1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

    இந்த தளத்தில் எனது அடுத்த படைப்பு இந்த சந்தனத் தென்றல்!

    இந்த கதை அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகின்றேன்.
    சந்தனத் தென்றலின் அத்தியாயங்கள் கீழே வரவிருக்கின்றன.
    தவறாமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்!

    இந்த தொடரை நான் லேடிஸ் விங்க்ஸ் என்ற தளத்தில் எழுதி வந்தேன். நம் தோழி பிரியா இங்கும் பதிவிட வேண்டுகோள் விடுத்தார். அவரிடம் கூறிய படி இங்கு பதிவிடுகின்றேன்.

    இந்த கதை வழக்கமான ஒன்றாக இல்லாமல் சற்று மாறுபட்டு அனைவருக்கும் பிடித்த மாதிரி இருக்கும் என நம்புகின்றேன்!
     
    Loading...

  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல்! - ஸ்ரீஜோ

    அத்தியாயம் - 1

    காலைத் தென்றல் பாடி வரும்
    ராகம் புது ராகம்
    பறக்கவே தோன்றும்
    சிறகுகள் வேண்டும்!

    என்று அந்த ஊரின் வெளியே உள்ள ஒரு டீக்கடையில் FM ல் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    அதன் முன்னே போடப்பட்ட பெஞ்சில் இருவர் அமர்ந்து டீ குடித்துக்கொண்டு இருந்தனர்.

    "என்ன அண்ணே, இன்னிக்கு ஊரே வெறிச்சோடி போயி இருக்கு?"

    "அதுவா மாரி, நம்ம சுப்பையா மகளுக்கு நாளனிக்கு கல்யாணமுள்ள. அதேன் எல்லாரும் அங்கன ஏதாவது சோலிய பார்க்க போயிருப்பாக"

    "அங்கேயே டீத்தண்ணி வைச்சுடுவாக, கால பலகாரம் கூட 4 நாளைக்கு அங்கதேன்"

    "நான் மறந்தே போயிட்டன்னே. இல்லாட்டி பால கம்மிய வாங்கிருப்பேன்."

    "விடு மாரி, மாப்பிள்ளை வெளியூர் தான. உறவுக்காரக யாரதும் வந்து போக இருப்பாக. எல்லாம் வித்துபுடும்."

    இந்த பேச்சு ஓடிக்கொண்டு இருக்கையிலேயே, அந்த ஊருக்கு வரும் பஸ் வந்து நின்றது. "தேனூர் இறங்குங்க, தேனூர் இறங்குங்க" என்று நடத்துனர் குரல் கொடுத்தார்.

    அதில் இருந்து 3 இளம்பெண்கள் இறங்கினர்.

    "ஏய் பிரியா, இந்த ஊர் இவ்ளோ தூரம் இருக்கும்னு நான் நினைக்கல"

    "அடி பாவி. பாரு மதி. நேத்து முழுக்க நாமா சொன்னப்ப தெரில. இப்ப கண்டு பிடிச்சுட்டா"

    "விடு ராதி. இவள பத்திதான் தெரியுமே"

    "சரி சரி மொதல்ல அந்த பாரதி வீட்டுக்கு வழி கேளுங்க"

    "அதென்ன கேளுங்க. நீ போய் கேளு"

    "ரெண்டு பேரும் இங்க இருந்து போற வரைக்கும் நான் சொல்றததான் கேட்கணும். ஓகே? இப்படி சண்டை போட்டிங்க நான் போற வரைக்கும் பேச மாட்டேன்."

    "மதி சொன்னா சரி தான். இல்லடி ராதி?"

    ராதி அவளை ஒரு லுக் விட, பிரியா வாயை மூடிக்கொண்டாள்.

    டீக்கடையில் இருந்தவர்களை அணுகி மதி வழிகேட்க ஆரம்பித்தாள்.

    "அண்ணா"

    "என்னம்மா?"

    "இங்க சுப்பையா ங்கறவங்க வீட்டுக்கு எப்படி போகணும்?"

    "நீங்க யாரு?"

    "நாங்க அவர் பொண்ணு பாரதி ப்ரிண்ட்ஸ். சென்னைல இருந்து அவ கல்யாணத்துக்காக வரோம்"

    "அப்படியா, இந்த ஒத்த அடி பாதைல போனா கொஞ்ச தூரத்துல ஒரு கோவில் வரும், அதுக்கு பக்கத்துல இருக்கற பாதை வழியா உள்ள
    போகணும், போற வழில தோப்புல, இல்ல வயல்ல யாராவது வேலை செய்வாங்க. அவங்க கிட்ட கேளுங்க. சொல்வாங்க"

    "சரிங்கண்ணா தேங்க்ஸ்" என்றவள் இருவரையும் அழைக்க, ஆளுக்கு ஒரு டிராவல் பாகை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர்.
    மூவரும் ஒரு வழியாக கோவிலை அடைந்தனர். அங்கிருந்து செல்லும் போது.

    "இந்த பாரதி இவ்ளோ தூரம் நடக்க வைச்சுட்டாளே. அவளுக்கு இருக்கு!"

    "ஏய் பிரி இப்படியே போய் ஏதாவது வாய அங்கையும் விடாத"

    "ட்ரை பண்றேன் ராதி"

    "இப்படி நடக்க நல்லா இருக்கு"

    "மதி, நீ சொல்ல மாட்ட. ஒரு கடை இருக்கா? ஒரு ஆள் தெரியறாங்களா? நீ ஒரு இயற்கை விரும்பி, உனக்கு பிடிக்கலாம். பட் எனக்கு பிடிக்கல"

    "ராதி, சிட்டி லைப் தான் பெஸ்ட் பட் இது தான் அழகு"

    "ரெண்டு பேரும் சும்மா வாங்க. வழி கேட்க ஆள் ரெடி பண்ணனும்"

    "ரெடி பண்ணனுமா?"

    "ஆமா மதி. அப்புறம் எப்படி வீடு கண்டு பிடிக்கறது?"

    "இவ ஒருத்தி. ஆள கண்டு பிடிக்கணும் அப்டிங்கறத ரெடி பண்ணனும் அப்டிங்கரா, நீ அத வேற சீரியஸா கேட்கற!"

    மூவரும் வழியில் யாரேனும் தென்படுகின்றனரா என்று பார்த்துக்கொண்டே நடந்தனர்.

    அங்கு ஒரு கார் எதிரில் வர, பிரியா கை காட்டி நிறுத்தினாள். டிரைவர் வெளியே எட்டி பார்த்து, "என்னம்மா?"

    "இங்க சுப்பையாங்கறவங்க வீட்டுக்கு எப்படி போகணும்?"என்றாள் பிரியா.

