1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

டைரி....

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 26, 2017.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    டைரி....

    upload_2017-3-26_16-18-42.png

    வி
    னோத்தின் மனம் பத்மினியை நினைத்துக்கொண்டே இருந்தது... விளையாட்டுபோல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன்...அவள் லண்டன் சென்று ...வேலை நிமித்தமாக... இவர்கள் மகனும் கனடா சென்று விட்டான் வேலைக்கு. இவன் மட்டும் சென்னையில்... இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன ஓய்வுபெற...

    "கூடவே இருக்கும் பொழுது ஒருவரின் அருமை பெருமை தெரியாது என்று கூறுவது நிஜம்தானா. ? இந்தப் பத்மினியை எப்படியெல்லாம் திட்டுவேன்... கோபிப்பேன்... அவளும் ஒன்றும் வாயை மூடிக்கொண்டு இருக்கமாட்டாள்.... நான் அவளை எப்ப பார்த்தாலும் வாயை மூடு, வாயை மூடு என்று அடக்குவேன்... இப்போ நான் பேசும் பொழுது அவளால் பேசமுடிவதில்லை... அவள் பிரீ ஆகா இருக்கும் சமயத்தில் எனக்கு வேலை... என்னடா இது? வயது எவ்வளவு ஆனால் என்ன? கணவன் மனைவி பேச தடையா என்ன? " மனம் ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் என துடிக்கிறது... கொஞ்சம் வெட்கமாய்தான் இருக்கு... ஆனாலும் என் மனைவிதானே... சரி இன்னிக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் ஸ்கேய்ப்பில் பேசவேண்டும்.... பைத்தியம் பிடித்தால் போல இருக்கு.... அம்மாவும் பையனும் என்னை எங்கேயாவது ரெண்டு வருஷம் போய் வேலை செய்துவிட்டுவா என்பார்கள்... இப்போ அவர்கள் ரெண்டுப் பேரும் என்னைத்தனியா விட்டுட்டுப் போயிருக்கா... உம.... ! " நினைவுகளிருந்து வெளி வர மனதிற்கு விருப்பம் இல்லை...

    போட்டோ ஆல்பம் பார்க்க விரும்பி வினோத் அலமாரியைத் தேடினான்... அங்குதான் அந்த டைரி தென்பட்டது.... சிகப்பு கலர்.. எடுத்தான்... திறந்ததும் அழகான கையெழுத்து பத்மினியுடையது... படிக்கலாமா , ? வேண்டாமா? என் மனைவியுடையது... ஏன் படிக்கக்கூடாது? எடுத்துக் படித்தான்...

    ---------------------------------------------------------------------------------

    தவமா....வரமா..?
    தாமதமான திருமணம் தான் என்னுடையது... என்றாலும் அது இன்பமாய், பண்பாய், இன்றுவரை இளமையது மாறாது நித்தம் , நித்தம் ஒரு புதிய பூ பூப்பது போல் எங்கள் தோட்டம் வளமாய் இருக்கிறது...

    "என்னடா இது வாழ்க்கை..? " " சே... கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்" , "போயும் போயும் உங்களை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள்.." "என்னை உங்க கிட்ட ஒப்படிச்சுட்டு போய்ட்டா இந்த அம்மா ..." என்றெல்லாம் நானும் அவ்வப்பொழுது வசனங்கள் பேசுவது சத்தியமாக உண்டு.... ஆனால்? அது வெறும் வாய் வார்த்தைகளே... அடி மனதில் ஒரு புன்னகையோடு பேசுவதுதான்... இது உண்மை...

    நான் ஒன்றும் நிறத்தில், அழகில் சிறந்தவள் அல்ல... பெரிய படிப்போ அல்லது பெரிய உத்யோகத்திலோ இருப்பவளும் அல்ல... ஒரு முதுநிலை பட்டப்படிப்பு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை... அவ்வளவே... சிறு வயதிலேயே எனக்கு அழகை ரசிக்க மிகவும் பிடிக்கும்... நான் அழகாய் இல்லை என்பதில் எனக்கு இன்று வரை குறைதான்.... அழகை மேன்படுத்த ஆடை முக்கியம் என அறிந்து செயல் படுபவள்.. அது ஒரு குறை இல்லை என்பதை என்னுடையவர் மூலம் தெரிந்து கொண்டாலும் என்னால் அந்த எண்ணத்தை முற்றிலுமாக என் மனதை விட்டு அகற்றமுடியவில்லை...மேலும், நான் குள்ளம்... அதுவும் ஒரு குறை... நிறை என்பது மிகவும் குறைவுதான்..என்னைப் பொறுத்தவரையில்...

