1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழுக்காக ஒரு வேண்டுகோள் !

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Apr 14, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா,

    தங்கள் அஞ்சல் கண்டேன்.
    நான் இதை இதை இதைத் தான் எதிர் பார்த்தேன்.74 வருட அனுபவம்.
    உலகில் எங்கோ ஒரு மூலையில் தமிழ் வளர வேண்டும் என்பது நல்லெண்ணம் தான். ஆனால் நம் நாட்டில் வாழும் சராசரி தமிழ் மகனுக்கு அந்த நன்மை சேர வேண்டும் என நினைப்பது எந்த விதத்திலும் குறுகிய நோக்கு ஆகாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பக்கத்து நாட்டில் விருந்து நடந்ததால் மகிழ்ச்சிதான்.அதைக் கற்பனை செய்து வயிறு நிரப்பிக் கொள்ளவா முடியும்?
    அண்டை வீட்டுப் பலா காயை விட நம் வீட்டு களா காய் உயர்ந்ததுதான்.
    ஊரில் யாரோ ஒரு குழந்தை பல்கலைக் கழக மெடல் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,நம் வீட்டுப் பெண் அந்த இடத்தைப் பிடித்தால் உள்ள மகிழ்ச்சி அலாதிதான்.
    சமூக சேவை செய்து விட்டுப் பெற்ற அன்னையை அநாதை இல்லத்தில் சேர்த்த கதைதான் இது.
    இந்த விவாதம் முடிவுக்கு வரக் கூடிய ஒன்று அல்ல .பல விவாத மேடைகளிலும் பட்டி மன்றங்களிலும் பங்கு கொண்ட எனக்கு இரு தரப்பினரும் எப்படி'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் ;என்று வாதமிடுவர் என்று நன்கு தெரியும்.
    என்னுடைய கருத்தை நான் ஏற்கெனவே நான் பதிவு செய்து விட்டேன்.நன்றி, பவித்ரா அவர்களே.

    ஜெயசாலா 42
     
    PavithraS likes this.
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா,

    தங்கள் அஞ்சல் கண்டேன்.
    நான் இதை இதை இதைத் தான் எதிர் பார்த்தேன்.74 வருட அனுபவம்.
    உலகில் எங்கோ ஒரு மூலையில் தமிழ் வளர வேண்டும் என்பது நல்லெண்ணம் தான். ஆனால் நம் நாட்டில் வாழும் சராசரி தமிழ் மகனுக்கு அந்த நன்மை சேர வேண்டும் என நினைப்பது எந்த விதத்திலும் குறுகிய நோக்கு ஆகாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பக்கத்து நாட்டில் விருந்து நடந்ததால் மகிழ்ச்சிதான்.அதைக் கற்பனை செய்து வயிறு நிரப்பிக் கொள்ளவா முடியும்?
    அண்டை வீட்டுப் பலா காயை விட நம் வீட்டு களா காய் உயர்ந்ததுதான்.
    ஊரில் யாரோ ஒரு குழந்தை பல்கலைக் கழக மெடல் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,நம் வீட்டுப் பெண் அந்த இடத்தைப் பிடித்தால் உள்ள மகிழ்ச்சி அலாதிதான்.
    சமூக சேவை செய்து விட்டுப் பெற்ற அன்னையை அநாதை இல்லத்தில் சேர்த்த கதைதான் இது.
    இந்த விவாதம் முடிவுக்கு வரக் கூடிய ஒன்று அல்ல .பல விவாத மேடைகளிலும் பட்டி மன்றங்களிலும் பங்கு கொண்ட எனக்கு இரு தரப்பினரும் எப்படி'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் ;என்று வாதமிடுவர் என்று நன்கு தெரியும்.
    என்னுடைய கருத்தை நான் ஏற்கெனவே நான் பதிவு செய்து விட்டேன்.நன்றி, பவித்ரா அவர்களே.

