1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீண்டத் தீண்ட மலர்வதென்ன!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Aug 22, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு தோழமைகளே...
    என் சிந்தனையில் உதித்த இரண்டாவது கதை இந்த கதை தான் ஆனால் எழுத தூண்டிய கதை யாருக்கு யாரோ? சில தோழமைகளின் விருப்பத்திற்காக எழுத தொடங்கியது மழைக்காலம்.
    இதோ எனது நான்காவது கதையை கடவுள் ஆசீர்வாதத்துடனும் உங்கள் அனைவரின் ஊக்கத்துடனும் தொடங்குகிறேன்..

    கதையின் தலைப்பு - " தீண்டத் தீண்ட மலர்வதென்ன!!! "

    கதையின் கருப்பொருள் -
    இரு இதயங்களிடையே மலரும் அழிவில்லா மலர் 'காதல்' தான் இந்த கதையின் கருப்பொருள்.
    ஒரு ஆணோ பெண்ணோ தான் விரும்புபவரின் மனதை தீண்டி காதலை மலர செய்வதை பற்றிய கதை தான் "தீண்ட தீண்ட மலர்வன்தென்ன!!!"

    இந்த கதையை படித்து, அதன் நிறை குறைகளை கீழுள்ள தளத்தில் மட்டும் கூறுங்கள்.

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments.html#post2394831

    நன்றி,
    உங்கள் அன்புத் தோழி,
    தேவி.
     
    6 people like this.
    Loading...

  2. hisandhiya

    hisandhiya Bronze IL'ite

    Messages:
    121
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi devi

    welcome yaar.nice title.Best wishes.

    sandhya
     
    1 person likes this.
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டத் தீண்ட மலர்வதென்ன!!!
    [​IMG]


    தீண்டல் 1:


    மார்கழி பனியில் பெங்களூர் நகரமே உறங்கி கொண்டிருக்க இயற்கையின் அழகை ரசித்தபடி இதழில் புன்னகையுடன் குளிருக்கு இதமாக கைகளை தேய்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த மிருதுளாவின் மனதினுள் சிறு கவிதை ஒன்று உதித்தது-


    "இயற்கை அன்னையே!
    வியந்தேன் உன்
    அழகைக் கண்டு!


    இயந்திரங்களின் சத்தமின்றி
    காலை பனியில்
    தென்றலின் தீண்டலில்
    பறவைகளின் காதல் கீதத்தில்
    மரக்கிளைகளின் கொஞ்சலை
    ரசித்து மலர் பாதையில்
    நடக்கும்
    சுகமே தனி!"

    சிறு வயது முதல் இயற்கை அன்னையின் மிக பெரிய விசிறி நம்ம மிருதுளா. எந்த ஒரு இயற்கை காட்சியையும் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் மிகவும் ரசிப்பாள்.
    சந்தோஷமோ சங்கடமோ பெற்ற அன்னையை நாடுகிறாளோ இல்லையோ இயற்கை அன்னையை நாடுவாள்.


    அன்று மலர்ந்த புது மலரின் பொலிவுடன் இருக்கும் மிருதுளாவின் கண்கள் எதிரே ஜாக்கிங் வந்து கொண்டிருந்த இளைஞனை கண்டதும் மின்னின."ஹாய்! குட் மார்னிங்.. வாட் அ ப்லசன்ட் சர்ப்ரைஸ்! நீங்க எங்க இங்க?"


    அந்த இளைஞனை கண்டதும் எந்தளவிற்கு மிருதுளாவின் கண்கள் மின்னியதோ அந்தளவிற்கு அவனின் கண்கள் எரிச்சலை பிரதிபளித்தன. அவன் பேசாமல் நகரவும் மிருதுளா அவசரமாக, ஆனால் அவன் கண்களை உடுருவும் பார்வையுடன் அழுத்தமான குரலில்,
    "என் கேள்விக்கு பதில் சொல்லலையே!" என்றாள்.


    ஒரு அலட்சியத்துடன்,
    "அதே கேள்வியை நானும் கேட்கலாமே! நீங்க எங்க இங்க?"


    "நீங்க இங்க இருக்கீங்களே! அதான் நானும் இங்க இருக்கேன்" என்று கூறி கண் சிமிட்டினாள்.
    ஆனால் உண்மையில் இந்த சந்திப்பை மிருதுளா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதை அறிந்த அந்த இளைஞனும் 'நான் இங்க இருப்பேன் னு உனக்கு எப்படி தெரியும்?' என்று கேட்கவில்லை.


    மிருதுளா ஒரு போலி அலுப்புடன்,
    "ஆனா நான் இந்த கேள்வி பற்றி கேட்கலை" என்று கூறவும் அவனின் முகம் சுருங்கி எரிச்சலை வெளிபடுத்தியது.
    மிருதுளா எதை பற்றி கூறுகிறாள் என்பதை அவன் அறிந்ததால் 'என்ன?' என்று கேள்வி கேட்கவில்லை, ஆனால் அதற்காக அமைதியாக இருப்பவள் மிருதுளா இல்லையே!


    "என் காதலை ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?" என்று கேட்ட மிருதுளாவின் குரலில் ஏக்கம் இருந்தது.
    ஆனால் அதை நம்ப அந்த இளைஞன் தயாராக இல்லை.


    அதே அலட்சியத்துடன், "உங்களிடம் ஏற்கனவே இதற்கு பதில் சொல்லிட்டேனே!" என்றான்.


    "ஏன் ரஞ்சன் என் காதலை..............."


    "டோன்ட் கால் மீ ரஞ்சன்"


    "அப்போ இப்படி கூப்பிடவா... செல்லம்,டியர்,டார்லிங்,ஹனி,ஸ்வீட் ஹார்ட்,.........."


    "ஸ்டாப் இட் மிருதுளா"


    "ஓ! என் பெயர் ஞாபகம் இருக்குதே!" என்று கூறியவள் கண்களில் குறும்புடன் இதழில் புன்னகையுடன் அவனை நெருங்கி,
    "மறக்க விடாம கனவுல வந்து டிஸ்ட்டர்ப் பண்றேனா ரஞ்சன்?" என்றாள்.


    கோபத்தில் அந்த இளைஞனின் கண்கள் சிறிது சிவந்தது, பல்லை கடித்துக் கொண்டு,
    "உனக்கு காது கேட்காதா? டோன்ட் கால் மீ ரஞ்சன் னு சொன்னேனே! என் பெயரை சுருக்கி கூப்பிடாதே! "


    மிருதுளா சிறு வெற்றி புன்னகையுடன், "இது இதான் நீங்க, இந்த கோபத்தை மறைத்து சும்மா போலியா வாங்க போங்க னு மரியாதையுடன் பேசிட்டு..
    நீங்க மட்டும் நான் சொல்றத கேட்குறீங்களா? என்னை லவ் பண்ண சொன்னா கேட்குறது இல்லை.. அது போல் தான் இதுவும்..
    (அவனின் முறைப்பை பொருட் படுத்தாமல் தொடர்ந்தாள்)
    நான் உங்க பெயரை சுருக்கி கூப்பிடுறது உங்களுக்கு பிடிக்கலை.. பட் வாட் டு டூ ரஞ்சன்? உங்களை இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ரஞ்சன், ரஞ்சி னு கூப்பிடுறது தானே எனக்கு பிடித்திருக்கிறது" என்று செல்லம் கொஞ்சினாள்.


    "காலைலேயே எரிச்சலை கிளப்பாத.. நான் உன்னை அடிக்குறதுக்கு முன் இங்கிருந்து போய்டு" என்று அடிக்குரலில் எச்சரித்தான்.

    அவனது கோபத்தை பொருட்படுத்தாமல் சரோஜாதேவி குரலில்,
    "அடிங்க ரஞ்சன் அடிங்க அப்படியாது உங்க கை என் மேல் படட்டும்" என்று கூறியவள் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு,
    "அப்படி சொல்லுவேன்னு நினைச்சீங்களா! நீங்க அடிச்சா பதிலுக்கு நானும் அடிப்பேன்" என்று ஜான்சிராணியை போல் கூறினாள்.


    மிருதுளாவின் மிரட்டலை எதிர்பாராத அந்த இளைஞன் லேசாக எட்டி பார்த்த புன்னகையை அடக்கிக் கொண்டு நிற்கவும் மிருதுளா,
    "சிரிப்பை ஒன்னும் அடக்க வேண்டாம், நீங்க சிரிச்சா என் காதலை எத்துகிட்டதா அர்த்தமாகாது.. சோ பயப்படாம சிரிங்க..
    'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' னு மகாத்மா காந்தி சொல்லிருக்கார், ஸோ நீங்க நல்ல சிரிச்சா உங்க கொடிய நோய் 'டென்ஷன்' போய்டும், மனம் லேசாகிடும்..........."


    அந்த இளைஞன் முறைக்கவும்,
    "என்ன முறைக்குறீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்............"
    அவன் ஏதோ சொல்ல வரவும், மிருதுளா கையுயர்த்தி அவனது முயற்சியை தடுத்து, உறுதியான குரலில்,
    "பிடிக்கும்னு தான் சொன்னேன்.. என் மேல் காதல்னு சொல்லல... உண்மையை சொல்லுங்க உங்களுக்கு என்னை பிடிக்காது?"


    அவன் எதுவும் கூறாமல் நகரவும் மிருதுளா,
    "பெயரில் தான் மனம் இருக்கு என் காதலை ஏத்துக்க மனமில்லை" என்று முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.


    அதை கேட்ட மனோரஞ்சனின் இதழில் சிறு புன்னகை அரும்பியது.
    நான்கடி எடுத்து வைத்த மிருதுளா திரும்பி சத்தமாக,
    இப்பவே லைட் ஆ என் மேல் காதல் ஸ்டார்ட் ஆகிருச்சு.. கொஞ்ச நாள் ல நீங்களே ஒத்துப்பீங்க.." என்றவள் அழகிய மென்மையான புன்னகையுடன்,
    "ரஞ்சன் ஐ லவ் யூ" என்று கூறி மனோரஞ்சனின் பதிலை எதிர்பாராமல் வெக்கம் கலந்த முக மலர்ச்சியுடன் தன் நடையை தொடர்ந்தாள்.


    மிருதுளாவின் 'ஐ லவ் யூ' வை கேட்ட மனோரஞ்சன் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு 'என்ன பெண் இவள்?' என்று நினைத்தான்.
    'லவ் ஆ நானா! சான்ஸே இல்லை.. ஆனால் அவள் பேசுவதை கேட்டு எரிச்சல் வந்தாலும் அதை கொஞ்சம் ரசிக்க தானே செய்கிறேன்!
    (என்று சிறிது யோசிக்க தொடங்கியவன் உடனே தன் சிந்தனையை திசை திருப்பினான்)
    ச்ச்.. முதல இங்கு வந்த பிரச்சனையை கவனிப்போம்' என்று தனுக்கு தானே அறிவுரை சொல்லிக் கொண்டு ஜாக்கிங்யை தொடர்ந்தான்.



    மனோரஞ்சன் - ஆசிரமத்தில் வளர்ந்தவன். பெண்கள் மீதோ காதல் மீதோ சிறிதும் ஈடுபாடு இல்லாதவன். அதுவும் இன்றைய மார்டன் யுவதிகளை கண்டால் முகம் சுழிப்பவன்.
    பெரும்பாலான நேரம் இறுக்கமான முகபாவத்துடன் இருப்பவன். மனோரஞ்சனா 'சிரிக்க கூலி கேட்பான்' என்பதே அவனை சுற்றி இருப்பவர்களின் கூற்று. நெருங்கிய நண்பன் ஒருவனுக்கே இவனுக்கும் சிரிக்க தெரியும், கிண்டலாக பேச தெரியும் என்பது தெரியும்.



    இப்படிப்பட்டவனை எப்படி மிருதுளா காதலிக்கிறாள் என்பதை டார்டாயிஷ் காயில் சுத்தி பார்க்குறதுக்கு முன்னாடி நம் கதையின் அடுத்த நாயகனை பார்ப்போம் வாங்க..

    தனது ஜாக்கிங்-யை முடித்துவிட்டு தன் அறையின் ஒரு பகுதியான தனது சிறிய ஜிம்-யில் உடற்பயிற்சியை செய்ய தொடங்கியிருந்தான் வித்யுத்.

    வித்யுத் - பெயருக்கு ஏற்றார் போல் புத்திசாலி. புகழ் பெற்ற, வளர்ந்து வரும் தொழிலதிபர். தந்தையின் மறைவிற்கு பின் தொழிலையும் வீட்டையும்(அன்னை, இரண்டு தங்கைகள்) திறம்பட செயலாற்றுபவன்.
    'SS Builders' என்ற சாம்ராஜ்யத்தின் தலைவன்.
    பெங்களூரில் தலைமை அலுவலகம் மற்றும் ஒரு கிளை அலுவலகம் இருக்கிறது. சென்னையிலும் ஒரு கிளை அலுவலகம் இருக்கிறது.
    மூன்று அலுவலகத்தையும் ஒரே ஆளாக இருந்து சிறப்பாக நிர்வாகம் செய்யும் ஆற்றல் உடையவன்.
    இதை தவிர தனது சொந்த முயற்சியில் SS-InfraStructure, SS-Foundations என்பனவற்றையும் திறம்பட நிர்வகித்து வருகிறான்.


    வித்யுத் பற்றிய அறிமுகம் போதும், அவனை கவனிப்போம்!
    அதோ அவனது கைபேசி சிணுங்குகிறது, என்னவென்று பார்ப்போம் வாங்க......


    உடற்பயிற்சியின் நடுவில் சிணுங்கிய கைபேசியை எடுத்து, அதில் வந்திருந்த குறுஞ்செய்தியை படித்தவனின் புருவம் சுருங்கியது.


    அப்படி என்ன குறுஞ்செய்தி வந்தது என்று யோசிக்கிறீங்களா!!!


    "ஹாய் டார்லிங்! குட் மார்னிங்' என்று புது எண்ணில் இருந்து வந்திருந்தது.


    வித்யுத் கைபேசியை வைத்துவிட்டு தனது பயிற்சியை தொடர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் அதே எண்ணில் இருந்து மற்றொரு குறுஞ்செய்தி வந்தது..
    "என்ன டார்லிங்! குட் மார்னிங் சொன்னா பதிலுக்கு விஷ் பண்ண மாட்டியா?" என்று வந்திருந்தது.


    அதை படித்த வித்யுத் மனதினுள்,
    "யாரு இது?
    இந்த வாலுங்க(இரண்டு தங்கைகளை தான் பாசமாக வாலுங்க என்று கூறுகிறான்) ஏதும் விளையாடுதுங்களோ?
    ஹ்ம்ம்.. பெரிய வால் இந்த மாதிரி.. நோ சான்ஸ்..
    சின்னது... 'டார்லிங்' னு ஓவர் ஆ மெசேஜ் பண்ண மாட்டாளே!
    யாரா இருக்கும்?" என்று சிறிது யோசித்தவன் தோளை குலுக்கி மீண்டும் பயிற்சியை தொடங்கினான்.






    ஜாக்கிங்-யை முடித்துவிட்டு அலுவலக விருந்தினர் இல்லத்திற்கு(Guest-house) வந்திருந்த மனோரஞ்சன் மேஜை மேல் இருந்த செய்தித் தாளை எடுத்த போது கை தட்டி தொலைகாட்சி-ரிமோட் கீழே விழுந்து தொலைக்காட்சி தானாக இயங்க தொடங்கியது. அப்பொழுது "கே-டி.வி" யில் 'புதிய பறவை' படத்தில் சரோஜாதேவி,"போதும் கோபால் போதும்" என்று கூறிக் கொண்டிருக்க, மனோரஞ்சனுக்கு மிருதுளாவின்,
    "அடிங்க ரஞ்சன் அடிங்க" வசனம் நினைவிற்கு வர புன்னகைத்துக் கொண்டான்.


    அப்பொழுது அவனது கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவனது நண்பன் சூர்யாபிரகாஷ்.

    (சந்தேகமே வேண்டாம் சூர்யாபிரகாஷும் கதாநாயகன் தான்.)

    சூர்யாபிரகாஷ் - மனோரஞ்சனின் நெருங்கிய நண்பன். மனோரஞ்சனின் சுபாவத்திற்கு எதிர்மறை. இவன் எப்பொழுதும் பிரகாசமான சூரியனை போன்ற பொலிவான முகத்துடன் இருப்பவன். பெண்களிடம் வழியமாட்டான், அனைவருடன் கலகலப்பாக பேசுவான்.
    ஒரே ஒரு தங்கை. தங்கை மீது அதிக பாசம் கொண்டவன்.
    "SS Builders" சென்னை அலுவலகத்தில் சேல்ஸ் டிப்பார்ட்மென்ட் மேனேஜர். திறமைசாலி, எந்த ஒரு வாடிக்கையாளரையும் தன் வார்த்தை ஜாலத்தால் கவர்ந்துவிடுவான்.
    மனோரஞ்சனை பற்றிய சிறு குறிப்பு - இவன் "SS Builders" சென்னை அலுவலகத்தின் ஜெனரல் மேனேஜர்.


    சூர்யாபிரகாஷ் எதற்காக தன் நண்பனை அழைத்தான் என்று பாப்போம் வாங்க.....


    மனோரஞ்சன் புன்னகையின் நடுவே, "குட் மார்னிங்.. சூர்யா"


    சூர்யா பிரகாஷ், "குட் மார்னிங்.. என்னடா டென்ஷன் ஆ இருப்ப னு நினைச்சேன்.. ஜாலி மூட் ல இருக்க போல"


    மனோரஞ்சன் தன்னை சுதாரித்து, "ஜாலி மூட் ஆ நீ வேற"


    "சரி.. எதுக்கு சிரிச்சுட்டு இருந்த?"


