1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நடந்தாய் வாழி காவேரி!

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jun 5, 2018.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காவிரி - இதைப் பற்றி நான் சொல்லித்தான் தமிழ்ச்சமூகம் அறிய வேண்டுமா? காவேரிப் பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிட நதிக்கரையின் அருகே அமைந்த சோழநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவள் நான். இப்பதிவு,ஒரு ஜீவ நதியை சமமாய்ப் பங்கிட்டுக் கொள்வதில் ஒரு தாய் மக்களிடையே நிகழும் அரசியல் சார்ந்த அக்கிரமச் சண்டைகள்,சழக்குகள்,வழக்குகளைக் கண்டு வாடும் என் மனவருத்தத்தின் எதிரொலி...எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லை...

    உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை

    சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி”

    “மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்

    கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி” - சிலப்பதிகாரம்


    நடந்தாய் வாழி காவேரி!கிடக்குமூழி முதல்வன் பாதம்
    தொடவே வருவாய் ஆர்ப்பரித்தே!கிடையாதென்று சொல்வார் மூடர்!
    உடையாதோ அவர் ஆணவமே?மடைகள் தாண்டியோடி வரத்
    தடை யாரிங்கே விதிப்பாரோ?மடையரின் எதிர்ப்பு அடங்காதோ?

    அணையால் உனைத் தடுத்தாண்டிடவே,துணை போவார் மனிதர்களே!
    இணை தானுனக்கிங்கு யாருளரோ?சுனை நீரோ நீயடங்கிடவே?
    கணை விடுத்தோர்க் கூரம்பெனவே,நினைத்ததும் பாய்ந்து வந்திடுவாய்!
    வணங்குகின்றோம் எங்கள் தாய்நதியே!அணைத்திடு உந்தன் சேயெமையே!

    தாகத்துடன் எம் வயல்வெளிகள் நோக்குதம்மா உன் வரவினையே!
    மேகத்திரள் பெய்து நீர்ப்பெருகி,நோக்கம் நிறைவேற வந்திடுவாய்!
    வேகத்துடன் பாய்ந்து வந்துயெங்கள் ஏக்கமதை நீ போக்கிடுவாய்!
    போகமொரு மூன்று விளைந்திடவே வாக்குத் தந்தபடி வந்திடம்மா!

    குடகுப் பெண்ணாய்ப் பிறக்கின்றாய்ப்,பொன்னியெனப் பெயர் கொள்கின்றாய்!
    ஆடு தாண்டும் நதியாகின்றாய்,நதிக்கன்னியர் பலருன்னில் கலக்கின்றார்!
    கொடுமுடி தாண்டியோடி வந்தேயிங்கு அகண்ட காவிரி ஆகின்றாய் !
    வடகரைக் கொள்ளிடத்துடன் சேர்ந்து,அரங்கர்க்கு மாலை அணிவிக்கின்றாய் !

    பாய்ந்து வரும் வழித்தடத்திலெல்லாம்,சோலைகள் பூத்திடச் செய்திடுவாய்!
    சேயெமக்கிருக்கும் தேவைகளை, எம் தாயென நீயேத் தீர்த்திடுவாய்!
    ஆய்வுகள் பலவும் நடத்துகின்றார்,உனைப் பங்கிடயெதிர்ப்பைப் பதிகின்றார்!
    நீயிரங்காவிடில் உயிர்ப்பு இல்லை,இதில் அரசியலாலெந்தப் பயனுமில்லை!

    மணற்கொள்ளை அடித்திட ஊறுயென்றே உன் வரவினை அரசியலாக்குவதோ?
    கணக்கினுள் உன்னையடக்குவதோ?அணை திறப்பதையும் அவர்த் தடுப்பதுவோ?
    பிணக்குப் பாசாங்குக் காட்டுவதோ?துணையிழுப்பதுவோ சட்ட ஓட்டைகளை?
    வணக்கத்திற்குரிய காவிரியே எங்கள் மனக்குறை நீயேத் தீர்த்திடம்மா!

    Regards,

    Pavithra
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    iyarkai annai thayai purinthaal anri veru ethuvum saaththiyam illai .manithan maaravillaiyenil annai than thaakuthalai aarampiththu manithakulaththai pathara seithiduvaal .Manitha neyam seththu vittadho?
     