    ஜெயசாலா 42
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    :blush:
    :worship2::clap2:

    Regards,

    Pavithra
     
  4. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    இனிமையான இந்த புதிய முயற்சிக்கு எனது ஆதரவு மற்றும் வாழ்த்துக்கள் என்றும் உண்டு பவித்ரா.
    இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
    திருக்குறள் மற்றும் தமிழ் தொடர்பான பதிவுகளுக்கு எனது பங்களிப்பாக சில செய்திகளை சேகரித்து உள்ளேன். விரைவில் பகிர்கிறேன் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்

    நன்றி!!
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வணக்கம் தோழி !

    தங்கள் பதில் பதிவைப் படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ! உங்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்தத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! :clap2: :blush:

    நம் தாய் மொழியாம் தமிழ் , தொடர்பாக நீங்கள் சேகரித்திருக்கும் தகவலை இங்கே பகிர்ந்து கொள்ள நான் யார் ஆட்சேபம் தெரிவிப்பதற்கு ? :thinking:

    எனது இனிய உளவாக ... கட்டுரையில் நான் பதிவிட்டிருக்கும் பதிலையும் கண்டீர்கள் தானே ? இது என்னுடையது மட்டுமல்ல. நாம் எல்லோரும் சேர்ந்து என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டேனே !

    ஆவலோடு உங்கள் பதிவிற்காக தமிழ் மொழி ஆர்வலர்கள் காத்திருக்கிறோம் ! உங்களது இந்த ஆர்வத்திற்கும், பங்களிப்பிற்கும் எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் !


    என்றும் அன்புடன்,

    பவித்ரா :wave:
     
    Last edited: Apr 15, 2016
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தமிழகஅரசும், இந்தியஅரசும்நினைத்தால்இச்செயல்மிகவும்எளிதாகும். அவ்வாறுஅவர்கள்செய்யாமல்இருப்பதுவேதனைஅளிக்கிறது. "அரசேமுனைப்புக்காட்டவில்லை, நாம்ஏன்அலட்டிக்கொள்ளவேண்டும்"? என்றுஎண்ண வேண்டாம் ! சிறுதுளிபெருவெள்ளமாகும்என்றநம்பிக்கையுடன்,ஊர்கூடிஇழுத்தால்தேரோடிப்போவதுபோல , தனிமனிதர்களாகநாமெல்லோரும்முயன்று , இப்பெரியபணிநிறைவடைவதற்குஉதவலாம். இப்படிச்செய்வதன்மூலம், நம்தாய்மொழியைஉலகம்முழுவதும்எடுத்துச்செல்லும்உயரியசேவையில்நமக்கானசிறுபங்கினைநாமும்செய்தோம்என்றுஅகமகிழலாம் !

    கொஞ்சநாள் முன்பே பேபரில் பார்த்தேன் இந்த செய்தியை ....எங்களால் ஆனதை செய்கிறோம் :) .பகிர்வுக்கு நன்றி பவித்ரா :)
     
    PavithraS likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @krishnaamma மிக்க மகிழ்ச்சி !
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வாசகர்களுக்கு வணக்கம் !

    இந்தப் பதிவை இங்கு போடும் போது ஹார்வார்ட் பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிலர் எடுத்து வரும் முயற்சி பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது தமிழக அரசு இந்த முயற்சிக்குத் தன் பங்காக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமென்று இன்றைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தமிழக ஊடகங்களின் வெளிச்சப் பார்வை பட்டு இந்த முயற்சிக்கு ஆதரவாயும் எதிர்ப்பாயும் கருத்துகள் மக்களால் பரிமாறப் பட்டு வருவது மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கின்றது.

