1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு...


    பாடியவர்:
    எஸ்.ஜி. கிருஷ்ணன், டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    திரைப்படம்: திருவருட் செல்வர்

    ஓ... ஓ..
    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா ஆஹா ஹா, ஓஹோ ஹா
    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

    மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
    வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா நாம
    வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா
    மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
    வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா
    நாம வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா - அப்பப்பா

    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா ஹாஹாஹஹா

    கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
    மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ
    கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
    மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
    மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
    மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா
    கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
    மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
    மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
    மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா

    ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
    பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ...
    ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
    பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா - நம்ம
    பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
    பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - ஆமம்மா

    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

    கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
    கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
    துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா - அப்பா
    கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
    கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
    துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா
    வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
    வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா ஆஹா, ஓஹோ
    வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
    வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா - ஆனா
    வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா
    வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா

    பட்டுச் சேலை நூலுச் சேலை பளபளக்கும் ஜரிகைச்சேலை
    கட்டம் போட்ட சாயச் சேலை கொட்டடிச்சேலை - நல்ல
    கல்யாணக் கூரைச் சேலை சுங்கடிச்சேலை - துவச்சு
    மூட்டை கட்டி எடுத்து வச்சாத் தீந்தது வேல

    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து வச்சா வெள்ளையப்பா

    வானவில்லைப் போலே ஆ.. ஆஆ.. ஓ.. ஓ..
    வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
    பூமியிலே காயுதடி வெள்ளையம்மா
    வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
    பூமியிலே காயுதடி வெள்ளையம்மா - உங்க
    புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா - எங்க
    புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா

    கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
    சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா
    உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
    உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
    பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
    பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
    மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
    மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
    ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
    ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
    அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
    அருள் எனனும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
    உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

    உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
    பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
    மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
    ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
    அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
    அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
    உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

    பஞ்சிலே நூலை வைத்தான் நூலிலே ஆடை வைத்தான்
    ஆடையிலே மானம் வைத்தான் - அந்த
    மானத்திலே உயிரை வைத்தான் வெள்ளையப்பா
    பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
    பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
    சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
    முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா
    சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
    முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா

    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
    ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
    போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
    புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் தன்னந்தனி காட்டு ராஜா....

    movie : Enga mama
    music : Msv
    singer : Tms

    நான் தன்னந்தனி காட்டு ராஜா
    என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
    நான் தீராத விளையாட்டு பிள்ளை
    என் தொட்டிலில் எத்தனை முல்லை
    நான் தன்னந்தனி காட்டு ராஜா
    என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
    நான் தீராத விளையாட்டு பிள்ளை
    என் தொட்டிலில் எத்தனை முல்லை


    சின்ன அரும்புகள் செய்யும் குரும்புகள்
    சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
    அள்ளி எடுக்கையில் துள்ளி குதித்திடும்
    முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
    எங்க குடும்பம் ரொம்ப பெருசு
    பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
    எங்க குடும்பம் ரொம்ப பெருசு
    பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
    இவை அத்தனையும் அன்பு பரிசு
    நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
    லலல்லல்லா…ல…
    ……. நான் தன்னந்தனி காட்டு ராஜா……….


    பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை
    வாழும் உயிர்களில் ஜாதி நமக்கில்லை
    அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
    எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
    பல இடத்தில் பிறந்த நதிகள்
    ஒரு கடலில் வந்து சேரும்
    பல இடத்தில் பிறந்த நதிகள்
    ஒரு கடலில் வந்து சேரும்
    பல நிறத்தில் பூத்த மலர்கள்
    ஒரு மாலை போல் உருமாறும்
    லல்லலல்லல்ல்லா…லா
    ……… நான் தன்னந்தனி காட்டு ராஜா……….
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொர்கம் பக்கத்தில்….
    movie : Enga mama
    music : Msv
    singers : Tms & lr eswari

    சொர்கம் பக்கத்தில்….
    நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
    பெண்ணின் வண்ணத்தில்……
    நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்
    லால்ல ல ல ல ல
    சிந்தும் முத்தங்களில்
    சொர்கம் பக்கத்தில்….
    நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
    பெண்ணின் வண்ணத்தில்……
    நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்
    லால்ல ல ல ல ல
    சிந்தும் முத்தங்களில்
    லால்ல ல ல ல ல..