    "அத விடு.. நீ எதுக்கு காள் பண்ண?"


    "பேச்ச மாத்தாத மனோ"


    "நான் ஏன் பேச்சை மாத்த போறேன்?"


    "அப்போ சொல்லு"


    "எதை?"


    "டேய்"


    "விட மாட்டியே" என்று மனோரஞ்சன் அலுத்துக் கொள்ள சூர்யாபிரகாஷ் புன்னகைத்தான்.


    மனோரஞ்சன், "புதிய பறவை படத்துல ஒரு சீன் பார்த்து சிரிச்சுட்டு இருந்தேன்"


    "அவளோ தானா?"


    "ஏன்?"


    "இது மட்டும் தான் னா, நான் கேட்டப்பவே சொல்லி இருப்பியே!"


    "..."


    "டேய் உண்மைய சொல்லு"


    "ச்ச்.. ஒன்னும் இல்லை டா.. காலைல ஜாக்கிங் போனப்ப" என்று இழுக்க, சூர்யாபிரகாஷ் சுவாரிஷியமாக,
    "ஹ்ம்ம்.. ஜாக்கிங் போனப்ப"


    "கதையா சொல்லிட்டு இருக்கேன்"


    "ஓகே..ஓகே.. நோ interruption.. நீ சொல்லு"


    "நீ எதுக்கு போன் பண்ண அத சொல்லு"


    "டேய் பொறுமையை சோதிக்காம ஒழுங்கா நடந்ததை சொல்லு.. கைல கிடைச்ச........."
    மனோரஞ்சன் சிரித்தான்.


    "பெங்களூர் ல இருக்குற தைரியத்துல சிரிக்காத.. எப்படியும் சென்னைக்கு தான் வரணும்"
    மனோரஞ்சனின் சிரிப்பு நிற்கவில்லை.


    "டேய் கடுப்பேத்தாம நடந்ததை சொல்லு"


    "சொல்லலைனா"


    "காலங்காத்தால உனக்கு போய் போன் பண்ணேன் பாரு என்னை!!!"


    "பட்டா செருப்பால அடிக்க போறியா?"


    "டேய்"


    "ஓகே.. ஜோக்ஸ் அப்பார்ட்.. எதுக்கு போன் பண்ண?"


    "ஆக நீ சொல்ல மாட்ட!"


    "...."


    "ஓகே.. லீவ் இட்..
    நீ எப்படியும் தைரியமா, கூல் ஆ தான் M.D கிட்ட பேசுவ னு தெரியும்.. பட் போறதுக்கு முன்னாடி டென்ஷன் ஆ இருப்பியோ னு காள் பண்ணேன்"


    மனோரஞ்சன் புன்னகையுடன், "டோன்ட் வொர்ரி டா.. ஐ வில் மனேஜ்"


    "யா.. ஐ நொ இட்.. டேக் கேர்.. பாய்"


    "சூர்யா"


    "ம்ம்"


    "நான் ஜாக்கிங் போனப மிருதுளாவை பார்த்தேன்"


    சூர்யாபிரகாஷ் உற்சாகத்துடன், "அதான் புன்னகையின் ரசகியமா!!! என்ன சொன்னா?"


    "அதே பல்லவி தான்.."


    "நீயும் அதே சரணத்தை பாடினியா?"


    "..."


    "அது இருக்கட்டும்.. எதுக்கு புதிய பறவை சீன் பார்த்து சிரிச்சுட்டு இருந்த?"
    மனோரஞ்சன் மிருதுளாவுடன் நிகழ்ந்த உரையாடலை கூறினான்.


    சூர்யா பிரகாஷ் பலத்த சிரிப்புடன், "மிருதுளா சிஸ்டர் உனக்கு எத்த ஆள் தான்"


    "சிஸ்டரா?"


    "ஆமா உன் ஆள் எனக்கு சிஸ்டர் தானே"


    "சூர்யா"


    "மனோ.. மிருதுளா சொன்னது போல் உனக்கும் அவளை பிடிச்சுருக்கு அப்பறம் ஏன்............"


    "பிடிச்சுருக்கு னு நான் சொன்னேனா?"


    "உன்னை எனக்கு தெரியாதா?"


    "எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை.. அதுவும் மிருதுளாவின் காதல் மேல்"


    "ஏன்?"




    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments.html#post2394831

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    7 people like this.
  4. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குறிப்பு - சூர்யப்ரகாஷ்(SuryaPrakash) என்ற பெயர் சூர்யாபிரகாஷ் என்று தவறாக வந்திருந்ததை நான் கவனிக்கவில்லை.. மன்னிக்கவும்..

    தீண்டல் 2:

    மனோரஞ்சன் "எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை.. அதும் மிருதுளாவின் காதல் மேல்" என்றதும் சூர்யப்ரகாஷ் நிதானமாக, "ஏன்?" என்று வினவினான்.

    பதில் சொன்ன மனோரஞ்சனின் குரலில் தெரிந்தது கோபமா, எரிச்சலா, வெறுப்பா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை.
    மனோரஞ்சன்,"என்ன டா ஏன் னு கேட்குற? ஒருத்தி மூன்றாவது சந்திப்பிலேயே 'ஐ லவ் யூ' னு சொன்னா ஏத்துக்கணுமா? அது மட்டுமா! அவ.............." மனோரஞ்சன் வாக்கியத்தை முடிப்பதற்குள் சூர்யப்ரகாஷ் குறுக்கிட்டான்,
    "டேய்.. காதல் மலரதுக்கு நாள் கணக்கோ வர்ஷ கணக்கோ தேவை இல்லை"

    மனோரஞ்சன் நக்கலாக, "ஓ நான் ஒரு காதல் மன்னன் கிட்ட பேசிட்டு இருக்குறதை மறந்துட்டேன்"

    "டேய்"

    "நீ ஏன் கோப படுற.. நான் ஜெமினி கணேசனை மீன் பண்ணலை.. சரண் படத்தை தான் மீன் பண்ணேன்"

    " இது ரொம்ப தப்பு.. நான் என்கேஜ்மென்ட் ஆன பொண்ண லவ் பண்ணலை"

    "நான் அதை மீன் பண்ணலை"

    "தென்"

    "அதுல அஜித் பார்த்ததும் லவ் பண்ணது போல் தானே நீயும் பண்ற?"

    "இல்லை னு சொன்னா ஒத்துக்கவா போற.. பட் லவ் அட் பஸ்ட் சைட் ல என்ன தப்பு?"

    "அழகு எப்படி நிலையில்லாததோ அதை போல் தான் அழகை மையமாக கொண்டு வரும் காதலும்"
    சூர்யப்ரகாஷ் சிரித்தான்.

    மனோரஞ்சன்,"எதுக்கு டா சிரிக்குற"

    "காதல் ல நம்பிக்கை இல்லை னு சொல்லிட்டு பிச்சி உதறியேடா"

    "டாக்டர் பட்டம் பெற்றவங்கலாம் உண்மையான டாக்டர் இல்லையே, ஐ மீன் மருத்துவர்கள் இல்லையே"

    "இதன் மூலம் தாங்கள் கூற வருவது என்னவோ?"

    "காதலிச்சா தான் காதல் பற்றி பேசணும் னு இல்லை"

    "சரீங்க G.M சார்"

    "........"

    "என்ன யோசனை மனோ?"

    "நீ 'நான் என்கேஜ்மென்ட் ஆன பொண்ண லவ் பண்ணலை' னு சொன்னியே!
    அவளுக்கு என்கேஜ்மென்ட் ஆகலை னு உனக்கு தெரியுமா?"

    "..."

    "என்னடா?"

    "தெரியாது தான்.. ஆனா கண்டிப்பா அவளுக்கு என்கேஜ்மென்ட் ஆகியிருக்காது.."

    "ஒருவேளை ஆகியிருந்தா?"

    "....."

    "சூர்யா.. உன்னை டிஸ்கரேஜ் பண்றேன்னு நினைக்காதே"


    "ம்.. ஐ கேன் அண்டர்-ஸ்டாண்ட் யூ"


    மனோரஞ்சன் தீவிரமான ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்க்ணினான்.
    "சூர்யா.. நியர்லி ஒன் இயர் யூ ஹவ் சர்ச்டு ஹர்..
    பெயர் கூட தெரியலை..
    உன் தேடலில் அர்த்தம் இல்லையோ னு தோணுது டா.."

    "..."

    "உனக்கு கல்யாணத்தில் நாட்டம் இல்லையோ னு அம்மா ரொம்ப கவலை படுறாங்க.."

    சூர்யப்ரகாஷிடம் இருந்து "ச்ச்" என்று சலிப்பாக பதில் வந்தது.

    "உன் கஷ்டம் புரிது டா.. பட்........."

    "M.D கிட்ட பேசுறதை பற்றி யோசிச்சுட்டியா?"

    "பேச்சை மாற்றாதே சூர்யா"

    "ச்ச்..என்னை என்ன டா பண்ண சொல்ற? பூவும் புயலுமா கலவையா இருக்கற அவளை பார்த்த என் மனசு வேற யாரையும் ஏற்காது.. இந்த பீலிங்க்ஸ் உனக்கு புரியாது டா"

    "உன் லவ் பீலிங்க்ஸ் புரியாது தான், பட் உன் மனம் படும் பாடு புரிது, அதை விட அம்மாவின் பயம் கலந்த வருத்தம் ரொம்ப புரிது"

    "...."

    "அம்மா ரொம்ப கவலை படுறாங்க சூர்யா"

    "திரும்ப திரும்ப அதே சொல்றியே.. என்னை பற்றி யோசிக்கறியா?"

    "நீயே யோசிச்சு பாரு.. அவளை பற்றிய சின்ன clue கிடைச்சா கூட பரவா இல்லை.. பட்.. (சிறிது தயங்கி)
    அவளுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்........."

    "நாம வேற பேசலாம் மனோ"

    மனோரஞ்சன் பெருமூச்சொன்றை வெளியிட்டான்.
    பிறகு,
    "முடிஞ்சா இன்னைக்கு இவனிங் சம்யூ வ போய் பார்க்கறேன்"

    தங்கை பற்றிய பேச்சு வந்ததும் சூர்யப்ரகாஷ் உற்சாகமானான். நண்பனை நன்கு அறிந்திருந்த மனோரஞ்சன் வேண்டுமென்றே தங்கையை பற்றி பேசினான்.

    "மேடம் உன் மேல் கோபமா இருக்காங்க"

    "நான் பெங்களூர் வந்ததை போட்டுக் கொடுத்துட்டியா?"
    சூர்யப்ரகாஷ் சிரித்தான்.

    "ஹ்ம்ம்.. அப்போ கண்டிப்பா போய் பார்க்கணும்.."

    "போடா போ" என்று பலமாக சிரித்தான்.

    "நீ சிரிக்குறதை பார்த்தா.. ஏதாவது கவச-குண்டலத்தோடு தான் போகணும் போல.."
    சூர்யப்ரகாஷ் மீண்டும் சிரித்தான்.

    மனோரஞ்சன், "ஓகே டா.. மீட்டிங் முடிஞ்சதும் காள் பண்றேன்.."

    "எவ்ரி திங் வில் கோ பைன்.."

    "ம்.. நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாரு டா.. பாய்"

    சூர்யப்ரகாஷ் சிறு புன்னகையுடன்,"நீயும் தான்" என்று கூறி அழைப்பை துண்டித்தான்.




    மனோரஞ்சன் "எப்படி டா அவள் காதலை நம்புவது?" என்ற கேள்வியுடன் மிருதுளாவை முதல் முதலில் சந்தித்ததை நினைத்துப் பார்த்தான்.
    அதே நேரத்தில் சூர்யப்ரகாஷின் மனதினுள் தன்னவளை முதல் முதல் பார்த்த காட்சி படமாக ஓடியது.


    நண்பர்களின் கனவுலோகத்திற்குள் நுழைவதற்கு முன் அவர்களது பாஸ் வித்யுத் என்ன செய்கிறார் என்று பார்த்துவிட்டு வருவோம் வாங்க..



    வித்யுத்தின் அன்னை சுகந்தி தனது இளைய மகள் சுசீலாவை திட்டிக்கொண்டிருந்தார்.
    "நீ மட்டும் ஏன்டி இப்படி இருக்க?"

    "அது என்ன எப்ப பார்த்தாலும் நீ மட்டும் நீ மட்டும் னு ராகம் பாடுறீங்க?"

    "வித்யுத்தும் சுமேதாவும் பொறுப்புடன் நடந்துக்குறாங்க நீ மட்டும்............."

    "அம்மா... இது ஓவர்"

    "எது ஓவர்? வித்யுத்..........."

    "அண்ணனை நான் எதுவும் சொல்லலை.. பொறுப்புக்கு டிக்ஸனரி ல மீனிங் தேடுனா வித்யுத் னு இருக்கும்.... ஆனா இந்த சுமி ய.........." என்று அவள் கடுப்புடன் பேசுகையில் நடுவே அன்னை,
    "ஏன்டி அவளுக்கு என்ன?"

    "ஹம்... அவளது பொறுப்பு பருப்பு பற்றிலாம் எனக்கு நல்லா தெரியும்.. இப்ப தான் ஏதோ அமைதியா இருக்கா..
    நானாது படத்துக்கு போனதை உன்னிடம் சொல்றேன், அந்த கேடி.. எத்தன தடவ மாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போனான்னு எனக்கு தானே தெரியும்...
    ஆமா பொறுப்பு பொறுப்பு னு பொரிறியே.. உனக்கு மட்டும் பொறுப்பு இருக்கா?" என்று வினவவும் அன்னை ஆச்சரியமும் சிறு அதிர்ச்சியுமாக மகளை பார்த்தார்.

    "என்ன பார்குற?
    அண்ணாக்கு வயசு 28 ஆச்சு.. காலாகாலத்துல அவனுக்கு கல்யாணம் கில்யாணம் பண்ணி வைக்குறது உன் பொறுப்பு தானே.."

    அன்னை சற்று மலைச்சு போய் நின்றார். மனதினுள், 'என்ன பேச்சு பேசுறா' என்று நினைத்துக் கொண்டார், பிறகு,
    "என் பொறுப்பு பற்றி எனக்கு தெரியும்டி..
    அவன் தான் கொஞ்ச நாள் ஆகட்டும் னு சொல்லிட்டு திரிறான்"

    "உனக்கு அண்ணனை மசிய வைக்க தெரியலை"

    "அவன் என்ன பருப்பா மசிக்குறதுக்கு"
    இப்பொழுது மலைச்சு போவது மகளின் முறையாற்று. அதே மலைப்புடன்,
    "பரவா இல்லையே சுகி.. (டி-ஷர்ட் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு) இந்த சுசி கூட சேர்ந்து கொஞ்சம் பேச கத்துக்கிட்ட.. குட்" என்று அன்னையின் தோளை தட்டிக் கொடுத்தாள்.

    "ஏய் சின்ன வாலு.. காலேஜ்க்கு கிளம்பாம என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்க?" என்ற வித்யுத்தின் குரலை கேட்டதும் சுசீலா அவசரமாக அன்னையிடம்,
    'படத்துக்கு போனதை சொல்லிடாத' என்று செய்கை செய்துவிட்டு அண்ணனிடம்,
    "பிரச்சனை பண்றதெல்லாம் இந்த சுகி தான்"

    "என்ன தப்பு பண்ணி அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்க?" என்ற கேள்வி கூர்மையாக வரவும் சுசீலா தன்னை தானே 'தவளை தவளை' என்று முணுமுணுப்பாக திட்டிக் கொண்டு,
    "அது எப்போதும் நடக்குறது தான்.. ஆனா ஒன்னு ணா" என்று இழுத்து அன்னையை பார்த்தாள் பிறகு தமயனை பார்த்தாள்.

    வித்யுத் 'என்னவென்று' புருவம் உயர்த்த, சுசீலா,
    "இந்த சுகி ய மட்டும் நீ நம்பின உனக்கு அறுவதாம் கல்யாணம் தான் நடக்கும்.. அது கூட சந்தேகம் தான் " என்றாள்.

    தங்கை சொன்ன விதத்தில் சிரித்த வித்யுத் அன்னையிடம் கண்ணசைவில் 'என்னவென்று' கேட்க, அன்னை,
    "பொறுப்பா நடந்துக்கோ னு சொன்னா, எனக்கு பொறுப்பு இல்லை னு சொல்றா..
    உனக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கற நினைப்பே இல்லையாம் எனக்கு..."

    அன்னை புன்னகையுடன் இதை கூறினாலும் அவரது குரலில் இருந்த ஆதங்கமும் குற்றசாட்டும் வித்யுத்திற்கு புரிந்தது.
    வித்யுத் புன்னகையுடன், "அது நடக்குறப்ப நடக்கும்.. நீ எதில் இருந்து தப்பிக்க என் பெயரை இழுத்து விட்ட?"

    சுசீலா,"நீ அதுலேயே இரு" என்று முணுமுணுக்க, வித்யுத், "எதுல?"

    சுசீலா,"எப்பா உன் காது எவளோ ஷார்ப்"

    வித்யுத்,"ஐஸ் வச்சது போதும் விஷயத்துக்கு வா"

    சுசீலா அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, "எந்த விஷயத்துக்கு அண்ணா?"

    வித்யுத் புன்னகையுடன்,"உனக்கு ஆஸ்கார் அவாடே குடுக்கலாம்" என்று சொன்னபடி சாப்பாட்டு மேஜை அருகே சென்று அமர்ந்தான்.

    "தன்க் யூ அண்ணா" என்று சொன்னபடி சுசீலாவும் உண்ண அமர்ந்தாள்.
    சுகந்தி பிள்ளைகளுக்கு பரிமாற தொடங்கினார். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சுகதிக்கு எப்பொழுதும் தன் கையால் தான் பிள்ளைகளுக்கு பரிமாற வேண்டும்.
    பரிமாறிவிட்டு அவரும் உண்ண அமர்ந்தார். இது வித்யுத்தின் அன்பு கட்டளை, அன்னை தங்களுடன் தான் உண்ண வேண்டும் என்பது தான் அந்த அன்பு கட்டளை.

