1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க!

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Feb 6, 2012.

  1. sivshankari

    sivshankari Gold IL'ite

    Messages:
    1,237
    Likes Received:
    93
    Trophy Points:
    103
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    nice....keep sharing.......om namahshivaya
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: கண்ணப்ப நாயனார் பக்தி

    Dear SivaShankari,

    Nice to hear from u. Thanks for reading the article n the comments. Sure, whenever time permits i like to share with elites also the good things that i come across in my lifetime.. Have a nice day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: அன்பே சிவம்

    Dear Sivashankari,

    Thanks for reading this article. Have a nice day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: வள்ளலார் அறியாத இரக்கம்!

    Dear Sivashankari,

    Thanks for reading the message. Pls. just dont stop with reading.. Please try to understand the whole concepts. I've posted 2 books in how to meditate, i hope that article by itself will help u doing things right. Anyway, I'll keep some more posting with some more needed details to pass to all for the benefit of all that i m practically experiencing. Happy Day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Sivashankari.

    Well. Thanks for reading. Vadullurla jothi partha pathathu... ungaluku ulle parka try pannunga... athuku than ivalo try panuren by passing these details to all my friends n elitesku ippo start paniruken.. Let's see who all deserves it with God's poorna blessings... All the very best sivashankari. Happy day.

