1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 6, 2016.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அவன் முன் நின்று, அவனை இறைஞ்சி
    ஒரு சிற்றகலை நன்றே துடைத்து,
    அன்பெனும் எண்ணெய் கொண்டே நிரப்பி
    ஒளிர்வெம்மை வர, அவன் பெயருரைத்து,

    வெண்திரி நூலினை எண்ணெயில் முக்கி,
    கொளுத்திய குச்சியை நுனியில் பொருத்தி,
    சுடரலைபாய்ந்து சற்றே பற்றி,
    அணைந்திடுமோ எனப் பயந்தே பொத்தி,

    கருக்குழந்தை எனச் சுடரினைக் காத்து,
    இதுவாவது நிலைக்கணுமெனப் பணிந்து,
    அது நிலைபெற, ஒரு ஆசுவாசம் கொண்டு
    எது வரினும் தாங்கும் நிலை தரக் குவிந்து

    அவன் முகம் கண்டே தன்னிலை மறந்தே,
    சிறு பொட்டாய் எரியும் சுடரில் மனம் நிறைந்தாள்.
    அதில் தெரிந்திடும் தன் சிறு மகவென்று
    தன்னிடம் வருமென, ஏக்கமும் கொண்டாள்.
     
    PavithraS and bhagya85 like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    திரியேற்றினாள் , இறைவா, அவள் கரு ஏற்றிவை !
    ஒளி காக்கிறாள்- வலி தந்திடு, வழி காட்டிடு !
     
    rgsrinivasan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your like and a subtle feedback Pavithra. -rgs
     

Share This Page