    வித்யுத்,"சுமி எங்க மா?"

    "இப்ப தான் பா பிரெண்ட் அ பார்க்க கிளம்பி போனா"

    "ஹ்ம்ம்.."

    இட்லியை வாயில் மென்னபடி வித்யுத், "படம் எப்படி இருந்தது சுசி?"

    சுசீலாவின் வாயிலிருந்த இட்லி துண்டு தொண்டையில் சிக்கியது. வித்யுத்தை பார்த்துக் கொண்டே அவசரமாக தண்ணீரை பருகினாள். அவனோ உணவில் கவனமாக இருப்பவன் போல் இருந்தான்.

    'அண்ணன் எதுவும் கேட்டானா இல்லை என் பிரம்மையா?' என்று சுசீலா மனதினுள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, 'கனவில்லை நிஜம்' என்பது போல் வித்யுத்,
    "என்ன சுசி படம் நல்லா இல்லையா?" என்று கேட்டான்.

    "எந்.. எந்த படம் அண்ணா?"

    "நேத்து நீ பார்த்த படம் தான்"

    "மாடில இருந்து ஒட்டு கேடுட்டாரோ?" என்று பயத்தில் சிறிது சத்தமாக முணுமுணுக்க, வித்யுத் கோபமாக,
    "ஒட்டு கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை சுசி.. எந்த தேட்டருக்கு எப்ப யார்லாம் போனீங்க னு சொல்லவா?"

    "சாரி அண்ணா" என்று அழுதுவிடும் குரலில் சுசீலா கூறவும் வித்யுத்தின் கோபம் தணிந்தது,
    "லுக் சுசி.. நீ சினிமாக்கு பிரெண்ட்ஸ் கூட போனது தப்பு னு சொல்லலை.. பட் கிளாஸ் கட் பண்ணிட்டு போனது தப்பு.. யூ ஆர் ரிபீட்டிங் திஸ் 3rd டைம்.. திஸ் இஸ் யுவர் லாஸ்ட் வார்னிங்.."

    சுசீலா எழும்பாத குரலில்,"தீபி தான்......."

    "ஐ நோ நீட் எனி explanation.."

    "சாரி ணா"

    "ஹோப் யூ வோன்ட் ரிபீட் திஸ்"

    "sure ணா"

    சிறிது நேரம் அமைதி நிலவியது, பிறகு சுசீலா,
    "அண்ணா என்னை திட்டுற அளவுக்கு நீ சுமி ய திட்டினதே இல்லை" என்று புகர் கூறினாள்.

    வித்யுத் சிறு புன்னகையுடன்,"அவ உன் அளவிற்கு சேட்டை பண்ணது இல்லையே"

    "சுமியும் தான்............"

    "சுசி.. கிளாஸ்ஸோட மாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போறது வேற.. உங்க கங் மட்டும் கிளாஸ் கட் பண்ணிட்டு போறது வேற.. அதையும் கூட சுமி என்னிடமோ அம்மாவிடமோ சொல்லிடுவா.."

    "...."

    "சுசி நீயும் சுமியும் எனக்கு ரெண்டு கண்கள்.. நோ பார்ஷியாலிட்டி.." என்று புன்னகைத்தான்.

    "அப்போ சுகி"

    சிறிது யோசித்த வித்யுத், "நெற்றி கண்"

    "கரெக்ட் கரெக்ட் என்னை பார்த்து எப்போதும் முறைச்சுடே தானே இருக்கா" என்று சிரித்தவள்,
    "அண்ணா அப்போ அண்ணி வந்தா என்ன சொல்லுவ?"

    "வரப்ப பார்த்துக்கலாம்" என்று கூறியபடி கை கழுவ எழுந்தான்.

    சுசீலா,"அண்ணா இருந்தாலும் நீ உன் கல்யாண விஷயத்தில் சுகி ய நம்புறதுக்கு பதில் இந்த சுசி ய நம்பலாம்"

    "நம்புனா!!!"

    சுசீலா உற்சாகமாக,"உனக்கு தெரியாது ணா.. என் பிரெண்ட்ஸ், சீனியர்ஸ் னு எத்தன பேர் உன்னை பார்த்து ஜொள்ளு விடுறாங்க தெரியுமா! நான் வேணா பெஸ்ட் ஆ செலக்ட் பண்ணி தரட்டுமா?"

    வித்யுத் தங்கையின் காதை திருகி,"யே வாலு! படிக்குற வேலையை மட்டும் பாரு" என்றான்.

    "போ ணா" என்ற செல்ல சிணுங்கலுடன் துள்ளி குதித்து ஓடுகிற சுசீலாவையே சுகந்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

    வித்யுத்,"என்ன மா அப்படி பார்க்குறீங்க?"

    "விளையாட்டு பிள்ளையாவே இருக்காடா.. நீ திட்டினதும் வருத்த பாட்டா ஆனா உடனே அதை மறந்துட்டா பார்த்தியா.. இவளை........."

    "மறக்கலை மா.. சூழ்நிலையை மாத்தினா.. இனி கிளாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போக மாட்டா..
    கவலை படாதீங்க மா.. பஸ்ட் இயர் தானே.. போக போக சரியாகிடும்..
    சுமியும் இப்படி தானே இருந்தா.. இன்னும் சில மாசத்துல ஒரு கம்பெனி M.D யா பதிவி ஏற்க போறாளே!"

    அன்னை ஏதோ நினைவு வந்தவராக,"சுமிக்கு இந்த ட்ரேனிங் தேவையா?"

    வித்யுத் அழுத்தமான குரலில், "ஒரு கம்பெனிக்கு M.D னா எல்லா விதத்திலும் தகுதியானவங்களோ இருக்கணும்.. சுமிக்கு இந்த ட்ரேனிங் கண்டிப்பா தேவை தான்.."

    "தனியா டெல்லி ல..."

    "சுமி சமாளிப்பா மா"

    "ம்"

    "மா.. என் கல்யாணத்தை பற்றி கவலை படாதீங்க.. சுமி கல்யாணத்திற்கு பிறகு நான் கல்யாணம் பண்ணிக்குறேன்.. ஓகே!"
    அன்னையின் முகம் பிரகாசமானது. உடனே வித்யுத் புன்னகையுடன்,
    "இப்பவே பொண்ணு தேட ஆரம்பிச்சுடாதீங்க.. பஸ்ட் சுமி ட்ரேனிங்.. தென் சுமி மரேஜ்.. தென் ஒன்லி...."

    "ஓகே பா" என்று அன்னை வாஞ்சையுடன் புன்னகைத்தார்.









    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-2.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    4 people like this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டல் 3:


    மனோரஞ்சன் மற்றும் சூர்யப்ரகாஷ்யின் கனவுலோகத்திற்குள் செல்வோமா!!! முதலில் சூர்யப்ரகாஷ் நினைவலைகளுக்குள் செல்வோம்..

    பல மாதங்களுக்கு முன், ஒரு நாள் இரவு 7.45 மணிக்கு சூர்யப்ரகாஷ் அலுவலகத்தில் இருந்து தனது இருசக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அலுவலக பிரச்சனை காரணமாக எரிச்சலுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
    தீடீரென்று சாலையில் சலசலப்பு, ஏதோ கட்சி மாநாடு தொடங்க இருப்பதால், தொண்டர்கள் நடு ரோட்டில் இரண்டு 10,000வாளா சரவெடியை பரப்பிக் கொண்டிருந்தனர்.

    சூர்யப்ரகாஷ் மனதினுள், ' இவன்க rapture தாங்களை.. ஆ ஊ னா.. ரோட்டை மரிச்சுருறான்க.. !' என்று கூறிக் கொண்டு எதேர்ச்சியாக தனது இடது பக்கம் திரும்பினான்.
    பத்தடி தூரத்தில் ஸ்கூட்டியில் இரு பெண்கள் இருந்தனர்.

    பின்னால் இருந்த பெண் நவாப்பழம் நிறத்தில் சில்க்-காட்டன் புடவையை கட்டியிருந்தாள், அவளது நிறத்திற்கு கனகச்சிதமாக அந்த புடவை பொருந்தியிருந்தது.
    இடையளவிற்கு இருந்த தலைமுடியை பின்னலிட்டு மல்லிச்சரம் சூடியிருந்தாள், நெற்றியின் இருபுறமும் சின்னஞ் சிறு முடிகள் காற்றில் லேசாக அசைந்தாடியது.
    அவள் சூர்யப்ரகாஷிற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தாலும் சரவெடி வெடிக்கத் தொடங்கியதும், முகத்தை அவளது வலதுபக்கம்(அதாவது சூர்யப்ரகாஷின் இடது பக்கம்) திருப்பி, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, முன்னிருந்த பெண்ணின் இரு தோள்களையும் இருகரத்தால் அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

    அந்த பெண்ணின் பயத்தை பார்த்து சூர்யப்ரகாஷின் முகத்தில் புன்னகை அரும்பியது.
    வெடி சத்தம் நின்றது வண்டிகள் கிளம்பின, சூழ்ந்திருந்த புகை மண்டலத்தில் அந்த பெண் இருந்த வண்டி மறைந்தது.

    கண்டதும் காதல் என்று சொல்லிவிட முடியாது ஆனால் அவனுக்கு அந்த பெண்ணை பிடித்திருந்தது.
    முதலில் அவன் கூட, 'பார்க்க நல்லா இருந்தா, பார்க்க பிடிச்சுது, அவள் யாருனே தெரியாது, தினமும் எத்தனையோ பேரை பார்க்கிறோம், அதை போல் தான் இதுவும்' என்று சாதாரணமாக விட்டுவிட்டான்.

    ஆனால் அவளை பார்த்த இரண்டு நாட்களுக்குள்ளேயே அவனது மனக்கண்ணில், பல முறை அவளது முகம் புகை மண்டலத்தின் நடுவே வந்து வந்து போனது. அவனால் அந்த பெண்ணின் கள்ளம்-கபடமில்லா முகத்தை மறக்க முடியவில்லை.

    சூர்யபரகாஷ் கற்பனை உலகில் இருந்த நேரத்தில் அவனை பார்த்த மனோரஞ்சன் என்னவென்று கேட்க சூர்யப்ரகாஷ் நடந்ததை கூறினான்.
    மனோரஞ்சன், "லூசு தனமா ஏதும் யோசிக்காம வேலையை பாருடா" என்று கூறிவிட்டு சென்றான்.

    நான்கு நாட்கள் சென்றிருக்கும்,
    சூர்யப்ரகாஷ் அதே நிலையில் இருக்கவும் மனோரஞ்சன்,
    "சூர்யா பீ பிரக்டிகல்.. அவ யாரு என்னனே தெரியாது..
    இந்த ஊர் தானா னு கூட தெரியாது.. இதே ஊரா இருந்தாலும், இந்த சென்னை மாநகரத்தில் நீ கண்டு பிடிப்பது ரொம்ப கஷ்டம்.. (சூர்யப்ரகாஷ் ஏதோ சொல்ல வரவும் மனோரஞ்சன்)
    டேய் அலைபாயுதே மாதவன் மாதிரி கணக்கு போட ட்ரை பண்ணாத.. உன் விஷயத்தில் அதுவும் ஒத்து வராது"

    "..."

    "எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை னு இப்படி சொல்லலை.. நீயே யோசிச்சு பாரு.. தினமும் எத்தனையோ பேரை பார்க்குற............"

    "அதான் என் பாயிண்ட்யும்.. தினமும் எத்தனையோ பெண்களை பார்க்குறேன்.. ஈவன் வெகு சிலரை சைட் கூட அடிச்சுருக்கேன் பட் இவளை போல் யாரும் என்னை disturb பண்ணதில்லையே!"

    "சூர்யா.. ட்ரை டு அண்டர்-ஸ்டாண்ட்.. திஸ் இஸ் ஜஸ்ட் அ பிஸிகல் attraction.."

    "யூ ட்ரை டு அண்டர்-ஸ்டாண்ட் மனோ.. திஸ் இஸ் நாட் பிஸிகல் attraction.. அவ அழகு ஈர்க்க கூடியது தான் பட் அதை காட்டிலும் அவளது கள்ளம் கபடமில்லா முகம், குழந்தைகள் பயப்படுவது போல் வெடிக்கு பயந்த விதம் தான் என் மனசில் ஆழமாக பதிஞ்சுருக்கு"

    "லூசா டா நீ.. கள்ளம் கபடமில்லாதவளாம்.. நீ என்ன பழகி பார்த்தியா? பழகி பார்த்தாலே இந்த கால பொண்ணுங்க கரக்டர் கரெக்ட் டா தெரிறது இல்லை........"

    ".."

    "என்ன டா அமைதியாகிட்ட"

    "நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்க போறதில்லை"

    "நீ மட்டும்.........."

    "ofcourse நானும் இந்த விஷயத்தில் கண்டிப்பா ஒத்துக்க போறதில்லை"

    மனோரஞ்சன், 'எப்படியோ போய் தொலை' என்பது போல் பார்த்துவிட்டு சென்றான்.





    அவளை முதல் முதலாக பார்த்த சுற்று-வட்டாரத்தில் தேடித் பார்த்தான். தோல்வி தான் கிட்டியது.

    நாட்கள் ஓடின...

    ஒரு நாள் அன்னையுடன் தங்கை பிறந்த நாளிற்காக ஆடை எடுக்க டீ-நகர் சென்றிருந்தான். கடையை விட்டு வெளியே வந்த போது, சாலையின் மறுமுனையில் சற்று தொலைவில் இருந்த ஒரு கடையில் அவள் பூங்கொத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    சூர்யப்ரகாஷின் கண்கள் மின்னின..
    இந்த முறை மஞ்சள் நிற சல்வாரில் இருந்தாள். மலர்க்கொத்துகளுக்கு நடுவில் இருந்த அவள் மஞ்சள் நிற ரோஜா போல் தான் சூர்யப்ரகாஷிற்கு காட்சியளித்தாள். அவள் நெற்றியில் இருந்த வேர்வை துளிகளோ ரோஜா இதழின் மேல் இருக்கும் பனித்துளிகள் போல் தோன்றியது அவனுக்கு.

    அவன் தன்னை மறந்து தன்னவளை ரசித்துக் கொண்டிருக்கையிலேயே,
    ஒருவன் அவள் மேல் உரசினான். அவள் திரும்பி பார்த்ததும் அவன்,
    "சாரி சாரி.. தெரியாம பட்டுருச்சு" என்றான்.

    அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, பூங்கொத்துக்களை ஆராய தொடங்கினாள்.

    சூர்யப்ரகாஷிற்கு ரத்தம் கொதித்தது. அன்னை அருகில் நின்றதால் என்ன செய்வதென்று சூர்யப்ரகாஷ் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவன் மீண்டும் உரசினான், அவள் கண்ணில் தீப்பொறியுடன் திரும்பினாள், அவனது கன்னத்தில் அடி இடியென விழுந்தது.

    அவளின் கோபத்தை கண்டு சூர்யப்ரகாஷ் ஒரு நொடி அரண்டு போனான் என்று தான் சொல்லவேண்டும்.
    'தான் முதல் முதலாக பார்த்த போது சிறு குழந்தையை போல் வெடிக்கு பயந்ததென்ன! இப்பொழுது.................' என்று சில நொடிகள் சிந்தனையற்று நின்றான் சூர்யப்ரகாஷ்.

    அடிவாங்கியவனோ கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பேய்யரைந்தது போல் நின்று கொண்டிருக்க கூட்டம் கூடியது.
    கூட்டத்தில் ஒருவன்,
    "என்ன மேடம்? என்ன பிரச்சனை?"

    அவள் இப்பொழுதும் வாய் திறக்கவில்லை. அடி வாங்கியவன்,
    "தெரியாம இடிச்சுட்டேன் சார்.. அது..க்..கு.. போ....ய்......"(அவள் திரும்பி பார்க்கவும் அவன் பேச்சு சுருதி இறங்கி நின்றது)

    அவள் வாய் திறக்காமல் இருக்கவும் ஏதோ அவள் பக்கம் தான் தவறு இருக்குமோ என்று யோசிக்க தொடங்கினர் மக்கள்.

    கூட்டத்தில் மற்றொருவன், "என்னமா தெரியாம பட்டத்துக்கு போய் அடிச்சுடியே!"

    அவள் குரல் கொடுத்தவன் பக்கம் திரும்பி கோபமாக,
    "நீ பார்த்தியா? அவன் தெரிஞ்சு பண்ணானா தெரியாம பண்ணானா னு நீ பார்த்தியா?
    உன் மகளை உரசி இருந்தால் இப்படி தான் சொல்வியா?"

    "அது..அது....."

    சூர்யபரகாஷ் அன்னையிடம் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு சாலையை கஷ்ட பட்டு கடந்து வரவும், அவள் கடைகாரர் பக்கம் திரும்பி காசை கொடுத்து ஏதோ ஒரு பூங்கொத்தை வாங்கிவிட்டு யாரையும் திரும்பி பார்க்காமல் சென்றாள்.

    கூட்டம் கலையத் தொடங்கியது.
    "ரோட்டுல ஒரு பொண்ணு தனியா போக முடியலை.. பொறிக்கி பசங்க தொல்லை தாங்களை"

    "ஆமா நாடு ரொம்ப கேட்டு போச்சு" என்று சில பெண் குரல்கள் கேட்டது.

    சூர்யப்ரகாஷ் கூடத்தின் நடுவே அவளை தேடினான், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அடுத்த தெருக்குள் போய் பார்க்கலாமா என்று அவன் யோசித்து செயல்படுவதற்குள் அன்னை கைபேசியில் அவனை அழைக்கவும் நிராசையுடன் சாலையை கடந்து சென்றான்.