    என்னுடையவர், நல்ல உயரம், கம்பீரம், ஆணழகு மிக்கவர்... ஆனால் இன்று வரை ஒரு பொழுதேனும் என்னை ஒரு சொல்லாலும் , செயலாலும் வேதனைப் படுத்தியது இல்லை... அவர் என்னை அழகு என்று தான் கூறுவார்... ( காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு போலே)... நான் என் அழகைப் பற்றி குறை கூறுவதும் அவருக்கு பிடிக்காது...

    ஒரு வருடத்தில் எனது பிரசவ சிக்கல், குறை பிரசவம் ... வேதனைகள் ... எந்த ஒரு நிலையிலும் முகம் சுளிக்காதவர்...

    பின்பு மூன்று ஆண்டுகளில் - தைரொய்ட் மிகவும் முற்றிய நிலையில் ... ஒரு பொழுதேனும் என் மனம் கோணாமல் இருந்து நல்ல விதமாய் எனக்கு துணை நின்றவர்...

    அதற்குப் பிறகு , இதோ 4 வருடங்கள் முன் எனக்கு அறுவை சிகிச்சை செய்தபோதும் எனக்கு ஆறுதலாய் இருந்து என்னை பார்த்தவர்..

    இது எல்லாம் எனக்காக மட்டுமே

    இது ஒரு பக்கம் என்றால்.... உழைப்பிற்கு அஞ்சாதவர்....

    எங்கள் மாமனார் குடும்பத்தை தன 18 வயது முதல் உழைத்து முழு மூச்சில் உயர்த்தியவர்.... ஒரு நொடியேனும் குடும்ப நினைவிலிருந்து பிரியாது தன்னை இணைத்துக்கொண்டு வாழ்பவர்.. பெற்றோரை கடவுளாய் நினைத்து வாழ்ந்து அவர்கள் கடைசி மூச்சுவரை அவர்களைக் காத்தவர்...

    எனது பெற்றோரையும் மதித்து அவர்கள் தேவைகளை நிறைவேற்றியவர்...

    இதோ, இன்று எங்கள் ஒரே மகன் வளர்ந்து அவன் நலனுக்காக பாடுபடுபவர்....

    எந்த ஒரு சோதனையோ, வேதனையோ அவரை உலுக்கியது இல்லை.... என்ன, கொஞ்சம் கோபம் வரும் அது இயற்கையோடு ஒன்றிய பிறவி குணம்...அவ்வளவே...

    அவரை பல சமயங்களில் பார்க்கும் பொழுது எனக்கே பிரம்மிப்பாய் இருக்கும்... எப்படி இவரால் எல்லாவற்றையும் சமாளிக்க முடிகிறது என்று..... ஆனால் ஒரு பொழுதேனும் அவரைப் புகழ்ந்தோ , போற்றியோ பேசியது இல்லை....

    அவர் மனைவியாக நான் இணைந்தது ஒரு வரமா அல்லது தவமா ? தெரியவில்லை....!!! மனமே நீ நிறைவை கண்டு .. போற்று...!!!!

    அவருக்கு நான் எழுதும் மடல் இது..
    ===============================================
    மீண்டும் வேண்டும் பிறவி ஒன்று
    உன் மனைவியாக வருவேன் அன்று
    உனக்கு விருப்பம் இருந்தால்...

    ===============================================
    __________________________________________________

    உடம்பு மெய் சிலிர்த்தது... "எத்தனை அருமையாய் தன எண்ணங்களை எழுதி இருக்கிறாள்.. எப்பப்பார்த்தாலும் என்னை குற்றம் சொல்லும் பத்மினியா? அவள் மனதில் என்மேல் எத்தனை ஆசை? சே... ! எவ்வளவு தடவை அவள் மனம் நோகும்படி பேசியிருக்கிறேன்.... பாவம்... வேண்டும் என்றே வெறுப்பேத்துவேன்.... உடனே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.... " சூடாக ஒரு காபி சாப்பிட்டு விட்டு ஸ்கேய்ப்பில் பத்மினியை எதிர்ப்பார்த்து .... வினோத் ! இதோ வந்துவிட்டாள்... ஏனோ அவளை பார்க்க வெட்கமாய் இருந்தது... நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரத்தில் அவளை பார்க்க சென்றபோது இருந்த அதே கலகலப்பு... சந்தோஷ அலை மனதில்..

    மைதிலி ராம்ஜி
     
    vaidehi71 likes this.
    Loading...

Share This Page