1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை - by krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருணும் விசாலியும் மனமொத்த தம்பதிகள். கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கலை என்கிற மனவருத்தம் விசாலிக்கு உண்டு. என்றாலும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். பேப்பரிலும், மற்றவர்களும் சொல்வதைக்கேட்டும் விசாலி தாங்களும் கருத்தரிப்பு மையத்துக்கு சென்று, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள்.

    "வாழ்க்கை என்றால் அது குழந்தை மட்டும் இல்லை விசாலி, குழந்தை ஒரு பகுதி தான், நாம் நம் பார்வையை விசாலமாக்கி வைத்துக்கொண்டால் பலதும் தெரியும்...........மேலும், நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யலை , எனவே, நமக்கு எப்போ எது கொடுக்கணும் என்று பெருமாளுக்குத் தெரியும்....... ஸோ, எப்போ வேண்டுமானாலும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.............கவலைப்படாதே"............. நீ சொல்லும் treatement .... அது கொஞ்சம் 'ரிஸ்க்' என்று கணவன் சொன்னதையும், தன் கெஞ்சல் கொஞ்சல் என்று கொஞ்சமாய் அடம் பிடித்து அவனையும் சம்மதிக்க வைத்தாள்.

    ஆச்சு டாக்டரிடம் போய் செக் அப் செய்து கொண்டார்கள், அவர்கள் சொன்னபடி நாட்களை தேர்ந்து எடுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டார்கள். பல மாத போராட்டம், பல லக்ஷம் பண செலவு எல்லாம் ஆனது. அதன் விளைவு இதோ இன்று காலை விசாலி ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். ஏதோ உலகையே வென்றது போல உணர்ந்தாள்.

    வீடே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தது. ஆனால் ஒன்று தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது...குழந்தையை பார்க்க வந்தவர்கள் அனைவரும் ஒன்று போல " என்னடி இது, உங்க யார் ஜாடையுமே இதுக்கு இல்லையே'? என்றார்கள்.

    ஆனால் விசாலி இன் அம்மா , பிறந்ததும் தெரியாது.....கொஞ்ச நாள் போகணும் " என்று சொன்னாள். ஆனாலும் நாள் தான் போச்சே தவிர ஜாடை வரக்காணும்....விசாலிக்கு ரொம்ப பயமாய் இருந்தது...'அவள் விகடனில்' படித்த செய்திகள் நினைவுக்கு வந்தது.

    //''பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது. 'குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை' என்கிற மனநிலைக்கு வருவதுதான்... சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள், அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை 'டி.என்.ஏ' (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.//

    இது நினைவுக்கு வந்ததும், விசாலிக்கு பயம் அதிகமானது, கணவனிடம் சொல்லவும் பயம். ஏற்கனவே இதுல நிறைய 'ரிஸ்க்' இருக்கு என்றான்......அப்போ ஒரு மூடில் 'ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல' என்று அவனை கலாட்டா செய்து சிரித்ததும் நினைவுக்கு வந்தது அவளுக்கு. இப்போ என்ன செய்வது என்று குழம்பினாள்.

    எவ்வளவு நாள் தான் அவனும் இந்த 'ஜாடை' விஷயத்தை கவனிக்காதது போல இருப்பான்?.....அவனிடமும் எல்லோரும் கேட்கிறார்களே?................ ஒருநாள் வேறு ஏதோ பேச்சில் இது வெளியே வந்து விட்டது..........."முளைத்து மூணு இலை விடலை..........அடத்தை பார்............ சொன்னா கேட்பதில்லை உன்னைப்போலவே இருக்கான் உன் பிள்ளை..... என் பிள்ளையானால் கேட்பான்" என்று சொல்லி விட்டான். இது எல்லோர் வீடுகளிலும் நடப்பது தான், பிள்ளை சொல்பேச்சு கேட்டால் என் பிள்ளை என்பதும் கேட்கா விட்டால் உன் பிள்ளை என்பதும்.ஆனால் இங்கு ஏற்கனவே கொஞ்சம் குழப்பம் இருந்ததால், சாதாரண பேச்சு அசாதாரணமாகவும், அர்த்தம், அனத்தமாகவும் ஆனது............... விளைவு?............ விபரீதம் ஆனது.

    இருவரும் குழந்தையின் DNA செக் செய்ய போனார்கள்....................ரிசல்ட் ......அருணுடையது போல இல்லை ......அவ்வளவுதான்.....வானுக்கும் பூமிக்கும் குதித்தான் அருண்............டாக்டரிடம் கேட்டால், நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள்.

    அவள் மேல் கேஸ் போடுவது என்று முடிவு செய்தார்கள்....அந்த டாக்டர் அதற்கு பயப்படவே இல்லை, போடுங்கள் என்றுசொல்லி விட்டாள். .......ஆனால் குழந்தை?????????????இதை என்ன செய்வது?...........விசாலியால் குழந்தையை விடவும் முடியவில்லை, கணவனையும் விட முடியலை.....இருதலை கொள்ளி எறும்பு போல ஆனாள்............வீட்டில் நிதமும் எப்படி இருப்பது?...கணவன் தன்னை வெளியே அனுப்பிவிடுவானா? .............அல்லது குழந்தையை எங்காவது சேர்த்து விடுவானா?...தெரியலை...............

