நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

Discussion in 'Religious places & Spiritual people' started by Renukamanian, Nov 4, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    நவம்பர் 7 பக்ரீத்
    நபிகள் நாயகத்தின் உன்னதப் பொன்மொழிகள்!

    [​IMG]
    ஒரு மனிதன் இன்னொருவருக்குக் கருணை காட்டவில்லையெனில் கடவுள் அவனுக்குக் கருணை காட்ட மாட்டார்.
    மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி மனிதத் தன்மையுடன் வாழ்பவனே உண்மையான மனிதன்.
    ஒரு மனிதன் மகானாக வாழாவிட்டாலும், குறைந்தபட்சம் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.
    நல்ல அறிவுச் செல்வம் எந்த மூலையில் இருந்தாலும் அதை நாடிச் செல்ல வேண்டும்.
    மௌனமாக இருப்பதை விட நல்லதை வெளியே சொல்லி விடுவது நல்லது; கெட்டதைச் சொல்வதை விட மௌனமாக இருந்து விடுவது நல்லது.
    ஒருவனுடைய உழைப்பின் வியர்வை உலருவதற்குள் அவனுடைய கூலியைக் கொடுத்துவிட வேண்டும்.
    மற்றவரைத் தாக்கி வீழ்த்துகிறவன் வீரனல்ல; கோபம் வரும் சமயம் அதை அடக்கிக் கொள்பவனே வீரனாவான்.
    மற்றவர்களை ஏமாற்றிச் சம்பாதித்த பொருளால் தானம் செய்வதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
    [​IMG]
    கெட்ட நண்பனுடன் இருப்பதை விடத் தனிமையாய் இருப்பதே மேல். தனிமையாய் இருப்பதை விட நல்ல நண்பனுடன் இருப்பதே மேல்.
    பணிவு இல்லாதவரும் நாணம் தரும் செயல்களிலிருந்து விலகிக் கொள்ளாதவரும் உண்மையான மனிதர் அல்லர்.
    மனிதன் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை அவன் நாவடக்கமில்லாமையினாலே உண்டாகின்றன.
    உங்கள் எண்ணங்களிலிருந்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
    தொகுப்பு: சியாமளா ராஜகோபால், சென்னை - 64
    ================================================
    I am happy to share these thoughts....published in Mangayar [thanks to Mangayar Malar] Malar...latest issue. All these, when adhered, will certainly elevate us.


    "Renukamanian"
     
    1 person likes this.
  2. navis

    navis Gold IL'ite

    Messages:
    905
    Likes Received:
    129
    Trophy Points:
    108
    Gender:
    Female
    hi renu,

    nice verses,
    even i am a great fan of mangayar malar, most of the time we get these books in the shops after 1month from publishing so missing it a lot
     

Share This Page