1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழில் வடமொழி எழுத்துருக்கள் பயன்பாடு -- A Thread For Linking Purpose

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Aug 25, 2016.

Thread Status:
Not open for further replies.
  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Gauri03 -- You can move the post here and also a request, as this thread itself was created for linking purpose alone , can you please close this thread for further discussions or replies ? Appreciate your help. Thank you !:)
     
    Last edited by a moderator: Aug 26, 2016
    Loading...

  2. Gauri03

    Gauri03 Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    6,211
    Likes Received:
    13,034
    Trophy Points:
    445
    Gender:
    Female
    @PavithraS wrote:

    தமிழ் மொழி தொடர்பான கருத்துக் பரிமாற்றமாயிருப்பதனால், தமிழ் மொழியையே இங்கு பயன்படுத்துதல் முறையாகிறது. தமிழ் மொழி எழுதப், படிக்க வராத ஏனையோர், என் செயலைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் ! நன்றி !

    எனக்கு விளக்கம் சொல்லும் வகையில் மொழியறிவு இல்லை, தோழி ! முயற்சிக்கிறேன் ! அறிவிற் சிறந்தோர் குற்றம் பொறுத்தருள வேண்டுகிறேன் !

    க்ஷ , ஹ போன்ற வடமொழி எழுத்துருக்களை , தமிழிலக்கிய நூல்களான , சிலப்பதிகாரமோ, (இளங்கோவடிகள் இராமனைக் குறிப்பிட்டிருக்கிறார் !) , மணிமேகலையோ (மாதவி சமஸ்க்ரிதம் பேசினாள் என்ற குறிப்பு உண்டு ! ), தேவாரமோ,(இவைப் பெரும்பாலும்
    தமிழகத்து சைவக் கோயில்களின் இறைவன் மீது பாடப்பெற்றவையே !) திருவாசகமோ( அருமையான தமிழ் இலக்கியம் ! ) , பயன்படுத்தியிருக்கின்றனவா என்றால், மேம்போக்காக இல்லையென்றேக் கொள்ளலாம் ! ஆயினும் இதற்கான உறுதியான விடையைக்
    கூறக் கூடியவர்கள் , தமிழ் இலக்கியத்தில் நன்கு கற்றுத் தெரிந்தவர்களே !

    தமிழில் இன்று கிடைக்கும் மிகப்பழைய நூல், இலக்கண நூலாகிய தொல்காப்பியம் ! அதில்,வடமொழி எழுத்துகளைத் தமிழில் பயன் படுத்தும் முறை பற்றிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாம் அறிவது சங்ககாலமோ, சங்கமருவிய காலமோ (சங்கம் என்ற வார்த்தையே தமிழல்ல என்கிறார்கள் !) தமிழில் பிறமொழித் தாக்கம், பயன்பாடு இருந்தே வந்துள்ளது. இதன் விளைவே

    மேல்குறிப்பிட்டிருக்கும் கிரந்த (வடமொழியான சமஸ்க்ரிதம் ) ஒலிக்குறிப்புகளின் தமிழ் எழுத்தாக்கம். ஷ , ஹ , மட்டுமல்லாது , ஸ , ஜ, ஸ்ரீ என்ற எழுத்துக்களும் அவை வடமொழி எழுத்துக்களாகவே கொள்ளப்படும்.தமிழுக்குரியவை ஆகா !
    இவற்றுக்கான எழுத்துருக்கள் தமிழில் எக்காலத்தில் சேர்ந்தது என்ற வினாவிற்கான விடை, மொழி ஆராய்ச்சியாளர்கள் விளக்க வேண்டியதாகும்.

    இந்த எழுத்துருக்கள் பயன்பாட்டிலிருந்தும், அவை தூய தமிழ்ச்சொற்களைக் குறிக்கப் பயன்படுத்துவதாகக் கொள்ள முடியாது. கிரந்த எழுத்துருக்களைக் கொண்ட, வடதிசைச் சொற்களைக் குறிக்கவே இவை தமிழில் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக ஸ்ரீதேவி,
    ஸ்ரீநிவாஸன்
    என்ற பெயர்ச்சொற்களில் வரும் ஸ்ரீ மற்றும் என்ற எழுத்துகள் , வடதிசைச் சொல்லைக் குறிக்கும் பயன்பாடே ! ஜலம் , காமாக்ஷி - இவையும் திசைச்சொல் வகையில் வருகின்ற வடமொழிச் சொற்களே ! வடமொழியினின்று நேரிடையாகப் பயன்படுத்தும்
    போது இந்த எழுத்துருக்களின் தேவை அவசியமாகிறது.

