1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப&

Discussion in 'Posts in Regional Languages' started by g3sudha, Feb 28, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

    முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

    முருங்கைகீரை - 2 கப்
    வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
    கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
    உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

    முதலில் 2 டம்ளர் தண்*ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்*ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

    அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ*ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
     
    3 people like this.
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

    மைசூர் பாகு, பர்பி, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகள் தூளாக மிஞ்சிவிட்டதா? கவலையை விடுங்கள். இவற்றுக்காகவே போளி செய்து இனிப்புத் துகள்களைப் பூரணத்துடன் கலந்து உபயோகிக்கலாம்.

    முறுக்கு வகைகளை ஆரம்பத்திலேயே தண்ணீ*ர் கலந்து பிசையாமல் வெண்ணெய், உப்பு மற்றும் எல்லாச் சாமான்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும் இந்த உதிரான மாவை ருசி பார்த்துப் பிறகு நீர் கலந்து பிசைந்தால் அதிகம் ஊறாமலும் அளவான உப்பு, கார ருசியுடனும் இருக்கும்.

    பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

    முறுக்கு அல்லது தேன் குழல் செய்யும்போது ஏலக்காய் விதையை நீர் தெளித்து மையாக அரைத்து மாவில் கலந்து கொள்ளலாம். ஏலக்காய் மணத்தில் முறுக்கு, தேன்குழல் கமகமவென்று இருக்கும்.

    தினமும் பாலைக் காய்ச்சி ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆடை நன்றாகப் படியும். தினமும் இந்த ஆடையைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜிலேயே வைத்து விடுங்கள். ஒரு வாரம் சென்றபின் அரை லிட்டர் பாலில் தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். ஃபிரிட்ஜில் சேகரித்திருக்கும் ஆடையைச் சேர்த்துக் கிளறி ஏலப் பொடி, முந்திரி சேர்க்கவும். சுவையான பாஸந்தி செய்ய ஓர் எளிய வழி இது.
     
    1 person likes this.
  3. Mrudhani

    Mrudhani Silver IL'ite

    Messages:
    214
    Likes Received:
    110
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

    Hi ,
    Very good tip. It it rich in iron content. But where to get drumstick keerai on a daily basis for 3 months?
    If one has a tree at home fine...otherwise its pretty difficult to get drumstick keerai as neighbours wont lend on a daily basis :-(

    Anyway its a good tip for hair growth
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

    In market you will get right??
     
  5. kalaipriya

    kalaipriya Platinum IL'ite

    Messages:
    2,206
    Likes Received:
    632
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&#29

    i really enjoyed the tips. Its really worth...........,
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூ&amp

    தலை குளிக்கும் போது கவனிக்கவேண்டியவை

    1.ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளகூடாது.அப்படி செய்தால் தலையில் அப்பிக்கொள்ளும்

    2.தினமும் ஷாம்பூ போட்டு குளித்தால் நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை வந்துவிடும்

    3,தலைகுளிக்கும் போது ஷாம்பூவை தலையில் அப்படியே வைத்து தேய்க்க கூடாது.சிறிதளவு தண்ணீர் உற்றி கலக்கிய பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால்தான் நீங்க எதிர் பார்க்கற நல்ல பலனை பெறமுடியும்.இல்லையேல் ஆபத்து தான் தலைமுடிக்கு விளையும்

    கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சில டிப்ஸ்:

    1.என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

    2.வாரம் இரண்டு முறையாவது தலை குளிக்க வேண்டும்

    3.மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

    4.இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

    5.அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல வேண்டுமானால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே உபயோகிக்கலாம்

    6.கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

    நரைத்துப் போகிறது தவிர்க்க எளிய சிகிச்சை முறை:

    1. ‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.

    2. இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’

    பரு இல்லாத முகத்திற்கு
    ‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.

    .பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் முற்றுப்புள்ளி.

    ‘என்னால் நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.

    ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு கரகரவென்று அரைத்த பச்சரிசி மாவுடன் பன்னீர் கலந்து மூக்கு மற்றும் தாடை ஓரம் மென்மையாகத் தேய்த்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்..’’
     
    1 person likes this.

Share This Page