1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாங்கள் அகதி ஆயிட்டோம் . அப்ப நீங்க ?

Discussion in 'Regional Poetry' started by sankarimaheswar, Dec 17, 2010.

  1. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    நாங்கள் அகதி ஆயிட்டோம் . அப்ப நீங்க ?

    காட்டினில் வாழ்ந்து வந்தோம் மிக
    களிப்புடன் இருந்த எங்கள்
    கூட்டினை சிதைத்து விட்டீர்
    கேட்கவோ நாதி இல்லை சிற்றூர்
    வீட்டினில் குடி புகுந்தோம்
    சில நாட்கள் தொல்லை இல்லை
    சற்றென வந்து ஒருநாள் வந்த
    விலைக்கு விற்று விட்டீர்
    வந்தவன் இடித்து விட்டான்
    மாநகர் நாடி வந்தோம் மாட
    மாளிகை இருக்குமென்று
    மாளிகை எல்லாம் எங்கே
    மணிப்புறா கூடுகள் தான் இங்கே
    நீங்களும் எங்கள் போலே எப்போது
    கூட்டினில் குடி புகுந்தீர்
    குளிர் காற்றினை அனுபவிக்க
    வெளி சன்னலை சார்த்தி விட்டீர்
    வெளிச்சமும் காற்றும் எங்கே
    கரி அமில காற்றுதான் ஆட்டம் இங்கே
    கைபேசி கோபுரம் கண்டோம்
    களிப்புடன் நெருங்கி வந்தோம் - ஐயகோ
    கோபுரம் இல்லை அது கதிரியக்க
    காலனாய் வந்த உரு .
    இலங்கை அகதிகள் போலே
    இருப்பிடம் எல்லாம் இழந்து
    நாங்களும் அகதி ஆனோம்
    நீங்களும் ஆவது என்னாள் ?
    இன்னமும் காலம் உண்டு - மானிடா
    விழித்தால் உனக்கும் நன்னாள் .

    பறவைகள்
     
    Loading...

  2. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    paravikaluku vai iruntha avai solirukakudia kashtangal anaithayum nengal unarthu azhagai yezhuthiviteerkal, super :thumbsup
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இந்த வரிகள் வலை தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.

    துள்ளித் திரிந்த சிறுவயதில்,
    துவிச்சக்கர வண்டியோட்டி,
    வரப்புப் பாதையின் மேடுபள்ளம்
    வலிமையாக்கியது என் மன உறுதியை.

    நகர வாழ்க்கையில் இங்கு வந்து
    நாலுசக்கர வண்டி ஓட்டினாலும்
    மனம் அச்சத்திலேயே வாடுவதேன்.

    இயற்கை தந்த தென்றலை - அன்று
    இன்பமாய் அனுபவித்தேன்,
    இங்கு ஏசி போட்டு இன்பம் கண்டாலும்
    இனிமையான தூக்கமில்லையே!

    குறைந்த வசதியானாலும் - ஊரில்
    குதூகலமாய் இருந்த நான்
    கூடிய வசதியிருந்தும் - இன்று
    குமுறுவதேன் மனமே!

    மனமே இதற்கு நீதான் காரணமென்றால்,
    மனம் அலை பாயாமல் இருக்க
    மனமே நீயே ஒரு வழி சொல்வாயா?

    குரங்கு மனம்பிடித்த குரங்கிலிருந்து பிறந்து வளர்ந்த
    சமுதாய மனிதன்!!!!
    கவிஞர்-முத்து

    மகேஸ்வர்
    இன்றைய நகர வாழ்க்கை
    நரகம் என்பதை நங்கூரமாய்
    பறவைகளின் வாயிலாய் கூறி விட்டீர்கள்.
    இழந்தவை,இழக்கப் பட்டவை ,இன்னும் இழக்கப் போபவை இவை மட்டுமா????
    அன்பு பண்பு,மனிதம் இழந்து மனிதன் இயந்திரமாய்
    இயற்கையை மிதித்து ஒரு இறந்த மானுடத்தின் நிழலாய் ....
    நாமாக பார்த்து திருந்தினால் நிலம் பிழைக்கும்.குலம் செழிக்கும்

    மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்து வரிகள்
    உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
     
    Last edited: Dec 17, 2010
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Shankarimahesh,

    Well said. You have brought out the present day situations very precisely as if told by the birds.

    You are excelling in your poems! Kudos to you.
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நாமும் அகதிகளாய் பட்டணத்தின் சகதியில் பசுமையின் சுவடிழந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அழகாய் கூறி விட்டீர்கள் நன்று!!!:thumbsup:thumbsup
     
  6. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    hema thank you for your comments
    sankari
     
  7. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    yashikushi,

    paravaiye ungal chinnamaga vaithirukkum ungal madippuraikku nanri
    sankari
     
  8. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    thank you soldier,

    in our area daily we use to hear the pleasing 'kreech, kreech" of kuruvies in the morning as well as evening may be due to the absence of ceel phone towers in our area around 2 km.
    however i am not sure ,how long we will be enjoying (rather how short we will be loosing the joy)

    thanks
    sankari
     
  9. sankarimaheswar

    sankarimaheswar Senior IL'ite

    Messages:
    185
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Male
    thank you devapriya for your fine fb

    sankari
     

Share This Page