    இதே வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழியாக்கம் செய்தால், இந்த எழுத்துருக்களின் பயன்பாடு தவிர்க்கப்படலாம். அப்படி வந்தவையே - ஸ்ரீதேவி என்ற வார்த்தைக்கு திரு என்ற தமிழ்ச் சொல் , காளஹஸ்தி என்ற சொல்தமிழில் காளத்தி என்று ஆகிறது, மீனாக்ஷி
    என்ற வார்த்தையைப் பிரித்து மீன் விழியாள் என்றெல்லாம் அழகான மொழியாக்கச் சொற்கள் உருவாகின்றன . 'ஜலம்' என்று வடமொழி சொல்வதே, தமிழில் நீரென்று ஆகிறதே ! பின் ஜலம் என்று தான் சொல்ல வேண்டுமா ?

    இந்த எழுத்துருக்கள் பயன்படுத்தப் பட்டிருந்தால் தான் நேரிடையான வடமொழிச் சொல்லென்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சில வடமொழிச் சொற்களில் வரும் எழுத்துருக்கள் இயல்பிலேயே நம் தமிழ் மொழியிலும் வழங்கும் எழுத்துருக்களைக் கொண்டிருக்கும். அவற்றை நாம் இன்றளவும் தயக்கமின்றிப் புழங்கத்தான் செய்கிறோம். எழுத்துரு இருந்தாலும், ஒலிக்குறிப்பில் தான் வேறுபாடு கையாளப் படவேண்டும். அது, பேசப் பேச, எழுத எழுதத் தான் சரியான பயன்பாட்டிற்கு வர இயலும்.

    உதாரணமாக நாராயணன் என்ற பெயர்ச்சொல் சிறப்பெழுத்துருக்கள் எதுவும் தேவைப்படாத , தமிழில் எழுதும் அளவிற்கு உரு கொண்ட வடமொழிச் சொல்லே ஆகும். 'ஹம்ஸ ' என்றால் அன்னப்பறவை , 'த்வனி' என்ற வடமொழிச் சொல்லுக்கு' ஓசை' என்று நேரிடையான
    தமிழ்ச் சொல் உண்டு. ஆயினும் 'அன்னப்பறவையின் ஓசை' என்று கொள்ளாமல், 'ஹம்ஸத்வனி' என்று சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

    இவற்றை இயல்பாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் போன்றே , க்ஷ , ஹ , ஸ , ஜ ,ஸ்ரீ - போன்ற எழுத்துருக்களையும் தமிழ்மொழி அரவணைத்துக் கொண்டுவிட்டது. இக்கருத்திற்கு உடன்படாத தூய தமிழ்வாதிகளும் இருக்கிறார்கள்.

    என் பெயர் (பவித்ரா ) கூட வடமொழிச் சொல்லே ஆகும். அதற்குத் தமிழில் அழகான மொழியாக்கமும் (தூயவள்) உண்டு. ஆனால், பெயர்ச்சொற்களை மொழியாக்கம் செய்தல் தேவையற்றது. திராவிட கட்சித் தலைவர்கள் பலர் தங்கள் பெயர்களை மாற்றம் செய்து
    கொண்டது (கொள்வது ) நினைவு வருகிறது ! அது அவரவர் விருப்பம்.

    தமிழின் அழகே, வடமொழிச் சொற்களுக்குப் பெரும்பான்மையும் தமிழில் மொழியாக்கம் செய்ய இயலும், அவ்வாறு இல்லையாயினும், அப்படியே வடமொழி எழுத்துருக்களைத் தமிழில் ஏற்றுக் கொள்ளவும் முடியும். இது மொழி வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாகும்.

    ஒரு மொழி காலத்துக்கேற்றார் போல் தன்னையும் விரிவுபடுத்திக் கொள்ளவில்லையென்றால் நாளடைவில் மறைந்து படும். அது தமிழுக்கும் பொருந்தும். தொன்று தொட்டிருந்த காலத்தில் வழங்கிய தூய தமிழ் எழுத்து நடையோ (பிராம்மி லிபி ) அல்லது பேச்சு வழக்கோ இன்றைக்கு அப்படியே எங்கும் கையாளப்பட வில்லை . அவ்வாறு செய்தால் இன்றுள்ள தமிழருக்கு என்ன புரியும் ?!

    எனவே இந்த வடமொழி எழுத்துருக்கள் பயன்பாடு குறித்துப் பெரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. இது என் தாழ்மையான கருத்து.


    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    Rajkum846 likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you Gauri , for your patience and co operation through out this entire process ! Appreciate it very much ! I can sleep peacefully tonight ! :blush:

    Requesting the moderator of this forum : @Arunarc , Madam, as you would have noticed that this thread was created for linking purpose alone, could you please close this thread for further converations ? Inconvenience is very much regretted.

    Regards,

    Pavithra
     
    Gauri03 likes this.
  4. Induslady

    Induslady Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    6,361
    Likes Received:
    3,533
    Trophy Points:
    355
    Gender:
    Female
    @PavithraS

    I have closed this thread to keep it for reference purposes only. Thank you for such a detailed explanation in Thamizh.
     
    PavithraS likes this.
Thread Status:
Not open for further replies.

Share This Page