    "கொஞ்ச தூரம் போனா வெள்ளாமை வரும், அதுக்கு எதிரில் ஒரு பாதை பிரியும், அது போய் முடியற இடம் தான் அவங்க வீடு"

    "தேங்க்ஸ் அண்ணா" என்றவள் மற்றவர்களிடம் விரைய,

    அந்த கார் நகர்ந்தது. அதில் இருந்த இரண்டு விழிகள் "ஹே வழி கண்டுபிடிச்சுட்டேன்" என்று ஓடிய பிரியாவையும், "இவளே மண்ணை தோண்டி கண்டு பிடிச்சாலாம்" ராதியையும் "சத்தமா சொல்லாத, செய்யறேன்னு போயிட போறா" என்ற மதியையும் ஆராய்ச்சியோடு பார்த்துக் கொண்டே காருடன் நகர்ந்தது.

    மூவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டே அடித்து பிடித்து விளையாடிக் கொண்டே வெள்ளாமையை அடைந்தனர். அதன் எதிரே இருந்த பாதையில் மற்ற இருவரும் நடக்க மதி வயல்கள் அருகில் நின்று செல்பி எடுக்க ஆரம்பித்து இருந்தாள். அவளைக் காணாது அவளைப் பார்த்த பிரியா அவளை பயமுறுத்த "ஏய் பாம்பு பாம்பு" என மதியை பார்த்து கத்தினாள். அவள் கூற்றில் பதறியவள் பதட்டத்தில் வேகமாக வயலில் இருந்து பாதையில் ஏற, பிரியாவின் குரல் கேட்டு வெள்ளாமையில் இருந்து ஓடி வந்த ஒரு நெடியவனும் பிரியாவைப் பார்த்து ஓடிவர, இடையில் வந்த மதி மீது மோத இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுந்த மதி மெதுவாக எழுந்து உட்கார, வந்தவனோ வேகமாக எழுந்து பாம்பை தேடினான்.

    அதை கவனிக்காது வந்த பிரியா, "ஹே சாரி மதி. ரியலி சாரி. உன்ன பயமுறுத்த தான் பொய் சொன்னேன்" என்று கவலையாக சொன்னாள்.

    அதைக்கேட்ட மதி, "உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? பயந்து இந்த பக்கம் விழுந்தேன், அதே வயல்ல விழுந்து வைச்சு இருந்தா?"

    "ஏண்டி கீழே விழுந்தாலும் பரவாயில்லை, அந்த பக்கம் விழ கூடாதா அது ஏன்?"

    "எஸ், ஒரு செகண்ட்ல விழுந்து எழுந்து போய்டுவோம், இந்த செடிலாம் நசுங்கிடும், தென் இதுல இருந்து வர கிரைன்ஸ் வரமா போய்டும், இதனால இத பயிர் பண்றவங்களுக்கு நஷ்டம்"

    "உங்கிட்ட கேட்டதுக்கு என்ன நானே அடிச்சுக்கணும்"

    "ஏங்க பட்டணத்து புள்ளைங்க அப்படிங்கறது சரியாதான் இருக்கு, கொஞ்ச நேரத்துல இப்படி கலாட்டா பண்றீங்க. இங்க இருக்கற வரைக்கும் ஒழுங்கா இருங்க. இல்ல அவ்ளோதான்" என்று அந்த நெடியவன் கத்தி விட்டு சென்றான்.

    இருவரும் பிரியாவை திட்டிக்கொண்டே வர ஒரு வழியாக மூவரும் பாரதியின் வீட்டை அடைந்தனர்.

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    sindmani, Caide and Deepu04 like this.
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல்! - ஸ்ரீஜோ


    அத்தியாயம் - 2


    மூவரும் பாரதி வீட்டை அடைந்தனர்.


    அங்கு குழுமி இருந்த மக்கள் அனைவரும் அவர்களைப் பார்த்த பார்வையில் யார் இவர்கள் என்ற கேள்வி தெரிந்தது.


    பாரதியின் அம்மா அவர்களைப் பார்த்ததும், "ஏல பிள்ளைங்களா? வந்துட்டீயலா?" என்று ஓடி வந்தார்.


    "வாங்க பிள்ளைங்களா." என்று பாரதியின் தந்தையும் வந்து சேர்ந்தார்.


    "வரோம் மா, வரோம் பா" என்று மூவரும் கோரசாக சொன்னார்கள்.


    "என்னம்மா ராதி போன தடவ பார்த்தப்ப இருந்தத விட இளைச்சுட்ட" என்றார் பாரதியின் அம்மா.


    "என்னம்மா பண்றது. வர வர ஹாஸ்டல் சாப்பாடே சரி இல்ல"


    "சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ எங்க பாரதி மாறி!"


    "கடவுளே. ஏன்மா அண்ணா கொஞ்ச நாள் ஜாலியா இருக்கட்டுமே. அதுக்குள்ள இவகிட்ட மாட்ட சொல்லறிங்க" என்று இடையிட்டாள் பிரியா.


    "ஏய். உன்ன வாய வைச்சுகிட்டு சும்மா இருக்க சொன்னேன்" என்றாள் மதி.


    "விடு மா" என்ற சுப்பையா "ஏல பிள்ளைங்கள கூட்டி போய் அங்கன தோட்டத்து வீட்டுல பாரதி கூட விடு. சாப்பிட குடிக்க ஏதாவது தா. பாவம் ரா முழுக்க கண் விழிச்சு வந்துருக்குங்க" என்று மனைவி ராணியிடம் சொன்னார்.


    ராணி அவர்களை தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.



    "ஏய் மதி" என பாரதி ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.


    "என்னமா கல்யாண பொண்ணு? எப்படி இருக்க?"


    "நல்லா இருக்கேன் மதி. நீ எப்படி இருக்க?"


    "ஏய் இங்க நாங்க ரெண்டு பேர் இருக்கோம்" என்று பிரியா கூற,


    "அதானே, என்ன மறந்துட்டியா?" என்றாள் ராதி.


    "ஹே அப்படி இல்ல மா! சரி வாங்க குளிக்க போலாம்"


    "இந்த வீடு சூப்பர் பாரதி"


    "இது எங்க பெரியய்யா வீடு மதி. எங்க வீடு பத்தாதுன்னு அப்பாரு இங்க தங்க கேட்டாக!"



    "என்னடி இங்க வந்ததும் பாஷை மாறிடுச்சு" என பிரியா கிண்டல் அடிக்க,


    "ஏய் இது தான் அவ ஒரிஜினல் பாஷை" என ராதிகா கூறினாள்.


    பின் அனைவரும் அங்கிருந்த குளியல் அறையில் குளித்து, உணவருந்தி குட்டி தூக்கம் போட்டு எழுந்து மதிய உணவு அருந்தி கலகலத்துக் கொண்டு இருந்தனர்.


    அன்று மதியம் மேல் பாரதிக்கு நலங்கு வைத்து வளையல் அடுக்கினர்.



    இவர்கள் மூவரும் வளையல் அடுக்கி முடித்து அங்கிருந்த சிறு சிறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.


    ராணி அவர்களை அழைத்து, "நீங்க சும்மா வேடிக்கை பாருங்க பிள்ளைகளா. இங்கன சிலர் சம்பிரதாயம் பார்ப்பாக. தப்பா எடுத்துக்காதீங்க"


    "சரிங்கம்மா" என்றவர்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் போர் அடிக்க, காலாற நடந்து வர முடிவு செய்தனர்.