    மீண்டும் மீண்டும் இதைப் பற்றிப் பதிகிறேன் என்று என் மேல் சினங்கொள்ள வேண்டாமென்று வேண்டுகிறேன்.என் நோக்கம் "இந்த முயற்சி அவசியமா,தேவையற்றதா?" என்று விவாதிப்பதன்று. இந்தச் செய்தியை முடிந்தளவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்ற என் விருப்பத்தின் எதிரொலியே. இப்பல்கலைக் கழகம் அந்நிய மண்ணில் இருப்பதால் இந்த இருக்கை ஏற்படுத்துவதில் அந்நிய மண் தமிழர்க்கு மட்டுமே கடமையிருக்கிறது என்று எண்ணுவதை விடவும், இது ஓர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, தொலைநோக்குப் பார்வையுடன் ஓர் மொழியும்,அதன் பண்பாடும் பேணிக் காப்பதற்கு இன்றைக்கு வாழும் தமிழ் நேயர்களால் செய்யப்படக் கூடிய தொண்டாகவே நான் கருதுகிறேன்- இது என் சொந்தக் கருத்து.

    வெறும் இருக்கை அமைப்பது மட்டுமே இதன் முற்றும் முடிவுமான செயலன்று. அதன் மூலம் தமிழில் ஆழ்ந்த தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்களைத் தயார் செய்யக்கூடிய பேராசிரியரை நியமித்து, மென்மேலும் தமிழிலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு-உலகச் செம்மொழிகளுள் மூத்ததும்,முதிர்ந்ததுமான நம் தமிழை பின் வரும் சந்ததியருக்கும் தொடர்ச் சங்கிலி அறுபடாமல் விட்டுச் செல்லக் கூடிய பெரும் பொறுப்பு இதன் பின்னணியில் இருப்பவர்களுக்குண்டு. அவர்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சி,கட்டாயங்களுக்கு ஆளாகாமல், சரியான பாதையில் இந்த வாய்ப்பைப் பயனுறுத்திப் பலருக்கும் பயனூட்டுவார்கள் என்றே நானும் எதிர்பார்க்கிறேன்.

    இரு நாட்களுக்கு முன்னர் நான் வசிக்கும் வட அமெரிக்க மாகாணத்தின் வேற்றூர் தமிழ்ச் சங்க அன்பரும் எங்கள் குடும்ப நண்பருமான ஒருவர், இந்த மாகாணத்தின் தமிழர்களை இணைத்து வேண்டுகோள் விடுத்து,இந்த முயற்சிக்கு நிதி திரட்டி உதவும் படி இதன் பின்னணியில் இருப்பவர்கள் தம்மிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாங்கள் வாழுமூரின் தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் இது பற்றி எடுத்துச் சொல்லி உதவ முடியுமா என்று என்னிடம் கேட்டார். அதன் மேற்கொண்டு,இந்தப் பதிவிற்காக முன்னம் நான் திரட்டிய தகவல்களைக் கொண்டும், மேலும் சில புதிய தகவல்களை சேகரித்தும் எங்கள் ஊரில் இயங்கும் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதன் பேரில் அவர்கள் ஏதாயினும் நேர்மறை முடிவெடுத்தால் மகிழ்ச்சியாயிருக்கும். இதை இங்கே சொல்வதன் நோக்கம், மீண்டும் ஓர் முறை இந்தத் தகவலை தமிழன்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற அவா.

    நான் வயதும்,அனுபவமும் இல்லாதவள். இந்த முயற்சி சரியானதல்ல என்பதற்கு அறிவார்ந்த காரணங்கள் பல இருக்கலாம். அறிஞர்கள் அதை விளக்கிக் கூறினால் அவற்றை நானும் கட்டாயம் ஏற்றுக் கொள்கிறேன். ஆயினும் இது ஒரு அரிய செயலென்றும்,அதற்கான என் பங்கை, அது எவ்வளவு சிறிதாயினும், செய்ய வேண்டுமென்றும் என்னுள்தோன்றிக் கொண்டே இருப்பதை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. யாரையும் கட்டாயப் படுத்துவது என் நோக்கமன்று. அவரவர் மனதிற்கு இது சரியான செயலென்று பட்டால், தங்களால் முடிந்தால், பொருளுதவி செய்யுங்கள் என்ற என் பழைய கோரிக்கையை மீண்டும் முன் வைக்கிறேன். அவ்வளவே !

