1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறு கதை

Discussion in 'Stories in Regional Languages' started by Caide, Aug 10, 2016.

  1. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    "ஜகதி எங்க இருக்க?"

    "சொலுங்கள் அன்னையே ஏன் என்னை அழைத்தீர்கள்??" என்றவாரே தன் அன்னையை பின்னிலிருந்து அணைத்தாள் ஜகதி எனும் 25 வயது பெண்.

    அவளின் கையை அகற்றியாவாறே "ஆமா என்னைகாவது தமிழ் ஒழுங்கா பேசவேண்டியது ஏதோ சரியா பேசினியே ரொம்ப சந்தோசம்"

    பின்ன என்ன ஸ்கூல் ஃபுல்லா தமிழ் மீடியம் தான் ஆனா பாவம் ஜகதிக்கும் தமிழ்க்கும் சுத்திப்போட்டாலும் வராதது .ஆனா தமிழ் என்றாள் மேடம்க்கு உயிர். சரி கதைக்கு வருவோம்.

    மீண்டும் அம்மாவை அனைத்தவன்ண்ம் "சரி சரி ஏன் கூப்ட சொல்லு"

    "அப்பாவ கொஞ்சம் வர சொல்லு"

    அவ்வளவு நேரம் அன்னை பின்னால் நின்றவள் அன்னையின் முன்வந்து"ஏன் நீ கூப்டா என்னவான்"

    “நான் தான் அப்பாவ கூப்ட மாட்டேன்னு தெரியியும்ல" என்ற அம்மாவின் முகத்தை பார்த்தவள்.

    "யோவ் எங்க இருக்க உன் பொண்டாட்டி கூப்பட்டுறா பாரு" என்று கூறிக்கொண்டே தன் வேலைக்கு கிளம்பினாள்.

    [பாத்திங்களா மக்களே மரியாதைய என்ன பண்றது.]

    கிட்சனில் நுழைந்த அவளின் தந்தைக்கு 60 வயது. அம்மா அப்பா இருவருமே ஒரே வயது என்றாலும் காதல், மரியாதை, பாசம், அக்கறை எல்லாம் வேறுபாடு இல்லாமல் இருக்கும்.

    [இத்தனைக்கு வீட்டில் பார்த்து செய்துவைத்த கல்யாணம்பா.]

    கிட்சனில் இருந்த மனைவியிடம் சென்றவர்"சொல்லுமா ஏன் கூப்ட "

    கையில் இருந்த கரண்டியை அவரிடம் கொடுத்தவர் "இதை கொஞ்சம் பத்துக்கொங்க இதோ வறேன்"

    சொன்னேன் பாத்திங்களா. ஆனாலும் சும்மா சொல்ல கூடாது ஜகதி அப்பா ரொம்ப நல்லவர். ஆல் ரௌன்டர் சொல்வாங்களே அந்த மாதிரி.இதை செய்யமாட்டேன் சொல்ற ஆள் இல்ல.

    மனைவியை நகை நட்டு எதும் வேணாம் சொல்லி தான் நகை போட்டு திருமணம் செஞ்சவர் வேற எப்படி இருப்பார் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் ஒரு நாளும் இதை சொல்லி காமிக்காதவரும்கூட. இதில் ஜகதி அன்னைக்கும் பெருமை.

    இந்த அருமையான தம்பதிக்கு 3 பிள்ளைகள் கடைக்குட்டிதான் ஜகதி.

    இருவருமே வேலைக்கு செல்பவர்கள் என்றாலும் பெரும்பான நேரம் குழந்தைகள் தந்தையினால் வளர்க்கப்பட்டன. இதனால் பிள்ளைகள் இருவரிடமும் மிகுந்த பசமாய் இருந்தனர்.

    இப்போ கடைக்குட்டி தான் வீட்டில் ராஜியம் நடத்த்துறாங்க. பாங்க் வேலைக்கு போய்க்கொன்டுருக்கும் நம் ஜகதிக்கு வெறி இருக்கே ஹையோ.

    தான் கல்லூரி லோன் தான் தான் அடைப்பேன் அதுவரை கல்யாணம் சாய்த்துக்கொள்ளமாட்டேன் என்று இது நாள் வரை பெற்றோர்கள் தலைவாலியை(அவர்களை பொருத்தவரை) கொடுத்துக்கொன்டுருந்த ஜீவன். என்னடா கொடுத்துக்கொன்டுருந்த'னு சொல்றேன் பார்க்கின்றீங்களா இன்றைக்கு மேடம்மின் கெடு முடிந்தது. லோன் தான் வேற என்ன.

    பின்ன ஜகதி அம்மா எங்க போறாங்க நினைக்கிறிங்க ஜகதிகிட்டதான்.

