1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சர்ப்பம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Feb 10, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மேனியுள் சுருண்டு மெய்ஞானியுள் விரிந்து காட்டிப்
    பிநாகபாணியின் கண்டம் வருடி பைந்நாகப் பாயுமாயும்
    ஆண்டியின் வடிவமாயும் அண்ணனின் உதரம் மேய்ந்தும்
    பூண்டதோர் பல்லுருவம் பணிகளும் சிறந்தும்- தாழ்ந்தே
    அமிர்தத் துளியுண்டு துண்டுண்டு தன் வாலைத்
    தானே கடிக்கப் பிடிக்கத் துடிக்கும் சர்ப்பத்தின்
    ஆட்டத்தில் சிக்குண்டு சிதறியும் பதறியும் யாம்
    உதறவும் உதவியின்றி உலாவும் பிறவிக் கூடம்
    கற்றதும் பெற்றதும் உற்றதும் மற்றதும் உணர்ந்து
    சற்றுக் குறைகின்ற அறிவை நிறைக்கப் பெற்றால்
    சட்டென வாலினைப் பிடிக்கும் நோக்கம் நீங்கிப்
    பட்டென வட்டம் விடுவிக்கும் பிறவி போக்கும்
    சர்ப்பத்தைத் தெரிந்து கொண்டால் சூட்சமம் புரியும்
    கர்ப்பத்தில் அடைந்து வாடும் சோகமும் சரியும்
    இருப்பினும் வட்டம் விட்டுக் கையிலேயள்ளிக் கொள்ள
    உன்னிடம் கெஞ்சுமிந்த சேய்க்குன் செவி சாயாயோ ?

    Regards,

    Pavithra
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    என்ன கவிதைகள் அனைத்தும் கனமாக இருக்குதே .செவி சாய்க்காமல் எங்கே சென்று விடுவான் .பெற்றவன் பொறுக்கமாட்டான் பிள்ளைகளின் வலியை .
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    wonderful kavithai!Too much of vedantha inside this sarpam!

    Jayasala 42
     
    GoogleGlass and jskls like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பெற்றவளும் பொறுக்க மாட்டாள் பெரியம்மா ! பின்னூட்டத்திற்கு நன்றி !
    Thank you very much for appreciating the same, Madam !
     
    GoogleGlass likes this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    aahaa yenga namma tamizh vaaththiyaar - saar saar onnumae puriyala saar :)

    super pavithra

    thalai thaan ozhungaai irundhaal
    vaal thinnum yennam vaaraathae
     
    periamma, jskls and PavithraS like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    same feeling ;)
     
    PavithraS and GoogleGlass like this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
     
    PavithraS, jskls and GoogleGlass like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @periamma
    நானும் இறைவியைத் தான் குறிப்பிட்டேன் பெரியம்மா ! மேலும் யார் பெற்றதாயினும் ,ஓர் குழந்தையின் துன்பத்தைப் பொறுக்காத யாரும் அதற்குத் தாய் தான். நீங்களும் அதில் சேர்த்தி என்பதை சொல்லவும் வேண்டுமோ ?
     
    kaniths likes this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Ha..Ha.. Ha.. Puriyaamalaa super nu comment pottenga ?! :rolleyes: Thank you GG ! :)
    Lakshmi you too ???!!! :smile::smile:
     
    Last edited: Feb 10, 2017
    jskls likes this.
  10. Mystic98

    Mystic98 New IL'ite

    Messages:
    6
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Male
    வலிமை மிக்க வரிகள். நன்றி.

    என்று சூட்சமம் புரியும்,
    எப்போது சோகமும் சரியும்...

    காத்திருக்கிறேன்.
     
    PavithraS likes this.

Share This Page