தாமிரபரணியில் ஸ்னானம்-பித்ரு சாப நிவர்த்தி,ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி,சகல பாவ நிவர்த்தி .

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Dec 2, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    தாமிரபரணியில் எவ்விடத்தில் ஸ்னானம் செய்தாலும் பயன்கள் கிடைக்கும் என்றாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் ஸ்னானம் செய்ய சிறப்பு பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

    சித்திரை மாதம் முழுவதும் -
    பாபநாசம் - இந்திர கீல தீர்த்த - ஸ்னான பலன்கள் -
    ராஜசூய யாக பலன்
    ---------------------------------------------------------------------------------------------------

    வைகாசி மாதம் , துவாதசி அல்லது சிரவண துவாதசி-
    அத்தாளநல்லூர் - கஜேந்திர மோட்சம் தீர்த்த - ஸ்னான பலன்கள்-
    குருத்துரோக தோஷ நிவர்த்தி - ஆயிரம் காந்திராயண பலன்
    ----------------------------------------------------------------------------------------------------

    ஆனி மாதம் -சுக்ல பட்ச துவாதசி -
    கூனியூர் - சோம தீர்த்தம் - ஸ்னான பலன்கள்-
    பரோபகாரம் செய்த பலன்
    ----------------------------------------------------------------------------------------------------

    ஆடி அமாவாசை -
    கலம்பகர்த்தம் - பாணதீர்த்தம்- ஸ்னான பலன்கள்-
    ஸோமயாகம் செய்த பலன்
    ----------------------------------------------------------------------------------------------------

    ஆவணி மாதம் முழுவதும் மற்றும் ஆவணி பௌர்ணமி
    சிந்துபூந்துறை - ஹிப்தபுஷ்ப தீர்த்தம் - பௌர்ணமி ஸ்னான பலன்கள்
    அனைத்து காரியங்களும் வெற்றி அடையும் - ஸர்வகிருது பலன்கள்
    ----------------------------------------------------------------------------------------------------

    புரட்டாசி மகாளய பட்சம் மற்றும் அமாவாசை
    அகரம் ( வல்லநாடு ) - தசாவதாரதீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    பித்ரு சாப நிவர்த்தி பலன்

    புரட்டாசி சுக்ல பட்சம் மற்றும் புரட்டாசி சுக்ல பட்ச துவாதசி ( சிரவண துவாதசி )
    ஸ்ரீவைகுண்டம் - கலச தீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    ஆயிரம் வாஜபேய யாகம் செய்த பலன்

    புரட்டாசி விஜய தசமி யில் ஸ்னான பலன்கள்
    செவல் - கௌரி தீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    பூமி தானம் செய்த பலன் கிடைக்கும்
    ----------------------------------------------------------------------------------------------------

    ஐப்பசி மாதம் சுக்ல பட்சம் அல்லது நவராத்திரியில்
    காருக்குறிச்சி - துர்கா தீர்த்தம் ஸ்னான பலன்கள்
    அனைத்து காரியங்களும் வெற்றி அடையும் - ஸர்வகிருது பலன்கள்
    ----------------------------------------------------------------------------------------------------

    கார்த்திகை மாதம் பௌர்ணமி ஸ்னான பலன்கள்
    ஆத்தூர் அருகே - தாம்ரா சங்கமம் தீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    ஆயிரம் கோதானம் ( பசு தானம் ) செய்த பலன்
    ----------------------------------------------------------------------------------------------------

    மார்கழி மாதம் முழுவதும்
    சேரன் மாதேவி - வியாஸ தீர்த்தம் - ஸ்னான பலன்கள்-
    வேதங்கள் முழுவதும் பாராயணம் செய்த பலன்

    மார்கழி மாதம் சுக்ல பட்ச துவாதசி - ஸ்னான பலன்கள்-
    ஆழ்வார் திருநகரி - ( ரமாதீர்த்தம் , போகதீர்த்தம் , சக்ரதீர்த்தம் ) அனைத்தும் சிறப்பு பெற்றவை .
    கோடி காராம்பசுக்கள் தானம் செய்த பலன்.
    ----------------------------------------------------------------------------------------------------

    தை மாதம் சுக்ல பட்சம்
    ஆழ்வார் திருநகரி கிழக்கில் - மகர தீர்த்தம்- ஸ்னான பலன்கள்-
    100 கன்னிகாதானம் செய்த பலன்.

    தை மாதம் பௌர்ணமி - ஸ்னான பலன்கள்
    திருப்புடைமருதூர் - புடார்ஜுனம் தீர்த்தம்
    பரமபதம் அடையலாம் .
    ----------------------------------------------------------------------------------------------------

    மாசி மாதம் பௌர்ணமி , சிவராத்திரி
    ஆத்தூர் - ஸோம தீர்த்தம்- ஸ்னான பலன்கள்-
    கோடி காராம்பசுக்கள் தானம் செய்த பலன்.

    மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி
    அகரம் ( வல்லநாடு ) - தசாவதார தீர்த்தம் - ஸ்னான பலன்கள்

    பித்ரு சாப நிவர்த்தி பலன்

    மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி - ஸ்னான பலன்கள்-
    ஆழ்வார் திருநகரி - (சக்ரதீர்த்தம் ) இங்கு அனைத்தும் தீர்த்தங்களும் சிறப்பு பெற்றவை
    ஆயிரம் அந்தணர்களின் குடும்பங்களை காப்பாற்றிய ( பிராமண குடும்ப பிரதிஷ்டை ) பலன்

    மாசி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி , துவாதசி
    சீவலப்பேரி - விஷ்ணு தீர்த்தம் , கோதீர்த்தம் , குசஸ்தம்பதீர்த்தம் , மிருத்துஞ்சயதீர்த்தம் , தைத்திரீயதீர்த்தம் , ராஜசூயதீர்த்தம் , மஹாவிரததீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    மஹாவிரத பலன்கள்
    ----------------------------------------------------------------------------------------------------

    பங்குனி மாதம் அமாவாசை
    செவல் அருகில் - சியாமாநதி சங்கமம் - ஸ்னான பலன்கள்-
    சகல பாவ நிவர்த்தி


    பங்குனி மாதம் அமாவாசை
    செவல் அருகில் - மந்திர தீர்த்தம் (சியாமாநதி கூடல்) -ஸ்னான பலன்கள்-
    அன்னதானம் செய்த பலன்


    பங்குனி மாதம் அமாவாசை
    ஸ்ரீவைகுண்டம் - கலச தீர்த்தம் - ஸ்னான பலன்கள்
    ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பலன்.
     
  2. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஆத்மா சாந்தி அடையும் , முன் ஜென்ம பாவம் போக்கும் , வியதிபாத தீர்த்தம்.

    சேரன்மாதேவில் பக்தவத்சல பெருமாள் கோயில் என்ற வியதிபாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது .

    இந்த கோயில் மண்டபத்தில் இன்றும் வியாச பகவான் வசித்து வருவதாக ஐதீகம் .

    வியாசர் குறிப்பிட்ட 12 கோயில்களில் மிகவும் முக்கியமான கோயில் .

    முன்ஜென்ம பாவம் மற்றும் தீராத பிரச்னை எல்லாம் தீர்க்கும் ஸ்தலமாக இக்கோயில் உள்ளது .

    வியதிபாத நித்ய யோக நாள் ( 10 - 01 -2019 ) மகா வியதிபாத யோக நாள் ஆக இந்த தீர்த்தத்தில் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது .


    அன்று அதிகாலை 05.30 மணியளவில் தாமிரபரணி தீர்த்தத்தில் எம்பெருமான் தீர்த்தவாரி நடைபெறும் .

    எம்பெருமான் தீர்த்தவாரியுடன் தீர்த்தம் ஆடுபவருக்கு அணைத்து தோஷங்களும் கழிந்து மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம் . மேலும் அந்தக்குடும்பத்தில் சாந்தி அடையாத ஆத்மா ஏதேனும் இருப்பின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம் .
     
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    முன் ஜென்ம பாவம் , பித்ரு தோஷம் போக்கும் ஜடாயு தீர்த்தம்

    திருநெல்வேலியில் ஒரு ராமேஸ்வரம் என்றால் அது அருகன் குளத்தில் அமைந்துள்ள ஜடாயு தீர்த்தம் .


    பித்ரு தோஷம் போக்கும் இடமாகவும் போற்றப்படுகிறது .

    இராவணன் , சீதையை தூக்கிச்செல்லும்போது , சீதையை காப்பாற்ற ஜடாயு பறவை ராவணனுடன் போர் புரிந்தது . இதில் ஜடாயு பறவையின் இறக்கையை இராவணன் அரிந்து செல்கிறான் . உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ராமனை பார்த்து தகவலை சொல்லிவிட்டு தான் இறப்பேன் என்ற உறுதியுடன் ஜடாயு பறவை இருந்தது . ராமன் வந்தபின் தான் பார்த்த காட்சிகளை ராமனிடம் சொல்லிவிட்டு முக்தியடைந்தது .

    ராமன் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார் . அந்த தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது . அந்த தீர்த்தத்தை கொண்டு ராமன் ஜடாயுவிக்கு ஈமக்கிரியைகளை நடத்துகின்றார் . இங்குள்ள தாமிரபரணி நதியில் ஒரு மண்டபம் உள்ளது . இந்த இடத்தில இருந்து தான் ராமன் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது .

    இந்த தீர்த்தத்தின் அருகில் ராம தீர்த்தம் , சிவதீர்த்தம் உள்ளது . இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடுகிறார்களோ அவர்களுக்கு 100 பிறவிகளில் செய்த பாவம் அழிந்துவிடுகின்றது என்பது ஐதீகம்.


    இந்த தீர்த்தங்களை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தலாம் .தங்களின் ,தொழில் நிறுவனங்களிலும் தெளித்து மக்கள் நற்கதி பெற்றுவருகின்றனர் .

    ஜடாயு தீர்த்தக்கரையில் ராமன் பிரதிஷ்டை செய்த ராமலிங்கேஸ்வர் கோயில் அமைந்துள்ளது . இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி பர்வதவர்த்தினி , ராமலிங்கேஸ்வர் ஆகியோரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம் .

    தீராத நோய் , தீராத வலி , ஏவல் , பில்லி , சூனியம் , மற்றும் பித்ருக்கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறந்த பலன்கள் தரும் .


    இந்த ஆலயம் தாழையூத்து பை பாஸ் இல் , தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகில் உள்ளது .

    நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் , எட்டெழுத்து பெருமாள் கோயில் அருகில் உள்ளது . நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ ,வசதிகள் உள்ளது.
     

Share This Page