1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோரக்கரின் ஒரு ஐிவசமாதி

Discussion in 'Posts in Regional Languages' started by Swethasri, May 23, 2013.

  1. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கோரக்கரின் ஒரு ஐிவசமாதி

    சமம்+ஆதி சமாதி எனப்படும்.இந்தியாவில் உள்ளதைப்போல இலங்கையிலும் ஐிவசமாதிகள் பரந்துபட்ட அளவில் இருக்கின்றன்.போகர் கோரக்கர் அகத்தியர் போன்றோர் ஈழத்திலும் சமாதியடைந்துள்ளனர்.அதில் கோரக்கரின் முதல் ஐிவசமாதி ஈழத்தில் திருகோணமலையில் உள்ளது.மெய்யாக பதிணெண் சித்தர்களுக்கும் ஈழத்துக்கும் தொடர்புண்டு .அவைகள் மறைந்தது தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
    சரி விடயத்திற்கு வருவோம் சித்தர்கள் மூச்சை அடக்கி அமைதியாக இருத்தலே மெய்யான சமாதி நிலை எனப்படும்.அதன் மூலமே அவர்களது உடல் அழியாது சமாதியில் பாதுகாப்பாக இருக்கின்றது.சந்தப்பத்தில் இவ்வுடலை பயன்படுத்தியே மானிடர்க்கு சித்தர்கள் காட்சி கொடுக்கின்றனர்.
    உதாரணமாக:-அகத்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஐீவசமாதிகள் காணப்படுகின்றமை.
    புலத்தியர் சமாதியில் இருந்து தேரையருக்கு உபதேசம் செய்ய எழுந்து வந்ததாக சில குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.
     
    1 person likes this.
    Loading...

  2. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஈழத்தில் சித்தர் ஒருவரின் ஐீவசமாதி

    கோப்பாய் கிருஷ்ணர் கோவில்
    இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் கோப்பாய் கிருஷணர் கோவில் என்றால் தான் தெரியும்.கிளிநொச்சி பரந்தன் இலிருந்து வருபவர்கள் ஆனாலும் சரி கிருஷ்ணர் கோவிலடி என்றால் தான் நடத்துனர்களுக்கு விளங்கும்.இதை வடகோவை ஸ்ரீ சக்கரதாழ்வார் ஆலயம் என்றுதான் கூறுவார்கள்.
    இவ்வாலயம் கோப்பாய் பிரதேசத்திலிருந்து இராஜ வீதி சந்திக்குண்மையில் உரும்பிராய் வீதியில் அருள்பாலித்திகழ்கிறது.இவ்விஷ்ணு ஆலயத்தில் ஏனைய ஆலயங்களுடன் ஒப்பிடும் போது வழிபாட்டு முறையில் சிறுமாற்றங்களை காணக்கூடியதாக இருக்கின்றது.
    இங்கு ஆகம முறைகளை விடுத்து மரபுவழியாக வந்த பக்தி மார்க்க புஜை முறை அனுட்டிக்கப்படுகிறது.இங்கு புஜை அபிஷேகம் கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடைபெறுகின்றது.இங்கு தமிழிலே புஜை செய்யப்படுகின்றது.