    Thyagarajan and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் பெரியம்மா! நீங்கள் சொல்வது சரியே! இயற்கையே மிகப் பெரியது,வலியது என்ற உண்மையை மனிதர்களாகிய நாம் உணரத் தவறினால்,அவ்வப்போது அந்த அன்னையே நமக்குத் தக்கபடி பாடம் புகட்டுவாள்.ஆனாலும் நாம் அந்தப் பாடத்தினால் பெறும் அறிவு அவ்வப்போது மறந்துவிடுகின்றதே,என்ன செய்ய?! இயற்கையைச் சுரண்டி சுயநலமாய்ச் செல்வம் சேர்ப்பதை நம் அரசியல்வியாதிகளும், பெரும்பணக்கார வர்க்கத்தினரும் நிறுத்தாவிடில்,அவர்கள் ஊரை அடித்து, ஊழல் செய்து சேர்க்கும் செல்வத்தை அனுபவிக்கக் கூட அவர்களின் சந்ததிக்கே வழியிருக்காது என்பதைப் புரிந்து கொள்வார்களா? அதுவும் ஐயமே!சமூக அக்கறையுடன்,இயற்கையை உண்மையிலேயே நேசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டது.அவர்கள் குரல் விழலுக்கிரைத்த நீராகின்றது.போராட்டம் செய்பவர்களெல்லாரும் உண்மையான நோக்கத்துடன் செய்வதில்லை,பிரச்சனையைப் பெரிதாக்குவதே நோக்கம்,பிரிவினையைப் புகுத்துவதும், வன்முறையை விதைப்பதுமே எண்ணம். இது புரியாமல் இளந்தலைமுறை பல போலித் தலைவர்கள் பின் செல்வதைக் காண வேதனையாயுள்ளது. நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நதிகளைக் காப்பதும்,மீட்பதும் நமது கடமை.இதை மறப்பதும்,மறுப்பதும் மடைமையிலும் மடைமை. நீரின்றி அமையாது உலகு....
     
    jskls, Thyagarajan and rgsrinivasan like this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Nice one @PavithraS. Reminded me of the book with this same title, written by Thi.Janakiraman and Chitti, which describes the river Cauveri from source till its whole journey in Tamilnadu. Nice book too. -rgs
     
    PavithraS likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
     
    PavithraS likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,560
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Some technical glitch seemed to have joined my reply comment with quote above #5.
    Click expand and then if you like continue reading it.
    Thanks and Regards.
     
    kaniths likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you RGS ! Though I know of Thi.Ja's treatise on the river Cauvery,have not read it so far.Thanks for suggesting. Shall read it some time. Am now reminiscing his Mogamul and Amma Vandal...:)
    Thank you Sir,for taking time to read my post and share your views and facts in your comments. I enjoyed it :thumbsup:
     
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஆத்தாடி காவிரி அரசியல் புரிஞ்சாலும் புரிஞ்சிடும்
    உங்க தமிழ் புலமை புரியாம புலம்ப தா முடியும் போலயே :)

    இயற்கை சீறினால், காவிரி சீறினாள்
    சீர்கெட்ட செயற்கை அரசியல் சிதறிடும்
     
    kaniths, PavithraS and jskls like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை. கருத்து சொல்வது கடினம். தங்கள் மொழிவளத்தை ஆழ்ந்து ரசித்து அனுபவிக்க எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு மிக்க நன்றி.
     
