1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சமயோஜிதம்........... by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jan 30, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்... இது என்னுடைய அடுத்த கதை................


    வானமே கிழிந்தது போல, வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு.............ராஜாத்தி இன் மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.....ஆச்சு இன்னும் ஒரே வாரம் தான், தீபாவளி வந்துடும், அதற்குள் அப்பாவால் எப்படி 15 பவுன் நகைகளை வாங்க முடியும் என்று அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது............


    இவளுக்கு கல்யாணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது, கல்யாணத்தின் போது போட்ட 15 சவரன் போதாது, இன்னும் 15 வேண்டும் என்று மாமியார் இவளை அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டாள்..............அப்பா இல்லாமல் தன்னை தனியாய் வளர்த்து ஆளாக்கிய தன் அம்மாவை ஓரளவுக்கு மேலே எதிர்த்து பேச இவள் கணவன் ராஜனுக்கு முடியலை.............


    மாமியார் நல்லவள் தான், ஆனாலும் கொஞ்சம் எடுப்பார் கைப் பிள்ளை..............2 மதங்கள் முன் கல்யாணம் ஆகி பக்கத்து வீட்டுக்கு வந்த மருமகள் 25 சவரன் நகை போட்டுக்கொண்டு வந்திருந்தாள், அவள் கணவன் இவள் கணவனை விட குறைவாக படித்திருந்தான் மற்றும் சம்பளமும் குறைவு தான்...........இதைப்பார்த்த இவளின் மாமியார், என் மகன் மட்டும் என்ன குறைச்சலா என்று ஆரம்பித்து விட்டாள்...............


    இவளும் ராஜனும் எவ்வளோ சொல்லிப் பார்த்தும் மாமியார் ராஜி கேட்பதாக இல்லை, வந்தால் 15 பவுனுடன் வா என்று சொல்லி இவளை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டாள்............தீபாவளி சீராக கொண்டு வந்தால் போறும் என்று ரொம்ப தாராளமாய் (?) சொல்லி , நிறைய நேரம் கொடுத்து அனுப்பிவிட்டாள்..............


    இங்கே வந்தால், இவள் கல்யாணத்துக்கு வாங்கின கடனே அப்படியே இருக்கு அப்பாவுக்கு......வட்டி மட்டுமே கட்டி வருகிறார்.....இந்த நிலையில் மீண்டும் 15 பவுன் ............. :affraid: :affraid: :affraid: அதுவும் இன்று தங்கம் விற்கும் விலை இல்?.............என்ன செய்வது என்று யோசித்து யோசித்து குடும்பமே குழம்பியது.............


    எல்லோருமாய் ஒருவழியாக போக வேண்டியது தானா............என்று நினைக்கும்போதே அது கோழைத்தனம், கூடாது என்று மனம் சொன்னாலும் வேறு வழி ஏதும் புலப்படவில்லை அவர்களுக்கு......நாள் நெருங்க நெருங்க மன கஷ்டம் அதிகமானதே தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை...............


    கடவுளை சரணடைவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..........கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருந்தால் கூட வேறு இடம் பார்த்திருக்கலாம்.........இப்போ இப்படி திடீரென்று சொன்னால்?..........இதுவே தொடராது என்று என்ன நிச்சயம்?...............இப்படி பலவாறாக நினைத்து வெதும்பிப் போனாள் ராஜாத்தி................


    அப்பா, அம்மா இவள் என்று மூவரும் கூடிக் கூடி பேசினால் கூட எந்த முடிவும் எட்டப்படவில்லை............ஆளுக்கு ஒரு முலையாக உட்கார்ந்து இருந்தார்கள்..............இப்படியே எத்தனை நேரம் உட்கார்ந்து இருந்தார்களோ தெரியலை .......திடீரென்று கடலே வீட்டுக்குள் வந்தது போல ஒரு பெருத்த சத்தம்.............


