1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குப்பைத்தொட்டி !

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 28, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    குப்பைத்தொட்டி !

    மிக அவசியமான உலகின் ஒரு பொருள் !
    பலரும் இழிவாக மதிப்பிடும் ஒரு பொருள் !


    குப்பைத்தொட்டி இல்லையென்றால்
    மற்ற இடங்களின் அழகு இல்லாமல் போய்விடும் !


    குப்பைத்தொட்டி இல்லாத வீடோ,
    அலுவலகமோ இருக்கவே முடியாது !

    என்னை பிரமிக்க வைத்த ஒரு பொருள் !

    வாழ்க்கையின் பல யதார்த்தங்களை
    ரகசியமாய் சொல்லிக்கொடுக்கும் ஒரு பொருள் !

    குப்பைத்தொட்டியிடமிருந்து நான் கற்றவை பல !

    அதிலிருந்து சிலவற்றை உனக்குச் சொல்கிறேன் !

    என்ன சிரிக்கிறாயா ? ! ?
    குப்பைத்தொட்டியில் என்ன பெரியதாக
    கற்றுக்கொள்ள இருக்கிறதென்று யோசிக்கிறாயா ?

    கற்றுக்கொடுக்காத பொருள்களே
    உலகத்தில் இல்லை !

    கற்றுக்கொள்ள உனக்கு
    ஆசையிருந்தால் எதிலிருந்தும்,
    பலவற்றையும் கற்றுக்கொள்ளலாம் !

    எந்த ஒரு பொருளையும்,
    இழிவாக,உபயோகமில்லாததாக ஒரு பொழுதும்
    நினைக்கவே நினைக்காதே !

    சரி ! இப்போதைக்கு நாம்
    குப்பைத்தொட்டியினால்
    கிடைத்த பாடங்களை கற்றுக்கொள்ளலாம் !


    தேவையில்லாததை சேகரித்து,
    மற்ற இடங்களை சுத்தமாக வைப்பதில்,
    குப்பைத்தொட்டிக்கு சமானம் குப்பைத்தொட்டியே !


    வாழ்க்கையில் தேவையில்லாததை
    தனியாக எடுத்துப் பிரித்து விட்டாலே
    வாழ்க்கை மிகவும் நிம்மதியாக
    இருக்கும்!


    இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
    கற்ற முதல் பாடம் !

    தான் குப்பையைத்தான்
    சேகரிக்கிறோம் என்ற அலட்சியம்
    இல்லாத,தாழ்வு மனப்பான்மை
    இல்லாத,அசிரத்தையில்லாத ஒன்று
    குப்பைத்தொட்டி !

    நம் கடமை அடுத்தவருக்குக்
    கேவலமாகத் தெரிந்தாலும்,நாம்
    அதிலிருந்து நழுவாமல்,முழு மனதோடு,
    வெறுப்பில்லாமல் அதில் ஈடுபடவேண்டும் !

    இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
    கற்ற இரண்டாவது பாடம் !

    படித்தவன்,படிக்காதவன்,
    வயதானவர்,இளையவர்,
    ஆண்,பெண்,
    பணக்காரன்,ஏழை,
    என்ற எந்த பாகுபாடும்
    பார்க்காத ஒன்று குப்பைத்தொட்டி !

    யார் எதுவாக இருந்தாலும்,
    எப்படியிருந்தாலும், நீ
    என்றும் மாறாதிரு !

    இது நான் குப்பைத்தொட்டியிடமிருந்து
    கற்ற மூன்றாவது பாடம் !


    ஏதோ ஒரு மூலையில்,
    யாரும் மதிக்காமல் இழிவாகக்
    கிடந்தாலும்,அவரவர்க்கு தேவையான
    சமயத்தில் தன் பக்கம் அவர்களை
    வரவைக்கும்,தன் கடமையைச்
    செய்யும் ஒரு கர்மவீரன் குப்பைத்தொட்டி !