    ராணியிடம் சொல்லிவிட்டு, மூவரும் உலவச் சென்றனர். ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தனர்.


    அருகில் ஒரு தென்னந்தோப்பை பார்த்த மதி, "ஹே இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் பா. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது" என்று அந்த தோப்புக்கு அருகில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்தாள்.


    "நீ இங்கயே இரு. நாங்க இந்த பக்கம் ஒரு ரவுண்ட் அடிக்கறோம்." என்றாள் பிரியா.


    "சரி பத்திரம்" என்ற மதி போனை நோண்ட ஆரம்பித்தாள்.


    அங்கு இருந்த ஆட்களிடம் சலசலத்துக் கொண்டே ராதியும், பிரியாவும் அந்த தோப்பில் ரவுண்ட் அடித்துக் கொண்டு இருந்தனர்.


    "என்னங்க. இங்க உட்கார்ந்து இருக்கீங்க. உள்ள போலாம்ல?" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட மதி காலையில் தன் மீது மோதியவனை கண்டு எழுந்தாள்.


    "நான் தாங்க. காலைல மோதிக்கிட்டோமே. என் பேர் சின்னத்துரை"


    மெலிதாக புன்னகைத்தவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.


    "நான் ஒன்னும் கடிச்சு திங்க மாட்டேன். கவலைப் படாதிங்க" என்று அவன் சிரித்தான்.


    "அப்படிலாம் ஒன்னும் இல்லை சார். லேட் ஆச்சு! அதான்" என்றவள் ராதிக்கு அழைத்தாள், "ஏய், வாங்கடி போகலாம்"


    "வரோம் டி" என்ற ராதி "ஹே வா போலாம். பாவம் அவள தனியா விட்டுட்டு வந்துட்டோம்" என்று பிரியாவிடம் கூறினாள்.


    போனை கட் செய்த மதி, "ஓகே சார்." என்று அவனது பதிலுக்கு கூட காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தாள்.


    "ஹலோ. ஒன் மினிட்"


    என்ன என்பது போல திரும்பி பார்த்தாள்.


    "ஒரு இளநீர் குடிக்கலாம் வாங்க. உங்க பிரண்ட்ஸ் வந்துடட்டும்"


    "நோ தேங்க்ஸ்"


    "மெதுவா நடங்க மேடம். என்னால நடக்க முடில"


    "எக்ஸ்கியூஸ் மீ. நீங்க என் கூட வர ஒன்னும் அவசியம் இல்ல"


    "மேடம், ஏன் டென்சன் ஆகறிங்க? நீங்க நடந்து போறது என் தோப்புக்குள்ள. நான் என் தோப்புக்குள்ள நடக்காம வேற எங்க நடப்பேன்?"


    "சாரி." என்றவள் சுற்றிலும் பார்த்தாள்.


    இரண்டு தோப்புகளுக்கு நடுவில் ஒரு பாதை போய் கொண்டு இருந்தது. ராதியும், பிரியாவும் எதிர் தோப்பிற்குள் சென்று இருந்தனர். அவள் அதற்கு எதிரில் இருந்த திட்டில் அமர்ந்து இருந்தாள். எனவே அவர்கள் அங்கு தான் இருப்பார்கள் என முடிவு செய்த அவள் தோப்பை நோக்கி நகர்ந்தாள்.


    அவளை பின் தொடர்ந்த சின்னதுரை எதிர் தோப்பிற்குள் அவள் புக முயற்சி செய்யவதைப் பார்த்து, அவள் முன்னால் நின்று மறித்தான்.


    "ஹே லீவ் மை வே"


    "ஐ டோன்ட் அலவ் யூ டு கோ இன்சைட் திஸ் பிளேஸ்"


    "இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்"


    "நோ. இட்ஸ் ஔவர் எனிமீஸ் பிளேஸ். சோ ஐ வோன்ட் அலவ் யூ."


    "இட்ஸ் யுவர் பிராப்ளம். நாட் மைன்"


    "லிசன். ஐ டின்ட் டால்க் வித் யூ ஆர் டிஸ்டர்ப் யூ. பட் டோன்ட் கோ இன்சைட்"


    என்றவன் வழி விட்டு நகர்ந்தான்.


    மதி வேகமாக அந்த தோப்பிற்குள் நுழைந்தாள்.


    "ஹே. நான் எவ்ளோ சொல்றேன். நீ பாட்டுக்கு போற"


    "நீங்க சொல்றத நான் கேட்கணும் எனக்கு அவசியம் இல்ல. அதும் இல்லாம என்ன நீ, வா, போன்னு ஒருமைல சொல்லற உரிமையும் உனக்கு இல்ல."


    "கண்டிப்பா கேட்டு தான் ஆகனும். உரிமையும் எனக்கு இருக்கு."


    "அது ஒரு நாளும் நடக்காது"


    "நடக்கும்"


    "சே" என்றவள் திரும்பி பார்க்காமல் சென்றாள்.


    இவர்கள் பேசுவதை கேட்ட ராமசாமி அங்கிருந்து நகர்ந்தார்.


    "சே. இவனுக்கு எவ்ளோ திமிர். யார் எங்க போனா இவனுக்கு என்ன? நான் போக கூடாதாம். இதுல உரிமை வேறயாம். ராஸ்கல். பாத்து 10 மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள இவன் அலப்பறை தாங்கல. எல்லாம் இந்த பிரியாவினால் வந்தது." என்று குமுறிக் கொண்டு வந்தவள் அங்கு எதிரில் வந்த பிரியாவை பார்த்ததும் அவன் மீது இருந்த கோபத்தை அவளிடம் காட்ட ஆரம்பித்தாள்.



    "உனக்கு அறிவு இருக்கா? இல்லையா?"


    "ஏண்டி"


    "காலைல நீ பார்த்த வேலைக்கு நான் மாட்டிகிட்டேன்"


    "என்னடி ஆச்சு"


    "நீ பார்த்த வேலையால அந்த ராஸ்கல் என்கிட்ட கலாட்டா பண்ணிட்டு போறான்"


    "எந்த ராஸ்கல்?"


    "காலைல என் மேல மோதினானே அந்த ராஸ்கல்"


    "என்னடி சொல்ற" என்றாள் ராதி.


    நடந்ததை விரிவாகச் சொன்னாள் மதி.


    "அடப்பாவி." என்றாள் ராதி.


    "பார்டா. பார்த்ததும் லவ் போல. கங்கிராட்ஸ் டீ. பட் கல்யாணத்த மட்டும் இங்க வைச்சுடாத" என்று பேசிக் கொண்டு இருந்தவளின் கன்னத்தை மதியின் கரம் பதம் பார்த்தது.


    "மதி" என அவள் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியாக நின்றாள்.


    "மதி. என்னாச்சு உனக்கு. அவன் பண்ணதுக்கு இவள அடிக்கற?"


    "இவ பேசினது சரியா? உன் விளையாட்ட என் விஷயத்தில காட்டத"


    "ஹே அவன விட்டுட்டு இவகிட்ட பாயற?"


