நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!

Discussion in 'Tamil Nadu' started by ramyasrini8, Oct 5, 2010.

  1. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    சரஸ்வதி பூஜை
    நமது வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார். எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கான
     
  2. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    சரஸ்வதி பூஜை சிறப்பு.......
     

    Attached Files:

  3. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hi ramya, thanks for sharing so many useful info abt navarathiri, the poojas to be done and the methods.

    andal
     
  4. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    ஸ்ரீதுர்காஷ்டமி.!

    இந்த நவராத்திரி நாளில், மனதார ஸ்ரீதுர்கை யைப் பிரார்த்தியுங்கள். இல்லத்துக்குள் எந்தத் தீயசக்தியும் நுழையாது. ஸ்ரீதுர்கையின் படத்துக்கு அரளிப் பூமாலை அணிவித்து, எலுமிச்சை மாலை சார்த்தி, மாதுளம் பழங்களையும் பாசிப் பருப்பு பாயசத்தையும் (அதிமதுரச் சுவையுடன்) படைத்து, குடும்ப சகிதமாக வேண்டிக்கொள்ளுங்கள்.

    ஸர்வ மங்கள மாங்கல்யே,
    சிவே ஸர்வார்த்த ஸாதகே
    ஸரண்யே த்ரயம்பகே தேவி,
    நாராயணி நமோஸ்துதே
    ஸரணாகத தீநார்த்த, பரித்ராண பராயணே
    ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி,
    நாராயணி நமோஸ்துதே'

    - எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, வழிபடுங்கள். அதாவது, 'எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாக விளங்குபவளே! சரணடைவதற்கு உரியவளே! மூன்று கண்களை உடையவளே! ஸ்ரீநாராயணிதேவியே... உனக்கு நமஸ்காரம்' என்று மனமுருகி வழிபட, தைரியம் பிறக்கும்; சத்ரு தொல்லை ஒழியும்.

    நவராத்திரியின் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்காவுக்கானது. அவளை வணங்குங்கள்; அருமையான வாழ்வைப் பெறுவீர்கள்! அதே போல், செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீதுர்கையை கோயில் அல்லது வீட்டில் வழிபட, புத்திர பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை நீங்கும்; நல்ல வரன் அமையும்.
     
  5. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    சரஸ்வதி பூஜை கொண்டாட உகந்த நேரம் எது

    நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாட எது நல்ல நேரம் என்பதை ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

    சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.

    சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.

    காலை 6.30 முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12.30 முதல் 1.20 மணிக்குள்ளும், மாலை 5 முதல் 6 மணிக்குள்ளும், 6.30 முதல் 7.30 மணிக்குள்ளும் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடலாம்.

    விஜய தசமி தினத்தன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்

    காலை 5.30 முதல் 6.30 வரை, 9.00 முதல் 9.50 வரை, 11 முதல் 11.50 வரை.

    அன்றைய தினம் காலை 9 மணி முதல் 9.50 மணிக்குள் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க நல்ல நேரமாகும்.
     
  6. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய விஜய தசமி வாழ்த்துக்கள்.
     

    Attached Files:

    • ap1.jpg
      ap1.jpg
      File size:
      118.6 KB
      Views:
      20
  7. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    வெள்ளிக்கிழமை தீபாவளி லட்சுமி வழிபாடு!

    தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அமாவாசை இருந்தாலும் நாளைதான் முழுமையான சர்வ அமாவாசை ஆகும். இந்த தீபாவளி வெள்ளிக்கிழமை அன்று வருவது கூடுதல சிறப்பு வாய்ந்த தாகும். இதுபற்றி பிரபல வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது:-
    இந்த தீபாவளி சித்திரை நட்சத்திரத்தில் வருவதும் சந்திரன் வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பதும் நட்சத்திர அதிபதி ஆட்சியாக விருச்சிகத்தில் இருப்பதால் குருவால் பார்க்கப்படுவதால் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சுக்கிரனுக்கு உகந்தநாள் வெள்ளிக்கிழமை ஆகும். சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமி. எனவே மகாலட்சுமியை நாளை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெறலாம்.

    தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தீபாவளி நாளில் கேதார கவுரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

    தீபாவளி அன்று குளியல், புத்தாடை உடுத்துதல், தீபம் ஏற்றுதல் கேதார கவுரி விரதம் போன்றவற்றை செய்ய உகந்த நேரம் வருமாறு:-

    நாளை மாலை பிரதோஷ காலத்தில் அமாவாசை இருக்கும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். எனவே நாளை மாலை 5.41 (சூரிய அஸ்தமனம்) முன்பே தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    நாளை அஷ்டமசுத்தியும், குருபார்வையும் உடைய கன்னியா லக்கனத்தில் அதிகாலை 2.45 மணிக்கு மேல் அதிகாலை 4.45 மணிக்கு முன்னர் தலை குளியல், புத்தாடை உடுத்துதல் நல்லது.

    தீபாவளி அன்று செய்யும் மகாலட்சமி பூஜை மிகவும் சிறப்பானது. இப்பூஜையை மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செய்யலாம்.

    வெள்ளிக்கிழமை நாளில் தீபாவளி கொண்டாடப்படுவதால் அனைவரும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் ரிஷபம், துலாம், ராசி லக்னக்காரர்கள் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் அசைவத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
     

Share This Page