitayum sarankitayum soliten pa,
    thanks pa......
    keep reading pa........
     
  7. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    konjam velai pa ..........
    sikkaram daily update kodukaren pa........
    thanks pa.......
    keep reading pa........
     

Share This Page