    மாதங்கள் கடந்தது...
    அந்த இரு சந்திப்பிற்கு பிறகு சூர்யப்ரகாஷ் தன்னவளை சந்திக்கவே இல்லை.

    இந்த நிலையில் தான் சூர்யப்ரகாஷின் அன்னை அகல்யா மனோரஞ்சனிடம் பேசினார்.
    அகல்யா மனோரஞ்சனை கைபேசியில் அழைத்தார்.

    மனோரஞ்சன்,"எப்படி இருக்கீங்க மா? அப்பா எப்படி இருக்காங்க?"

    "நல்லா இருக்கோம் பா"

    "என்ன மா குரலே சரி இல்லையே.. உடம்............."

    "உடம்புக்கு என்ன பா மனசு தான் சரியில்லை"

    "என்னமா? என்ன பிரச்சனை? சூர்யா எதுவும் சொல்லலையே!"

    "பிரச்சனையே அவன் தானே"

    மனோரஞ்சன் அதிர்ந்தான், 'காதல் கிதல் னு எதுவும் உளறிட்டானா?' என்று யோசித்தான், ஆனால் எதையும் குரலில் வெளிபடுத்தாமல்,
    "என்ன மா?" என்று வினவினான்.

    "ச்ச்.. என்னனு சொல்றது பா.. எனக்கே எதுவும் புரியலை"

    "..." மனோரஞ்சன் கவனமாக வார்த்தையை விடாமல் அன்னையின் வாக்கியத்திற்காக காத்திருந்தான்.

    "எங்களுடன் நல்லா தான் சிரிச்சு பேசுறான், ஆனா சில நேரங்களில் தனியா இருக்குறப்ப எதையோ பறிகொடுத்தது போல் இருக்கான்.... (உடைந்த குரலில்)அவனுக்கு என்ன பா பிரச்சனை.."

    "பிரச்சனை லாம் ஒன்னும் இல்லை மா"

    "மனோ நீயாது உண்மையை சொல்லு"

    "அவன் என்ன மா சொல்றான்?"

    "நான் போனதும் முகபாவத்தை தான் மாத்திறானே.. நான் என்ன னு கேட்குறது!"

    "நான் பேசுறேன் மா"

    "என்ன தான் பா அவனுக்கு பிரச்சனை?"

    "பிரச்சனை எதுவும் இல்லை மா.. நான் சூர்யா ட கேட்குறேன்"

    "நீயும் மறைக்குறியே பா"

    "என்ன நம்புங்க மா.. நான் அவனிடம் பேசுறேன்"

    "ஹ்ம்ம்.. சரி பா" என்று சுருதியே இல்லாமல் கூறி அழைப்பை துண்டித்தார்.




    அடுத்த நாள்(சனிக்கிழமை மாலை) மனோரஞ்சன் சூர்யப்ரகாஷை தன் பிளட்-டிற்கு அழைத்துச் சென்றான்.

    சூர்யப்ரகாஷ்,"என்ன டா திடீர்னு பிளட் கு கூட்டிட்டு வந்துருக்க?"

    மனோரஞ்சன் பேசாமல் இருக்கவும் சூர்யப்ரகாஷ்,
    "என்ன மனோ? என்ன மட்டர்?"

    "நீ தான் சொல்லணும்"

    "எதை?"

    "கொஞ்ச நாளா அவளை பத்தி பேசாதனால மறந்துட்டேன் னு நினைச்சேன்" என்று நிறுத்தி சூர்யப்ரகாஷின் கண்களை தீர்க்கமாக பார்த்தான்.

    சூர்யப்ரகாஷ் மௌனம் சாதித்தான்.

    மனோரஞ்சன்,"அம்மா ரொம்ப கவல படுறாங்க சூர்யா"

    "அம்மா பேசுனாங்களா? அவங்களுக்கு............"

    மனோரஞ்சன் இதழ்கள் லேசாக விரிந்தன, "தாய் அறியா சூல் உண்டா" என்றான்.

    "..."

    "இதுக்கு என்ன தான் டா முடிவு?"

    ".."

    மனோரஞ்சனுக்கு எரிச்சல் வந்தது,"இப்படியே மௌனமா இருந்தா எப்படி டா?"

    "எனக்கு ஒரு மூணு மாசம் டைம் குடு டா"

    "அதுக்கு அப்பறம்?"

    "..."

    "சூர்யா!"
    சூர்யப்ரகாஷ் இயலாமையுடன் மனோரஞ்சனை பார்த்தான். மனோரஞ்சன் எழுந்து சென்று சூர்யப்ரகாஷின் தோளை தட்டிக் கொடுத்து,
    "ஓகே.. த்ரீ மன்த்ஸ் எடுத்துக்கோ.. நானும் சேர்ந்து தேடுறேன்.. எங்கலாம் தேடி பார்த்த?"

    சூர்யப்ரகாஷ் சில இடங்களை சொன்னான்.

    மனோரஞ்சன்,"மால் லாம் போய் பார்க்கவே இல்லையா?"
    சூர்யப்ரகாஷின் கண்கள் மின்னின.

    மனோரஞ்சன் புன்னகையுடன்,"நாளைக்கு skywalk போலாம்" என்றான்.

    "தேங்க்ஸ் டா மச்சான்" என்று கூறி மனோரஞ்சனை கட்டிக் கொண்டான். பிறகு மெல்ல,
    "அம்மா என்ன டா சொன்னாங்க?" என்று கேட்டான்.

    மனோரஞ்சன் அகல்யாவுடன் பேசியதை கூறினான்.
    சூர்யப்ரகாஷ் வருத்தமும் சிறு சந்தோஷமும்(நண்பன் துணை நிற்கிற சந்தோஷம், மால்-களில் சுத்தி தன்னவளை கண்டுபிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் வந்த சந்தோஷம்) கலந்த உணர்வுடன் வீட்டிற்கு கிளம்பினான்.

    வீட்டிற்கு சென்று அன்னையிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மனோரஞ்சனும் சூர்யப்ரகாஷுடன் பேசியதாக அகல்யாவிடம் சொல்லவில்லை.




    அடுத்த நாள்-
    தன் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை சந்திக்க போவதைப் பற்றி அறியாமல் மனோரஞ்சன் சூர்யப்ரகாஷை அழைத்துக் கொண்டு skywalk சென்றான்.

    காலையில் இருந்து மாலை வரை அந்த மால் முழுவதும் அலைந்து திரிந்து தேடினர். மாலை 6 மணிக்கு மனோரஞ்சன்,
    "கிளம்பலாமா சூர்யா?"

    "இன்னும் கொஞ்ச நேரம் டா.. ப்ளீஸ்"

    "அடுத்த வாரம் தேடலாம் டா"

    "ப்ளீஸ் மனோ.. ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்..........." என்று கெஞ்சிக் கொண்டிருந்தவன்,
    "டேய்.. அவள மாதிரி இருக்கு.. வெயிட் டா........" என்று கூறி சிட்டாக பறந்தான்.


    மனோரஞ்சன் அலுப்புடன்,"இவனை" என்று தலையில் கைவைத்துக் கொண்டு திரும்ப,
    "ஹாய்" என்று ஜீன்ஸ்-குர்தா அணிந்த ஒரு இளம் பெண் மலர்ந்த முகத்துடன் அவன் முன் நின்றாள்.

    மனோரஞ்சன் 'ஹாய்' சொல்லாமல் புருவ சுளிப்புடன் அவளை பார்த்தான்.
    ஒரே ஒரு நொடி அந்த இளம் பெண்ணின் கண்களில் ஆர்ச்சரியம் மின்னி மறைந்தது.





    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-3.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    4 people like this.
  6. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டல் 4:

    சூர்யபரகாஷின் செய்கையில் அலுத்துப் போன மனோரஞ்சன் 'இவனை' என்று தலையில் அடித்துக் கொண்டு திரும்ப,
    "ஹாய்" என்று உற்சாகம் கலந்த சிறு பதட்டத்துடன் நின்றாள் ஒரு இளம் பெண்.

    அந்த பெண் நீல நிற ஜீன்ஸ் அணித்து, கருப்பு நிற குர்தா அணிந்திருந்தாள். ஆடை உடம்புடன் ஓட்டினார் போல் இல்லாமல், அவளது உடலமைப்புக்கு ஏற்புடையாதாக இருந்தது(ஆபாசமாக இல்லை).
    தலை முடியை வலது ஓரத்தில் வகுடு எடுத்து விரித்து விட்டிருந்தாள், காதில் வலயம் அணிந்திருந்தாள்.
    முகத்தில் பெரிதாக எந்த ஒரு ஒப்பனையும் இல்லை, புருவத்தை சரியாக வடிவமைத்திருந்தாள், மிக மிக லேசாக உதட்டில் அதன் நிறத்திலேயே சாயம் பூசியிருந்தாள்.
    மொத்தத்தில் அழகாக இருந்தாள்.

    மனோரஞ்சன் பதில் சொல்லாமல் புருவ சுளிப்புடன் அவளை பார்த்தான்.
    ஒரே ஒரு நொடி அவளின் கண்களில் ஆச்சரியம் மின்னி மறைந்தது. அதை கண்டு கொண்ட மனோரஞ்சனின் கண்களில் அலட்சியம் குடியேறியது.

    இப்பொழுது அவள் பதட்டம் நீங்கி புன்னகையுடன் மனோரஞ்சனை பார்த்தாள்.

    மனோரஞ்சன் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

    "என்னை உங்களுக்கு தெரியாது.. பட் உங்களை எனக்கு தெரியும்.. உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..
    ஐ லவ் யூ"

    மனோரஞ்சன் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவன் அவளை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு நகர தொடங்க, அவள்,
    "பதில் சொல்லிட்டு போங்க"

    மனோரஞ்சன் அவள் கண்களை பார்த்து சிறு வெறுப்பு கலந்த அலட்சியத்துடன்,
    "என்ன பதில் சொல்லணும்?"

    அவள் தலையை லேசாக சரித்து, "எஸ் ஆர் நோ"
    அவள் வாக்கியத்தை முடித்த அடுத்த நொடி மனோரஞ்சனிடம் இருந்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல் "இல்லை" என்று பதில் வந்தது.

    ஏமாற்றத்திற்கு பதிலாக மீண்டும் அவளது கண்கள் ஒரு நொடி ஆச்சரியத்தில் மின்னின. பிறகு,
    "ஏன் சார்?"

    மனோரஞ்சன் எரிச்சலுடன், "என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?"

    "இது தான் காரணமா? சொல்லுங்க தெரிஞ்சுகறேன்.. உங்க பெயர் என்ன? எங்க வேலை பார்............." மனோரஞ்சன் கையை உயர்த்தி அவளது பேச்சை நிறுத்தினான்.

    மனோரஞ்சன் கோபமாக,"என்னை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை...."

    மனோரஞ்சனின் கோபத்தை பார்த்து அவள் வியந்தாளோ என்னவோ, எதுவும் பேசாமல் கண்கொட்டாமல் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

    மனோரஞ்சன் எரிச்சலும் கோபமுமாக செல்ல நினைக்கையில் சில இளம் பெண்கள் அங்கு வந்தனர். அந்த குழுவில் இருந்த ஒரு பெண்ணின் கையில் ஹன்டி-கேமரா இருந்தது.

    குழுவில் ஒரு பெண் மனோரஞ்சனிடம், "சார்.. யூ ஆர் சான்ஸ்லெஸ்.." என்றாள்.
    மனோரஞ்சன் முகத்தில் சிறு அதிர்ச்சி, அருவெறுப்பு, கோபம் என்று உணர்ச்சிகள் மாறி மாறி தெரிந்தது.

    குழுவில் மற்ற பெண்கள் சிரிப்பும் சிறு ஆர்பாட்டமுமாக நிற்க அவள் மட்டும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மனோரஞ்சனின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

    மனோரஞ்சன், "சீ" என்று கூறிவிட்டு இடத்தைவிட்டு செல்ல, அவள் அவனது முதுகை சில நொடிகள் சிறு வேதனையுடன் வெறித்து பார்த்தாள், பிறகு என்ன நினைத்தாளோ, "சார்" என்று அழைத்தபடி அவன் பின் ஓடினாள்.

    மனோரஞ்சன் கோபமாக திரும்பினான்.
    அவள்,"சாரி சார்.. அது.............."

    மனோரஞ்சன் கையை உயர்த்தி தடுத்தான். அவன் கண்களில் இப்பொழுது ரௌத்திரம் தெரிந்தது.
    அவள் அவனது கோபத்தை கண்டு அஞ்சவில்லை. அவள்,
    "ப்ளீஸ் அலோ மீ டு explain.. இட்ஸ் நாட் for fun..இட்ஸ்........."

    "ஐ நோ நீட் எனி explanations.." என்று கர்ஜித்துவிட்டு வேகமாக சென்றான்.


    அவள் செயலற்று நிற்க, மற்ற பெண்கள் அவளருகே வந்தனர்.
    "விடு டி அவன் கிடக்கிறான்"
    "லீவ் இட் யா.."
    "பெரிய மன்மதன் னு நினைப்பு.. விடுங்க அக்கா.." என்று ஒவ்வொருவரும் ஒன்றை கூறி அவளை இழுத்து சென்றனர்.
    "தப்பு பண்ணிட்டேன்" என்று முணுமுணுத்தபடியே அவளும் நடந்தாள்.




    மூன்றாவது தளத்தில் இருந்து கோபமாக சென்ற மனோரஞ்சன் கீழ் தளத்தை அடைந்ததும் கைபேசியில் சூர்யப்ரகாஷை அழைத்தான்.

    சூர்யப்ரகாஷ்,"ஹலோ"

    "பைக் பார்கிங் கு உடனே வா" என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

    மனோரஞ்சன் குரலில் இருந்து அவன் கோபமாக இருக்கிறான் என்பதை யூகித்த சூர்யப்ரகாஷ் தன் மேல் தான் கோபமாக இருக்கிறான், தான் நேரம் கடத்தியதால் கோபமாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு வேகமாக சென்றான்.

    கோபமும் எரிச்சலுமாக நின்றிருந்த மனோரஞ்சனிடம் சூர்யப்ரகாஷ், "சாரி டா"

    மனோரஞ்சன் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான். மௌனமாகவே இருவரும் வண்டியில் பயணித்தனர்.
    சிறிது நேரம் கழித்து சூர்யப்ரகாஷ், "டேய்.. ரொம்ப பண்ணாத ஏதோ 15 டு 20 மினிட்ஸ் தனியா விட்டுட்டு போய்டேன்..........."

    "உன் மேல் கோபம் இல்லை"

    "அப்பறம் எதுக்கு இஞ்சி திண்ண குரங்காட்டம் மூஞ்சிய வச்சுட்டு இருக்க?"

    "கோபம் தான் பட் உன் மேல் இல்லை"

    "வேற யார் மேல்?"

    "இன்றைய பெண்கள் மேல்.."

    "நீ திருந்தவே மாட்ட டா"

    "திருந்துற அளவுக்கு நான் தப்பேதும் பண்ணலை"

    "நான் தெரியாம தான் கேட்குறேன்.. அப்படி என்ன டா உனக்கு பிரச்சனை? ஏன் பெண்களை கண்டாலே வெறுக்குற?"

    "நான் ஒன்னும் எல்லா பெண்களையும் வெறுக்கலை"

    "ஓகே.. இன்றைய பெண்களை ஏன் வெறுக்குற?"

    "இன்றைய பெண்களிலும் எல்லோரையும் வெறுக்கலை.. சம்யூ..........."

    "அவள சின்ன வயசுல இருந்து பார்குற.. மத்தபடி..........."

    "எனக்கு பிடிக்கலை..."

    "ஏன்?"

    "..."

    "ஒரு வலிட் ரீசன் சொல்ல முடியுமா?"

    மனோரஞ்சன் நக்கலாக சிரித்தான்.

    சூர்யப்ரகாஷ்,"எதுக்கு டா சிரிக்குற?"

    "வலிட் ரீசன் தானே கேட்ட.. இன்னைக்கே ஒரு இன்சிடென்ட் நடந்தது...." என்று அலட்சியத்துடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தவன் முடித்த போது கோபத்தின் உச்சில் இருந்தான்.

    சூர்யப்ரகாஷ் அமைதியாக இருக்கவும் மனோரஞ்சன் இகழ்ச்சியாக, "என்னடா இப்ப என்ன சொல்ற?"

    "ஒரு சிலர்............."

    "ஒரு சிலர் இல்லை டா... பலர்.. பலரை நான் பார்த்துருக்கேன்.. அதுவும் இன்றைய பெண்களுக்கு காதல் விளையாட்டு பொருள்.. அதுக்கு இன்னைக்கு நடந்ததே குட் எக்ஸ்சம்பிள்.. பொழுது போக்குக்காக 'ஐ லவ் யூ' சொல்றா.. அதை வீடியோ எடுத்து மத்த பெண்கள் சிரிக்குறாங்க.. ஷிட்.........."




    அவள் அமைதியாக ஆழ்ந்த சிந்தனையிலேயே வரவும், குழுவில் ஒரு பெண்,
    "என்னடி ஆச்சு உனக்கு? அந்த ஆள் ட பேசினதில் இருந்தே நீ சரி இல்லை"

    "ச்ச்.. அவரை காய படித்திடேனோ னு தோணுது டீ"

    "போடி லூசு.. அவன் இன்னேரம் ஜாலி ஆ தான் இருப்பான்.. சும்மா வெட்டி சீன் டீ"

    "இல்லை லோகா.. அவர் கண்ணில் பொய்மை இல்லை"

    "ஆமா இவ கண்ணுக்குள்ள போய் பார்த்தா.. போடி..."