    "நாம நிக்கறது அவன் ஊர். அதும் நாம வந்து இருக்கறது சுப்பையா அப்பா வீட்டுக்கு. நம்மால அவங்களுக்கு கஷ்டம் வர கூடாதுனு நான் வந்துட்டேன். அவன் என்ட்ட பேச காரணம் காலைல நடந்த இன்சிடெண்ட். அதுக்கு காரணம் இவ தான"


    "அதுக்கு திட்டு. அவ வேணும்னே பண்ணலைல. ஏன் அடிச்ச?"


    "அவ பண்ணதுக்கு அடிக்கல, கல்யாணம், லவ் அப்டின்னு பேசுனால அதுக்கு அடிச்சேன்"


    "இது சும்மா விளையாட்டு மதி"


    "ராதி ப்ளீஸ். லீவ் இட்." என்றவள் அமைதியாக அங்கேயே மடிந்து அமர்ந்தாள், கைகளில் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.


    அவள் அழுவதைப் பார்த்த ராதி யாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டே இருந்தாள்.


    சில நிமிடங்களுக்குப் பின், மதியை பாரதி அழைக்க, "இங்கதான் இருக்கோம் பாரதி. வந்துட்டோம்" என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.


    "ராதி, நம்மள வர சொல்றாங்க." என்றவள் நடக்க, பிரியாவும், ராதியும் பின் தொடர்ந்தனர்.


    அந்த தோப்பில் இருந்து வெளியேறிய மதி, அங்கு நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.



    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide and Deepu04 like this.
  4. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ


    அத்தியாயம் - 3



    வேகமாக வெளியே வந்த மதி அதிர்ந்து நின்றாள். அங்கு சின்னதுரைக்கும் மற்றொருவனுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. இருவரும் மற்றவரது சட்டையை பிடித்து இருந்தனர்.


    அதைப் பார்த்த மதி வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள். அவளைப் பார்த்த சின்னதுரை மற்றவனது சட்டையை விட்டு விட்டு மதியின் பின்னால் சென்றான்.


    "மதி. ப்ளீஸ் மதி நில்லு. மதி நில்லு" என அவளை மறித்தான்.


    "இங்க பாருங்க என்ன ஒருமைல கூப்பிட வேண்டாம்னு சொல்லிருக்கேன். மறுபடியும் கூப்பிட்டா நடக்கறதே வேற"


    "இங்க பாரு. உன்ன கூப்பிட எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. நீ இங்க இருந்து போறப்ப எனக்கு உரிமையானவளா தான் இருப்ப. அதுவும் ஷாப்பிங் போகவாதான் இருக்கும்." என்றவனது கன்னத்தை அவள் கரம் பதம் பார்த்தது.


    "இன்னொரு தடவ இப்படி உளறின நடக்கறதே வேற" என்றவள் விடு விடு வென பாரதி வீட்டை நோக்கி நடந்தாள்.


    அறை வாங்கிய ஆத்திரத்தில் இருந்தவன் திரும்பி பார்க்க அவன் தோப்பில் இருந்த வேலை ஆட்கள் அவனைப் பார்ப்பது புரிந்தது. அவமானமாக உணர்ந்த சின்னதுரை திரும்ப அங்கு இருந்த மற்றொருவன் அவனைப் பார்த்து ஏளன புன்னகை ஒன்றை சிந்தினான்.ஆத்திரம் தலைக்கு ஏற, அங்கு மதி பின்னால் வந்து சிலையாக நின்ற பிரியாவையும், ராதியையும் பார்த்தவன், அவர்களிடம் சென்றான்.


    "அவகிட்ட சொல்லி வைங்க. நான் சொன்னது தான் நடக்கும். அவ யாரா இருந்தாலும் சரி, யார் பொண்ணா இருந்தாலும் சரி. யார லவ் பண்ணாலும் சரி. எனக்கு கவலை இல்ல. என்ன அடிச்சதுக்கும் சேர்த்து அவளுக்கு இருக்கு." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.


    மற்றவனும் அங்கிருந்து நகர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


    மதி வீட்டை அடைவதற்குள் விஷயம் வீட்டை அடைந்து இருந்தது.


    அவளை பார்த்த ராணி, "மதி" என்றார்.


    அனைவரும் அவளைப் பார்த்து பேசுவதை உணர்ந்த மதி, "மா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் உடனே கிளம்பனும். பஸ் எத்தன மணிக்கு கிடைக்கும்?"


    "மதி!"


    "பாரதி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு அவ அங்க வரப்ப பார்த்துகறேன் மா."


    "பஸ் நைட் 10 மணிக்கு தான் பிள்ள இருக்கும். விடியலில் போலாம் பிள்ள"


    "சரி" என்றவள் உள்ளே சென்றாள்.


    ராணி சுப்பையாவை பார்த்தார், "ஏனுங்க. எனக்கு எப்படி இந்த பிள்ளைய போக சொல்றதுன்னு இருந்துச்சு. அதுவே கிளம்பறேன்னு சொல்லிடுச்சு"


    "விடு பிள்ள. நாம என்ன பண்ண? சின்னதுரைய அடிச்சுட்டு வந்துருக்கு. அவுகள பகைச்சுக்கிட்டு நாம இருக்க முடியுமா பிள்ள?"


    "அதேன் எதுவும் பேசல நான்"


    அவர்கள் இருவரும் சோகமாக அமர, அவர்கள் பேசியதை கேட்ட பிரியாவுக்கும், ராதிக்கும் மதி சொன்னது தெளிவாக புரிந்தது.


    இருவரும் அவளைத் தேடிச் செல்ல,அவள் கிளம்பத் தயாரானாள். மற்ற இருவரும் அவளுடன் கிளம்ப எத்தனிக்க,


    'பாவம் பாரதி. நீங்க இருந்துட்டு வாங்க. நான் கிளம்பறேன்" என்றவள் அறையிலேயே முடங்கினாள்.


    "மதி. சாரி மதி" என்றவாறு பாரதி வந்தாள்.


    "இல்ல பாரதி. நான் தான் சாரி சொல்லணும். விடு. ஹேப்பி மேரிட் லைப்"


    "தேங்க்ஸ் மதி. உன்ன இருக்க சொல்ல கூட என்னால முடில"


    "இட்ஸ் ஓகே பாரதி. நான் நைட் பஸ்க்கு கிளம்பறேன். என்ன கொண்டு விட ஆள் இருப்பங்களா?"


    "நான் அப்பாருகிட்ட சொல்றேன் மதி" என்றவள் வெளியேறினாள்.


    ஒன்பது மணி வாக்கில் அவள் விடை பெற்று கிளம்ப ராணிக்கு அழுகையே வந்தது. அவளுக்கு துணைக்கு ஒருவர் உடன் வந்தார்.


    இருவரும் நடந்து வெள்ளாமையை அடைந்தனர். வளைவில் திரும்ப எதிரில் மூன்று பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் துணைக்கு வந்த ஆள் "சின்னதுரை ஆளுங்க" என்று சொன்னான்.