    wishes n regs,

    S. Sriumadevi Srinivasan.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    கற்றது கை மண்ணளவு – Avvaiyar

    கற்றது கை மண்ணளவு – Avvaiyar



    [​IMG]
    கற்றது கை மண்ணளவு - இந்த பழமொழி தெரியாதவனை தமிழனே இல்லை என்று சொல்லலாம்…. ஏன் எனில் அந்த அளவிற்கு இது தமிழில் மிக பிரபலமான மற்றும் உன்னதமான பழமொழி மேலும் எனதருமை ஞான கிழவி அவ்வையின் மொழி. அதுமட்டுமில்லாமல் அவளின் அளவிட முடியாத தன்னடக்கத்தால் இந்த மக்களுக்காக அவ்ள் தூவி விட்ட ஞானத்தில் ஒரு சிறு துளி இந்த “கற்றது கை மண்ணளவு” என்ற பழமொழி. அவளுக்கு வேண்டுமானால் இது சிறு துளியாக இருக்கலாமே தவிர உலக மக்களுக்கும் அதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு இதில் மறைந்துள்ள விடயம் சிறு துளி அல்ல அது பெரு வெள்ளம்.
    “கற்றது கை மண்ணளவு” என்ற பழமொழி எந்த அளவிற்கு தமிழில் பிரபலமோ அந்த அளவிற்க்கு இது வெறும் உலகியல் வாழ்க்கை சார்ந்த பழமொழியாக மட்டுமே பயன் படுத்தபட்டு கொண்டிருப்பதை போல வேதனையான விடயம் வேறு இல்லை என சொல்லலாம்.
    ஆம், வீட்டில் என்னம்மா இது புது பலகாரம்..னு கேட்டால்…போன வாரம் விஜய் தொலைகாட்சியில் போட்டாண்டா அதான் செஞ்சேன்…அப்பப்பா சமையல்..லதான் எத்தனை வகை…. “கற்றது கை மண்ணளவு” என்று சும்மாவ சொன்னாங்க என்று சொல்ல கேட்டிருக்கிறேன்!!!!
    Algebra..ல ஏதாவது கணக்கு தெரியாம முழி பிதுங்ஙி நிக்கும் போது….ஆசிரியர் வந்து அத பயங்கரமா explain பண்ணிட்டு “கற்றது கை மண்ணளவு” தான்ப்பா, ரொம்ப படிச்சுட்டன்னு மிதப்புல இருக்காத தம்பி என்று Algebraa வை கண்டுபிடிச்சதே அவர்தான் என்ற மாதிரி சொல்லிட்டு போவதையும் நாம் கவனித்திருக்கலாம்.
    பேஷன் டெக்னாலஜி…லதான் எத்தனை வகை என்று அங்காலயத்து கொள்ளும் இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம்!!! JAVA programming language..ஐ கடல்…பா அது படிச்சா படிச்சு கிட்டே இருக்கலாம் என்று சொல்லும் கணிணி துறையை சார்ந்தவர்களையும் நாம் பார்த்து இருக்கலாம். இங்கு அவர்கள் கடல் என்று சொல்வது “கற்றது கை மண்ணளவு” என்பததைத்தான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
    மிக சாதாரனமா நாம் இந்த பழமொழியை கணிணி மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்ற விடயத்துடன் சம்பந்த்தபடுத்தி பேசுகிறோமே இது சரிதானா என்று நாம் என்றாவது யோசித்து பார்த்து இருக்கிறோமா????
    ஞான மூதாட்டியின் காலத்தில் எந்த தொலைகாட்சியும் இல்லை அவள் எந்த சமையல்… நிகழ்ச்சியும் பார்த்திருக்க வாய்ப்பில்லை… அதனால் சமையலை பற்றி அவள் “கற்றது கை மண்ணளவு” என்று சொல்லியிருக்க மாட்டாள்.
    அவள் காலத்தில் எந்த விதமான ரசாயன தொழில் நுட்பமோ, விமான தொழில் நுட்பமோ மற்றும் கணிணி தொழில் நுட்பமோ இல்லை….. அய்யோ!!! இதெல்லாம் எதிர் காலத்தில் வர போகிறது இதெல்லாம் நாம் கற்க வில்லையே என அஞ்சியும் அவள் “கற்றது கை மண்ணளவு” என்று அவள் சொல்லவில்லை…..
    இளமையிலே முதுமை வரம் வேண்டி பெற்றவள் அவள்!!! அதனால் எந்த விதமான அழகு சம்பந்தமான (பேஷன்) போன்ற விடயத்தையும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை!!!!
    எந்த வித நடனமும் ஆட ஆசைபட்டிருக்க மாட்டாள் எனதருமை கிழவி! அப்படி ஆசைப்பட்டிருந்தால் இளமையிலே முதுமை வரம் வேண்டி பெற்றிருக்க மாட்டாள்.? அதனால் நிச்சயமாக ஆடல், பாடல் போன்ற கலைகளில் நாம் தேர்ச்சி பெற வில்லையே என்று நினைத்தும் அவள் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.
