1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"குழந்தைகளின் ஐ.யூ.வை வளர்ப்பது எப்படி?" - from

Discussion in 'Posts in Regional Languages' started by Renukamanian, Nov 17, 2011.

  1. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    குழந்தைகளின் ஐக்யூவை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப ஆக்டிவிட்டிஸ் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐக்யூவை கணித்துச் சொல்வார்கள்.

    இப்போது பெற்றோர்ஆசிரியர் மத்தியில் அதிகமாக அடிபடுகின்ற வார்த்தை ஐ க்யூ என்பதுதான்! இந்த ஐ க்யூவுக்கும் குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு? இதோ விளக்குகிறார்கள் நிபுணர்கள்...

    டாக்டர் பா. செல்வராஜ், கோவை அரசு கலைக்கல்லூரியின் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியர். மன நல ஆலோசகராகவும் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து பல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். அவரிடம் பேசியபோது குழந்தைகளின் ஐ க்யூ லெவலை தெரிந்து கொள்வதன் அவசியம் பற்றிப் பேசினார்.

    ‘‘9 வயதுச் சிறுவன் அவன்... சுத்தமாக படிப்பதே இல்லை. சிறுவனின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளதாக அவன் பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து புகார் வரும். அந்தச் சிறுவன் மிகவும் ஒல்லியாக முழங்கைகள் சற்று வளைந்து சற்றே மன வளர்ச்சி குன்றியது
    போல் தோற்றத்தைக் கொண்டிருந்தான்.

    அந்த சிறுவனை அவன் தந்தை என்னிடம் அழைத்து வந்த போது அவனிடம் இருக்கும் குறையை கண்டறிவதற்காக சிறுவனுக்கு ஐ க்யூ டெஸ்ட் செய்து பார்த்தேன். சோதித்துப் பார்த்தபோது அந்தச் சிறுவனுக்கு சராசரிக்கும் குறைவான ஐக்யூ மட்டுமே இருப்பது புரிந்தது.

    ஐக்யூ குறைவாக - மன வளர்ச்சி குறைவாக இருப்பவர்களை பல தடவை சொல்லிக்கொடுத்து மேம்படுத்தும் வகையினர், பயிற்சியளித்து மேம்படுத்தும் வகையினர், ஒரு வகையிலும் மேம்படுத்த முடியாதவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    இந்தச் சிறுவன் இரண்டாவது வகை... அதாவது பயிற்சி அளித்து மேம்படுத்தும் அளவுக்கு ஐக்யூ கொண்டிருந்தான். அவனிடம் ‘உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?’ என்பது போன்ற எளிய கேள்விகளை கேட்ட போதுகூட அவனால் சரியான முறையில் பதில் கூற முடியவில்லை.

    குறிப்பாக பேசும்போது வேறு விஷயங்களில் கவனம் கொண்டு துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டேயிருந்தான். பள்ளியிலும் குறைந்தாற்போல பத்து நிமிடம்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. பிற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான். எப்போதும் அமைதியில்லாமல் துறுதுறுவென இருக்கிறான் என்று அவன் தந்தை கூறினார். இவையெல்லாமே மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான்.

    சிறுவனின் இதுபோன்ற ஐக்யூ குறைவுக்கும் மனவளர்ச்சியின்மைக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.

    கருவில் குழந்தையாக இருந்தபோது அவன் தாய் கருக்கலைப்புக்காக உட்கொண்ட மருந்து (அப்படி உட்கொண்டதாக அவன் தாய் கூறினார்) குழந்தையின் மூளையில் உள்ள செல்களைக் கொன்று அதன் மூலம் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த சிறுவன் பிறக்கும் போது அவன் தந்தைக்கு ஏறக்குறைய நாற்பது வயது. வயதான தாய்க்கு மட்டுமல்ல... வயதான தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மன வளர்ச்சி குன்றிப்போக அரிதான வாய்ப்பு உள்ளது. அல்லது அவர்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு தலைமுறையில் மனவளர்ச்சி குன்றியவர் இருந்திருக்கலாம். பல தலைமுறைக்குப் பிறகு இவர்கள் குழந்தை விஷயத்தில் மரபணு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் எது உண்மையான காரணம் என்பதை உறுதியாக கூறுவது இயலாது. எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