    "உங்கள ஊருக்கு வெளிய அனுப்ப கூடாதுன்னு எங்களுக்கு உத்தரவு சின்னம்மா"


    "யாருக்கு யார் சின்னம்மா? ஒழுங்கா வழி விடுங்க" என சீறினாள்.


    "அவனுங்க விட மாட்டங்க மதி" என்று அங்கு பாண்ட் பாக்கெட்டில் கை வைத்தபடி வந்து சேர்ந்தான் சின்னதுரை.


    அவனைக் கண்டு உதறல் எடுத்தாலும், "இப்ப வழி விட முடியுமா? முடியாதா?"


    "கண்டிப்பா கிடையாது."


    "சே." என்றவள் அமைதியாக வெள்ளாமை படிக்கட்டில் போய் அமர்ந்தாள்.


    அவனும் அவள் பின்னால் வந்தவன், "வா. நம்ம வீட்டுக்கு போலாம்"


    "அதுக்கு வேற ஆள பாரு"


    "வாய் பேசாம எந்திரி. பாம்பு வந்து போற இடம்"


    "செத்தாலும் பரவாயில்லை"


    "மதி. உன்ன தூக்கிட்டு போக எனக்கு நேரம் ஆகாது"


    மதியின் வயிற்றில் பய உணர்வு எழுந்தது. அமைதியாக எழுந்தவள் பாரதி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


    அவளை பின் தொடர்ந்து வந்தவன், "நீ தங்க தோப்பு வீட்ல ஏற்பாடு பண்ணிட்டேன். இப்ப அங்க போக போறோம்"


    பயம் அதிகரித்தாலும், அதை காட்டிக்கொள்ளாது நடந்தவள் இருட்டில் தடுமாறுவது போல் நடித்தாள்.


    அவன் தொட போக, கரங்களை இழுத்துக் கொண்டு பின்னடைந்தாள்.



    அவனுக்கு வலித்தாலும், "என் பின்னாடியே வா" என்று முன்னால் நடக்க ஆரம்பித்தான்.


    அவனைப் பின் தொடர்ந்தவள், அவன் எதிரியின் தோப்பை அடைந்ததும், பாதையில் இருந்து அதற்குள் ஓட ஆரம்பித்தாள். அவள் ஓடும் சத்தம் கேட்ட சின்னதுரை, அவளைத் துரத்த ஆரம்பித்தான், எந்த தோப்பில் அவளை இறங்க கூடாது என்றானோ, அதில் அவன் இறங்கி ஓடிக்கொண்டு இருந்தான் அவளைப் பின் தொடர்ந்து.


    அரைகுறை நிலவு வெளிச்சம் வீச, அதைக் கொண்டு ஓடியவள், தூரத்தில் ஒரு பாதையை தெரு விளக்கின் ஒளியுடன் கண்டு பிடித்தாள். அதை நோக்கி அவள் ஓடியவாறே மறைவதற்கு இடம் தேடினாள். கையில் இருந்த பையையும் விட முடியாது, இரவு நேர பயணம் என அவள் கைப்பையை அதில் வைத்து இருந்தாள். அதை எடுக்க கூட நேரம் இல்லை. தன் விதியை நொந்து கொண்டு ஓடியவள் வழியில் வந்த காரில் மோதி கீழே விழுந்தாள்.


    விழுந்த வேகத்தில் அருகில் இருந்த கல்லில் அடிபட்டு தலையில் இருந்து ரத்தம் வந்தது. எழுந்தவள் தலையை பிடித்துக்கொண்டே மெதுவாக எழுந்து அமர்ந்தாள், பின் தன் துப்பட்டாவினால் அடிபட்ட இடத்தை அழுத்தி பிடித்தவள் மெதுவாக எழுந்து நின்றாள்.


    ஓடி வந்த களைப்பு, அடிபட்ட மயக்கம் கண்களைச் சுழற்ற மயங்கி சரிய, அவளை இரு கரங்கள் தாங்கி பிடித்தது. அதிலிருந்து விடுபட முயற்சி செய்தவள் கடினப்பட்டு கண்கள் மலர்த்த அங்கு காலையில் சின்னத்துரையுடன் நின்று இருந்தவன் காணக்கிடைத்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் முழுவதுமாக மயங்கிச் சரிந்தாள். இது அனைத்தும் சில நொடிகளில் நடந்து முடிந்தது.


    அவளை தூக்கியவன் காரில் சென்று கிடத்தினான். அவளது பாகை ராமசாமி கொண்டு வந்து காரில் வைத்தார். பின் ராமசாமி மற்றும் டிரைவர் முன்னால் ஏற, அவன் பின்னிருக்கையில் ஏற முயற்சிக்க, சின்னதுரை அவனைத் தடுத்தான்.



    "ஏய், ஒழுங்கா அவள இறக்கி விடு."


    அவன் கையை தட்டி விட்டவன், காரில் ஏறுவதை கடைமையாக கருத,


    சின்னதுரை அவனை அடிக்க முயற்சிக்க, அவன் விலகி, சின்னதுரையின், பின் கழுத்தில் கையை வைத்து அவனை வேகமாக இழுத்துக் கொண்டு வந்து அருகில் இருந்த கம்பத்தில் வேகமாக மோதினான்.


    அதில் காயம்பட்ட சின்னதுரை கீழே விழ, அவன் காரில் ஏறினான், கார் அவனது வீட்டை நோக்கி நகர்ந்தது.


    சின்னதுரை எழ முயற்சி செய்ய அது முடியாமல் கீழே விழுந்தான். அதைப் பார்த்து புன்னகை ஒன்றை சிந்திக்கொண்டே அவன் கண் மூடினான்.


    -- தென்றல் வீசும்.
     
    Caide and Rajijb like this.
  5. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ

    அத்தியாயம் - 4


    இதற்கிடையில், மதிக்கு துணைக்கு வந்தவன் சுப்பையாவிடம் சின்னதுரை மதியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதை தெரிவிக்க விஷயம் கண் மூக்கு காது வைத்து பரவியது.


    மறுநாள் யாருக்கும் காத்திராமல் அழகாக புலர்ந்தது. மதியின் தோழிகள் விஷயம் கேள்விப்பட அதிர்ந்து போயினர். அவளை காண மற்ற இருவரும் புறப்பட அவர்களை ராணி தடுத்தார்.


    "பிள்ளைங்களா, இங்கன ஊர் கட்டுப்பாடு அதிகம். நீங்க அங்கன போன என்ன நடக்கும் ஏது நடக்கும் ஒன்னும் தெரியாது. நேத்து முழுக்க அந்த பிள்ள அங்க இருந்ததால, கண்டிப்பா இன்னிக்கு பஞ்சாயத்து கூட்டுவாக. பேசாம இங்கன கெடங்க. நாளைக்கு இவ கல்யாணம் முடிஞ்சபுறம் பொய் பாருங்க"


    "அம்மா. ஒருவேல அவ உங்க பிள்ளையா இருந்தா இப்டிதான் சொல்வீங்களா?"