    குழம்பித் தவித்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு மணி சத்தம் இடைவிடாமல் ஒலித்தது............தொடர்ந்து தன்னை அன்புடன் கூப்பிடும் அருண் குரலும் கேட்டது.............இவ்வளவு அன்பாய் இவர் கூப்பிட்டு எத்தனை நாளாகிவிட்டது என்று நினைத்தவாறே கண்விழித்தால் விசாலி.

    "என்னம்மா, ரொம்ப துக்கமா? இன்று டாக்டர் வீட்டுக்கு போக வேணாமா?...................மறந்துட்டியா?...கிளம்பணுமே, எழுந்திரு சீக்கிரம்".............என்றான் அருண்...........

    இவளுக்கு தூக்கி வாரி போட்டது.......எதுக்கு டாக்டர் என்று, சுற்றும் முற்றும் பார்த்தாள்......'குழந்தை' என்றாள்........." ஆமாம், அதுக்குத்தானே apointment வாங்கி இருக்கோம்".என்றான் அருண்.

    சுயநினைவுக்கு வர 2 நிமிடம் பிடித்தது விசாலிக்கு.......'கடவுளே! அத்தனையும் கனவா?.............அப்படிஎன்றால்'..........இன்னும் நாம் டாக்டரிடமே போகலையா? என்றாள் கணவனிடம்.

    அவன் கேட்டான்" என்ன ஆச்சு உனக்கு" ?...........என்று.

    அவள் பெருமுச்சு விட்டவாறே, " வேண்டாங்க, நமக்கு எப்போ எது தரணும் என்று அந்த பெருமாளுக்கு தெரியும், வலுவில் போய் நாமே எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான் வரும் என்று புரிந்து கொண்டேன்" என்று சொல்லி தன் கனவை சொன்னாள்.

    "இவ்வளவு அன்பான கணவனையும் குடும்பத்தையும் ஒரு குழந்தைக்காக இழக்க மாட்டேன்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என்றுசொல்லலை, இப்படி ஆகிவிட்டால்?..நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது ".என்று சொன்னாள், அருண் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

    படுக்கை இல் அவள் இரவு படித்த அவள் விகடன் இருந்தது [​IMG]

    கிருஷ்ணாம்மா [​IMG]

    பி.கு.: டாக்டர் இப்படி சொன்னது நிஜம்....எங்களின் friend வீட்டில் நடந்திருக்கு இப்படி [​IMG] "நீங்க அம்மா தானே அந்த குழந்தைக்கு அது போராதா.....இப்படி எப்போதாவது தவறு நடக்கும் தான் என்று சொல்லி விட்டாள். "
     
    Caide, pinky21, jskls and 2 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முற்றிலும் உண்மை.ஆனால் மருத்துவ சேவையில் உள்ளவர்கள் உண்மையை சொல்ல வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் தன பெண்ணாக நினைக்க வேண்டும்
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆனால் இன்றைய தினத்தில் யார் அப்படி செய்கிறார்கள்???....கல்வியும் மருத்துவமும் நாட்டின் இருகண்கள் .....அது இரண்டுமே நம் நாட்டை பொருத்தவரை குருடாகிவிட்டதே :(
     
  4. Sabitha

    Sabitha Gold IL'ite

    Messages:
    904
    Likes Received:
    454
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear Krishnamma,

    Nijathai kathai moolamaga unnarthiyuileergal. kathai illai illai unmai (unmaiyaga nadanthu kondiyirukkum nijam) migavum nandraga ullathu.

    nandri.

    Sabitha
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிஜத்தை தான் கதையாக எழுதி இருக்கேன் சபிதா :)...............உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிறைய பேர் படித்து இருக்கீங்க, ஆனால் எதுவுமே கமெண்ட் போடலையே என்று எனக்கு வருத்தமாய் இருக்கு......பிடித்திருக்கு இல்லை என்று ஒரு வரி எழுதலாம் தானே ?.............பின்னூட்டம் ப்ளீஸ் :)


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Oru maruthuva unmaiyai vaiththu azhagaaga kathai amaiththu viteergal... Migavum nandraaga irukirathu
     
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ungal kathai migavum pramadam anal unmai sambavam endru ninaikumbothu sangadamaga erukiradhu.

    Maruthuvargalai kadavuluku nigaraga ninaikirom anal avargalo bakthargalin (patients) kanikai (fees) than perithu indru enugirargal.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !:thankyou2:
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    இந்தக்கதை, உண்மை சம்பவம் இல்லை ஆனால் மருத்துவர்கள் இப்படிச் செய்கிறார்கள் ப்ரியா; அது நிஜம் :) .........
    .
    .
    .
    நிஜம் நீங்கள் சொல்வது போல மருத்துவர்கள் தாங்கள் பணி மேற்கொள்ளும்போது எடுத்துக்கொள்ளும் உறுதி மொழியை மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது......இன்று பெரும்பாலான மருத்துவமனைகள் பணத்துகாவே கட்டப்படுகின்றன :(

    .
    .
    .
    உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ! :)
     
    1 person likes this.

Share This Page