    இளமையிலே முதுமை வரம் வேண்டி சதா சர்வ காலமும் இறைவனை நினைத்து தவம் செய்தவள் நிச்சயமாக சமையல், பேஷன், கணிணி, மருத்துவம் மற்றும் Algebra பற்றி எல்லாம் “கற்றது கை மண்ணளவு” என்று சொல்லியிருக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை!!! அவள் தனக்குள்ளேதான் எதையோ கற்று கொண்டாள். அப்படி அவள் கற்று கொண்டதில்தான் “கற்றது கை மண்ணளவு” என்று சொன்னாள்.
    ஆனால் நாமோ சதா சர்வ காலமும் அனைத்தையும் புறத்திலே தேடி நமக்கு தேவை இல்லாததை எல்லாம் உலகளவு கற்று கொண்டு எதை கற்று கொள்ள வேண்டும் என்று கூட அறிய முடியாத நிலையில் இருக்கிறோம்!!! இதுதான் இன்று இருக்கும் நிதர்சனமான நிலைமை.
    அவ்வை தனக்குள்ளேதான் எதையோ கற்று கொண்டாள் என்று சொல்லி விட்டோம்…… அப்படி என்னதான் கற்று கொண்டாள்?????
    “உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்
    உடம்பினுள் உத்தமனை காண்”
    இப்படி உடம்பினுள் உத்தமனை தேடி கண்டுபிடிக்கும் காலத்தில்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை இரகசியங்களும் வெளிப்படும்… ஆம், நாம் செய்யும் தவத்திற்கேற்பவே காட்சிகளும், அனுபவங்களும் கிடைக்குமாம். அப்படிப்பட்ட அனுபவத்தின் மூலம்..தான் நாம் இதுவரை தெரிந்து வைத்திருப்பது கைமண்ணளவு…தான் என்று எம் அருமை மூதாட்டியும் தெரிந்து கொண்டாள்.
    அந்த அளவிற்க்கு அவள் தவமும் வலுவாக இருந்த்தது!!!!!
    வலுவாக இருந்ததால்தான் நாம் கற்றது கைமண்ணளவு இன்னும் கற்க வெண்டியது உலகளவு என்று தெரிந்து கொண்டாள்… இல்லை எனில் இன்றைக்கு இருக்கும் சில குருட்டு மனிதர்களை போல கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருந்திருப்பாள். இப்படி தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்றிருக்கவும் மாட்டாள்.
    உடம்பினுள் உத்தமனை நாம் கண்டுபிடிக்க வில்லை எனில் என்னவாகும் என்று அதற்கும் அவளே பதில் சொல்கிறாள்….
    என்ன மரணம் தான் நிகழும்!!!!!
    ஆம், நான் சொல்ல வில்லை அவ்வை தான் சொல்கிறாள்.
    தவம் செய்வோர்க்கு அவம் ஒரு நாளுமில்லை.
    தவம் செய்யவில்லை எனில் பாதிப்பு நிகழும் என்று சொல்கிறாள்…. மரணத்தை தவிர ஒரு மனிதனுக்கு என்ன பெரிய பாதிப்பு நிகழ்ந்து விட கூடும்!!!!!
    இந்த அவம் என்கிற வார்த்தைக்கு பதிலாகத்தான்….
    பல சித்தர்கள் பிறவா நெறி பெற வேண்டும் என்றனர். அதையும் மேலும் அழகாக எமது குரு நாதர் வள்ளல் பெருமான் சொன்னார்…. இறந்தால்தானே அடுத்து பிறப்பு….. அப்படி எனில் எனக்கு இறவா நெறி அளி அதான் மரணமிலா பெருவாழ்வு அளி என வேண்டி பெற்று கொண்டார்.
    வேண்டி பெற்று கொண்டார் எனில் தவம் செய்து பெற்று கொண்டார் என்று அர்த்தம்… உடனே நாம் வேண்டினாலும் கிடைக்கும் என்று நினைத்து கொள்ள வேண்டாம்!!!
    ஆனால் நமக்கும் கிடைக்கும்!!!! ஆம், தவம் செய்தால் யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம் இறவா நெறி என்கிற மரணமிலா பெருவாழ்வு அதுவே உடம்பினுள் இருக்கும் உத்தமனும் கூட. இதைத்தான் தவம் செய்வோர்க்கு அவம் ஒரு நாளுமில்லை என்று அட்சரசுத்தமாக சொன்னாள் எமது பாட்டி.
    எல்லா சித்தர்கள் சொன்னதும் இதைத்தான், வள்ளல் பெருமான் கருனையோடு எல்லோரும் மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்றுசொன்னதும் இதுதான் மற்றும் எம் அவ்வை பாட்டி சொன்னதும் இதைத்தான்.
    டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்ல தட்டாதிங்க!!!