    நீல விழி முத்துப்பந்தல் நெஞ்சை தொட்டு பாடம் சொல்லட்டும்
    நேற்று வரை எங்கே என்று தேடும் உள்ளம் வாங்கிக்கொள்ளட்டும்.
    கொஞ்சம் வா…. அஞ்சவா
    கிட்ட வா…… கிள்ளவா
    கொஞ்சம் வா…. அஞ்சவா
    கிட்ட வா…… கிள்ளவா
    சொல்லிலே சொல்லவோ தோளினில் அள்ளவோ


    இன்று முதல் ஆணும் பெண்ணும் நம்மைப்பார்த்து காதல் செய்யட்டும்
    நாளை வரும் கவிஞர் கூட்டம் நம்மை சேர்த்து பாடல் பாடட்டும்
    ஒன்று நான்…. ஒன்று நீ
    ஒன்றிலே …..ஒன்று நாம்
    தனிமையில் ஓரிடம் உலகமே நம்மிடம்


    சொர்கம் பக்கத்தில்….

    நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
    பெண்ணின் வண்ணத்தில்……
    நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில்
    லால்ல ல ல ல ல
    சிந்தும் முத்தங்களில்
    லால்ல ல ல ல ல..
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு...

    திரைப்படம்: பட்டிக்காடா பட்டணமா
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    ஆண்டு: 1972


    (அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி.. )
    அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
    என் நெஞ்சி குலுங்குதடி
    சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
    மச்சானை இழுக்குதடி
    அடி என்னடி ராக்கு….
    அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி (2)
    அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி (2)
    சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா
    என் அத்த அவ பெத்த என் சொத்தே
    அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ
    …………அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு………..
    தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி (2)
    சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி (2)
    அடி தப்பாமல் நான் உன்னை சிறைஎடுப்பேன் ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
    என் கண்ணு என் பல்லு என் மூக்கு என் ராஜாயி
    கல்யாண வைபோகமே..
    அட பீ பீ பீ டும் டும் டும் ….
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    குரல்: டி.எம்.சௌந்தரராஜன்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை : விஸ்வனாதன்-ராமமூர்த்தி
    திரைப்படம்: ஆலயமணி

    சட்டி சுட்டதடா கை விட்டதடா (2)
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    (சட்டி)
    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா (2)
    அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
    (சட்டி)
    ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா (2) – மனம்
    சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
    (சட்டி)
    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
    இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    (சட்டி)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மலர் கொடுத்தேன்....

    படம்: திரிசூலம்
    பாடியவர்:டி.எம்.எஸ்
    நடிகர்: சிவாஜிகனேசன்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
    இது ஒரு சீராட்டம்மா
    ஒஹ்ஹ்ஹ
    என்னையும் தாலாட்டம்மா
    மகனோ மகளோ
    பிறக்கும் வீடு
    என் நலமாக
    மடியில் தவழும்
    உருவம் என் தந்தை
    முகமாக
    இது ஒரு சீராட்டம்மா
    ஒஹ்ஹ்ஹ
    என்னையும் தாலாட்டம்மா


    அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
    அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
    அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
    அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
    மாதங்கள் பதமாக உருவானதோ
    மகராணி முகம் இங்கு மெருகேருதோ
    ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
    பாடாத தென்பாங்கு பாடு
    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இது ஒரு சீராட்டம்மா
    ஒஹ்ஹ்ஹ
    என்னையும் தாலாட்டம்மா
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யாருக்காக இது யாருக்காக
    பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    திரைப்படம்: வசந்த மாளிகை


    மரணம் என்னும் தூது வந்தது
    அது மங்கை என்னும் வடிவில் வந்தது
    சொர்கமாக நான் நினைத்து
    இன்று நரகமாக மாறிவிட்டது
    யாருக்காக இது யாருக்காக
    இந்த மாளிகை வசந்த மாளிகை
    காதல் ஓவியம் கலைந்த மாளிகை
    யாருக்காக இது யாருக்காக