    காட்டாறு ......காட்டாறு என்று கேள்விப்பட்டிருந்தாளே தவிர அன்றுவரை பார்த்தது இல்லை.............அன்று பார்த்தாள்...............நிதானிக்கும் முன் மூவரும் தண்ணீரால் தூக்கி எறியப்பட்டனர்..............அலறிப்புடைத்துக்கொண்டு, மேசையை பிடித்துக் கொண்டனர் , நாற்காலியை பிடித்துக் கொண்டனர், சிறிது நேரம் அத்துடன் மிதந்து ஒதுங்கினர்...............


    அந்த இருட்டில் அது எந்த இடம் என்று கூட தெரியலை, காலை வரை யார் எங்கு இருக்கிறார்கள், இருக்கிறார்களா என்று கூட தெரியலை........ராஜாத்திக்கு ரொம்ப அழுகையாக வந்தது............அம்மா அப்பா எங்கே என்று தெரியலை.............தனக்கு எதிர்காலம் உண்டா என்று கூட தெரியலை...............இருளில் தனியே மாட்டிக்கொண்ட தாலும், சாவை கணநேரம் தரிசித்துவிட்டு வந்ததாலும் , சிந்திக்க தோன்றியது , ஏதோ புரிவது போல இருந்தது.................


    பயந்த மனதில், இவ்வளவு நடந்தும் தான் இன்னும் இறக்காமல் இருப்பதால், தனக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது , கண்டிப்பாக அம்மா அப்பாவும் தன்னைப்போல எங்காவது ஒதுங்கி இருப்பார்கள் என்கிற நம்பிக்கை தோன்றியது..................


    கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் தான் நிலைமை புரிய ஆரம்பித்தது, நிறைய பேர் தன்னைப்போல அங்கங்கு தொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது .................அதோ அம்மா, கொஞ்சம் தூரத்தில் அப்பா...................இவள் அவர்களை பார்த்தது போல அவர்களும் இவளை பார்த்து விட்டார்கள்...............நிம்மதி பெருமுச்சு விட்டனர்................


    அனைவரும் மெது மெதுவே மற்றவர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.....வீடு வாசல் என்ன ஆச்சோ தெரியலை...............எல்லோரும் ஒருகல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.................மாற்றுத்துணி சாப்பாடு எல்லாம் மெதுமெதுவே இவர்களை வந்தடைந்தது................


    டிவி காரர்களும் வர ஆரம்பித்தார்கள் மீட்புப் பணி மற்றும் இழப்புகள் குறித்து படமெடுக்க.............ஒவ்வொருவராக காமிரா முன் தங்கள் தங்கள் சோகத்தை சொல்லும்போது இவளுக்கு 'சட' என்று பொறி தட்டியது........தானாகவே முன்வந்து அழுகொண்டே பேச ஆரம்பித்தாள் ............... உடனே காமரா இவள் பக்கம் திரும்பியது...............


    (TRB rating ஏறணுமே டிவி காரங்களுக்கு:)).............இவள் சொன்னாள், " எவ்வளவோ கஷ்டத்தில் எங்க அப்பா, எனக்காக 15 பவுன் நகை சேர்த்து வைத்தார், தீபாவளிக்கு தருவதற்காக.....ஆனால் இப்போ அது எங்கே போயிருக்குமோ தெரியலை, புது துணிகள் கூட எடுத்துவிட்டார்.............அவைகள் எங்கே அடித்துக்கொண்டு போச்சோ தெரியலை............என் மாமியார் கேட்டால் நாங்க என்ன சொல்லப்போரோமோ..................என் வாழ்க்கை இப்படியா போகணும்"...என்று பிலாக்கணம் வைத்தாள்................இது பொய் தான் என்றாலும், யாருக்கும் கெடுதல் செய்யாத பொய் இது...........இவள் அப்படி சொன்னதற்கு பலன் நல்லவிதமாகவே இருந்தது.................


