1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்தனை சிறகுகள் - 12

Discussion in 'Regional Poetry' started by devivbs, Feb 22, 2012.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சுகமும் - வலியும் (30Jul2009)
    heart-flower.jpg

    சுகமானது - இந்த
    தனிமைக் கூட சுகமானது...
    ஒரு நொடி யுகமானது
    யுகங்களோ நொடியானது...
    ரத்தத்தின் வேகம் கூடியது
    புத்துணர்வு கொண்டேன்...

    ஆயினும்

    ஆள் கடலில் விழுந்த
    துளி ஆனேன்...
    இதயமோ புயலில் கிழிந்த
    வாழை இலையானது...
    விழிகளோ அதிகம் சுரக்கிறது
    உப்புத் தண்ணீரை...
    உயிருடன் சாகிறேன்..

    heart - hanging.jpg

    இந்த காதல் என்ன
    வரமா? சாபமா?

    heart lone gal.jpg

    நினைவில் உறைந்தவனே
    நீயும் இப்படி தானா?
    நம்
    வாழ்வே என்ன கனவிலா?



    அரிய படைப்பு(16Aug2009)
    firebirds.jpg

    என்னவென்று சொல்வது..

    ரவிவர்மா தீட்டா ஒளிர்
    நிலவின் ஓவியமென்பதா..

    மின்னலில் வேகமாய் தெறித்திடும்
    இடி என்பதா..

    வெண்சங்கில் வரைந்த புள்ளிக்
    கோலம் என்பதா..

    மல்லிகையில் தேன் தேடும்
    வண்டு என்பதா..

    முத்தில் அழகாய் பதித்த
    கருமணி என்பதா..

    பனிக் கட்டியில் உரைந்த
    காந்தம் என்பதா..

    வானில் மோகம் கொண்ட
    கரு மேகமென்பதா..

    பிரம்மாவின் அரிய படைப்பு
    உனது கண்களே!




    நம்பிக்கை(19Aug2009)
    growing seed.jpg

    தேடு வாழ்வின் இறுதிவரை
    நன்றாய் தேடு..
    தேடல் ஒன்றே வாழ்வின்
    வெற்றிப் படி!

    கஷ்டங்கள் யாவும் வானில்
    கரையும் மேகமே..
    கஷ்டங்களில் புதைக்க படவில்லை
    விதைக்க படுகிறாய்!

    வாழ்க்கை வாழ்வதற்கே நீ
    துவண்டு போகாதே..
    வீழ்வது தவறல்ல நீ
    நதியாய் பெருக்கெடு!

    எந்த தருணத்திலும் வாழ்வின்
    மகிழ்ச்சியை தொலைக்காதே..
    தருணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
    அனுபவம் தரும்!

    எந்த இருட்டிற்கும் இறுதி
    சூரிய ஒளி..
    இருட்டை கண்டு கலங்காதே
    நீ பக்குவபடுவாய்!

    உன்னுள் சக்தி கோடி
    அதை உணரு..
    சக்தியெல்லாம் ஒன்றுக் கூட்டி
    முளைத்து உயர்ந்திடு!

    உன்னால் முடியாதது உண்டோ
    நம்பிக்கை வையடா
    வென்றிடுவாய்!

    -தேவி @ பூஜாஅருண்.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Devi..
    Kaadhalai patrina kelvi..seriyaanadhe...but kanavu ninaivaaga..muyarchi edungal...:)

    Kannukku ivvalavu..uvamaigalaa..super ponga...rasithen.

    Nambigai dhaane vaazhvin mooladhanam...adhai nanraaga thatti ezhuppi irukeenga...:bow:

    Sriniketan
     
    1 person likes this.
  3. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi Sriniketan..
    sorry 4 d late reply..
    thanx 4 ur comment & thanx 4 sharing ur views..
    kanavu ninaivaagi vittathu.. (i wrote dis 1month after my marriage during separation time due 2 aadi maasam)
    thanx 4 ur compliments..
    -devi.
     
  4. avmgs

    avmgs Junior IL'ite

    Messages:
    61
    Likes Received:
    9
    Trophy Points:
    13
    Gender:
    Female
    wow...really fabulous!!!
    oh,you wrote this during your seperation period.
    it shows your unconditional love towards your dh.
    enjoyed a lot.keep it up!
    especially nambikkai endra kavidhai,enakkum nambikkai aliththadhu.
    nice heart stirring poems.
    you are really talented in reciting poems.
    looking forward for your next poetry.
    thanks for sharing.
     
    1 person likes this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hi avmgs..
    thanx a lot 4 ur compliments..
    its nice 2 hear that 'nambikkai' pathu ungal ullathil nambikkai thulirvittathil..
    i have already posted few of my kirukalgals in
    சிந்தனை சிறகுகள் - 1 , சிந்தனை சிறகுகள் - 2, .................. சிந்தனை சிறகுகள் - 12

    have u read those?
    its my pleasure 2 share.. will post few more soon..
    -devi.
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    NIce to hear that Devi..enjoy..:)

    sriniketan
     
    1 person likes this.

Share This Page