    நாம் பாட்டி சொல்லை தட்டினால்…. மரணம் நம்மை தட்டும்!!!
    கேட்டா தப்பிச்சோம்!! கேக்கலைன்னா நாம close!!
    தவம் செஞ்ஞா அவம் நிகழாது!!!!!உடம்பினுள் உத்தமனை கண்டு கொள்ளலாம்!!!!
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருனை அருட்பெரும்ஜோதி
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இறைவனை காண்பவன் யார்?

    இறைவனை காண்பவன் யார்?

    “நாளும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறுங்
    கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்
    மூலங்கண் டாங்கே முடிந்துமுதல் இரண்டும்
    காலங்கண் டானடி காணுல மாமே”
    நாலும், இருமூன்றும் , ஈரைந்தில் கொண்டு சேர்க்கும் . அதாவது இருமூன்று – இரு கண்கள் இரு – மூன்றுவட்டம் கொண்ட கண். நமது இரு கண்வழி தவம் செய்வதால் அதிலிருந்து நாலு கலை பிரிந்து சென்று ஈரைந்து – பத்து. அதாவது பத்தாமிடமான ‘ய’ கார ஸ்தானம் , நம் ஆதமஸ்தானத்தில் சேரும். ஈராறுங்
    - பன்னிரண்டு கலையுடைய சூரியன் நமது வலது கண். “கோலிமேல் நின்ற குறிகள்” - கோலி போல் சிறுவர்கள் விளையாடுவார்களே கோலிகுண்டு, அதுபோல நமது கண்மணி உள்ளது. நம் பூமியைப் போல உள்ளது. அதில் பதினாறு என்பது இடது கண் சந்திர கலையை குறிக்கும். வலதுகலை 12 , இடதுகலை 16 இரண்டும் கோலிபோல் உள்ள கண்மணி அமைப்பு. மூலம் கண் என தெளிவாக கூறுகிறார் திருமூலர். கண்ணை கண்டு, இரு கண் கலையும் உள்ளே முடியும் இடமான அக்னிகலை – ஆத்மஸ்தானம் பத்தாகும். ‘ய’ பத்தாகிய இடத்தை ,16 கலை 12 கலை சேர மீதி உள்ள நாலுகலை கூட நாம் அடையலாம். இடது கண் சந்திரகலை சூரியகலை வலது கண்ணை ஊடுருவி உட்புகும்போது எஞ்சிய நாலுகலை இருகண்ணும் உள்ளே முடியும் இடமான பத்தமிடத்தை சேரும். இதுவே தவ அனுபவம். இங்ஙனம் காலங்கடந்த அழிவில்லாத ஜீவா ஆத்மாவை கண்டவன் உணர்ந்தவன் இறைவனை கான்பவனாவான்.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஈசத்துவம்(Eesathuvam)

    ஈசத்துவம்(Eesathuvam)

    ஈசத்துவம்

    திருமூலர் திருமந்திரத்தின் ஆரம்பத்தில் உலக பொது விசயங்களை நன்னெறிகளை ஞானம் கலந்து உறைக்கிறார். சரியை, கிரியை, யோகம் அனைத்தும் கூறி முடிவில் ஞானத்தை பூரணமாக உறைகின்றார். அனைத்து சித்தர்களும் சன்மார்க்கத்தையே போதிக்கின்றனர்.
    “ஈசன் அது இது என்பார் நினைப்பிலார்”




    எல்லாம் வல்ல ஈசன் ஈசத்துவம் பெற்றதால் – எங்கும் நிறைந்த தன்மை பெற்றதால் ஈசன் என்பார். அந்த ஈசன் இறைவன் அது இது என வெறும் வாயால் பிதற்றுவர் உண்மை அறியார். இதயத்தில் நினைக்காதவர்களுக்கு ஈசன் தென்பட மாட்டார்.
    “ஊனமர்ந்தோரை உணர்வது தானே”
    இறைவன் மனித தேகத்தில் “ஊன்” கண்ணில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என்பதை உணர வேண்டும். இம்மானிட பிறவி எடுத்ததன் பயன் இதுவே.
    “சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
    ஆதிக்கண் ஆவதறிகிலர் ஆதர்கள்
    நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
    பேதித் தவரைப் பிதற்று கின்றாரே”




