1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

டேவிட்

Discussion in 'Movies' started by charvihema, Feb 5, 2013.

  1. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    :bonkஒரே பெயர், இருவேறு வாழ்க்கை! இப்படிதான் இந்த படத்திற்கு சின்னதாக ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்கள் ரிலீசுக்கு முன்பு. 'ஒரே இலை, இருவேறு கிழிசல்' என்றும் கொடுத்திருக்கலாம்.

    நுனி நாக்கு ஆங்கிலம், காரில் வந்து இறங்குகிற வசதி. நட்சத்திர பார் ஒன்றில் உட்கார வைத்து 'நாட்' சொல்லுகிற அளவுக்கு பைசா பலம். இவை மூன்றுக்கும் தகுதி இருந்தால் போதும். முழுக்கதையையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிற ஹீரோக்களுக்கு 'செய்வியா... செய்வியா...' என்று சட்டையை பிடித்து 'செய்வினை' வைக்கிறார்கள் இவர்கள். அஜீத்திற்கு ஒரு சக்ரி டோலட்டி என்றால், ஜீவா-விக்ரம் இருவருக்கும் ஒரு பிஜாய் நம்பியார். (பேர்லேயே நம்பியார் இருக்காரே, புரிஞ்சுருச்சுப்பா)

    ஜீவாவுக்கும் விக்ரமுக்கும் ஒரே பெயர், டேவிட். இவர் கதை ஒரு பக்கம் ஒடுகிறது. அவர் கதை இன்னொரு பக்கம் ஓடுகிறது. இரண்டு பேரையும் கிளைமாக்சில் சேர்ந்து உட்கார வைத்து ஒரு டயலாக்கை பேச விட்டால் அது எப்படி அய்யா புதுமையாகும்? இதுபோன்ற புதுமைகள் படம் முழுக்க விரவிக் கிடப்பதால் டேவிட், டேய் 'விட்' என்றும் அழைக்கப்படலாம்.

    கிடார் கற்றுக் கொள்வதை தவிர வேறு வேலை ஏதும் பார்க்காதவரான ஜீவாவுக்கு ஒரு அன்பான அப்பா. அவரது முழு நேர தொழில் ஏசுவின் நாமத்தை ஜபிப்பது. அப்படியே ஊரார்க்கும் போதித்து தன் மதத்தின் மீது நம்பிக்கையை விதைப்பது. இவர் மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டுகிற ஒரு இந்துத்வா கும்பல், இவரை போட்டு பேய் மிதி மிதிக்க, உதைத்தவர்களையும், உதைக்க ஏவியவர்களையும் தேடிப்போய்...., -மிதிக்கிறாரா ஜீவா? ம்க்கூம்... மிதிபட்டு அழுகிறார். அப்புறமும் கையில் கத்தியோடு அந்த கூட்டத்தின் தலைவியை போட்டுத்தள்ள எத்தனிக்கும் போது, ஜீவாவின் லட்சியத்தை வேறொருவன் நிறைவேற்றி வைக்க, அங்கேயும் ஹீரோயிசம் புஸ்ஸ்ஸ்... அப்புறம் பாதிரியாராகி அப்பாவின் லட்சியத்தை அடைகாக்கிறார் பிள்ளை.
    இன்னொரு பக்கம் விக்ரம். குவார்ட்டர் கோவிந்தன், பிராந்தி பீர்பால், விஸ்கி விஷ்ணுவாகி சதா நேரமும் குடியிலேயே மிதக்கிறார். நடு நடுவே போதை தெளியும்போதெல்லாம் அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியை கல்யாணம் கட்டிக் கொள்ள ரூட் போடுகிறார். விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை என்கிற அளவுக்கு மண்டை காய்ந்து போகிறது நமக்கு.