    குழந்தைகளின் ஐக்யூ பிறப்பிலேயே குறைவாக இருந்தால் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொடுத்தோ அல்லது பயிற்சி கொடுத்தோ மேம்படுத்த வேண்டியவர்கள். இதில் அவர்கள் எந்தவகையில் வருகிறார்கள் என கண்டறிந்து அதற்குப் பொருத்தமான கல்வியும் பயிற்சியும் அளிக்க வேண் டும். இந்தச் சிறுவனை மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது நல்ல பலனை அளிக்கும். சாதாரண பள்ளியிலும் படிக்க வைக்கலாம். ஆனால், ஆசிரியர்கள் இந்த சிறுவனின் மனவளர்ச்சி குறைப்பாட்டை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி அவனுக்கு சொல்லித்தர வேண்டும்.

    நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல குடும்பச் சூழ்நிலையில் வளர்த்தால் இந்த சிறுவனை மற்ற சாதாரண குழந்தைகளைப்போல் வளர்த்து ஆளாக்கி விடலாம் என்று சொல்லி சில மன வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப் பள்ளிகளின் அட்ரஸ்களையும் கொடுத்து அந்த சிறுவனையும் அவன் தந்தையையும் அனுப்பி வைத்தேன்’’ என்கிறார் டாக்டர் பா. செல்வராஜ்.

    சரி... ‘ஐக்யூ’ என்றால் என்ன? பிரபல மனநலமருத்துவர் ரங்கராஜனிடம் கேட்டோம்...

    ‘‘ஐக்யூ...இதை நுண்ணறிவு என்று சொல்லலாம். அதாவது தன்னைச் சுற்றி உள்ள விஷயங்களை எவ்வளவு அறிவுக்கூர்மையுடன் எதிர்கொள்கிறார் என்பதே இது. ஒரு வரின் ஐக்யூ லெவலை அவரின் உடல் ரீதியான வயதையும் மூளை ரீதியான வயதையும் விகிதம் போட்டு தெரிந்து கொள்ளலாம்....

    iq (intelligence quotient) = (Mental Age / Chronological Age) x 100.

    மூளை ரீதியான வயது X 100
    உடல் ரீதியான வயது

    குழந்தைக்கு மூளை ரீதியான வயது 9 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் உடல் ரீதியான வயது பத்து எனும் போது, அதை நூறால் பெருக்கினால் 90 வருகிறது. (9/10X100=90)

    குழந்தையின் ஐக்யூ லெவல் 90. இது சராசரியான ஐக்யூ. 90லிருந்து 100 வரை ஓகே.

    இண்டெலெக்சுவல் அல்லது அபார அறிவுத் திறன் கொண்டவர்களின் ஐக்யூ 125க்கும் மேலாக இருக்கும். 200 கூட மிகச் சிலருக்கு இருக்கும். ஆனால் இதற்கு எதிர் மறையாக சிலருக்கு ஐக்யூ லெவல் 60, 50, 30, என கம்மியாக இருக்கும். ‘தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரமின் ஐக்யூ லெவல் மாதிரி.

    ஐ க்யூ லெவல் அதிகமாக என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைகளின் முதல் ஐந்து வயது வரை சத்தான உணவைக் கொடுப்பது ரொம்பவே முக்கியம்.

    பாடப் புத்தகங்களை தவிர, நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். பாட்டு கேட்க, இயற்கையை ரசிக்க, அவங்களுக்குத் தெரியாத விஷயங்களை கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள உற்சாகப்படுத்த வேண்டும்.

    முக்கியமா நாம் பொறுமையாக அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நமக்கே தெரியாத விஷயமாக இருந்தாலும்கூட அதை நாம் முதலில் தெரிந்துகொண்டு பிறகு கு ழந்தைக்குத் தெரியப்படுத்தலாம். ‘அதிகப் பிரசங்கி, ஓவர் ஸ்மார்ட்’ என்று நீங்களே உங்க குழந்தையை முத்திரை குத்திவிடாதீர்கள்.

    சிலர் குழந்தைகளுடைய அறிவாற்றலை நார்மல் விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் ரொம்வும் கொம்பு சீவி விடுவார்கள்.

    அது, குழந்தைகளுக்கு தேவையில்லாத சுப்பிரீயாரி ட்டி எண்ணத்தைக் கொடுத்துவிடும். ‘‘எங்க விஷால் மாதிரி வரவே வராது... இந்த சின்ன வயசிலே எப்படி பேசறான் பாரு’’ என்று வருவோர் போவோர்களிடம் அவனைப் பற்றியே காதில் ரத்தம் வரும் அளவுக்கு அறுத்துத் தள்ளுவார்கள்.