    எல்லாம் வல்ல இறைவன் பேரொளி . அதன் ஒரு சிறு சோதியானது மூன்று நிலையாகி சூரிய சந்திர அக்னியாகி முச்சுடராகி விளங்குகிறது. ஐந்து பூதங்களும் இணைந்து ஒரு சேர நின்ற கண்களில் துலங்குகிறது. மூன்றும் ஐந்தும் எட்டு ‘அ’ என்றும் கண்ணாக நிற்கிறது. ஆதிக்கண் என்றது நாம். நம் தாயின் கருவில் உருவாகும்போது இறைவனால் அருளப்பட்ட ஜீவனைக் குறிப்பதாகும். இரு கண் மூலமாகவே ஆதிகன்னான ஜீவனை அடைய முடியும். பாவாத்மாக்கள் இந்த உண்மையை சொன்னாலும் புரிந்து கொள்ளார். இறைவன் நம் உடலில் இங்ஙனம் குடி கொண்டிருக்க இது புரியாமல் சிவன் விஷ்ணு பிரம்மா என பலவாறு தெய்வங்களை கூறி பிதற்றுவார்கள். உடலினுள்ளே பார்க்காமல் உலகிலே தேடுவார்கள்.
    நமது கண் ஒளியை பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆன்ம ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று விடும். இதுவே ஞான தவம். இப்படி செய்துதான் நாம் தூய்மையாகிதன் இறைவனை அடைய முடியும்.
    நம் சிரசிலிருந்து ஒரு நாடி கீழே இறங்கி நமது தொண்டையில் உள்ள சிறிய நாக்கின் மேல் பகுதியில் அண்ணாக்கின் மேல் நின்று அங்கிருந்து இரு நரம்பாக பிறந்து இரு கண்களிலும் வந்து சேர்க்கிறது. நாம் நம் கண்மணி ஒளிமூலம் தவம் செய்யும் போது இருகண்ணும் உள்ளே ஒன்றுசேரும் இடமே உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல. இதுவே நமது ஆத்மஸ்தானம். உயிர் இருக்குமிடம்.
    “உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”




    நமது உயிர் – பிராணன் – ஜீவன் – ஆத்மா இருக்கும் இடம் இதுவே. இதற்க்கு வாசல் இரு கண்களே ஆகும் இதை அறிந்தால் தானே தவம் செய்ய முடியும். குருவடி தீட்ஷை பெற்று உணர்ந்து தவம் செய்து ஆத்மஜோதியை தரிசிக்கலாம்.
     
  9. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மெய்பொருள் பற்றி திருமந்திரப் பாடல்கள்:

    மெய்பொருள் பற்றி திருமந்திரப் பாடல்கள்:

    .
    நமக்காக நமது முன்னோர்கள் எத்தனையோ ஞான பொக்கிஷங்களை தந்தருளியிருக்கிறார்கள். தமிழ் அறிந்தவர்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலிகள். இங்கே இருக்கின்ற அளவு ஞான நூல்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இங்கே இருக்கின்ற அளவு ஞான பெருமக்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு சமாதியின் மேல்தான் விழ வேண்டி இருக்கிறது. சமாதி என்றால் சம-ஆதி. அதாவது ஆதியான இறைவன் நிலையை அடைந்தவர்கள். செத்தைவனை புதைத்தல் அது சமாதி அல்ல.
    இனி சாத்திரத்தில் சிறந்த “திருமந்திரம்” கூறும் சில மெய்ஞான பாடல்களை கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    எல்லா ஞானிகளும் இறைவன் உடலில் கண்ணில் காரியப்படுவதை தெளிவுபடுத்தி அடைய வேண்டிய நிலையும் வழிகளையும் கூறிச்சென்றதையும் திருமூலர் தெளிவுபட விளக்குகிறார்.
    “விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
    தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
    உணனின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
    கண்ணின்று காட்டிக் களிப்பருத் தானே”

    - திருமந்திரம் 113
    இந்த பாடலில் இறைவன் நம் உடலில் இருக்கும் பான்மையினை தெளிவுபடுத்தியுள்ளார்கள் . இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நாம் செய்துள்ள பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தவாறு உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை நம் தலைக்கு முன்பக்கத்தில் காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பில்லாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி களிம்பாகிய மும் மலத்தை அறுத்தான். இல்லாமல் செய்கிறான் என்கிறார். இந்த ஒரு பாடல் போதுமே ஒருவன் ஞானம் பெறுவதற்கு!