    "எனக்கு என்னவோ கில்டி-யாவே இருக்கு"

    "அது வேற ஒன்னும் இல்லைடி.. அவங்க பல பேர் ட 'ஐ லவ் யூ' சொன்னாங்க.. எல்லாவனும் வழிஞ்சானுங்க.. பட் நீ ஒரே ஒரு ஆள் கிட்ட தான் சொன்ன, அவன் இப்படி ரியாக்ட் பண்ணதும் கஷ்டமா இருக்கு"

    "நாம பண்ணது தப்பு தான்"
    லோகா அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

    அவள்,"என்னடி?"

    "இல்லை என் பிரெண்ட் மிருதுளா தானா னு பார்க்குறேன்"
    [மனோரஞ்சனுடன் பேசிய அந்த அவள் வேற யாரும் இல்லை, நம்ம மிருதுளா தான்]

    "ச்ச்"

    "பின்ன என்னடி.. எப்பவும் ஜாலி யா போல்ட் ஆ இருக்குறவ நீ.. நீ இப்படி ரியாக்ட் பண்ணி நான் பார்த்ததே இல்லை"

    "போல்ட்.. இப்படி சொல்லி தானே.........."

    "லுக் மிருது.. நாம ஒன்னும் ஜஸ்ட் for fun னு இப்படி பண்ணலை.. ரம்யா ஆராச்சிக்காக தானே இப்படி பண்ணோம்.."
    [ரம்யா அவர்கள் தோழி ஒருத்தியின் தங்கை.. சைக்காலஜி படிக்கிறாள். அவள் ஆண்கள் சைக்காலஜி பற்றி ஆராச்சி செய்கிறாள், அதில் ஒரு பகுதியாக தான் இப்படி செய்தார்கள்.]

    "நான் கடைசி வரைக்கும் ஸ்பெக்டேட்டராவே இருந்துருக்கலாம்... நீ தான் 'நீ உண்மையிலேயே போல்ட் னா அவனிடம் போய் ஐ லவ் சொல்லு' னு சொல்லி என்னை உசுப்பி விட்டு....."

    "மிருது.. ரியல்லி உனக்கு என்னவோ ஆகிருச்சு டீ.. நீ இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை"

    மிருதுளாவிற்கே இதை குறித்து ஆச்சரியம் தான், ஆனால் 'அவனை காயபடுத்தி விட்டோமோ' என்ற நினைவை அவளால் அகற்றவே முடியவில்லை.

    அதே நேரத்தில் ரம்யா, "என்ன கா ரெண்டு பேரும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?" என்று மிருதுளாவிடம் கேட்டாள்.
    [ரம்யாக்கு மிருதுளா மேல் பிரியம் அதிகம்]

    தன் சுய-சிந்தனையில் இருந்து வெளியே வந்த மிருதுளா வழக்கமான சூட்டிகையுடன் ரகசிய குரலில்,
    "அதுவா ரமி.. உனக்கு என்ன குடுத்தா வளருவ னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்"

    "அக்கா" என்று ரம்யா குதிக்க,

    "பார்த்தியா.. வளரவே இல்லை னு ப்ரூவ் பண்ணிட்ட.. உனக்காகவே ஒரு பாட்டு இருக்கு தெரியுமா"

    ரம்யா மிருதுளாவை ஒருமாதிரி பார்க்க, மிருதுளா,
    "என்ன பாட்டு தெரியுமா.. ஆளும் வளரனும்.. அறிவும் வளரனும்.. அது தான் டா வளர்ச்சி..."

    "அக்கா" என்று செல்ல கோபத்துடன் காலை உதறிக்கொண்டு செல்ல, மிருதுளா அவளது கையை பற்றி நிறுத்து,
    "M.A சைக்காலஜி படிச்ச பொண்ணு மாதிரியா ரியாக்ட் பண்ற"

    "ஹம்.. அது வேற இது வேற"
    மிருதுளா புன்னகைத்தாள்.
    [இதற்குள் மாலில் இருந்த பிஸ்ஸா கார்னர் வந்திருந்தனர்]

    ஒரு மேஜையில் அமர்ந்து ஆர்டர் கொடுத்து உண்ண தொடங்கினர்.
    மிருதுளா ஏதோ சிந்தனையில் இருக்க லோகா,
    "என்ன யோசனை மிருது?"

    "உண்மையாவே அந்த ருத்ர மூர்த்தி கிட்ட 'ஐ லவ் யூ' சொல்லி இருந்தா எப்படி இருந்துருக்கும் னு யோசிச்சேன்" என்று கூறி சிரித்தாள்.

    "நெற்றி கண் மட்டும் இருந்துது அவன் நம்மளை எரிச்சுருப்பான்"
    இருவரும் சிரித்தனர்.

    ரம்யா,"என்ன கா நீங்க மட்டும் சிரிச்சுகுறீங்க?"

    மிருதுளா,"எல்லாம் அந்த ருத்ர மூர்த்தி பத்தி தான் பேசிட்டு இருந்தோம்"

    ரம்யா,"யாரு?"

    லோகா,"மிருதுளாவோட ஆள்"

    மிருதுளா,"லூசு" என்று கூறி லோகாவை அடித்தாள்.

    "யாருடி அந்த ருத்ர மூர்த்தி?", "சொல்லவே இல்லையே மிருது", "எங்க பிடிச்ச? நம்ம ஊர்லயா? இல்லை........." என்று தோழிகள் மிருதுளாவை கலாய்க்க, மிருதுளா "ஸ்டாப் ஸ்டாப்" என்று கூறி சிரித்துக் கொண்டிருந்த லோகாவை முறைத்தாள்.

    லோகா,"நீ தானே சொன்ன"

    மிருதுளா,"லோகா வேணாம்.."

    மற்ற தோழிகள் லோகாவை, "என்ன னு சொல்லுடி" என்று நச்சரிக்க தொடங்கினர். லோகா மிருதுளாவை பார்த்து சிரிக்க, மிருதுளா,
    "போடி.. சொன்னா சொல்லிக்கோ" என்றாள்.

    மிருதுளா கெஞ்சாமல் மிஞ்சியதும் லோகா காற்று போன பலூனாக, "பெருசா ஒன்னுமில்லைடி.. சும்மா அந்த முறைப்பு மன்னனை அதான் இவ 'ஐ லவ் யூ' சொன்ன ஆளை பத்தி பேசிட்டு இருந்தோம்" என்றாள்.

    இப்பொழுது, "உனக்கு அந்த ஆளை முன்னமே தெரியுமா?", "அவன் பெயர் ருத்ர மூர்த்தியா?", "எப்படி தெரியும்?", "MBA பிரெண்ட் ஆ?", "பிரெண்ட் மட்டும் தானா?" என்று கேள்விகளை அடிக்கி கொண்டே போக, மிருதுளா,

    "அடி பாவிகளா.. விட்டா நீங்களே.. ஸ்டோரி ஸ்க்ரீன்-ப்ளே எழுதிருவீங்க போல.. அவன் யாருனே தெரியாது.. அவன் பெயரும் தெரியாது............"

    மற்ற பெண்கள் ஒருங்கே சுருதி இறங்கி, "ஓ.. நோ.. இவளோ தானா" என்று சோக ராகம் பாட, மிருதுளா புன்னகைத்தாள்.

    ரம்யா, "பெயர் தெரியாது னு சொல்றீங்க பட் ருத்ர மூர்த்தி னு சொன்னீங்களே!" என்று சந்தேகம் கேட்க, மிருதுளா,
    "ரமி எனக்கு ஒரு டவுட்"

    "என்ன கா?"

    "நீ உண்மையிலேயே M.A சைக்காலஜி தான் படிச்சியா?"

    ரம்யாவின் தமக்கை உமா, "அதே டவுட் தான் டீ எனக்கும்"

    ரம்யா தமக்கையை முறைத்து,"எனக்கு கூட தான் நீ MBA படிச்சியா னு டவுட்.. நான் என்ன சொல்லிட்டா இருக்கேன்"

    உமா, "ஏன்டி குரங்கு.. உன்னை கேள்வி கேட்டது மிருது.. காலை வாருறது என்னையா!"

    ரம்யா,"நீ தான் குரங்கு...."

    மிருதுளா,"ஓகே..ஓகே.. girls உங்க சண்டையை வீட்டுக்கு போய் வச்சுக்கோங்க"

    ரம்யா மிருதுளாவிடம்,"அக்கா வெரி bad.. நீங்க மாறீட்டீங்க"

    மிருதுளா எழுந்து நின்று ஒரு சுற்று சுற்றி, "இல்லையே.. பாரு அப்படியே தான் இருக்கேன்..."

    ரம்யா சிரிப்பின் நடுவே,"போங்க கா.. நான் அதை சொல்லலை.. இந்த லூசு கூட சேர்ந்து என்னை ரொம்ப தான் டேமேஜ் பண்றீங்க..."

    மிருதுளா,"ச ச.. நான் அபப்டி பண்ணுவேனா ரமி.. (கண்ணில் சிரிப்புடன்) நான் ஸோலோ-வாவே டேமேஜ் பண்ணுவேன்"

    ரம்யா,"அக்காகாகா"

    மிருதுளா புன்னகையுடன்,"அது இருக்கட்டும்.. எனக்கு நிஜமாவே டவுட் தான் ரமி.. நீ உண்மையிலேயே M.A சைக்காலஜி படிச்சியா?"

    "படிக்காமயா இப்ப Phd பண்றேன்"

    "சிம்பிள் லாஜிக்..
    அவன் யாரு, பெயர் என்ன னு தெரியாது னு சொல்லிட்டேன், அப்பறமும் யோசிக்காம 'ருத்ர மூர்த்தி' னு சொன்னீங்களே னு கேட்குறியே!"

    ரம்யா புரியாமல் மிருதுளாவை பார்க்க மிருதுளா,
    "வெரி சிம்பிள்.. அவன் reaction வச்சு நானே அவனுக்கு இந்த பெயரை சூட்டினேன்" என்று கூறி இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்.

    ரம்யா,"ஓ.. நான் என்ன நினைச்சேனா.. இந்த லூசு கூட சேர்ந்து பொய் சொல்ல கத்துக்.................." முடிப்பதற்குள் தமக்கையிடம் இருந்து அடி விழுந்தது.

    இவர்கள் சண்டையை பார்த்து மற்றவர்கள் சிரித்தனர். அப்பொழுது லோகாவின் கைபேசி,
    "எனதுயிரே எனதுயிரே
    எனக்கெனவே நீ கிடைத்தாய்..
    எனதுறவே எனதுறவே
    கடவுளைப் போல் நீ முளைத்தாய்.."
    என்ற பாடலை இசைக்க, அனைவரும் 'ஓ' என்று கூச்சலிட்டனர்.

    லோகா,"சும்மா இருங்கடி" என்று வெக்கத்துடன் அட்டென்ட் செய்ய, அவள் கையில் இருந்து கைப்பேசியை பிடுங்கிய மிருதுளா,
    "என்ன பிரதர்.. ஜஸ்ட் ஹாப் டே லீவ் கொடுக்க மாடீக்கீங்களே!"

    லோகாவின் கணவன் அசடு வழிய,"அது வந்து.. வீட்டுக்கு கெஸ்ட் வராங்க.. அதான்"

    "கெஸ்ட் வராங்களா, உங்க கண்ணு ரெண்டும் உங்க அன்பு மனைவியை தேடிருச்சா?"

    லோகா,"போதும் டி" என்று கூறி கைபேசியை பிடுங்கிக் கொண்டு சற்று நகர்ந்தாள். அதற்கும் 'ஓ' என்று கத்தினர்.

    உமா, "ஹ்ம்ம்.. லோக்ஸ் செட்டில்டு..நான் பிக்ஸ்டு.. ராகி(ராகினி) அண்ட் சேமியா(சௌம்யா) அக்கா இருப்பதால் வெயிட்டிங் லிஸ்ட், அடுத்து உனக்கு எப்போ மரேஜ்?"

    மிருதுளா,"அதுக்கு இப்போ என்ன அவசரம்?" என்று கூறும் போது மனோரஞ்சன் அவள் மனக்கண்ணில் வந்து போகவும் திடுக்கிட்டாள்.

    ராகினி,"என்ன மிருது இப்படி சொல்லிட்ட.. அடுத்து உன் கல்யாண சாப்பாடு சாப்ட ஆசையா இருந்தேன்"

    உமா,"நீ சாப்பாட்டுலே இரு"

    ராகினி,"நீ சாப்புடுறதே இல்லை.. போடி...."

    லோகா பேசி முடித்துவிட்டு வந்து, "மிருது" என்று இழுக்க,மிருதுளா,
    "கிளம்பியாச்சு தாயே.. கிளம்பியாச்சு" என்று கூற லோகா அசடு வழிந்தாள்.





    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-5.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    Last edited: Sep 1, 2012
    4 people like this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டல் 5:

    கடிகாரம் 7 முறை அடிக்கவும் நிகழ் காலத்திற்கு திரும்பிய மனோரஞ்சன் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்ப தொடங்கினான்.




    அதே நேரத்தில் சூர்யப்ரகாஷும் அலுவலகத்திற்கு கிளம்ப தொடங்கினான்.




    8.55 மணிக்கு மனோரஞ்சன் "SS Builders" பெங்களூர் கிளை அலுவலத்தை சென்றடைந்த போது M.D வித்யுத் 8.45 மணிக்கே வந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும் அவசரமாக வித்யுத் அறையை நோக்கி சென்றான்.


    மனோரஞ்சன் வித்யுத் அறைக்கு செல்வதற்குள் அவன் பெங்களூர் வந்த காரணத்தை அறிவோம்.
    மூன்று மாத இடைவெளியில் "SS Builders" சென்னை கிளை முக்கியமான இரண்டு ஆர்டர்களை தவறவிட்டிருந்தது, இரண்டுமே ஒரே போட்டி நிறுவனத்திற்கு கிடைத்திருந்தது.
    இரண்டுமே ஒரே நிறுவனத்திற்கு செல்லவும் தான் மனோரஞ்சன் சந்தேகித்தான், வித்யுத் ஒருபடி மேலே சென்று போட்டி நிறுவனத்தின் ஒப்பந்த தொகையைப் பற்றி விசாரித்தான். வெகு குறைவான வித்யாசத்தில் தான் "SS Builders " ஆர்டரை நழுவவிட்டிருந்தது.
    இதை பற்றி பேச தான் வித்யுத் மனோரஞ்சனை பெங்களூர் வர சொல்லியிருந்தான்.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



    வண்டியில் சென்று கொண்டிருந்த மிருதுளாவின் எண்ண ஓட்டம் பின்னோக்கி சென்றது.

    முதல் சந்திப்பிற்கு பிறகு மிருதுளாவால் மனோரஞ்சனையும் அவனது கோபத்தையும் மறக்கவே முடியவில்லை.
    சுய ஆராச்சிக்கு பிறகு அவள் கண்ட உண்மை, அவள் மனோரஞ்சனை காதலிப்பது.


    ஆம், முதல் முதலாக தன்னிடம் வழியாமல், தான் 'ஐ லவ் யூ' என்று சொல்லியும் வழியாமல் தன்னை உதாசீனப்படுத்தி கோபம் கொண்ட மனோரஞ்சன் மேல் காதல் கொண்டாள்.
    மிருதுளா தன் காதலை உணர்ந்த மறுநிமிடம் அவளது டைரியில் ஒரு கவிதை குடியேறியது,
    "நான் உன்னை அறியும்
    முன்
    நீ என்னுள் நுழைந்தாய்!

    அலட்சிய பார்வை வீசினாய்..
    என்மேல் தென்றல் வீசியது!
    நெற்றிக் கண்ணை திறந்தாய்..
    என் இதயக்கதவு திறந்தது!
    விழியால் வசை பாடினாய்..
    என்னுள் காதல் மலர்ந்தது!


    என்
    கண்ணிற்கு தரிசனம் அளிப்பாயோ?
    உன்
    இதயக் கதவு திறக்குமோ?"



    முதல் சந்திப்பிற்கு பிறகு 'என்று சந்திப்பேனோ' என்று மிருதுளா ஏங்கிக் கொண்டிருக்க, அவள் சற்றும் எதிர்பாராமல் அடுத்த நாளே மனோரஞ்சனை சந்தித்தாள்.


    அடுத்த நாள் மதிய உணவை தோழிகளுடன் ஒரு உணவகத்தில் முடித்துவிட்டு வெளியே செல்ல எழுந்த போது சுவற்றோரம் இருந்த மேஜையில் மனோரஞ்சன் அமர்ந்திருப்பதை பார்த்தாள். உடனே தோழிகளிடம்,
    "நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க பா.. நான் 5 மினிட்ஸ் ல வந்துறேன்" என்று கூறி அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல் நகர்ந்தாள்.


    மனோரஞ்சனின் மேஜையை நெருங்கவும் தான் ஒன்றை கவனித்தாள், மனோரஞ்சனின் எதிரில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அந்த இளைஞனை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று யோசித்தவள் முன்தினம் மனோரஞ்சனுடன் பார்த்தது நினைவிற்கு வரவும் தயக்கமின்றி சென்றாள்.


    மனோரஞ்சன் சுவற்றோரம் அமர்ந்திருக்க, மிருதுளா அவன் அருகில் அவனை தீண்டாமல் அமர்ந்தாள். மனோரஞ்சனிடம் பேசாமல் சூர்யப்ரகாஷை நோக்கி,
    "ஹாய்.. அம் மிருதுளா.. நீங்க?"


    சூர்யப்ரகாஷ் திருதிருவென்று முழித்தான். அதை பார்த்த மிருதுளாவிற்கு சிரிப்பு வந்தது, சிரிப்பின் நடுவே,
    "ஹலோ.. பாஸ்.. நான் ஒன்னும் உங்களை கடத்திட்டு போய்ட மாட்டேன்.. தைரியமா பெயரை சொல்லுங்க" என்றாள்.