    "எங்க போற"

    பின்னால் வந்து நின்ற அன்னையை பார்த்தவள்"ஆஃபீஸ்மா டைம் ஆச்சி"

    "சரி சீக்கிரம் வா'மா இன்னைக்கு" என்ற அம்மாவை ஆச்சரியமாக பார்த்தவள், புதிது இல்லை என்பதால் "சரி" என்று ஒத்துகொண்டாள்.

    கிளம்பும்வரை சூம்மா இருந்திருப்பாள் என்று எண்ணாதீர்கள்.

    "அம்மா பாக்ஸ் சீக்கிரம்","அப்பா வண்டி எடு", "அம்மா என் ஷால்மா"

    ஹை ஹை பண்ணி சப்பா...

    "ஜகதி அப்பா இங்க வாங்க"

    "சொல்லும்மா" என்ற கணவரை நாள்காட்டியிடம் அழைத்து சென்றவர்.

    "ஜகத்திக்கு சம்பளம் போட்டாச்சு பாங்க் போய் லோன் கடைசி இல்லை முச்சி receipt வாங்கிட்டு. அப்படியே தரகர்கு சொல்லிடுங்க "

    மனைவியை பெருமையாக பார்த்தவர்"எல்லாம் சரிதான் அவட்டமொதல கேட்போம்".

    "எல்லாம் சரி னுதான் சொல்வாள் அதான் லோந் முடிக்கப்போறோம் பின்ன என்ன" என்று கோபமாக கூறினார்.

    பின்ன பொண்ணு கல்யாணம் இல்லையா.

    "அது இல்லமா அவளுக்கு யாரையாச்சும் புடிச்சிருந்தா??" என்று இழுத்த கணவரை பார்த்தவருக்கு சிரிப்புவந்தாலும் தலையைமட்டும் ஆட்டிவைத்தார்.

    ஆமாங்க இவங்க ரெண்டுபெறுமே இந்த வயசுவரைக்குமே லவ் பண்றாங்க இவங்களா தடையா இருப்பாங்க.

    தந்தை கிளம்பி செல்ல, தாய் ஜகதி அறையை சுத்தம் செய்ய கிளம்பினார்.

    மாலை 5:

    "அம்மா..." அழைத்துக்கொண்டு துள்ளி ஓடிவரும் ஜகதியை பார்த்த நிலைப்படி "வா வா இருக்கு உனக்கு" என்று சிரித்தது.

    "அம்மா காஃபீ, அப்பா எங்க.." சொல்லிகொண்டிருக்கும்போதே அவளின் அருகில் தந்தை அமர அவரின் தோளில் தளைசாய்த்தால் மகள்.

    கொப்பையுடன் வந்த அம்மா"ம்ம் கேளுங்க" என்று சொல்ல.

    என்ன என்பது போல் பார்த்தாள் மகள்.

    "அது ஒன்னு இல்ல மா, எல்லாம் உன் கல்யாணம் விஷயம்தான்..." அவர் மேலே என்ன சொல்ல வந்திருப்பாரோ தெரியாது ஆனா குட்டிய பாருங்களேன்"ம்ம் சரிப்பா பையன் பாருங்க நான் லோன் அப்லை பண்றேன் நிச்சயம், கல்யாணம் எல்லாத்துக்கும் நம்ப ஃப்யாமிலீ என் பக்கத்துல நிக்கணும் அந்த மாறி ஹால் பாரு அப்புறம் இந்த சீர் அது இது'னு அக்காக்கு ரொம்ப பண்ணமாறி ஏதும் செய்யக்கூடாது"

    "சரி மா உனக்கு யார் மேலயும் இஷ்டம் ஏதும்??"

    "சும்மா ஏன் பா நான் நல்ல பிள்ள எங்க 3 பெருக்குமே லவ் செட் ஆகல என்ன பண்றது போ" என்ற மகளை பாசமாய் பார்த்து சிரித்தனர் தம்பதியர் இருவரும்.
     
    sreeram and vaidehi71 like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஜகதி என்பவர் தாங்கள் தானோ .கதை நல்லா இருக்கு மா
     
    Caide and vaidehi71 like this.
  3. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    haha enaku 22 thango aaguthu :O
     
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Nalla interesting aana kathai.
     
    Caide likes this.
  5. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you
     
    sreeram likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கதை நல்லா இருக்கு என்றாலும் எனக்கும் இது உங்களின் கதையோ என்று சந்தேகமாய் இருக்கு ! ....ஹா ...ஹா...ஹா....:thumbsup::clap2::clap2::clap2:
     
    Caide likes this.
  7. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    haha kadha enthu than aana enaku mela sona mari 22 than ma aathu :D
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    okok ! :)
     
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very nice.
     
    krishnaamma likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Usha! :thumbsup:
     

Share This Page