    இப்படி இரண்டும் இல்லாமல் மிதமாக குழந்தைகளை அரவணைத்துப் போக வேண்டும். அதற்கு நாம்தான் முதலில் பக்குவப்பட வேண்டும். குழந்தைங்க ஷார்பாக புத் திசாலித்தனமாக இருந்தார்கள் என்றால் அதற்கேற்ற மாதிரி அவர்களை நாம் ட்யூன் பண்ணனும். அவங்களோட விருப்பத்துக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற மாதிரி பயிற்சி தரவேண்டும்.

    உதாரணமாக ஐக்யூ லெவல் 125 இருக்கும் குழந்தைகள் படிப்பில் நன்றாக வருவார்கள். ஐ.ஏ.எஸ். படிக்க வைக்கலாம்.

    110 இருந்தால் டாக்டருக்குப் படிக்க வைக்கலாம்.

    100 அல்லது 90 இருந்தா பேஸிக்காக ஒரு டிகிரி அல்லது ஏதாவது புரொபஷனல் லெவல் படிப்பை படிக்க வைக்கலாம்.

    80க்கு கீழே இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தி படி படி என்று சொன்னாலும் அவர்களால் முடியாது. அதனால் பிழைப்புக்கான எதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொடுக்கலாம்.

    ஐக்யூவெல்லாம் தெரியாத அந்தக் காலத்திலேயே குழந்தைகளை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். கற்பூரம், கரித்துண்டு, வாழை மட்டை. முதல் வகை ஐக்யூ அதிகம் இரு ப்பவர்கள். இரண்டாமவர் மத்திய ரகம். மூன்றாம் ரகம் குறைந்த ஐக்யூ உடையவர்கள்.

    இதில் நம் குழந்தை எந்த ரகம் என்று பார்த்து அதை ஏற்றுக் கொண்டு அதற்குப் பொருத்தமான கல்வி முறையைத் தந்தாலே அவன் பிற்காலத்தில் நன்றாக உருவாவான்!’’

    சிலருக்கு ஐக்யூ ஏன் குறைவாக இருக்கிறது?

    குழந்தை கருப்பையில் இருக்கும் போது தாய் சத்துக் குறைவான உணவுகளை சாப்பிட்டதாலோ, அல்லது சிசுவைக் கலைக்க மாத்திரைகள் நிறைய சாப்பிட்டதாலோ ஏற்படலாம்.

    பிறந்த குழந்தைக்கு ஆக்ஸிஜன் போதவில்லை என்றால் மூளை வளர்ச்சி பாதிக்கும். மரபு ரீதியாகவும் இதில் பாதிக்கப்படலாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் குறைவாக இருந்தால் சத்துக் குறைவு ஏற்பட்டு மூளை வளர்ச்சி சரியான அளவில் இருக்காது.

    சிறு குழந்தைகளிடம் சரியாகப் பேசாமல், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டாமல் டல்லாக அவர்களை வளர்த்தாலும் மூளை வளர்ச்சி குறைந்து போக வாய்ப்புண்டு.

    கவனியுங்க பேரண்ட்ஸ்...

    ‘‘தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. எனப்படும் கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக உள்ளனர்’’ என்கிறார்கள் பல குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி செய்த நிபுணர்கள்!

    கவனியுங்கள் ... குழந்தைகளுடன் பெற்றோர் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மட்டும் போதாது, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்!

    உமா ஷக்தி
    படங்கள்: கென்னடி, ம.பிரபு[I could not bring pictures here.]
    --------------------------------------------------------------------------
    Pl. note.....the last two paragraphs-just above- are quite important for all children. :)

    குழந்தைகள் மன வளர்ச்சி...சரியாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி.Fathers should note this point & act for their sound progress. :thumbsup

    "Renukamanian"
     
    1 person likes this.
    Loading...

  2. Renukamanian

    Renukamanian Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    23
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Re: "குழந்தைகளின் ஐ.யூ.வை வளர்ப்பது எப்படி?" - f

    Friends,
    I forgot to mention - rather I can say that it has not come out - that this article is published
    in Kumudam in its issue dt. 16th Nov.2011. (latest issue). Credit goes to them.

    "Renukamanian"
     

Share This Page