    நீ உன்னுடைய கடமையை
    செய்துகொண்டு ஒதுங்கி இரு!
    தானாகவே உன்னைத் தேடி
    உலகம் வந்தே தீரும் !

    இது குப்பைத்தொட்டியிடமிருந்து
    நான் கற்ற
    அடுத்த
    4வது
    பாடம் !


    தனக்கென்று ஒதுக்கப்பட்ட
    இடத்தைப் பற்றி கவலைப்படாமல்,
    தன்னிடத்தை அவமதிக்காமல்
    இருப்பது குப்பைத்தொட்டி !

    உனக்கென்று
    கடவுள்
    கொடுத்த
    இடத்தை ஒரு நாளும் நீ
    கேவலப்படுத்தாமல்,உன் வாழ்க்கையில்
    நிம்மதியாய் வாழ்ந்து வா !

    இது குப்பைத்தொட்டியிடமிருந்து
    நான் கற்ற 5வது பாடம் !

    இன்னும் பல பாடங்களை
    குப்பைத்தொட்டி
    எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது !

    அதை எல்லாம் நான் உனக்கு
    சொல்லவேண்டிய அவசியமில்லை !

    எப்பொழுதும் அடுத்தவர் முதுகில்
    பயணம் செய்யாதே !

    அப்படிச் செய்தால் உன்னை
    சுலபமாகக் கீழே தள்ளிவிடலாம் !

    உன் முயற்சியில் வாழக் கற்றுக்கொள் !

    உன் முயற்சியே உனக்கு சந்தோஷம்!

    நீ சிரத்தையோடு பார்த்தால்
    எல்லாவற்றிலும் பாடம் கற்றுக்கொள்ளலாம் !

    நீ சிரத்தையோடு பார் !
    நீ கற்றுக்கொள் !

    உன் மனம் குப்பைத்தொட்டியில்லை !
    தேவையில்லாததை வைத்துக்கொள்ளாதே !

    உன் வாழ்க்கை குப்பைத்தொட்டியில்லை !
    தேவையில்லாதவற்றை சேகரிக்காதே !

    உன் நேரம் குப்பைத்தொட்டியில்லை !
    வீணான விஷயங்களை செய்யாதே !


    தினமும் இனி நீ செய்யவேண்டியது !

    காலையில் எழுந்தவுடன்
    உன் அகம்பாவத்தைக்
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் சுயநலத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் திமிரை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் சந்தேகத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் இயலாமையை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் துக்கத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் பைத்தியக்காரத்தனத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் சோம்பேறித்தனத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் முட்டாள்தனத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் பேராசையை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் பொறாமையை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் பயங்களை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் அழுக்கை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் காமத்தை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் அழுகையை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் பாவங்களை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் குழப்பங்களை
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன்னிடம் தேவையில்லாமலிருக்கும்
    அனைத்தவற்றையும்
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    உன் மனதில்
    எப்பொழுதெல்லாம்
    தேவையில்லாதவைகள்
    தோன்றுகின்றதோ,
    உடனே அவற்றையெல்லாம்
    குப்பைத்தொட்டியில் வீசி எறி !

    வீசிப்பார் ! மனம் சமாதானமடையும் !

    இரவும்,படுக்கும் முன்பு,
    உன்னுடைய மனதிலிருக்கும்,
    அத்தனையையும் குப்பைத்தொட்டியில்
    வீசி எறி !

    தைரியத்தை மட்டும் உனக்குள்
    வைத்துக்கொள் !

    நீ குப்பைத்தொட்டியில்லை !
    அதைமட்டும் புரிந்துகொள் !

    நல்லெண்ண
    பூச்செடியை
    மட்டும்
    வைத்துக்கொள்ளும்
    அழகான பூந்தொட்டி நீ !

    என் அருமை
    பூந்தொட்டியே !
    நீ ஒருநாளும்
    குப்பைத்தொட்டியாகிவிடாதே ! ! !

    Jayasala 42
     
    tljsk and jskls like this.

Share This Page