    kaniths and PavithraS like this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆஹா ! என்னை வச்சு நல்லாத்தான் காமெடி பண்றீங்க.இருக்கட்டும்,இருக்கட்டும்.ஆம்,இயற்கை சீறினால் செயற்கை சிதறித்தான் போகும். உங்கத் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி, GG!
    இந்த அரசியல்வாதிங்க செய்யறதையெல்லாம் பார்த்துப் பொறுக்காம நாம் இரங்கலைன்னா இந்த மக்களுக்கு கஷ்டமாச்சேன்னு இயற்கை அன்னையே நல்ல மழை பொழியத் துவங்கிவிட்டாள், ஆனாப் பாருங்க இப்ப எவனும் தடுப்பணை கட்டறதைப் பத்தியோ(அதுக்கு உள்கட்டமைப்பு இல்லையாமாம் -சொல்றாங்கோ),வேகமா நிரம்பி வர அணை நீர் வீணாகக் கடலில் கலக்காம அதையெல்லாம் சேமிக்கறதுக்கு மாற்று வழிகளைப் பத்தியோ வாயேத் திறக்க மாட்டானுங்கோ. எல்லாத்தையும் வீணடிச்சிட்டு அப்புறம் காவேரியில் தண்ணி வரலை, எல்லாரும் நம்மளை அழிக்க நினைக்கிறாங்கோ,விவாசாயம் செத்துடுச்சு அதுவே இதுவேன்னு சவுண்ட் விடுவானுங்கோ. தண்ணி இல்லாம தவிக்கும் போது ஐ.பி.எல். ஒரு கேடான்னு கேட்டு,கிரிக்கெட் போட்டியைத் துரத்தி வுட்டுட்டு சினிமா மட்டும் ரிலீஸ் பண்ணானுங்க, அப்ப அது மட்டும் கொண்டாட்டமாத் தெரியலையா ?எதிர்க்கட்சி ஒரு ஐ.பி.எல் டீமே வச்சுருக்கு, அவங்கக் கூட்டணி ஆளுதான் அப்போ அங்க முதல்வர்,இவங்க அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்ல, பங்காளி தண்ணி திறந்துவுடுங்கன்னு ?டாஸ்மாக் நாட்டு மக்களை ரொம்ப சுலபமா முட்டாளாக்கலாங்கறதை நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்காங்க.வாரியம் வாரியம்ன்னு எல்லாரும் கூத்தடிச்சு மக்களுக்கு நித்தம் போராட்டம் அது இதுன்னு தொல்லை குடுத்தானுங்க.இப்பத்தான் வாரியம் வந்துடுச்சே,பிரச்சனையைத் தீர்த்துட்டாங்களா? தண்ணி கேட்டா இரத்தமேக் கொண்டு வருவேங்கறாரு நம்மவரு.. ஷ்..ஷ்.. ஷ்..யப்பா சாமி முடியலடா! அரசியல் ஜோக்கர்ன்னு அறியப்படற (அவரு ஜோக்கரா,ஷாக்கரான்னு பட்டிமன்றமே நடத்தலாம்) சு.சாமி சொன்னா மாதிரி "உனக்குக் காவிரி தண்ணிதான் வேணுமா இல்ல தண்ணி வேணுமா ? காவேரி தான்னா கர்நாடகா பிரச்சனைதான் செய்யும்.ஆனால் ஏதோ ஒரு தண்ணின்னா தமிழ்நாட்டைச் சுத்தியும் கடல் இருக்கு,அதுலேர்ந்து நல்ல தண்ணி பிரிச்சுத் தர என்னால ஏற்பாடு பண்ணமுடியும்" அப்படின்னு சொல்றதைக் கொஞ்சம் சோதனை பண்ணிப் பார்க்கலாம்னு தோணுது. ஆனா என்ன,தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையா, முதல்ல தண்ணிப் பெருக்கெடுத்துக் கடல்ல கலக்கறதுக்கு முன்னாடியே அதை சேமிக்கறதை உட்டுட்டு அது கலந்த பின்னாடி அதுலேர்ந்து உப்பெடுத்து தண்ணிய சுத்திகரிச்சுன்னு தலையை சுத்தி மூக்குத் தொடத்தான் நம்ம ஆளுங்க லாயக்கு போலருக்கு. இப்படியே வீணாப் பேசித் திரியிற பாவத்தை நம்மளோட சந்ததிகள் சுமக்கிற காலம் வெகு தொலைவில் இல்லைங்கறது மட்டும் நல்லாத் தெரியுது. சரி விடுங்க- நாம பேசி எதுக்கு நம்ம இரத்தக் கொதிப்பை அதிகமாக்கணும் ? மேலே ஒருத்தன் இருக்கான்,எல்லாம் அவன் செயல்!
     
    GoogleGlass likes this.

Share This Page