    "அப்படி இல்லை பிள்ளைங்களா? உங்களுக்கு இங்கன நடக்கற சட்டம் தெரியாது. பெரியவுக கூடி என்ன முடிவு எடுப்பாங்கன்னு தெரில. மூணு பேரையும் நல்லபடியா அனுப்பி வைக்க முடியாட்டியும் உங்களையாவது அனுப்பி வைக்க வேணும்னு நானும் உங்க அய்யனும் நினைக்கிறோம்."


    "அம்மா. அவள இங்க இப்படி விட்டுட்டு நாங்க போகமாட்டோம். உங்க மக கல்யாணத்துக்கும் எங்களால ஒன்னும் வராது."


    "அப்படி இல்லை பிள்ளைங்களா. பஞ்சாயத்து முடியற வரைக்கும் பேசாம இருங்க. உங்க அய்யன் அங்கன தான் தாக்க கேட்க போறாங்க. அது வரைக்குமாவது கேளுங்க பிள்ளைகளா?"


    "ராதி, அம்மா சொல்றது உண்மைதாம்ல. அங்க போன அவுக கல்யாணம் இல்லை தண்டனை ரெண்டுல ஏதாவது ஒன்னு தருவாக. ஒருவேள தண்டணைனா உங்களுக்கும் இழுத்து விட்டாலும் விடுவாக. கொஞ்சம் பொறுமையா இருங்கல"


    "ஆமா பிள்ளைங்களா. நாம மொதல்ல மதியோட நிலைமை பத்தி தெரிஞ்சுக்கணும். அதுமில்லாம சின்னதுரை குடும்பம் மோசமானதுனாலும் அவுக நல்லவுக. மெத்த படிச்சவுக. அவுக வீட்ல ஐயா, அம்மா ரெண்டு பெரும் நல்லவுக இல்லைனாலும் பையன் ஆச பட்டத உடனே செய்வாக."


    "நீங்க என்னமா சொல்ல வரிங்க?"


    "கோடிக்கணக்கான சொத்துக்கு உன் தோழி சொந்தக்காரி ஆக போறா. அது அவளுக்கு நல்லது தானல"


    "ஆனா அவளுக்கு சம்மதம் இருக்கணுமே?"


    "இருக்கும் பிள்ள. இல்லைனாலும் கல்யாணம் ஆனா சரி ஆய்டும்"


    "என்னமா இப்படி சொல்றிங்க?"


    "இங்க பாரு ராதி, நீ இவ்ளோ பேசறதே தேவை இல்லாதது. நீயும் பிரியாவும் போய் சாப்பிட்டு நமக்கு தாக்க வர வரைக்கும் பொறுமையா இருங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.


    அவர்கள் அங்கு கவலையுடன் திருமண வேளையில் ஈடுபட, மற்றொரு புறம் ஊரே கலவரப்பட்டுக்கொண்டு இருந்தது.


    கீழே மயங்கி கிடந்த சின்னதுரையை அவனைப் பின் தொடர்ந்து வந்த அவன் ஆட்கள் கண்டு அவனை அவன் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர்.


    அங்கு அவனை அப்படி கண்ட அவன் பெற்றோர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர். உடனடியாக மருத்துவரை அழைத்து அவனுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தனர். மயக்கம் தெளிய காத்திருந்தனர் அவன் பெற்றோர்.


    அவன் தந்தை சுரேந்திரன், அவரது ஆட்களை அழைத்து அடுத்த நாள் செய்ய வேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்ய வைத்தார்.


    மதியை ஏற்றிச் சென்ற அந்த கார், அந்த பெரிய வீட்டில் நுழைந்தது. காரை விட்டு கீழே இறங்கிய அவன் அவளை தூக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைய ராமசாமி அவள் பாகை எடுத்துகொண்டு பின் தொடர்ந்தார்.


    எதிரில் தெரிந்த வேலையாளிடம், அவனது அறைக்கு சுடு நீர் எடுத்து வர பணித்தான். அவளை கட்டிலில் கிடத்தி, வேகமாக தனது அறையில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான். பின்னால் வந்த ராமசாமி, "தம்பி, நான் நம்ம டாக்டர்க்கு சொல்லிட்டேன். என்ன வரச் சொன்னார். நான் போயி கூட்டிகிட்டு வந்துறேன்", என்றவர் அவளது பாகை வைத்துவிட்டு மருத்துவரை அழைக்க விரைந்தார்.


    சுடு நீர் வர, அவளது காயத்தினை சுத்தம் செய்தவன், கண்டிப்பாக தையல் போட வேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்தான். பெயருக்கு, சிறிது மருந்து வைத்து, பஞ்சை வைத்து பிளாஸ்டர் ஒன்றை ஓட்டினான். அதனை டாக்டருக்கு செல்லில் தெரிவித்தவன், ரத்தத்தில் நனைந்து இருந்த அவளது ஆடையை பார்த்தான். அவனது சட்டையிலும் கூட நிறைய ரத்தம் ஒட்டி இருந்தது.


    கதவைத் தாளிட்டவன், உடை மாற்றி, அவளது உடையை மாற்ற அவளது பாகை எடுத்தான். அதில் இருந்து ஒரு நைட்டியை எடுத்தவன், அவளிடம் சென்றான்.


    வீட்டில் பெண்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தவன், வேறு வழியின்றி அவள் துப்பட்டாவின் பின்னை கழட்ட ஆரம்பித்தான்.


    ராமசாமியும் டாக்டரும் ஒரு வழியாக வந்து சேர, அவர் மதிக்கு சிகிச்சை அளித்தார். கண்டிப்பாக காய்ச்சல் வரும் என்று அவளுக்கு மருந்துகளும், மாத்திரைகளும் தந்தவர், ஊசி ஒன்று போட்டுவிட்டு, அவனிடம் விரைந்தார்.


    "Mr. பார்த்திபன், சீ இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட். பிளட் கொஞ்சம் போயிருக்கு. 5 டேஸ்ல தையல் பிரிச்சுடலாம். அதுவரைக்கும் தண்ணி பட கூடாது. பீவர் கண்டிப்பா வரும், இந்த மருந்தெல்லாம் தரணும். டோஸ் கொஞ்சம் ஹெவி. சோ நல்லா தூங்குவாங்க. இப்ப பிளட் சாம்பிள் எடுத்துக்கிறேன். hb பார்க்கணும். நான் நாளைக்கு நூன் வரேன். இப் எனி அர்ஜெண்ட் கால் மீ இம்மீடியட்லி, ஐ வில் கம்." என்றவர் விடை பெற்றார்.



    ராமசாமி, "தம்பி நான் கீழே இருக்கறேன். அவசரம்னா கூப்பிடுங்க"


    "சரிங்கண்ணா!"


    வேலையாட்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, ராமசாமியைப் பார்த்ததும் கலைந்தனர்.


    தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாத மதி மாத்திரையின் உதவியால் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.

    -- தென்றல் வீசும்.
     
    Caide, IniyaaSri and Rajijb like this.
  6. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ

    அத்தியாயம் - 5


    தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாத மதி மாத்திரையின் உதவியால் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.



    உறக்கம் கலையத் தொடங்கவும், நேற்றைய நிகழ்வுகள் கனவாக அவள் கண் முன்னே ஓட, அவள் அலறித் துடித்து எழுந்தாள். அங்கிருந்த சோபாவில் படுத்து இருந்த பார்த்திபன் அவள் அலறலில் பதறியடித்து எழுந்தான்.