    [​IMG]
    படம் துவங்கி சிறிது நேரம் வரைக்கும், என் அக்கா அவன் கூட ஓடிட்டா. உன் பொண்டாட்டி யார் கூட ஓடுவா? தங்கச்சி ஓடிட்டாளா என்று வியத்தகு வசனங்கள் பேசி பெண்ணியத்தை பேய் இனமாக்கி ஊனப்படுத்துகிறார்கள். போதும் போதாமல் ஊனமுற்றவர்களையும் ஏகத்திற்கும் கிண்டலடிக்கிறார்கள்.

    இஷா ஷெர்வானிதான் விக்ரமுக்கு ஜோடியாக போகிறார் என்று நம்ப வைக்கிறார் டைரக்டர். அட யாருக்காவது கட்டி வச்சு படத்தை முடிங்கப்பா என்று அந்த நம்பிக்கையையும் பொறுமையிழக்க வைக்கிறது இழுவை. நல்லவேளை. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு.

    இப்படத்தில் தபுவும் இருக்கிறார். கடைசியில் தபுவை விக்ரம் கட்டிக் கொள்வதற்கு என்ன அர்த்தமோ? அவரது புருஷன் என்றொரு அட்டக்கத்தில், பிள்ளையை தூக்கிக் கொண்டு 'என்னமோ நடந்துட்டு போகட்டும்' என்ற முன்னாலே நடையை கட்டுகிறார். படத்தின் மிக அருமையான திருப்பம் இது. லாராதத்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அழகான அவரை ஒரு ஆன்ட்டியாக பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.

    கண்ணில் ஒற்றிக் கொள்கிற ஒளிப்பதிவை தவிர படத்தில் வேறு எதையும் உருப்படியாக சொல்லவே முடியவில்லை. ரத்னவேலுவுக்கும், பி.எஸ்.வினோத்துக்கும் ஒரு ஸ்பெஷல் வணக்கம். ஏழெட்டு பேர் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அனிருத் இசையில் ஒரு பாடல் மட்டும் மனசை என்னவோ செய்கிறது. பின்னணி இசை? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி...

    [​IMG]
    சூனியம் வைப்பவர்களும், பில்லி ஆவிகளை ஏவி விடுகிறவர்களும் கேரளாவில்தான் அதிகம் உண்டு என்கிறது நிஜ தகவல்கள். அப்படி ஒருவரைதான் ஜீவா-விக்ரமுக்கு அனுப்பி வைத்திருக்கிறது சாத்தான்களின் தேசம்! இனிமேலாவது சுதாரிச்சுக்குங்க கண்ணுங்களா
     
    5 people like this.
  2. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hemalatha
    Inge oruthare irundhugittu enna panreenga? I was searching for you? Vented out your anger? Then come we'll go back to our ' oru nadigayin kadhai' thread.
     
    1 person likes this.
  3. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    hai gayathri
    its not like that ' david no one come to comment here. then singlaa teeea athuren.
     
    1 person likes this.
  4. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Charvi,

    I was just kidding. Don't take it serious. Eppo anga vara poreenga?
     
  5. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    nadigaiyan kathai searching for new episods if i got i post there
     
  6. puni88

    puni88 Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,320
    Likes Received:
    7,223
    Trophy Points:
    545
    Gender:
    Female
    Hi, please refrain from posting in regional language.
     
  7. bhuvnidhi

    bhuvnidhi IL Hall of Fame

    Messages:
    3,273
    Likes Received:
    1,905
    Trophy Points:
    308
    Gender:
    Female
    I always like Jeeva's movies.But mugamoodi and this movie turned out to be utter dissapointment..
     
    1 person likes this.
  8. Dewdrop

    Dewdrop Gold IL'ite

    Messages:
    517
    Likes Received:
    373
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Even the trailer of this movie was terrible ! :rant Most of the scenes were shown in toddy shops ..:cheers
    Vikram looks much younger in this, than he was in Thaandavam - so maybe this movie was taken earlier but releasing only now ?
     

Share This Page