    இவ்வமயத்தில், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு சொல்லப்பட்டிருந்த எத்தனையோ பெரும் தமிழ் இலக்கியங்களை, காலத்தின் கோலத்தில், நீருக்கும், நெருப்புக்கும், பெருமை உணராத மனிதரின் மறதிக்கும்,அலட்சியத்திற்கும் இரையானவையோடு, செல்லரித்தும் போனவை நீங்கலாகக் கிடைத்தப் பொக்கிஷங்களை, எவ்வளவோ பாடுபட்டு, சொல்லுக்கடங்காதத் துன்பங்களை எதிர்கொண்டபோதும், தன்னுடைய முயற்சியில் மனந்தளராது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அலைந்தும் திரிந்தும் சேகரித்ததோடல்லாமல், அவற்றில் விடுபட்ட அடிகளையும், சொற்களையும் தேடிச்சேர்த்துப், பொருள்விளக்கிப்,புத்தகங்களாகவும் பதிப்பித்துப் பின்வரும் சந்ததியர்க்குப் படிக்கக் கிடைக்கச் செய்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரை மானஸீகமாகப் போற்றி வணங்குகிறேன். அவருடைய அம்முயற்சி மட்டுமில்லையென்றால், இன்றைக்கு நாம் படிக்கத் தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே ! பின்னர் எங்கே நாம் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வது பற்றியும், ஹார்வார்ட் போன்றதொரு உலகப்புகழ் பெற்றப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனியிருக்கை ஏற்படுத்துவது பற்றியுமெல்லாம் பேசுவது? என்றைக்கும் நன்றி மறக்கக் கூடாது.

    ஹார்வார்டில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவது ஏதோ ஜென்ம சாபல்யம் என்றெல்லாம் நான் பேசவில்லை, நான் வாழும் காலத்தில் , என் மொழிக்குத் தொண்டு செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளில் பெருமையானதாகவும், நேர்மையாக நடைபெறுமென்று எனக்குத் தோன்றும்படியாகவும் உள்ள ஒரு செய்கைக்கு உதவி செய்யவேண்டுமென்பதே நோக்கம். இவ்வமயத்தில் நான் அந்நிய மண்ணிலிருப்பதால் மட்டுமல்ல, தாய்நாட்டில், தமிழகத்திலிருந்தாலும் இந்த முயற்சிக்கு என்னாலான பங்கினைச் செய்திருப்பேன் என்றே எனக்குத் தோன்றுகின்றது. உங்களுக்கும் அப்படித் தோன்றினால் இந்த இணையதளத்திற்குச் சென்று இம்முயற்சி பற்றிய விவரங்களைத் தாங்களே அறிந்து கொள்ளுங்கள். அதன் உண்மைத் தன்மையையும் அவசியம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால், இயன்றால், தங்களால் முடிந்த உதவியையும் செய்யுங்கள். நல்லெண்ணத்தோடு செய்வோம் நன்மையே நடக்குமென்று நம்புவோம்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    Last edited: Oct 31, 2017
    stayblessed and Vani00 like this.
  9. Vani00

    Vani00 Bronze IL'ite

    Messages:
    23
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உங்கள் பதிவு மிகவும் அவசியமான ஒன்று. ஹார்வார்டில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவது தமிழினத்திற்கான மிகப்பெரிய செயல். இந்த முயற்சி வெற்றி பெற என்னால் முடிந்த உதவி செய்து வருகிறேன்.
     
    PavithraS and stayblessed like this.
  10. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Miga arumaiyana padhivu Pavithra. Really happy that the TN government has allotted 10 crores. Tamizh is an identity which has to be preserved. I will donate to my capacity for this wonderful cause. En thamizh nyanam avalavu sirappondrum kidayadhu aanal enakku thamizh mel theera kaadhal undu. Yaamarinda mozhigalile thamizh mozhi Pol indhanadhu engum kaanom.
     
    PavithraS likes this.

Share This Page