1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நன்மரமும், நன்றிகெட்ட நானும் ....

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 10, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காற்று நுழையும் சாளரத்தின் வழியே
    காணும் பூத்துக் குலுங்கும் சிறுமரமும்,
    வேற்றுமையின்றி அதன் மேலேறிக் குதூகலிக்கும்
    அணிலும் குருவியுமென் உற்ற நண்பர்கள் !


    காட்சியில் மூழ்கும் போதே சட்டென
    மாறும் வானிலையோடு நாசி துளைக்கும்
    தூறல் கிளப்பும் நல் மண்வாசம் !
    மீட்சி இவையே எனக்கு அந்நாளில் !


    இப்படியான என் உலகத்தில் ஓர்நாள்
    காரிருள் சூழ்ந்தது, கயவர்கள் கைமாறு !
    நிழலும் நன்மையும் அருளாய்ப் பொழியும்
    நன்மரத்தை வெட்டிச் சாய்த்த நரிகளுருவில் !


    வசிப்பிடம் இழந்த அணிலும் குருவியும்
    நசித்தழுத ஓசை என் செவிகளறியும் !
    சீ ! வெட்கித் தலை குனிந்தேன் நான் !
    செயலற்றுப் பாவத்தைத் தடுக்க இயலாமைக்கு !


    மரமற்ற வெற்றிடம் பார்க்கப் பொறுக்காமல்
    அவ்விடம் நான் நட்ட வேறொன்றும்
    கிளைக்கவில்லை, அம்மண் அறிந்தது போலும்
    நான் நன்றி கெட்டவள் என்று !

    Regards,

    Pavithra

     
    vaidehi71, kaniths, periamma and 4 others like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்மரம் - நல்லவற்றை மட்டுமே நல்கும் ! அழகிய கவிதை !
     
    sangeethakripa and GoogleGlass like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    நன்மர கவிதை நன்று

    மண்ணுக்கில்லை நம் எண்ணம்
    நன்றி கெட்டவர் விதைத்தாலும்
    நன்மை பயக்க கிளைக்கும்
     
    jskls and sangeethakripa like this.
  4. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    உங்கள் கவிதை மிகவும் சூப்பர் . It reminds me

    [​IMG]
     
    vaidehi71, kaniths, PavithraS and 3 others like this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா @PavithraS ,

    மிக அழகிய கவிதை!
    அறிஞர் கலாம் கூறியது போல்
    மீண்டும் நட்டால், மீண்டு வரும்
    குருவியும் அணிலும்!
     
    jskls likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா
    மண்ணுக்கு இல்லை சூதும் வாதும்
    போட்டது முளைக்கும் .கவலை வேண்டாம்
     
    jskls and GoogleGlass like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    jskls likes this.

Share This Page