1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுகம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 2, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சாலையோரக் கடையில்
    கண்ணாடிக் குடுவையில்
    சூடான தேநீர் வாங்கி
    பெருவிரல் குடுவையின் மேல் வைத்து
    மற்ற விரல்கள் குடுவையின் கீழ வைத்து
    குடுவையை தாங்கி பிடித்து
    ஊதி ஊதி சூட்டை குறைத்து
    தேநீர் அருந்தும் சுகம்
    அம்மம்மா சுகமோ சுகம்
    சொல்லில் புரியாது சுகம்
    அருந்தினால் தெரியும் சுகம்

    மாலை நேரத்தில் உணவகம் சென்று
    வாழை இலையில் பஜ்ஜி வாங்கி
    தேங்காய் சட்னியில் தோய்த்து தோய்த்து
    சுவைத்த பின் சுக்கு காப்பி அருந்தினால்
    கிடைக்கும் இதம் மிக உன்னதம்

    சுவைத்து பாருங்கள் சுகங்களை பகிருங்கள்
     
    jskls, PavithraS, kooru and 4 others like this.
    Loading...

  2. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    நினைத்து பார்க்க பேரானந்தமாகத்தான் இருக்கிறது .அதுவும் மழை நேர மாலை என்றால் இன்னும் பரமானந்தம் ..
     
    periamma likes this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பெரும் சுகம் தேடும் பாதையிலே
    கிட்டும் இதுபோல் சிறு சுகங்களை
    பெரிதாய் ரசிக்கும் பக்குவமே பெரும் சுகம்

    super mmaa
     
    periamma and jskls like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெரியம்மா, உங்கள் சுகமான வரிகளைப் படித்ததும் எனக்கு மிகவும் பிடித்தமான இந்தப் பாடல் நினைவிற்கு வந்தது. மார்கழிப்பூவே - திரைப்படம் மே மாதம். வரிகள் வைரமுத்து. இசை ஏ.ஆர்.ரஹ்மான் .

    அந்தக் காட்சியில் வரும் கதாநாயகி தன் தந்தையால் மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டப் பெண். அதிலிருந்து வெளியேறும் ஏக்கத்துடன் தன்னுடைய சுதந்திரச் சிறகைக் கற்பனையில் விரித்தபடி ஆசைகளை வெளிப்படுத்தும் அழகான காட்சி.

    "நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
    நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்"

    என்று அந்தப் பாடலில் வரும் வரிகளுக்கு ஏற்றாற்போன்ற அநுபவத்தைக் கொடுத்தது போல் தோன்றியது உங்கள் வரிகள். அந்தக் கதாநாயகி தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொண்ட போது இப்படித்தான் உணர்ந்திருப்பாள், இல்லையா ? :)
     
    periamma and jskls like this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான சுகம். காப்பி அருந்தும் போது அமைதியாக கண்ணை மூடி அதன் ஒவ்வொரு துளியின் சுவையையும் ரசிப்பேன். அப்போது வெளியே கேட்கும் பறவைகளின் சத்தமோ இதம். Simple pleasures of life.
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மிக்க நன்றி .நீங்களும் அந்த சுகம் அனுபவித்தது போல் தெரிகிறதே
     
    Last edited: Aug 3, 2017
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி GG.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா ஆசை அறுமின் என்று நீங்கள் சொன்னீர்கள் .என்னால் இந்த சிறிய ஆசையை கூட விட முடியவில்லை
    இருபது அறுபதாக கவிதை எழுத அறுபது இருபதாக எழுதுகிறது .விந்தையான மனம்
     
    PavithraS and jskls like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி லக்ஷ்மி .காப்பி குடிக்கும் போதும் பறவைகளின் சங்கீதத்தை அனுபவிக்கும் ரசனை மிக அருமை
     
    jskls likes this.
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மனதிற்கேது வயது. இதை ஆசை என்பதை விட அழகான சுகமான ரசனை எனலாம்.
     
    PavithraS likes this.

Share This Page