    குருநாதர் சேவியரின் சமாதி
    இவ்வாலயத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளது.சேவியர் எனும் சித்தர் இவ்வாலயத்தின் குரு ஆவார்.அவர் ஒரு கிருத்துவ மதத்தைச்சேர்ந்தவர்.பாரத நாட்டில் துாத்துக்குடியில் விரிந்தகலை எனும் சிற்றுாரில் இருந்து வந்தார்.இவருக்கு கொழும்பு கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண பகவானின் நேரடி தரிசனம் கிடைத்தது.அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் வந்து கிருஷ்ணர் கோவில் அமைத்தார்.இங்கு 43 முக்கோணமும் நவக்கிரகங்களும் உடைய சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டது.அங்கு புஜை செய்த அவர் நாமத்தால்(கிருஷணர் கோவில் விபுதி) மூலம் அடியார்களின் நோய்களைத்தீர்த்தார்.அவர் 1969ம் ஆண்டு ஆடி 16ம் திகதி புனர்புசத்தன்று சமாதியானார்.இன்று அவரது ழிவந்தவர்கள் புஜை செய்கின்றனர்.அவர் இப்போது மக்களுக்கு தரிசனம் கொடுத்தபடி உள்ளார்.அவரது ஜீவ சமாதியின் முன் வேண்டப்படும் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.அவரது சமாதிக்கு படைக்கப்படும் பிரசாதத்தை உண்பவர்களின் நோய்கள் பிணிகள் தீருகின்றன.அவரின் ஐீவசமாதியின் முன் கொஞ்சநேரம் தியானம் செய்தாலே சமாதியிலிருந்து ஆற்றல் நம் உடலினுள் புகுவதை உணரலாம்.மேலும் புஜை செய்பவர் இறந்தால் அடுத்ததாக புஜை செய்பருக்கு தரிசனம் கொடுத்து பெறுப்பை ஒப்படைத்து விட்டுச்செல்வாராம்.இவரை வழிபடவே அடியார் கூட்டம் இங்கு அலைமோதுகிறது.மேலும் இவ்வாலயத்தில் யாரிடமும் பணம் எதிர்பார்க்கப்படுவதில்லை என்பதும் ஆச்சர்யமான தகவல்
     
    1 person likes this.
  3. malaswami

    malaswami Platinum IL'ite

    Messages:
    1,805
    Likes Received:
    680
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thanks for sharing about Gorakkar siththar...
     
    1 person likes this.
  4. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சித்தர்களிடம் கோரிக்கை வைக்கும் முறை



    வணக்கம் பொதுவாக சித்தர்கள் வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளுக்கு உட்பட்டதல்ல.ஆனால் இவ்வாறும் செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதை பகிர்ந்து கொள்கிறேன்.இது என் பார்வையில் பலனளிக்கின்றது.எனவே இது மற்றவர்க்கும் பலனளிக்கலாம் என்ற அடிப்படையில் தங்களிடம் மேலான குருவின் பாதார விந்தங்களை பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

    முறை1.
    அமைதியான வெளிச்சமுள்ள அறையில் தாங்கள் விரும்பிய சித்தரின் படத்தை வைத்து (ஏற்கனவே வைத்தவர்கள் புதிதாக ஒன்றும் வைத்துவிடாதீர்கள்) அதன் முன் தண்ணீர் வைத்து விளக்கேற்றி ஊதுபத்தி கொளுத்தி வையுங்கள்.பின்னர் தாங்கள் படத்தின் முன் அமர்ந்து குருவை மனதில் வைத்துக்கொண்டு.சித்தர்களை தரிசித்தவர்கள் புருவ மத்தியில் சித்தர்களை நிறுத்தி அவர்களின் மந்திரத்தை எத்தனை முறையேனும் கூறவும்.
    சித்தர்கள் மந்திரங்கள்:-
    உதாரணமாக-அகத்தியர் “ஓம் அகத்தீசாய நம”
    “ஓம் அகத்தியர் திருவடி போற்றி ஓம்”
    “ஓம் அகத்திய சித்த சுவாமியே போற்றி”
    கோரக்கர்:-“ஓம் கோரக்க சித்தரே நம”
    “ஓம் கோரக்கர் திருவடி போற்றி ஓம்”
    “ஓம் கோரக்க சித்த சுவாமியே போற்றி”
    இதே போல விரும்பிய சித்தரின் பெயரை பின்வரும் மந்திரங்களாக ஆக்கி கூறி வரவும்.நாள் தோறும் காலை5.00க்கு முன்பும் இரவு 8.00க்கு பின்பும் சித்தர்களின் படத்தின் முன்பு அமர்ந்து உங்களின் கோரிக்கையை மனமுருக பிரார்த்தித்து கூறி வரவும்.அதாவது மனதுக்குள் எத்தனை முறையேனும்கூறி வரவும்.தங்களின் உத்வேகத்தை பொறுத்து உங்களின் கோரிக்கை குறித்த நேரத்தில் கிடைக்கும்.
     

Share This Page