1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்தனை துளிகள்

Discussion in 'Posts in Regional Languages' started by malaswami, Dec 11, 2011.

  1. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

    மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

    உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

    வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

    பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

    ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

    எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

    மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

    கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

    அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

    Nandri... Nandri...
     
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
  3. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மகிழ்ச்சியாக வாழ

    ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.

    எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.

    ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.

    நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள். நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள். நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள். மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
     

Share This Page