    “பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
    மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
    மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
    பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே”

    - திருமந்திரம் 2883
    பார்ப்பான் – பார்ப்பது கண்தானே . எனவே கண்தான் பார்ப்பான்.
    அதில் உள்ள ஒளிதானே நம்மை நடத்திச் செல்கிறது! கண்-பார்ப்பான்-பார்த்தன், ஒளி-நடத்துபவன்-சாரதி.
    கண் ஒளியைத்தான் – கண்ணனைத்தான்(கண்) – நாம் பார்த்த சாரதி என்கிறோம். இந்த பார்ப்பன் அகத்திலே
    பார்ப்பசு ஐந்துண்டு அதாவது புலன்கள் ஐந்துண்டு என்கிறார்.
    இதை நாம் மேய்க்காவிட்டால் -கட்டுப்படுத்தாவிட்டால் கண்ட கண்ட இடத்தில் மேய்ந்து விடும்.
    மனதை கட்டுப்படுத்தும் மார்க்கத்தை அறிந்து நாம் நம் புலன்களை நம் வசப்படுத்தினால் கர்மேந்திரியங்கலான
    நம் புலன்கள் ஞானந்திரியமாக மாறி அதனால் நமக்கு அமுதம் கிடைக்கும் என்று கூறுகிறார்.
     
  10. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இறைவனனை அடையும் வழி:

    இறைவனனை அடையும் வழி:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா ! பரம் பொருள் ! இறைவன் ! எல்லாம் வல்லவரும் கடவுளே ! அவரின்றி ஓர் அணுவும் அசையாது ! அவர் பேரொளியாக விளங்குகிறார் !அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளூம் கூறியிருக்கின்றனர் !
    அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள் , ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா ? இருக்கிறார் ! நம் உயிராக ! ஜீவாத்மாவாக சிறு ஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே ! இதையும் இதுவரை இவ்வுலகில்தோன்றிய அனைத்தும் ஞானிகளும் கூறிருக்கின்றனர் !
    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !
    உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !அது இறையம்சல்லவா !
    நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ! ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !
    நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!
    கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் ! இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் ! நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !
    ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !
    நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் ! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !
    நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!
    நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் ! சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் ! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே ! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர் !
    பரிதவிக்கும் மாக்களை மரணமிள்ளது காக்க ! பரிபாஷைகளை கூறியது சிந்திக்க வைக்க ! தெளிவடைய செய்ய ! மக்களை தன்னிலை உணரச் செய்யவே ! சந்தேகமற உபதேசித்து ஞான உபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள் !
    உலகமெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியது கடவுள் ஒருவரே ! அவர் ஜோதி வடிவானவர் ! எங்கும் நிறைந்தவர் ! எல்லாம் வல்லவர் ! மனித உடலில் தலையில் ஜீவனாக, ஒளிர்ந்து ,இருகண்மணியிலும் துலங்குபவர் !
    கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள் ஒளியை அடைய வேண்டும் ! தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் ! நம் கண்மணி ஒளி பெருகி, நம்முள் கடந்து தான் , நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் ! கடவுளை நினைத்து கண்மணி ஒளியை நினைத்து குரு உபதேசத்தால் உணர்ந்துகுருதீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும் !
    நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் ! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் ! இதுவே கங்காஸ்நானம் ! அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டிருக்க வேண்டும் ! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகிகண்மணிமுன் உள்ள திரை விலகும் ! உருகி கரையும் ! பின்னர் தானே ஜோதி தரிசனம் !
    ஒவொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே , வள்ளலார் வடுலூரில் சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி தங்க ஜோதியை காண வைத்துள்ளார் ! ஞானம் பெறநாடுவீர் குருவை ! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி , உணர்த்தி தீட்சை தருகிறாரோ அவரே ஞான சற்குரு ! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!
    ஞானம் என்றால் பரிபூரண அறிவு ! தெளிவு ! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பரிபூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்ந்து கொள்வது ஞானம் !
    பற்பல பிறப்பெடுத்து துன்பபடுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனை ! பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த , மும்மல , 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை !
    நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி , நாம் நம் உள் ஒளியை பெருக்கி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை !
    எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தை தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார் !
    ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே !! ஒரு ஆன்மா, தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகபெரிய சேவை !தானத்தில் சிறந்தது ஞானதானமே !!
    மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினர் வள்ளலார் ! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி தீட்சை தருபவரே உண்மையான சற்குரு !
    “கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி ! ”
    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !
    கண் வழி கட உள்ளே கடவுளை காண் !
     
    1 person likes this.

Share This Page