    கண்கள் தீண்டும் காதல் என்பது
    அது கண்ணில் நீரை வரவழைப்பது
    பெண்கள் காட்டும் அன்பு என்பது
    நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
    எழுதுங்கள் என் கல்லறையில்
    அவள் இரக்கம் இல்லாதவள் என்று
    பாடுங்கள் என் கல்லறையில்
    இவன் பைத்தியக்காரன் என்று
    யாருக்காக இது யாருக்காக
    இந்த மாளிகை வசந்த மாளிகை
    காதல் ஓவியம் கலைந்த மாளிகை
    யாருக்காக இது யாருக்காக
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மயக்கமென்ன இந்த மௌளனம்....
    பாடகர்: டி எம் சௌந்தரராஜன் & சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    திரைப்படம்: வசந்த மாளிகை


    மயக்கமென்ன இந்த மௌனம் என்ன
    மணி மாளிகை தான் கண்ணே
    தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
    அன்புக் காணிக்கை தான் கண்ணே


    கற்பனையில் வரும் கதைகளிலே
    நான் கேட்டதுண்டு கண்ணா – என்
    காதலுக்கே வரும் காணிக்கை என்றே
    நினைத்ததில்லை கண்ணா
    தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
    அதில் தேவதை போலே நீ ஆட
    பூவாடை வரும் மேனியிலே
    உன் புன்னகை இதழ்கள் விளையாட
    கார்காலமாய் விரிந்த கூந்தல்
    கன்னத்தின் மீதே கோலமிட
    கை வளையும் மை விழியும்
    கட்டியணைத்து கவி பாட


    (மயக்கமென்ன)


    அன்னத்தைத் தொட்ட கைகளினால்
    மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
    கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து
    மதுவருந்தாமல் விட மாட்டேன்
    உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி
    நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் -
    உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
    உயிர் போனாலும் தர மாட்டேன்
    (மயக்கமென்ன)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குடிமகனே பெருங்குடிமகனே....
    பாடகர்: டி எம் சௌந்தரராஜன் & சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    திரைப்படம்: வசந்த மாளிகை



    குடிமகனே..பெருங்குடிமகனே..
    நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
    கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு (2)
    இடைவிட்ட பூவினால் கடைவைத்து காட்டுவேன்
    கணிவிட்ட மார்பில் சூடுவேன்
    எது வரை போகுமோ…அஹ்ஹா…அது வரை போகலாம்…ஹாஹ் ஹாஹ் ஹா…(2)
    புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
    பகலுக்கு அதிசயம் இரவுக்கு அவசியம்
    பழகிவிட்டால் என்ன ரகசியம்
    கணிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்
    காதலில் வேறென்ன சாஸ்திரம்


    (குடிமகனே..பெருங்குடிமகனே..)


    கடலென்ன ஆழமோ கருவிழி ஆழமோ
    இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
    ஆயிரம் கணங்களில்..ஆஹ்ஹா…அடிக்கடி நீந்தினேன்…லால் ல ல..(2)
    ஆழத்தை இங்கு தானே காணலாம்
    ஹோய்..ஆண்டவன் படிப்பிலே ஆனந்தம் ஒருவகை
    பார்த்ததில்லை நான் இதுவரை
    வேன்டிய அளவிலும் விடிகின்ற வரையிலும்
    பார்த்து வைப்போம் நாம் பலமுறை


    (குடிமகனே..பெருங்குடிமகனே..)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இரண்டு மனம் வேண்டும்.....
    பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்

    திரைப்படம்: வசந்த மாளிகை




    குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
    அவளை மறந்து விடலாம் – அவளை
    மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
    குடித்து விடலம் – ஆனால்
    இருப்பதோ ஒரு மனம்…நான் என்ன செய்வேன்?


    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
    நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று (2)
    (இரண்டு)


    இரவும் பகலும் இரண்டானால்
    இன்பம் துன்பம் இரண்டானால் (2)
    உறவும் பிரிவும் இரண்டானால் (2)
    உள்ளம் ஒன்று போதாதே!


    (இரண்டு)


    கண்களின் தண்டனை காட்சி வழி
    காட்சியின் தண்டனை காதல் வழி (2)
    காதலின் தண்டனை கடவுள் வழி (2)
    கடவுளைத் தண்டிக்க என்ன வழி?
    (இரண்டு)
     

Share This Page