    சூர்யப்ரகாஷ் அசடு வழிந்தபடி,
    "ஹாய்.. அம் சூர்யப்ரகாஷ்" என்று கூறி மனோரஞ்சனை பார்க்க அவனோ நெற்றிக் கண்ணை திறந்திருந்தான்.
    சூர்யப்ரகாஷிற்கு ஒன்றும் புரியவில்லை.


    மிருதுளா மனோரஞ்சனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே,
    "சூர்யா.. உங்க பிரெண்டும் நீங்களும் ஒரே ஆபீஸ் ல வேலை பார்க்குறீங்களா?"


    சூர்யப்ரகாஷ் தயக்கத்துடன் 'ஆம்' என்பது போல் தலையை ஆட்டினான்.


    மிருதுளா,"எந்த ஆபீஸ்?"


    சூர்யப்ரகாஷ், "உங்களுக்............."


    மிருதுளா,"என்ன சூர்யா பொண்ணு மாதிரி இப்படி பயப்படுறீங்க.." என்று கூறியபடியே சற்று எழுந்து அவன் கழுத்தில் இருந்த கம்பெனி டக்-யில் இருந்த கம்பெனி பெயரை பார்த்ததும் மகிழ்ச்சியில்,
    "வாவ்" என்றாள். பிறகு,
    "உங்க பிரெண்ட் நேம் என்......................"


    மிருதுளா வாக்கியத்தை முடிப்பதற்குள் மனோரஞ்சன், "சூர்யா அவளை போக சொல்லு" என்று தாழ்ந்த குரலில் கோபமாக கூறினான்.


    மிருதுளா கண்கள் மின்ன மனதினுள், 'இப்பவாது வாயை திறந்தியே' என்று கூறிக்கொண்டு சூர்யபரகாஷிடம்,
    "சூர்யா நான் உங்க கிட்ட தான் பேச வந்தேன்"


    மனோரஞ்சன்,"என்னை பற்றி பேச வேண்டாம் னு சொல்லு"


    சூர்யப்ரகாஷ் மனோரஞ்சனையும் மிருதுளாவையும் மாறி மாறி பார்த்தான்.

    மிருதுளா,"நீங்களே சொல்லுங்க சூர்யா.. நான் உங்களை பற்றி தானே பேசிட்டு இருக்கேன்"


    மனோரஞ்சன் பொறுமை இழந்து மிருதுளாவிடம், "ஏய்! இப்ப உனக்கு என்ன வேணும்?"


    மிருதுளா மனோரஞ்சனின் கேள்வியை கண்டுக் கொள்ளாமல், "சூர்யா.. நான் உங்க கூட தான் பேச வந்தேன்"


    மனோரஞ்சன் கோபமாக எழுந்தான், "நீ அவன் கூட தானே பேச வந்த.. எனக்கு வழியை விடு" என்றான்.


    மனோரஞ்சனின் கோபத்தில் சூர்யப்ரகாஷிற்கே 'என்ன நடக்குமோ' என்று சிறிது பயம் வந்தது ஆனால் மிருதுளாவோ அலட்டிக் கொள்ளாமல்,
    "என்ன சூர்யா உங்க பிரெண்டுக்கு பேசிக் மேனர்ஸ் தெரியாதா?" என்று வினவவும் சூர்யப்ரகாஷ் பெரிதும் ஆச்சரியம் கொண்டான்.


    சூர்யப்ரகாஷ் நண்பனிடம் விழியால், "பொறு" என்று சொல்லிவிட்டு மிருதுளாவிடம்,
    "மிருதுளா நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?"


    மனோரஞ்சன்,"டேய்.. அவளை போக சொல்லாம கதை பேசிட்டு இருக்க" என்று நண்பனிடம் கத்தினான்.


    மிருதுளா,"பார்த்தீங்களா! நீங்க எவளோ டிசென்ட்டா மரியாதையா பேசுறீங்க.. உங்க..........................."


    மனோரஞ்சன் பல்லைக் கடித்துக் கொண்டு, "உனக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி"


    சூர்யப்ரகாஷ், "மிருதுளா..............."


    மிருதுளா,"ஓகே..ஓகே.. உங்க பிரெண்ட் நேம் மட்டும் சொல்லுங்க நான் இங்கிருந்து கிளம்பிருறேன்"


    மனோரஞ்சன்,"என்னை பற்றி.............."


    மிருதுளா மனோரஞ்சனை நேருக்கு நேராக பார்த்து,"தெரிஞ்சுக்க தேவை இல்லை.. அதானே சொல்ல போறீங்க.. மிஸ்டர் நான் உங்களை பற்றி தெரிஞ்சுக்க கேட்கலை.. சூர்யா கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. ஜஸ்ட் அவர் பிரெண்ட் நேம் என்ன னு கேட்டேன்" என்று கூறி, சூர்யப்ரகாஷ் பக்கம் திரும்பி,
    "நீங்க சொல்லுங்க சூர்யா" என்றாள்.


    சூர்யப்ரகாஷ் அசந்து போனான். அவனது வாய் அவனையும் அறியாமல், "மனோரஞ்சன்" என்றது. அடுத்த நொடி மனோரஞ்சன் கோபத்தில் மேஜையை ஓங்கி தட்ட, கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்தது.


    சூர்யப்ரகாஷ் அதிர்ச்சியுடன், "மனோ" என்று கூற, மிருதுளா உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு,
    "ஓகே சூர்யா.. தேங்க்ஸ் for ஸ்பென்ட்யிங் few மினிட்ஸ் வித் மீ.. பாய்" என்று கூறி கிளம்பியவள் இரண்டெட்டு எடுத்து வைத்தவள் மனோரஞ்சன் பக்கம் திரும்பி,
    "மனோரஞ்சன்.. உங்க நேம் நல்லா இருக்கு பட் உங்களுக்கு நான் வச்ச பெயர் என்ன தெரியுமா?" என்று கூறி நிறுத்தினாள்.


    பிறகு கண்ணில் குறும்புடன், "அது உங்களுக்கு பொருத்தமான பெயர்.. ருத்ர மூர்த்தி" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்தாள்.





    லோகா தோழிகளை வெளியே நிற்க சொல்லிவிட்டு அவள் மட்டும் மிருதுளாவிற்காக உள்ளே காத்துக் கொண்டு நின்றாள்.

    லோகா சந்தேகமாக பார்த்து, "மிருது வாட்'ஸ் கோயிங் ஆன்?" என்றாள்.


    மிருதுளா இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தன் தோழியின் கன்னத்தை கிள்ளி, "சம்திங் சம்திங்" என்று ராகத்துடன் கூறிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.







    'ரூதர மூர்த்தி' என்ற பெயரை கேட்டதும் சூர்யப்ரகாஷிற்கு முதலில் சிரிப்பு தான் வந்தது, என்னெனில் அந்த நொடி மனோரஞ்சன் சாட்சாத் நெற்றிகண்ணை திறந்து நிற்கும் சிவபெருமானை போல் தான் காட்சி அளித்தான்.


    சூர்யப்ரகாஷ் சிரிப்பை அடக்கிக் கொண்டு, தண்ணீரை எடுத்து நண்பனுக்கு கொடுத்து, "குடி" என்றான்.


    சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. மனோரஞ்சன் தன்னை கட்டுக்குள் கொண்டுவர அந்த அவகாசத்தை சூர்யப்ரகாஷ் அளித்தான்.


    சூர்யப்ரகாஷ் கூர்மையான பார்வையுடன், "எதுக்கு மனோ இவளோ கோவம்? மிருதுளா யாரு?"


    மனோரஞ்சன்,"பில் சொல்லிட்டியா?"


    "மனோ மிருதுளா யாரு னு கேட்டேன்"


    மனோரஞ்சன் கோபமாக,"நேத்து skywalk ல 'ஐ லவ் யூ' சொன்னவ" என்று கூறிவிட்டு வெளியேறினான்.


    சூர்யப்ரகாஷ் மனதினுள், 'இன்னைக்கு தேதி கிழிக்கும் போது 'ஆச்சரியம்' னு பார்த்ததுக்கு இவளோ effect டா' என்று கூறிக் கொண்டு அவசரமாக உணவிற்கான கட்டணத்தை கேட்டுவிட்டு வெளியே சென்ற போது மனோரஞ்சன் அங்கு இல்லை, அவனது வண்டியும் இல்லை. சூர்யப்ரகாஷ் ஆட்டோவில் அலுவலகத்திற்கு சென்றான்.



    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



    மனோரஞ்சன் அவசரமாக M.D வித்யுத்தின் அறைக் கதவை லேசாக திறந்து,
    "மே ஐ கம் இன் சார்"


    வித்யுத், "எஸ்.. டேக் யுவர் சீட்"


    வித்யுத், "வெள் வாட்'ஸ் யுவர் explanation மிஸ்டர் மனோரஞ்சன்?"
    [இது தான் வித்யுத்.. எந்த ஒரு விஷயத்தையும் சுற்றி வளைத்து பேசுவது அவனுக்கு பிடிக்காது.. எதுவாக இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு]


    "ஹோப் யூ பிலீவ் மீ சார்!"


    "யூ மைட் ஹவ் லாஸ்ட் யுவர் ஜாப் பை திஸ் டைம் இப் ஐ டிட்ன்ட் பிலீவ் யூ"


    "..."


    "ஹொவ் டிட் யூ பெயில் டு நோட்டீஸ் பஸ்ட் டைம் இட்செல்ப்?"


    "சாரி சார்"


    "ஓகே.. வாட்'ஸ் யுவர் நெக்ஸ்ட் ஸ்டேப்?"


    "சாரி சார்.. ஐ குடின்ட் பைண்டு தி கல்ப்ரிட்"


    "ஸோ.. வாட் ஆர் யூ கோயிங் டு டூ நெக்ஸ்ட்"


    மனோரஞ்சன் இரு நொடிகள் மௌனத்திற்கு பிறகு, "திஸ் வோன்ட் ஹப்பென் அகேன் சார்.. "


    "டூ யூ suspect எனிஒன்?"


    "நோ சார்"


    வித்யுத் சிறிது யோசித்தான், பிறகு, "ஓகே.. லெட்ஸ் சேஞ் யுவர் P.A"


    "சார் அம் sure ஷீ இஸ் இன்னொசென்ட்"


    "மே பீ.. பட் ஐ ஹவ் டிசைடட் டு சேஞ்"


    "ஓகே சார்"


    "பிரம் நெக்ஸ்ட் வீக் ஆன்-வட்ஸ் ரோஷினி வில் பீ சரத்'ஸ் P.A.. ஐ வில் அப்போயன்ட் நியூ P.A for யூ"


    ஒரு நொடி மனோரஞ்சன் கண்ணில் பாராட்டு கலந்த ஆச்சரியம் மின்னியது. பிறகு, "ஓகே சார்" என்றான்.


    [ஏன் இந்த பாராட்டு கலந்த ஆச்சரியம் என்று யோசிக்கிறீங்களா.. வித்யுத், மனோரஞ்சன் இருவருக்குமே ரோஷினி(மனோரஞ்சனின் P.A) பிழை செய்யவில்லை என்று தெரியும் ஆனால் வித்யுத் அவளை மாற்ற முடிவு செய்துவிட்டான், இந்த முடிவு அவளுக்கு தண்டனை போல் தோன்றாமல் இருக்க பெங்களூர் கிளை அலுவலகத்தின் ஜெனரல் மேனேஜர் சரத்தின் P.Aவாக மற்றியுள்ளான். மற்றவர் பார்வைக்கு இது ரோஷினிக்கு பதிவி உயர்வை போல் தோன்றும்]


    வித்யுத் எழுந்தான், மனோரஞ்சனும் எழுந்தான். வித்யுத் மனோரஞ்சனின் கையை குலுக்கியபடியே,
    "ஐ நொ யுவர் லாயல்டி மிஸ்டர் மனோரஞ்சன், பட் இப் திஸ் ஹப்பென்ஸ் அகேன்.. யூ வில் பீ டிஸ்மிஸ்டு"


    மனோரஞ்சன் அதிர்ச்சியடையவில்லை, தன்னம்பிக்கையுடன்,
    "திஸ் வோன்ட் ஹப்பென் அகேன் சார்.. ஐ assure யூ சார்.." என்றான்.


    வித்யுத் புன்னகையுடன்,"ஓகே.. கோ அஹெட்.. ஆல் தி பெஸ்ட்"


    மனோரஞ்சன்,"தன்க் யூ சார்" என்று கூறி விடை பெற்றான்.








    தனது எண்ண ஓட்டத்துடன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த மிருதுளா, "ஏய்..ஏய்" என்ற சத்தத்தில் நிகழ் காலத்திற்கு வந்தவள், யார் மீதோ மோத இருந்த கடைசி வினாடியில் வண்டியை 'கிரிச்ச்ச்' என்ற சத்தத்துடன் நிறுத்தினாள்.

    தீண்டல் தொடரும்............



    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-7.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    5 people like this.
  8. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டல் 6:

    வித்யுத்திடம் பேசிவிட்டு வெளியே வந்த மனோரஞ்சன் அலுவலக காரை காணாமல் காரோட்டியை தன் கைபேசியில் அழைத்தான். காரோட்டி சற்று தொலைவில் உள்ள உணவகத்தில் இருப்பதாக கூறி இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறவும் மனோரஞ்சன் தானே அந்த உணவகத்திற்கு வந்துவிடுவதாக கூறி அழைப்பை துண்டித்து, அந்த உணவகத்தை நோக்கி நடக்க தொடங்கியனான். அப்பொழுது தான் மிருதுளா கவனமே இல்லாமல் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு தன்னை நோக்கி வருவதை பார்த்தான்.

    "ஏய்..ஏய்.." என்ற சத்தத்தில் நிகழ் காலத்திற்கு திரும்பிய மிருதுளா தன் எண்ணத்தின் நாயகனை எதிரில் கண்டதும் முகம் மலர,
    "டுடே யூ ஆர் சர்ப்ரைஸிங் மீ அ லாட்" என்றாள்.

    மனோரஞ்சன் கோபமாக, "வண்டி ஓட்டும் போது ரோட்டில் கவனம் வேண்டும்"

    "அக்சிடென்ட் ஆகிற கூடாது னு என் மேல் அக்கறையுடன் கூறியதிற்கு நன்றி..(மனோரஞ்சன் ஏதோ கூற வர அவனை கூற விடாமல்)
    பட் என்ன பண்றது ரஞ்சன்.. என் கவனத்தை அடிக்கடி ஒருத்தர் திருடிறார்"

    மனோரஞ்சன் இறுக்கமான முகபாவத்துடன், "போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் குடு"

    "குடுத்தேனே.. இதுக்குலாம் கேஸ் file பண்ண முடியாது.. அந்த திருடன் கிட்டயே பேசி தீர்த்துக்கோங்க னு சொல்லிட்டார்" என்று சோகமாக கூறினாள்.

    இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மனோரஞ்சன் தனது வழக்கமான பதிலை அளித்தான், அதாங்க முறைத்தான்.

    மிருதுளா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, "இப்ப நான் என்ன பண்ணட்டும் ரஞ்சன்?"

    "டோன்ட் கால் ................."

    "மீ ரஞ்சன்.. அதானே.. இந்த தேஞ்சு போன ரெக்கார்டை மார்த்தவே மாட்டீங்களா? புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க ர..ஞ்..ச..ன் "

    "உன் மூளை தான் புதுசு புதுசா யோசிக்கும்" என்று மனோரஞ்சன் முணுமுணுக்க, மிருதுளா,
    "ஏன் உங்களுக்கு மூளை இல்லையா?"

    மனோரஞ்சன் எரிச்சலும் கோபமுமாக, "என்னை ஏன் தொடர்ந்து வர?"

    "நீங்க தான் நான் போகும் இடத்திற்கு வரீங்க"

    மனோரஞ்சன் முறைத்தான்.

    மிருதுளா,"உண்மை ரஞ்சன்.. நான் வாக்கிங் போனப்ப நீங்க தான் எதிர்ல வந்தீங்க, இப்ப கூட நீங்க தான் என் எதிர்ல வந்தீங்க"

    "நீ எதுக்கு பெங்களூர் வந்த?"

    "நீங்க எதுக்கு வந்தீங்க?"

    "உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"

    "நானும் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை"

    மனோரஞ்சன் மிருதுளாவை சமாளிக்க முடியாமல் சற்று திணற தான் செய்தான். தன் இயலைமையினால் எழுந்த கோபம் மிருதுளா மீது திரும்பியது.

    மனோரஞ்சன் பல்லைக் கடித்துக் கொண்டு,"ஏய்.. டோன்ட் இரிடேட் மீ"

    மிருதுளா அமைதியாக, "அப்படி என்ன பண்ணிட்டேன்?"

    "கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா?"

    "ஆர் யூ அன்சரிங் ஆல் மை குவெஸ்டீன்ஸ்?" என்று மிருதுளா நிதானமாக கேட்டாள்.

    "வொய் ஷுட் ஐ?"

    "தென் வொய் ஷுட் ஐ?"

    மனோரஞ்சன் கோபத்தில் கை முஷ்டியை இறுக மூடினான்.
    மிருதுளாவை தொடர்ந்து சந்தித்தது மட்டுமல்லாமல் சென்னையில் பார்த்தவளை பெங்களூரிலும் பார்ததினாலோ என்னவோ அவனையும் அறியாமல் அவன் மனம் அவள் யார் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது. தன் மனம் அதிகமாக அவளை பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டதை அவன் அறிந்துக் கொள்ளவே இல்லை. அவளை பற்றி அறிந்து கொள்ளமுடியாமல் தான் தனுக்கு கோபம் வருகிறது என்பதையும் அவன் அறிந்துக் கொள்ளவில்லை.

