1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Dec 26, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மூத்த மொழி தமிழென்றும்
    செம்மொழியாம் அதுவென்றும்
    சொல்லிவிட்டால் மட்டும்
    வளர்ந்துவிடுமா அம்மொழி?

    அமுதமொழியாம் அதனருமை உணர்ந்து,
    அடுத்தவரும் நம் மொழியை மதிக்க,
    அதை மிதித்து ஒதுக்கி நாமும்
    வேறொன்றில் திளைக்க,
    வளருமா நம் மொழி?

    கடல் கடந்து சென்றாலும்,
    பல மொழிகள் கற்றாலும்,
    தாய் மொழியை மறந்துவிட்டால்
    அது தாயை மறப்பது போலாகாதா?

    அச்சப்பட வேண்டாம்
    தமிழில் பேச,
    கூச்சப்பட வேண்டாம்
    வெளியில் சொல்ல,
    வெட்கப்பட வேண்டும்
    தாய்மொழி தெரியாவிட்டால்!!
    கற்றுக்கொள்ள வேண்டும்
    தாமாக விரும்பியதனை!!

    சொல்லிக்கொண்டார்கள் பெரியோர்,
    தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று!!
    சொல்லிக்கொள்வோம் நாமும்,
    தமிழ் எங்கள் உயர்வுக்கும் வேர் என்று!!

    தவறில்லை உலகமொழிகள்
    பலதும் கற்பதிலே,
    தாழ்வில்லை நம் மொழியிலும்
    கொஞ்சம் பேசையிலே!

    அகத்தியனார் தந்த மொழி,
    அன்னை நம் தமிழ் மொழி,
    அகிலமெங்கும் பரவாவிட்டாலும்
    அக்கம்பக்கமாவது வாழட்டும்.
     
    4 people like this.
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    feofjonlnlkzmmlllkml;vpsdk;mlkmnlks
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா - தமிழோட சிறப்ப நா பிரெஞ்ச்ல சொல்லி இருக்கேன்,
    நீ நான் துண்டு போட்டேன்னு நெனச்சுக்காத?

    நா தமிழ் மொழியப் பத்தின்னு நெனச்சேன்,

    ஆனா தமிழ் உன் பாய் பிரெண்டோன்னு தோணுது...:)

    எதுவா இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு.
     
  4. nimmimoorthy

    nimmimoorthy Platinum IL'ite

    Messages:
    1,776
    Likes Received:
    2,048
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இனிமையான மொழி தமிழ் மொழி . எனக்கு தெரிஞ்ச மட்டற்ற மொழி தோழிகள் சொல்வார்கள் தமிழ் மொழி ரொம்ப சுலபம் என்று. அதை கேட்டு நான் பெரும பட்டது உண்டு .

    ரொம்ப முத்தான கவிதை
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    அமிழ்தமிழ்தன்றோ நம் தமிழ் , அருமை தேவா
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    hjgshidiokja...jhgsoipoaju....opijapodmzzmn....
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நானும் உங்களுக்கு பின்னூட்டத்தை பிரெஞ்சுல குடுத்திருக்கேன் நட்ஸ்... நான் எதோ உங்களை திட்டிட்டதா நெனச்சுக்காதீங்க:):)

    தமிழ் என் கேர்ள் ஃப்ரெண்ட் நட்ஸ்... நம்ம தமிழ தெரியாதா உங்களுக்கு? "எங்க ஊர் தமிழ்" ன்னு த்ரெட் எல்லாம் ஆரம்பிச்ச என் தோழி தமிழை தெரியாதா உங்களுக்கு?:hide::hide:
    நன்றி நட்ஸ்!!!!:):)
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நண்பரே,
    ஒரு சின்ன பொய் சொல்லியிருக்கிறீகள்!!
    கீ பாடில், எல்லா எழுத்துக்களையும் தட்டி விட்டால், அது பிரஞ்சு மொழி ஆகி விடாது!!
    நான் சிறிதளவு பிரஞ்சு மொழி கற்றிருக்கிறேன்!!
    புருடா விடாதீர்கள்!!:hide:

    தேவி,
    தமிழைப் பற்றி, நீங்கள் எழுதியது மிகவும் சரி!
    நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் - யாரும் என்னைத் தப்பாக தயவு செய்து என்ண வேண்டாம்.
    இங்கு ஏன் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்???
    இப்பொழுது BarahPad இருக்கிறதே - "இறக்குமதி" செய்து சுலபமாக எழுதலாமே??:idea
    ஏன் இந்தக் குளறுபடி?? ஆங்கிலத் தமிழைப் படிப்பதற்குள், போதும் போதும் என்ற் ஆகி விடுகிறது!!:bonk
    தமிழைத் தமிழில் எழுதுவதே நாம் தமிழன்னைக்குச் செலுத்தும் முதல் கணிக்கையாக இருக்கட்டும்!!:bowdown
    என் மனதில் தோன்றிய என்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன் - யாரையும் குறை கூறும் நோக்கம் இல்லை! யாரையும் புண்படுத்தவும், இப்படி எழுதவில்லை.:)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேவா
    உன் தமிழ் படிக்க எனக்குள் தமிழ் வீறு கொள்கிறது..எப்போதும் இல்லாத அளவிற்கு
    தாய்மொழி இழந்தவன்
    தன் முகம் இழந்தவன்
    தமிழற்றுப் போனவனோ
    தன் தலையற்றுப்
    போனவனன்றோ?

    வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் தமிழாக இருக்கட்டும்
    உன் தமிழ் இன்று பிரவாகமாய் ஓடுவதைக் கண்டு என் உள்ளம் உவகை கொள்கிறது....:)
    வாழ்த்துகிறேன் உன்னை நீ தமிழை வாழ் வைக்க முன் வைத்த கோரிக்கைகாக
    கேளிக்கை ஆகிடாமல் இருக்க வேண்டுகிறேன் :hide:



    அத ஏன்மா கேக்குறீங்க..:bonk
    இங்க ஓடுற தங்லிஷ படிக்கிறதுக்கு பயதுட்டே ரொம்ப நாள் இந்த பக்கம் வராம இருந்தேன். அப்புறம் தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரிஞ்சுகிட்டு இப்போ தான் கொஞ்சம் நிமிர்ந்து இருக்கேன்..
    இங்கமட்டுமாவது அப்பிடி இருக்க முயற்சி செயுங்கன்னு
    தமிழா! தமில்ல எழுது தமில்ல எழுதுன்னு
    சொல்லி நானும் தலையால தண்ணி குடிச்சிட்டேன்.
    ம்ஹும் ..மாத்திக்கவே மாட்டேன்குறாங்க. :rant:rant:rant
    அதுக்கு நான் ரெண்டு பக்க கவிதை போட்டாதான் முடியும்னு நினைக்குறேன்...:exactly:
    இதோ வாரேன்....Chillout!
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அய்யய்யோ கண்டுபுடிச்சிட்டீங்களே...

    உங்களுக்கு லாடின் தெரியாதுல்லமா - அதுதான் இது, இதுதான் அது...:)
     

Share This Page