1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சில விண்மீன்களும் அவள் விழிகளும் .....

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Feb 9, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நடைபாதை அங்காடிகள் அவள் விருப்பம்
    கிண்டல் தெறித்தபடி சுண்டுமவள் பேச்சோடு
    சுண்டலும் சோளமும் சண்டையும் காதலுமாய்
    சனியன்று அலையாடி ஓய்ந்து வருவழியில்
    மணல் பரப்பிக் கடைவிரித்த ஆயாவிடம்
    இனியும் கருப்பதற்கில்லை என்ற சட்டியில்
    கொதிக்கும் வஸ்துவில் பொரித்த ஏதோவொன்று
    சுளித்தாலும் பணமளித்து மகிழும் மடையன் நான்
    சூடு பொறுக்காத முகபாவங்களோடு துள்ளல்
    குவிந்த இதழூதி ஆற்றுமவள் குழந்தைமை
    வெட்கமேயின்றி வழித்துண்ணும் அவள் திருப்தி
    கரங்கோர்த்து தோள்சாய்ந்து பார்க்கும் பார்வையில்
    வேண்டுமாயென்று வினாவுதல் போன்றே மின்னும்
    மேலே சில விண்மீன்களும் அவள் விழிகளும் ....

    Regards,

    Pavithra
     
    knbg, stayblessed, periamma and 2 others like this.
    Loading...

  2. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Beautiful... Romba azhagu ungal tamizh.
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுட்டும் விழிச்சுடர் என்ற பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது .
    காதலியை நல்லா ரசிச்சு எழுதிய கவிதை .பவித்ராவின் தமிழ் சுண்டி இழுக்கும் தமிழ் .நன்று நன்று
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பாரதி பாரதி தான் !
    உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி பெரியம்மா !
    Thank you !
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அற்புதமான கவிதை! அவர்களோடு நடைபாதையில் சென்று அவள் செயல்களை ரசித்தேன் தங்கள் கவிதையில்

    இந்த பாடல் நினைவுக்கு வந்தது :

    விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
    பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
    மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
    மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
    இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
    காதல் இரண்டு எழுத்து
     
    PavithraS likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது தோழி ! மிக்க நன்றி !
     
    jskls likes this.

Share This Page