1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சதியின் புலம்பல்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 19, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பாறை என நினைத்திருந்தேன் எனையே முன்பு.
    பஞ்சாய் எனை மாற்றி விட்டது உன் பேரன்பு.
    விளக்கியதோர் ஏனமென மனம் இருந்தது முன்பு.
    உனை விலக்க முடியாதா என ஏங்குது இன்று.

    நீர் நனைத்த பஞ்சு எடை கூடுவதைப் போல்
    உன் நினைவு எனை கனக்கச் செய்யுது இன்று.
    நீர் பட்ட திரி எளிதில் எரியாதது போல்
    மிளிராது நான் ஒடுங்கி நின்றேன் இன்று.

    பட்டுத் தான் தெளியும் என்பதைச் சொன்னவரும்,
    பட்டாரோ தெரியலையே? எவர் சொல்லக் கூடும்?
    "எதிலும் பட்டும் படாமலும் இரு!" என்பவரும்
    படும் பாட்டை விளக்கிடவும் எவர் வரக் கூடும்?

    கண் சிவந்து, வாய் வெளுத்து, சுரம் கண்டவள் போல்
    நானும் வதங்கிப் போயிருப்பதையே நீ விழைந்தாயோ?
    உயிர்ப்பின்றி நாளைப் பிடித்துத் தள்ளும் நிலையில்
    நானிருந்து உழலுவதை நீ அறியாயோ?

    கண் செய்த பாவம் என அதை இறுக்கிடவும்,
    அதிலே கண்ணீரும் வாராது வறண்டே போச்சு.
    மனம் செய்ததற்கு நான் என் செய இயலும்?
    அதை நொந்து நொந்தே என்னுயிர் போச்சு!

    கண்ணாடி இரசம் போன பின்னர் அதனை
    தூக்கி எறிதல் இவ்வுலக வழக்கம் தானே?
    என் அண்மை புளிக்கிறதோ? அதனால் என்னை
    எறிந்திடலாம் என நீயும் எண்ணுகிறாய் தானே?
     
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சதியின் புலம்பல்......
    உண்மையில் இன்றும் உண்டோ?
    பதியின் புலம்பல் இல்லையோ?
    சுயமரியாதை பெண்கள் வசம் இப்போது,அளவுக்கு அதிகம்.
    இப்படி புலம்ப கூட நேரம் இல்லை.
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Please do understand that I do not single out a female in this post Deepa. I am more happy about many women in an improved state too. It is never a personal attack. Besides, as a writer, I do either reflect or empathize the central character and not mock or laugh, in particular, with these serious attempts.

    Those who have more self respect are the ones that are most offended and it applies to both sects.
    I will write about a male's worries too, soon.

    Thanks for your feedback. -rgs

    p.s. Right now I can't access tamil transliteration sites from my desk.
     

Share This Page