    இவளின் பேட்டி தந்த அதிர்ச்சி இல் இவளின் அப்பா அம்மாவுக்கு ஒன்றுமே புரியலை................பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தனர்........


    அங்கே அவள் மாமியார் வீட்டில் நிலைமை வேறாக இருந்தது, அவர்களால் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஊர் சுற்றிப் பார்க்கப்போன பக்கத்து வீட்டு இளசுகள் இன்னும் வீடு திரும்பலை என்று அவர்கள் வீடே வேறுமாதிரி இருந்தது................


    இதைப்பார்க்க பார்க்க ராஜாத்தி இன் மாமியார் வயற்றில் புளியைக் கரைத்தது............'ஐயோ!..என் மகன் வாழ்வு ஆரம்பிக்கும் முனேவே முடிந்து போகுமோ என்றல்லாம் பயம் அவள் மனத்தைக் கவ்வியது......என்ன ஒரு பைத்தியக்கரத்தனமாய் பக்கத்து வீட்டைப் பார்த்து அவளை அங்கு அனுப்பினேன்'..........என்று தன்னத்தானே நொந்து கொண்டாள் ...........


    எல்லா பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டாள்.............டிவியை பார்த்த வண்ணம் இருந்தாள்............மழை இன் கோரங்களைக் காட்டும் , டிவி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் இவளின் புலம்பலை பார்த்தாள், இயற்கையாக அவளுள் இருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, தான் கஷ்டப்பட்டது நினைவில் வந்து போனது, பாவம் , இந்த மட்டும் மருமகள் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லாமல் இருக்கிறாளே அதுவே போதும் என்று முடிவுக்கு வந்தாள்...............


    சந்தோஷத்தில் , " டேய் ராஜா, ராஜா..............இதோ டிவில ராஜாத்திய பாரு அவங்க நல்லா இருக்காங்க, அவங்க வீடு அடிச்சிட்டு போனதால தான் நம்ப போனுக்கு பதிலே இல்லை.......பாவம், நீ போய் அவங்களை இங்கே பத்திரமாய் கூட்டிட்டு வந்துடு " என்று அன்பாக சொன்னாள் .


    அவங்க அனைவருக்கும் மாப்பிளை வீட்டில் தலை தீபாவளி விமரிசையாக நடந்தது என்று நான் ஸ்பெஷல் ஆக சொல்லவேண்டுமா?.............மழை வெள்ளம் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருந்தால் கூட இது போல வெளியே தெரியாத நல்லதும் பண்ணி இருக்கு தானே? :)


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா மிகவும் நன்றாக இருந்தது கதை. சமயோஜித புத்தி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் வெல்லலாம் என்பதை அழகிய கதை மூலம் சொல்லி .இருக்கிறீர்கள் .. மா இந்த காலத்தில் பெண் கிடைப்பதே கஷ்டமாக உள்ளது ஆனால் வரதட்சிணை சம்பிரதாயம் மட்டும் நம் நாட்டை விட்டு போகவில்லை.
     
    RohiniVenkat, krishnaamma and sreeram like this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா :2thumbsup:. உங்களுக்கு நிகர் நிங்களே மா. எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறீர்கள் மா.
     
    2 people like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    வேற வழி?......இதுபோல white lie கள் நம் வாழ்க்கையை செம்மையே படுத்தும் உமா :)...மிக்க நன்றி ! .........ச்சு.....ஆமாம்........குறைந்து இருக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
     
    2 people like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    மிக்க நன்றி, உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது ப்ரியா :)
     
    2 people like this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    நன்றி மா. ஆமாம் இப்பொழுது கொஞ்சம் குறைந்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை மா
     
    1 person likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Let us hope more improvement in the future :)
     
    2 people like this.
  8. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice story
     
    krishnaamma likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    Thank you so much ! :)
     
  10. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    super story. you have narrated nicely.
     

Share This Page