    மிருதுளா மனோரஞ்சனையே தீர்கமாக பார்த்துக் கொண்டு நிற்கவும், மனோரஞ்சன் எரிச்சலுடன்,
    "உனக்கு இங்க என்ன வேலை?"

    "ஏன் எனக்கு இங்க வேலை இருக்க கூடாதா?"

    பொறுக்க முடியாமல் மனோரஞ்சன் சற்று குரலை உயர்த்தி,
    "வந்த வேலையை மட்டும் பார்"

    "அபிஸியல் விசிட் ல பர்சனல் வொர்க் பார்க்க கூடாதுன்னு சட்டம் இல்லையே!"

    "மற்றவர்களை disturb பண்ண கூடாது னு சட்டம் இருக்கு"

    மிருதுளா குறும்புடன், "நான் யாரை disturb பண்றேன் ரஞ்சன்? உங்களையா?"

    பொறுமை இழந்த மனோரஞ்சன் எங்கே அவளை அடித்துவிடுவோமோ என்ற பயத்தில் அவளை முறைத்துவிட்டு நகர தொடங்கினான்.
    இந்த பயம் கூட ஒருவகையில் அவள் மேல் கொண்ட அக்கறையில் பிறந்தது என்பதையும் அவன் அறியவில்லை.

    மிருதுளா, "தன்க் யூ வெரி மச் ரஞ்சன்" என்றாள். மனோரஞ்சன் திரும்பி பார்க்கவில்லை ஆனால் நடையின் வேகம் குறைந்தது. மிருதுளா தொடர்ந்தாள்,
    "எதுக்கு தேங்க்ஸ் தெரியுமா! இன்னைக்கு தான் என்னிடம் அதிதிதிதிதிதிகமா பேசி இருக்கீங்க.. ரஞ்சன் ஐ லவ் யூ" என்று கூறவும் மனோரஞ்சன் திரும்பி பார்த்தான், மிருதுளா காதல் மற்றும் குறும்பு கலந்த பார்வையுடன் 'flying kiss' ஒன்றை கொடுத்துவிட்டு, இடது கையை 'பாய்' என்று காற்றில் அசைத்துவிட்டு சென்றாள்.



    மனோரஞ்சன் சுற்றி பார்த்தான், சாலையில் வெகு சிலர் நடந்து சென்றனர், அவர்கள் யாரும் இவர்களை கவனிக்கவில்லை. மனோரஞ்சனுக்கு எரிச்சலும் கோபமும் வந்தது, அதே நேரத்தில் இனம் புரியாத சொந்தம் உருவாகியது போலும் உணர்ந்தான், ஆனால் அவனது கோபம் அந்த உணர்வை பின்னுக்கு தள்ள மிருதுளாவை திட்டிக் கொண்டு நடந்தான்.

    காரில் விருந்தினர் இல்லம் செல்லும் வழியில் என்ன முயன்றும் மிருதுளா பற்றிய ஆராய்ச்சியை அவனால் அகற்ற முடியவில்லை. மனோரஞ்சன் அதை நினைத்து ஆச்சரியப் பட்டாலும்,
    'அவளை எப்படி avoid பண்றதுன்னு யோசிக்க தான் இந்த ஆராய்ச்சி' என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டான்.

    மிருதுளா பற்றிய ஆராய்ச்சியின் போது மனோரஞ்சனே பெரிதும் வியந்த விஷயம் 'மிருதுளாவின் துணிச்சல்'
    பின்ன இருக்காதா, மனோரஞ்சனின் கோபத்தைக் கண்டு சூர்யப்ரகாஷே அமைதியாகி விடுவான், ஆனால் இந்த மிருதுளாவோ எந்த தருணத்திலும் மிரண்டது இல்லை, மாறாக சரியான பதிலடி கொடுத்தாள்.
    மிருதுளாவின் குறும்பும் துணிச்சலும் சிறிது அவனை கவர தான் செய்தது ஆனால் அந்த முதல் சந்திப்பை பற்றிய நினைவு வரவும் வேதாளம் கதை தான் தொடர்ந்தது, அதான் கோபத்தின் உச்சிக்கு சென்றான்.
    இறுதியாக கோபமும், அருவெறுப்பும் மிஞ்சியது.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



    மதிய இடைவெளியில் தலைமை அலுவலகத்தில் இருந்த வித்யுத், தன் பர்சனல் மொபைலை எடுத்து பார்த்தான், சில வினாடிகளில் அவனது முகம் சினத்தால் சிவந்தது. காலையில் இருந்து இதற்குள் பல குறுஞ்செய்திகள் வந்திருந்தன. அனைத்தும் ஒரே எண்ணில் இருந்து,
    'டார்லிங் குளிச்சிடியா?'
    'ஸ்வீட் ஹார்ட் கிளம்பிட்டியா?'
    'டார்லிங் சாப்டாச்சா?'
    'ஸ்வீட் ஹார்ட் ரிப்ளை பண்ண மாட்டியா?'
    நீ ரிப்ளை பண்ணலை னா உன் ஹனி ஹார்ட் ப்ரேக் ஆகிடும்' என்று பல குறுஞ்செய்திகள், கடைசியாக வந்திருந்த சில குறுஞ்செய்திகள் ஒரு காதலி தன் காதலனுக்கு அனுப்புவது போல் சிறிது வரம்பு மீறியதாகவும் இருந்தன.
    இதை தவிர சில குறுஞ்செய்திகள் திட்டி வந்திருந்தன, பதில் வரவில்லை என்றும், 'இன்னுமா என்னை கண்டு பிடிக்க முடியலை!' என்றும் திட்டி வந்திருந்தன.

    வித்யுத் அந்த எண்ணை அழைத்தான், எடுக்கப் படவில்லை. பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான், இப்பொழுதும் எடுக்கப் படவில்லை.
    எரிச்சலுடன் தனது மடிக்கணினியில் கவனத்தை செலுத்தினான்.
    அப்பொழுது ஒரு விடுமுறை விண்ணப்ப-மின்னஞ்சலை பார்த்தான். அதே எரிச்சலுடன் 'உடனே தன்னை வந்து பார்க்குமாறு' பதில் அனுப்பினான்.


    மதிய உணவை முடித்துவிட்டு தன் இடத்திற்கு வந்த சம்யுக்தா தன் கணினியில் வந்த மின்னஞ்சலை பார்த்ததும், அடுத்த சீட்டில் இருந்த தோழியிடம்,
    "ஹே அஞ்சு.. M.D மெயில் பண்ணிருக்கார்.."

    அஞ்சனா ஆச்சரியமும் உற்சாகமுமாக,"M.D மெயில் பண்ணிருக்காரா? என்னன்னு?"

    சம்யுக்தா அலட்டிக் கொள்ளாமல்,"உடனே வந்து பார்க்க சொல்லி இருக்கார்" என்றவள் தன் கை-கடிகாரத்தில் மணியை பார்த்தபடியே எழுந்தாள்.

    "இஸ் இட்!"

    "ஹே லூசு.. எதுக்கு எக்ஸ்சைட் ஆற.. நான் லீவ் அப்ளை பண்ணி மெயில் அனுப்பியிருந்தேன்.. அது விஷயமா தான் பேச வர சொல்லியிருப்பார்"

    "எப்போ மெயில் பண்ணியிருக்கார்?"

    "1.30"

    "என்னடி இவ்ள கூல் ஆ சொல்ற? இப்ப மணி என்ன தெரியுமா?"

    "2 ஒ'க்லாக்
    M.D என்ன சிங்கமா புலியா பயப்படுறதுக்கு.. நான் எந்த தப்பும் செய்யலை.. மெயில் பார்த்ததும் பார்க்க தானே போறேன்.. பாய்.. "

    "அதிக அசட்டு தைரியம் உடம்புக்கு ஆகாதுடி"

    சம்யுக்தா புன்னகைத்தபடியே வித்யுத் அறையை நோக்கி சென்றாள்.

    சம்யுக்தா - சம்யூ என்று செல்லமாக அழைக்கப்படும் இவள் நம் கதாநாயகர்களில் ஒருவனான சூர்யப்ரகாஷின் தங்கை. "SS Builders" தலைமை அலுவலுகத்தில் stenographerராக வேலை பார்க்கிறாள்.
    முக லட்சணத்துடன் அண்ணனை போலவே எப்பொழுதும் பொலிவான மலர்ந்த முகத்துடன் இருப்பாள், சூட்டிகையான பெண்.
    வேலையில் வேகமும் விவேகமும் நிறைந்த பெண்.

    சம்யுக்தா வித்யுத்தின் அறைக் கதவை மெல்ல திறந்து, "மே ஐ கம் இன் சார்"

    "எஸ்"

    சம்யுக்தா உள்ளே சென்றாள். வித்யுத்தே ஆரம்பிக்கட்டும் என்று பேசாமல் அவள் இருக்க, வித்யுத்தோ சம்யுக்தாவை அழைத்த நினைவே இல்லாமல் அவள் பேசுவதற்காக காத்திருந்தான்.

    சம்யுக்தா தான் முதலில் பேசினால், "சார்"

    'எஸ்.. டெல்' என்பது போல் வித்யுத் பார்த்தான்.

    சம்யுக்தா வித்யுத்துடன் பேசுவது இது தான் முதல் முறை. அவளால் அவனது மனநிலையை அறிந்துக் கொள்ளமுடியவில்லை.
    சம்யுக்தா,"யூ மெயில்டு மீ டு மீட் யூ"

    வித்யுத்திற்கு சட்டென்று நினைவிற்கு வந்தது.
    "வாட்'ஸ் தி டைம் நொவ்? டோன்ட் யூ........."

    "சாரி சார்... ஜஸ்ட் நொவ் ஐ கம் பக் பிரம் லஞ்ச் சார்"
    ஏற்கனவே தனது பர்சனல் மொபைலில் வந்த குறுஞ்செய்திகளால் எரிச்சலில் இருந்த வித்யுத்திற்கு சம்யுக்தா தனது உரையின் நடுவே பேசியது சிறு கோபத்தை கிளப்பியது, தன் கபத்தை வெளிக்காட்டாமல்,
    "வொய் டிட் யூ மெயில் மீ?"

    "சார்?"

    "யுஷுவலி ஹூம் டூ யூ ரெகுஸ்ட்?"

    "மிஸ்டர் ஆனந்த்?"

    வித்யுத் 'பிறகு ஏன் எனக்கு மெயில் பண்ணினாய்?' என்பது போல் புருவம் உயர்த்த, சம்யுக்தா, "ஹி இஸ் ஆன் லீவ் சார்"

    "தென் யூ மஸ்ட் ஹவ் மெயில்டு மிஸ்டர் ரவிக்குமார்.. ரைட்?"

    "G.M சார் இஸ் இன் சைட்"

    "இஸ் திஸ் தி ப்ரோசிஜர் for ரெகுஸ்டிங் லீவ்?"

    "சார்"

    "யூ ரெகுஸ்டட் லீவ் for மண்டே.. ரைட்?"

    "எஸ் சார்"

    "அண்ட் வென் டிட் யூ விஷ் டு லீவ் டுடே?"

    சம்யுக்தா மெலிதான குரலில், "4"

    "வாட்'ஸ் தி டைம் நொவ்?"

    "2"

    வித்யுத் சம்யுக்தாவை தீர்கமாக பார்த்தான். அந்த பார்வை அவளை குற்றம் சாட்டியது.
    அவள், "சாரி சார்.. எமர்ஜென்சி"

    "வாட் எமர்ஜென்சி?"

    "பர்சனல்"

    வித்யுத் சிறு கோபத்துடன், "யூ வோன்ட் ரெஸ்பாண்ட் இம்மிடியட்லி அண்ட் யூ வோன்ட் follow தி கரெக்ட் ப்ரோஸிஜர்.. பட் யூ வான்ட் தி பெர்மிஷன் அண்ட் லீவ் இம்மிடியட்லி?"

    "சாரி சார்.. ஐ விஷ் டு கன்செல் மை லீவ் ரெகுஸ்ட் நொவ்"

    சம்யுக்தாவின் பதிலை கேட்டு வித்யுத்திற்கு ஆச்சரியமாக இருந்தது, ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை தீர்கமாக பார்த்தான்.

    சம்யுக்தா, "மே ஐ கோ சார்"

    வித்யுத் 'சரி' என்பது போல் தலையை ஆட்டினான்.

    சம்யுக்தா வித்யுத்தை மனதினுள் திட்டிக் கொண்டே வெளியே சென்றாள்.
    தீண்டல் தொடரும்............



    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-7.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    2 people like this.
  9. selvipandiyan

    selvipandiyan New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    hi, goms...boldana heroina parthu evlo naalachu. mirudu ranjanai alaradikkura...mirdu kelvikku pathil sollama nee kelvi kekkura paru.. kallakkura po.. :thumbsup aanalum fliying kiss konjam overthan:) :) :) goms..vidyuthku yaru message anuupura? aavalai thoondureengapa. daily update vanthurukknu parthukitte erukken. power vera paduthuthu.
     
    2 people like this.
  10. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தீண்டல் 7:

    சம்யுக்தா விடுமுறை வேண்டாம் என்று சொல்லி சென்றதும் வித்யுத்,
    'ரொம்ப படித்திடேனோ! பர்சனல் சொன்னாளே.. என்ன தேவையோ!
    நான் ஏன் இப்படி பேசினேன்? சை.. எல்லாம் இந்த sms பண்ற வேலை.. 1st இதை யாருன்னு கண்டு பிடிக்கணும்' என்று நினைத்துக் கொண்டான்.

    காபி குடிக்க காபி மிஷின் இருந்த இடத்திற்கு சென்ற அஞ்சனா அங்கே சம்யுக்தா யாரையோ திட்டிக் கொண்டு நிற்கவும்,
    "என்ன சம்யூ.. யார திட்டிட்டு இருக்க?"

    "வேற யார எல்லாம் சாக்ரடிஸ் அ தான்"

    "சாக்ரடிஸ் ஆ யாரைடி சொல்ற?"

    "M.D மிஸ்டர் வித்யுத் யை தான் சொல்றேன்.."

    "M.D யவா?"

    "நீ ஏன் இப்படி வாய போலக்குற.. ஈ.. கொசு என்ன தவளையே வாய் குள்ள போய்டும்.. வாயை மூடு"

    "...."

    "பெரிய லார்ட் லபக் தாஸ் னு நினைப்பு..
    (அஞ்சனா சிறு பயம் கலந்த அதிர்ச்சியுடன் நிற்பதை கவனிக்காமல் சம்யுக்தா தன் வசைப் பாட்டை தொடர்ந்தாள்..)
    லீவ் கேட்டா
    (அஞ்சனா சம்யுக்தாவின் கையை சுரண்ட ஆரம்பித்தாள்.. அதையும் பொருட்படுத்தாமல் சம்யுக்தா தொடர்ந்தாள்)
    ஒன்னு தரேன் இல்ல முடியாதுன்னு சொல்லணும் அத விட்டுட்டு கேள்வி மேல கேள்வியா கேட்டு டார்......................."

    சம்யுக்தா அதிர்ச்சியுடன் வாயை மூடினாள். கையை கட்டி அவளையே பார்த்தபடி வித்யுத் நின்று கொண்டு இருந்தான்.

    வித்யுத், "எதையுமே ஒழுங்கா செஞ்சு பழக்கமில்லையா?"

    சம்யுக்தா மழுங்க மழுங்க விழித்தாள்.

    வித்யுத்,"கம்ப்ளீட் தி செண்டென்ஸ்..."

    சம்யுக்தா எழும்பாத குரலில், "சா..ரி.. சார்"

    "கம்ப்ளிஷன் சரி இல்லையே"

    "..."

    "வாட் வர் யூ சப்போஸ்டு டு டெல்?"

    ".."

    "ஸ்பீக் அவுட்"

    சம்யுக்தா பொறுமை இழந்து, "டார்ச்சர் பண்ணிட்டு னு சொல்ல வந்தேன்"

    "ஐ ஹட் அ தாட் of ரிகன்ஸிடரிங் யுவர் பெர்மிஷன் அண்ட் லீவ் ரெகுஸ்ட்...."

    "சாரி சார்.. ஐ டோன்ட் வான்ட் பெர்மிஷன் அண்ட் லீவ்.. ஐ கன் மனேஜ்"

    வித்யுத்திற்கு கோபம் வந்தது, முதலில் சம்யுக்தா ஏற்ற-இறக்கத்துடன் தன்னை திட்டியதையும் அவளது முகபாவத்தையும் சிறிது ரசித்துக் கேட்டவன், பிறகு,
    சம்யுக்தா தன்னை திட்டிவிட்டு, தன் உரையின் நடுவே பேசியது மட்டுமில்லாமல், தன்னை அவமதித்து விட்டதாக நினைத்தான். நேருக்கு நேராக முதல் முறையாக தோற்பதா அதுவும் ஒரு பெண்ணிடம் என்ற கோபம் அவனுக்கு.
    அவனது தன்மானத்தை சீண்டிவிட்டதை சம்யுக்தா அறியவில்லை. அவளை பொறுத்தவரை அது அவளது மான பிரச்சனை. அவனிடம் திட்டு வாங்கி, பிறகு கெஞ்சி தான் விடுமுறை பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு விடுமுறையே தேவை இல்லை என்பது அவளது எண்ணம்.

    வித்யுத் தோளை குலுக்கிவிட்டு சென்றான்.

    அஞ்சனா,"என்னடி இபப்டி பேசிட்ட?"

    "பின்ன என்ன அந்த MQ கிட்ட கெஞ்சி கூத்தாடி லீவ் வாங்க சொல்றியா?" என்று சிறிது ஆவேசமாக கூறிய படியே தன் இடத்திற்கு நகரத் தொடங்கினாள்.

    "MQ?"


    "மிஸ்டர் குவெஸ்டின்"
    அஞ்சனா சிரித்தாள்.