    வேகமாக அவள் அருகில் செல்ல, அவள் அவனைக் கண்டதும் சிறிது பின்னடைந்தாள்.


    "என்னாச்சு?" என்றான் கோபத்தோடு.


    அவனைப் பார்த்து மருண்டவள், ஏற்கனவே இருந்த பதட்டத்தில் நடுங்க ஆரம்பித்தாள்.


    "என்னாச்சுனு கேட்டேன்"


    "க.. க.. கனவு" என திக்கித் தெணறி கூறினாள்.


    பிளாஸ்கில் இருந்து தண்ணீர் ஊற்றித் தந்தவன், "குடி"


    நடுங்கிக்கொண்டே அவனிடம் இருந்து வாங்கியவள் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.


    அவள் கையில் இருந்த டம்ப்ளரை வாங்கியவன், அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.


    அவளோ, தலையை கைகளில் தாங்கி, அமர்ந்து இருந்தாள். அவள் உடையைப் பார்த்து அதிர்ந்தவள், வீட்டில் உள்ள பெண்கள் யாரேனும் மாற்றி இருக்க கூடும் என்று தன்னை சமாதனப்படுத்திக் கொண்டாள். "இந்த ஊருக்கு வந்தே இருக்க கூடாது. மொதல்ல இங்க இருந்து கிளம்பனும்." என்று முடிவு எடுத்தவள் மெல்ல கட்டிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்தாள்.


    ஒருவழியாக இறங்கி மெல்ல இரண்டு எட்டுகள் வைத்து இருப்பாள், தலை சுற்ற கீழே விழப் போனாள்.


    அவளைத் தாங்கியவன், கட்டிலில் மீண்டும் கிடத்தினான்.


    "ஹெவி டோஸ் டேபிலட்ஸ். சோ இன்னிக்கு புல்லா ரெஸ்ட் எடுக்கணும்"


    அவள் எதுவும் பேசாமல் இருக்க,


    "வா, நான் ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போறேன்."


    "என்ன?"


    "என்ன என்ன?"


    "நா.. நானே போயிப்பேன்"


    "மறுபடியும் கீழ விழவா?



    "லேடீஸ் யாரவது இருந்தா வர சொல்லுங்க ப்ளீஸ்"


    "இப்போதைக்கு இங்க நீ மட்டும் தான்." என்றவன் அவளுக்கு கை கொடுத்தான்.


    அவன் கையை தயக்கத்தோடு பற்றியவள் எழுந்து நிற்க, அவளைச் சுற்றி வளைத்து அவள் தோளில் மற்றொரு கையைவைத்து அழைத்துச் சென்று குளியலறையில் விட்டவன், ஒரு சிறு ஸ்டூல் ஒன்றை அங்கிருந்த கபோர்டில் இருந்து எடுத்து தந்தான். "தண்ணில வழுக்கி விழுந்துடாத. காயத்துல தண்ணி படக்கூடாது" என்றவன், வெளியே செல்ல போக,


    "என் பாக்?"


    "ஒரு நிமிசம்" என்றவன், அவளுடைய பாகை கொண்டு வந்து தந்தான்.



    அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பாகை அவனிடமே தந்தாள்.



    சில நிமிடங்களுக்கு பின் கதவைத் திறந்து வெளியே வந்தவளைப் பார்த்த பார்த்திபன் அவளை மீண்டும் அழைத்து வந்து கட்டிலில் விட்டான்.


    அவளுக்கு காலை உணவும், மாத்திரைகளும் எடுத்து வைத்தவன், தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினான்.


    சாப்பிடலாமா, வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்தி ஊருக்கு போவதற்கு தெம்பு வேண்டுமே என சாப்பிட ஆரம்பித்தாள்.



    அவள் சாப்பிட்டு முடித்து, மாத்திரைகளும் சாப்பிட்டு முடிக்க, பார்த்திபன் வரவும் சரியாக இருந்தது.


    அவளை தட்டிலேயே கை கழுவ சொன்னவன், அவளை படுக்க வைத்துவிட்டு வேலையாளை அழைத்து பாத்திரங்களை எடுத்து போகச் சொன்னான்.



    முதல் நாள் இரவு மயக்கத்தில் வந்த அவள், அவன் சுடு நீர் எடுத்து வரும் போது உடை மாற்றி இருப்பதை பார்த்தவன், இப்போது, பார்த்திபன் அறையில் குளித்து, உடை மாற்றி இருக்கும் அவளை பார்த்தவன் ஒரு மாதிரியாக பார்வையை வீசிவிட்டு சென்றான்.


    அதைப் பார்த்த மதியின் முகம் கருத்தது. இதைப் பார்த்த பார்த்திபன் அந்த வேலையாளை கோபத்தோடு பின் தொடர போக, அதைப் பார்த்த மதி அவனைத் தடுக்க பின் சென்றாள்.


    அங்கு, "ஏல பொம்மா, பட்டனத்து பிள்ளைகளே இப்படிதாம்ல. வந்த ஒரே நாள்ல நம்ம பெரியையாவையே வேல செய்ய வைக்குது பார்த்தியால"


    "அதாம்ல. அதும் இது அந்த சின்னதுரை கிட்டயும் இது எடக்கு பண்ணி இருக்குல"


    "ம். நேத்து வரப்ப போட்ருந்த துணிய கூட நம்ம ஐயா தாம்ல மாத்தி விட்டாரு. துணி முழுக்க ரத்தம்."


    "உனக்கு எப்டில தெரியும்"



    "போறப்ப பார்த்தேனே. நல்ல மயக்கம் வேற. அப்புறம் எப்டில அந்த பிள்ளையே மாத்தி இருக்கும்?"


    "அதும் சரிதேன். நம்ம ஐயாவ பார்த்தியால, கீழ எம்புட்டு ரூமு இருக்கு, அங்க விட்டுபோட்டு அவர் ரூமுக்கு கூட்டிட்டு போய் இருக்கார்."


    "நேத்து நம்ம சின்னதுரைய வேற அடிசுபிட்டராமா?"


    "அது கூட பரவாயில்ல, இந்த பிள்ள முன்ன பின்ன தெரியாத மூணாவது மனுஷன் முன்னால, அதும் அவன் ரூம்ல தனியா இருக்கரோம்னு கூட கவலையில்லாம இருக்குல"


    "பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்ததுல, பத்திருக்கும்"


    "இருக்கும், இருக்கும், வந்து ஒரே நாள்ல நம்ம ஐயாவ சாய்ச்சு புடுச்சே"


    "அட போல. ஒரு ராவு முழுக்க அவரோட இருந்துருக்கு. இன்னிக்கு பஞ்சாயத்து கூடும் போது இருக்கு இந்த பிள்ளைக்கு" என்றவாறே இருவரும் கீழே இறங்கினர்.


    இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த பார்த்திபனின் கண்கள் கோவைப் பழமாக சிவக்க, அவனை தடுக்க வந்த மதி மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளை பார்த்தவன் அவள் அருகே சென்றான்.


    "டோன்ட் கெட் ஸ்ட்ரைன். டோன்ட் டேக் திஸ் டு யுவர் மைண்ட்" என்றவனை முறைத்து பார்த்தாள்.


    அதே நேரம், அவனை கீழே இருந்து ராமசாமி அழைத்தார்.


    அங்கே ஊர் பெரியவர்கள், இருந்தனர்.


    அனைவரும் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் தெரிவிக்க, அனைவருக்கும் அவன் வணக்கம் தெரிவித்தான். அவர்களை அமரச் சொன்னவன் தானும் அமர்ந்தான்.


    "சொல்லுங்க என்ன விஷயம்?"


    "தம்பி உங்க மேல ஒரு பிராது"


    "என்மேலையா?"


    "ஆமாம் தம்பி?"


    "யார் தந்தாங்க?"


    "சின்னையா குடும்பம்"


    "என்ன பிராது?"


    "அவுக மகனுக்கு பார்த்த பொண்ண நேத்து நீங்க அடிச்சு போட்டுட்டு, அந்த பொண்ண கடத்தி வந்து வைச்சு இருக்கீங்க"


    "ஹா ஹா அப்புறம்"


    அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


    "வேற ஏதாவது?"


    "இது உண்மைனா பஞ்சாயத்து தண்டனை கொடுக்கணும்னு சொல்லி தந்து இருக்காங்க"


    "சரி. இப்ப நீங்க என்ன கேட்கணும்?"


    "அந்த பொண்ணு மதி எங்க இருக்கு?"


    "இங்க தான்"


    அனைவரும் இதை எதிர்பார்த்தே வந்திருந்தனர்.


    "நேத்து நீங்க சின்னதுரையை அடிச்சிங்களா?"


    "ஆமாம்"


    "அந்த பொண்ண பார்க்கலாமா?"


    "எதுக்கு?"


    "ஒரு வயசு பொண்ணு தனியா இங்க இருந்து இருக்கு. அதும் பெண் துணை இல்லாத வீடு. நம்ம ஊர் கட்டுப்பாடு உங்களுக்கும் தெரியும்"


    "அவளால வர முடியாது"


    "நாங்க கண்டிப்பா பார்க்கணும்"


    "சரி இருங்க" என்றவன் மேலே சென்று சில நிமிடங்களுக்குப் பின் அவளை அழைத்து வந்தான்.



    அவனை தாங்கலாக கொண்டு அவள் நடந்து வர மற்றவர்கள் அவள் தலையில் இருந்த கட்டை பார்த்தனர்.


    வந்தவள் அனைவரையும் வணங்க அவளை அமர வைத்து அவள் அருகில் அவனும் அமர்ந்தான்.


    "என்ன கேட்கணுமோ கேளுங்க. அவ தூங்கணும். அதும் இல்லாம அவ சாப்பிடற மாத்திரையும் ஹெவி டோஸ்"


    "நீதான் மதியா மா?"


    "ம்"


    "நேத்து ராவுக்கு நீ நம்ம சின்னதுரை கூட வெள்ளாமைக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தியாமா?"


    "ம்"


    "பெரிய தம்பி அப்ப அங்க வந்தாரா?"



    "இல்லை"


    "இல்லையா?"


    "ம்ம்"


    "நேத்து நடந்தத தெளிவா சொல்ல முடியுமா?"


    "நேத்து நான் அவசர வேலையா ஊருக்கு கிளம்பினேன். அப்ப அவர் ஆளுங்க என்ன போக விடாம தடுத்தாங்க. அவர் என்ன கட்டாயபடுத்தி தோப்பு வீட்டுக்கு கூப்பிட்டார். அவர் கிட்ட இருந்து தப்பிச்சு வரப்ப இவர் கார்ல மோதி கீழே விழுந்துட்டேன். எனக்கு அவ்ளோ தான் தெரியும்"


    "நீ சொல்றது உண்மையா?"


    "ம்ம்"


    "சின்னதுரைய நீ அடிச்சியா?"


    "ம்ம்"


    "எதுக்கு?"


    "மரியாதையை இல்லாம பேசினதுக்கு"


    "நீங்க எதுக்கு தம்பி சின்னதுரைய அடிச்சிங்க?



    "இவகிட்ட நடந்துகிட்ட முறைக்கு"


    "இதெல்லாம் சரியாய் இருந்தாலும், நீங்க இந்த பிள்ளைய இங்கன தங்க வைச்சது தப்புங்களே"


    "தப்பே இல்லையே"


    "தம்பி? புரிஞ்சு பேசறிங்களா, இல்லை புரியாம பேசறிங்களா?"


    "நான் தப்பு பண்ணலை. இதோட இந்த பிராது முடிஞ்சது."


    "இல்லைங்களே. இந்த பிள்ள உங்க கூட, உங்க அறைல ரா முழுக்க தங்கினதா சொல்றாங்களே"

    "---"


    "அதுமட்டும் இல்லைங்களே. இந்த பிள்ள உடுப்ப மாத்தினது கூட நீங்கதாணு பேசிக்கிராவுகளே"


    "ஆமா அது உண்மைதான்"


    மதியின் கண்கள் கண்ணீர் சிந்த ஆரம்பித்து இருந்தது.


    "அப்ப தண்டனை உண்டுங்களே"


    "ஹா. ஹா"


    "எல்லாரும் ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கங்க. இந்த வீட்ல முழு உரிமையும் இருக்கற ஒரே ஆள் இவ தான். என் ரூம்ல இல்ல, எந்த ரூம்ல வேணாலும் அவ தங்கலாம். அது அவ இஷ்டம்"


    "அப்டீனா?"


    "இருங்க சொல்லி முடிச்சறேன். நேத்து நான் அவன அடிச்சது, அவன் இவ கிட்ட மரியாதையை இல்லாம நடந்துகிட்டது, அவள ஓட ஓட துரத்தினது இதுக்காக. என் அறைல தங்க வைச்சது அவளுக்கு உரிமையான அறைங்கரதால. அவளுக்கு துணிய மாத்தினது கூட அவ மேல எனக்கு இருக்கற உரிமையால. இதுல எந்த தப்பும் இல்ல."


    "தம்பி, உங்களுக்கு இஷ்டம்னாலும் கல்யாணம் இன்னும் அகலிங்கலெ"


    "யார் சொன்னது? எங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு?"


    அனைவரும் அதிர்ந்து எழ,


    "இது என் மனைவி. திருமதி. சந்தனா மதிவதனி பார்த்திபன்."

    -- தென்றல் வீசும்.
     
    sindmani, Caide, IniyaaSri and 2 others like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாவ் ! நிறைய போட்டிருக்கீங்க ,:clap2::clap2::clap2: படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன் சக்தி :)
     
    Sivasakthigopi likes this.
  8. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks ma!
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Ange naan ithu ellaththiyum padichchitten.rendu kathaikalukkum update seekiram podunga
     
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    31st episode Pottuten!
    Inga next episode evening podaren!
     

Share This Page