    சம்யுக்தா,"குவெஸ்டின் மன்னன் னு வைக்கலாம் னு நினைத்தேன் பட் கொஞ்சம் மார்டன் ஆ இருக்கட்டுமே னு மிஸ்டர் குவெஸ்டின் னு வச்சேன்.. எபப்டி இருக்கு?"

    அஞ்சனா சிறு பயத்துடன் திருதிருவென்று முழித்தாள். சம்யுக்தா,"எதுக்குடி இப்படி முழிக்குற?"

    "அது.. இப்ப M.D உன்னை முறைச்சுடே போறதை பார்த்தேன்"

    "அட கடவுளே" என்று நொந்துக் கொண்ட சம்யுக்தா, "டேய் அண்ணா இன்னைக்கு நீ சொல்றதை நம்புறேன் டா" என்று முணுமுணுத்தாள்.

    அஞ்சனா புரியாமல் பார்க்க, "அது ஒன்னுமில்லைடி.. என் அண்ணா டெய்லி தேதி கிழிக்கும் போது ராசி பலன் பார்பான்.. இதை போய் நம்புறியா னு அவனை நான் கிண்டல் பண்ணுவேன்.. இன்னைக்கு எதர்ச்சியா எனக்கு என்ன போட்டுருக்கு னு பார்த்தேன்.............."

    "என்ன இருந்துது?"

    "கவனம்" என்று சொன்னபடி அக்கம் பக்கத்தை சுற்றி பார்த்தாள்.

    அஞ்சனா சிரிப்பின் நடுவே, "இருந்தாலும் நீ பேசினது அதிகம் தான்"

    "போடி என்னால கெஞ்சிட்டு லாம் இருக்க முடியாது.." என்றவள் பல்லைக் கடித்துக் கொண்டு, "எல்லாம் இந்த அகல்ஸ் பண்ணின வேலை" என்று கூறிக் கொண்டு அஞ்சனாவின் கைபேசியை எடுத்து,
    "ஹே பலன்ஸ் இருக்குல?" என்று கேட்டபடியே தன் அன்னையை அழைத்தாள்.

    அந்த பக்கம் எடுத்ததும், சம்யுக்தா, "ஹே அகல் விளக்கு உன்னாலா என் மானமே போச்சு"

    அகல்யா,"என்ன ஆச்சு?"

    "என்ன ஆச்சாசாசா?" என்று கூறி வித்யுத்துடன் நிகழ்ந்த உரையாடலை ஒப்பித்தாள்.

    "அவர் கேட்டதில் தப்பில்லையே"

    "ஏய் லைட் ஹவுஸ்! நானே எரிச்சல்ல இருக்கேன்.. நீ வேற கடுப்பெத்தாத"

    "சம்யூ" என்று அன்னையின் குரல் கண்டிப்புடன் வரவும் நம்ம சம்யுக்தா,
    "ஓகே..ஓகே.. இப்ப சொல்றதை கவனி.. எனக்கு பெர்மிஷன் அண்ட் லீவ் கிடைக்கலை............."

    "அவசரகுடுக்கை.. ஜாஸ்தி பேசாத னு சொல்றதை கேட்குறியா! உனக்கு எப்போ தான் பொறுப்பு..........."

    "பொறுப்பு பருப்புலாம் அதிகமாவே இருக்கு..
    நீ உன் சுப்ரபாதத்தை நிறுத்துறியா!
    அகல்ஸ் உன் தொல்லை தாங்காம தானே பெங்களூர் வந்தேன்.. போன்லயும் நீ பாட ஆரம்பிச்ச நான் போனை வச்சுருவேன்.. "

    "கொழுப்புடி உனக்கு..
    எதுக்கு அஞ்சனா செல் ல இருந்து கூப்பிடுற? நேத்து தானே சூர்யா டாப்-அப் பண்ணான்.. அதுக்........................"

    "ஹலோ ஹலோ.. வெயிட்.. சின்ன கேப் விடுறியா? என் மொபைலை ஹாஸ்டல் ல விட்டுட்டு வந்துட்டேன்..."

    "ஒரு பொருள ஒழுங்கா பாராமரிக்க தெரியு............"

    "யப்பாபா... முடிலடா சாமி.. உனக்கு அந்த MQ வே பெட்டர்.. உன் கூட மல்லுகேட்டுறதுக்கு அவர் கேட்குற கேள்வியே பெட்டர்....
    பெர்மிஷன் கிடைக்கலைனாலும் நைட் பஸ்-லயாது சென்னை வரலாம் நினைச்சேன்.. நோ வே.. நீயே உன் அருமை புதல்வனை சமாளிச்சுக்கோ.. பாய்"

    அவ்வளவு தான் அன்னை திட்டுவதை நிறுத்திவிட்டு, தன் மகளை கெஞ்ச தொடங்கினார்.
    இது தான் சம்யுக்தா, அன்னையிடம் திட்டும் வாங்குவாள், அதே நேரத்தில் அதை எப்படி நிறுத்த வேண்டும் என்ற வித்தையையும் நன்கு அறிந்தவள்.

    "ஏய்.. சம்யூ.. என் தங்கம் ல.."

    "இல்லை"

    "என் செல்லம் ல"

    "இல்லை"

    "நீ நல்ல பொண்ணு தானே"

    "எனக்கு தான் பொறுப்பே கிடையாதே"

    "யார் சொன்னா?"

    "நீ தான்"

    "ச சும்மா சொன்னேன் டா.."

    "நீ நினைச்சு நின்சிச்சு பேசுறதுக்குலாம் நான் ஆள் இல்லை.."

    "ரொம்ப பண்ணாதடி" என்று அன்னை அலுத்துக் கொள்ள, சம்யுக்தா சிரித்துவிட்டாள்.

    "ஆனாலும் நீ நிமிஷத்துக்கு நிமிஷம் இப்படி நிறம் மாறுனா சேது சார் ரொம்ப பாவம்"

    "சம்யூ " என்று அன்னையின் குரல் கண்டிப்புடன் வந்தது.

    "பாருடா.. பதி பெயரை சொன்னதும் கோபம் வருது..
    ஒரு நிமிஷம் திட்டு, மறு நிமிஷம் கெஞ்சல் அண்ட் கொஞ்சல், மறுநிமிஷம் மீண்டும் கோபம்.. கஷ்ட காலம் டா..
    சேதுமாதவா உன் நிலைமை அந்தோ பரிதாபம்... ச்..ச்..ச்"


    "சம்யூ அப்பா பெயரை சொல்லாதே னு எத்தனை முறை சொல்றது"

    சம்யுக்தா குறும்பு சிரிப்புடன்,
    "நீ சொல்றதை எல்லாம் இந்த சம்யூ கேட்டுட்டா அப்பறம் பூமி சுத்துறதை நிறுத்திடுமே அகல்ஸ்"

    "ஊர்ல நாலஞ்சு பொண்ணுங்களை பெத்தவளாம் சந்தோசமா இருக்கா.. ஒரே ஒரு பொண்ண பெத்துட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே............"

    "ஐ யயை ஐயோ யோ யோ " சம்யுக்தா வைவிட்டு சிரித்துவிட்டு, "அகல்ஸ்.. சூப்பர்.. கலக்குறியே" என்றாள்.

    அகல்யாவும் சிரித்தார் ஆனால் இரண்டு நொடிகளில் அந்த சிரிப்பு நின்றது, சிறு கவலை நிறைந்த குரலில்,
    "நீ வரது கஷ்டமா சம்யூ?" என்று கேட்டார்.
    என்ன தான் அவர் கவலையை மறைக்க நினைத்தாலும், அவரது குரல் அதை காட்டிக் கொடுத்துவிட, சம்யுக்தாவின் சிரிப்பும் நின்றது.

    சம்யுக்தா ஆழ்ந்த குரலில்,"என்ன மா.. பெண் பார்க்க தானே போற.. அப்பறம் ஏன் நான் வரணும் னு இவளோ தூரம் சொல்ற?"

    "சூர்யா கிட்ட நீ தாண்டி பேசணும்"

    சம்யுக்தா அதிர்ந்தாள், "என்ன மா சொல்ற? அண்ணா கிட்ட இன்னும் மட்டர சொல்லவே இல்லையா? நாளைக்கு இவனிங் ப்ரோகரம் வச்சுட்டு............."

    "அவன் ஒத்துக்க மாட்டான்"

    "அம்மா இது ரொம்ப தப்பு" சம்யுக்தாவின் குரல் கண்டிப்புடன் வந்தது.

    அகல்யா பொரிய தொடங்கினார்,
    "எதுடி தப்பு? எது தப்பு? யாரையாச்சும் லவ் பண்றியா னு கேட்டா இல்லை னு சொல்றான்.. பொண்ணும் பார்க்க வேண்டாம் னு சொல்றான்..
    நானும் எவ்ளோ நாள் தான் பொறுக்குறது? என்னை என்ன தாண்டி பண்ண சொல்றீங்க?" என்று சிறிது கலங்கிய குரலில் முடித்தார்.

    "அம்மா.. அண்ணா மனசுல என்.........."

    "அதை தான் சொல்லித் தொலைக்க மாடிங்கறானே!"

    ".."

    "உனக்கு எதுவும் தெரியுமா?"

    "இல்லையே மா.. ஏன் இவளோ பீல் பண்ற? என்ன ஆச்சு?"

    "தெரியலைடி.. தனியா இருக்குறப்ப எதையோ தொலைச்சது போல் இருக்கான்.. நான் போனா உடனே சிரிச்ச முகமா மாறிடுறான்........."

    "மனோ அண்ணா கிட்ட கேட்டியா?"

    "கேட்டேன்"

    "என்ன சொன்................."

    "உண்மையை சொல்ல மாடிக்குறான்"

    "....."

    "சம்யூ நீ வரமுடியாட்டி நெக்ஸ்ட் வீக் மாத்திரலாமா?"

    "டிக்கெட் இருக்கா னு பார்க்குறேன் மா.. பட் அண்ணா கிட்ட நீ மட்டர சொல்லிடுறது பெட்டர்" என்று பேசிக்கொண்டே டிக்கெட் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினாள்.

    "நீ சொன்னா அவன் கொஞ்சம் கேட்பான்..பார்க்கலாம்.." என்று கவலை நிறைந்த குரலில் சொன்னார்.
    அன்னையின் வருத்தம் சம்யுக்தாவை பெரிதும் வாட்ட அன்னையை இயல்பு நிலைக்கு மாற்ற தனது குறும்புத்தனத்தை காட்டத் தொடங்கினாள்.

    "சம்யுக்தாவை நம்பினோர் கைவிடப் படார்.. ஆனாலும் அகல்ஸ் ஒரு நிமிஷம் என்ன ரொம்ப பயம்புருத்திடியே"

    "என்ன?"

    "உன் அருமை புதல்வன் மக்கர் பண்றதை சொல்லாம, மொட்டையா நீ கண்டிப்பா வரணும் வரணும் னு மட்டும் சொன்னதும் எங்க என்னை கிவ் அண்ட் டேக் பாலிஸி மாதிரி தள்ளிவிட பார்குறியோ னு பயந்துட்டேன்"

    "என்னடி சொல்ற?"

    "அதான் மா.. பொண்னெடுத்து பொண்ணு குடுக்குறது"

    "பொண்ணுக்கு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது பட் அண்ணன் இருக்கான், பெரியம்மா பையன்.. ஆனா அவனுக்கு கல்யாணம் முடிவாகிருச்சு"

    "எப்பா.. கிரேட் எஸ்கேப்"

    அகல்யா மெலிதான புன்னகையுடன்,"உன் ஜாதகப்படி ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணனும் னு இருக்கு..உனக்கு இன்னும் வியாழ நோக்கு வரலைடி"

    "என்ன நோக்கோ.. வாராதவரைக்கும் சந்தோஷம்"

    "வாலு.."

    "பொண்ணு பத்தி டிட்டேல்ஸ் சொல்லவே இல்லையே"

    "பொண்ணு பேரு ப்ரியா.. என் பிரெண்ட்-யோட டாட்டர்.. உன்னை போல் இல்லை.. B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுருக்கா............."

    "அகல்ஸ் படிப்பு பத்தி பேசி என்னை டென்ஷன் பண்ணாத.. சொல்லிட்டேன்"

    அகல்யா சிரித்துக் கொண்டே,"ஓகே..ஓகே..மித்ததை வீட்டுக்கு வா சொல்றேன்"

    "ஹ்ம்ம்.. வேலைக்கு போறாளா?"

    "சம்யூ.. ஒருமைல பேசாத.."

    "ஐயோ அம்மா.. இன்னும் பொண்னே பார்களை.."

    "அவ தான் உன் அண்ணி"

    "முடிவே பண்ணிட்டியா.. அம்மா இது டூ மச்... அண்ணா....."

    "அவனை சமாளிப்பது உன் பொறுப்பு.. ப்ளீஸ்...."

    "ஓகே..ஓகே.. பொண்ணு வேலை பார்க்குறாங்களா?"
    (சம்யுக்தா அன்னைக்காக பன்மையில் பேசினாளே தவிர அண்ணனுக்கு சம்மதம் இல்லை என்றாள் அம்மாவை தான் சமாளிக்கணும் என்று உறுதியுடன் இருந்தாள்)

    "ஹ்ம்ம்.. CTS ல வேலை பார்குறா"

    "ஓகே.. பைன்..
    ஹே....மை டியர் ஸ்வீடி.. பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. நைட் 11க்கு பஸ்"

    "பதினோரு மணிக்கா?"

    "உங்க பொண்ண யாரும் கடத்திட்டு போய்ட மாட்டாங்க.. பத்திரமா வந்து சேருவேன்.. உங்க டார்லிங் அ கரெக்டா நாலு மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வர சொல்லுங்க..
    ஓகே நீங்க போய் எனக்கு வித விதமா சமைக்குறதை பற்றி யோசிங்க..
    பாய் டா ஸ்வீடி.." என்று ஒரு முத்தத்துடன் அழைப்பை துண்டித்தாள்.






    அஞ்சனா,"எனி பிரபலம் சம்யூ?"

    "நத்திங் டா.. இந்த அண்ணா ஏதோ மக்கர் பண்றான் போல.. பார்த்துக்குறேன்" என்று புன்னகைத்தாள், ஆனால் உள்ளுக்குள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

    அதற்கு காரணம் அன்னை தன்னை பதினோரு மணி பேருந்தில் வர சமதித்தது தான்.
    எப்பொழுதுமே ஊருக்கு போவதாக இருந்தால் மாலை ஐந்து மணி பேருந்தில் செல்வது தான் அவளது வழக்கம். இன்று மதியம் ஒரு மணிக்கு போன் செய்த அன்னை,
    "சம்யூ நாளைக்கு இவனிங் சூர்யாக்கு பொண்ணு பார்க்க போனும்.. இப்ப தான் முடிவாச்சு.. நீ இன்னைக்கு 5 மணி பஸ் ல கிளம்பி வந்துடு" என்றார்.
    சம்யுக்தா டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்த போது நல்லவேளையாக ஒரே ஒரு டிக்கெட் இருந்தது, உடனே அதை புக் பண்ணிவிட்டு, அஞ்சனாவுடன் ஆலோசித்து விட்டு 1.20க்கு விடுமுறை விண்ணப்பத்தை வித்யுத்திற்கு அனுப்பிவிட்டு அஞ்சனாவுடன் உணவருந்த சென்றாள்.

    சம்யுக்தாவின் சிந்தனையை அஞ்சனா கலைத்தாள்.
    "ஹே 5 ஒ'கிலாக் பஸ் டிக்கெட் கன்செல் பண்ணியா?"

    "ஓ.. காட்.. மறந்துட்டேன்.. தேங்க்ஸ் டி" என்று கூறி அஞ்சனாவின் தோளை அணைத்து,
    "என் பிரெண்ட போல யாரு மச்சி" என்று பாடினாள்.

    "பாடுறதெல்லாம் சரி.. ஒழுங்கா ஊருக்கு போனதும் என் நம்பருக்கு டாப்-அப் பண்ற"

    சம்யுக்தா அஞ்சனாவின் நாடியை பிடித்து கொஞ்சி, "என்னடா நாம அப்படியா பழகிட்டு இருக்கோம்?"

    "ஆமா"

    "அடி பாவி..
    ஹ்ம்ம்.. ஏதோ பிரெண்ட் ஆ பழகி தொலைச்சுட்டேனே! அதுனால பண்றேன்"

    "ஹ்ம்ம்.. குட்.."

    அஞ்சனா,"எதுக்குடி M.D ய சாக்ரடிஸ் னு சொன்ன?"

    "இப்ப எதுக்குடி அந்த MQ வ ஞாபக படுத்துற?"

    "ஓகே..ஓகே..கூல்.. இத மட்டும் சொல்லிடு.. இல்ல என் தலை வெடிச்சுடும்"

    சம்யுக்தா மென்னகையுடன்,"சாக்ரடிஸ் தானே 'ஏன்' 'எதற்கு' 'எப்படி' னு கேட்க சொல்லியிருக்கார்"

    அஞ்சனா யோசனையுடன்,"ஹ்ம்ம்.. 'ஏன் எனக்கு மெயில் பண்ண?' னு கேட்டார், தென்.. 'எதுக்கு லீவ்?' னு கேட்டார்.. பட்.. எப்படி னு கேள்வி கேட்கலையே!"

    "உனக்கு அது ஒரு குறையா?" என்று சம்யுக்தா தன் தோழியை முறைத்தாள்.
    தீண்டல் தொடரும்............



    அன்புத் தோழமைகளே!..
    உங்கள் கருத்துக்களை

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/178207-comments-8.html

    என்ற தளத்தில் மட்டும் கூறவும்.
    நன்றி..
    உங்கள் அன்பு தோழி,

    தேவி.
     
    5 people like this.

Share This Page