1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காமாட்சி விளக்கு!

Discussion in 'Posts in Regional Languages' started by suryakala, Jan 26, 2018.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    KAMATSHI.jpg

    காமாட்சி விளக்கு.

    மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.காமாட்சி விளக்கு புனிதமானது. அனைவரும் அறிந்த ஓர் விளக்கு, அனைவரின் வீட்டிலும் இருக்கும். இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும் இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

    ஏன் இந்த தீபத்தை காமாட்சி தீபம் என்கின்றனர்?

    காமாட்சி உலகத்தின் தாயான காமாட்சி தவம் செய்த பொழுது அனைத்து இறைசக்திகளும் காமாட்சியினுள் அடங்கியது, அதனால் காமாட்சியை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிட்டும்.

    பல கோவில்களில் நாம் சென்று பழங்கால கல்வெட்டுகளை பார்க்கும் பொழுது காம கோட்டத்து நாச்சியார் என்றே அந்த தலத்தின் இறைவி அடைமொழியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

    பலரும் காமாட்சி தீபத்தை குல தெய்வ விளக்காக கருதுகின்றனர். முன்னர் பழங்காலத்தில் தெய்வங்களை புகைப்படம் எடுக்கும் வழக்கமில்லை, அதனால் வீட்டில் ஓர் தீபத்தை குலதெய்வமாக நினைத்து அதை ஏற்றி அதில் குலதெய்வத்தை வழிபடுவர். குல தெய்வம் தெரியாதவர் காமாட்சியினுள் ஸகல தெய்வமும் அடக்கம் என்பதால் அதில் அன்னை காமாட்சியை நினைத்து என் குல தெய்வம் தெரியவில்லை, நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வேண்டுவர், இதனால் அதற்கு காமாட்சி தீபம் என பெயர் ஏற்பட்டது.

    பலர் வீட்டில் கிரஹ ப்ரவேச சமயத்திலும் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் பெண் நுழையும் போதும் நிறைநாழியில் ( நாழி - நெல் அளக்கும் படி, அது நிறைய நெல் வைத்தால அது நிறைநாழி) காமாட்சி தீபம் வைத்து செல்வர், பல இடங்களில் புதுபெண் முதலில்காமாட்சி தீபத்தை ஏற்றுவர், காரணம் நான் புகுந்த என் வம்சத்தை வாழையடி வாழையாக நீ வளர்க்க வேண்டுமென குல தெய்வத்தை வணங்குவர்.

    பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

    சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.

    விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். காமாக்ஷி விளக்கு மட்டுமில்லாமல் மற்ற விளக்குகளும் நம் மரபில் உள்ளன.அவற்றையும் பார்ப்போமா?

    குத்து விளக்கு :

    குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.

    உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.


    பாவை விளக்கு :

    ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .


    தீபங்கள் பதினாறு :

    தூபம், தீபம் ,புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.


    தூக்கு விளக்குகள் ஒன்பது :

    1. வாடா விளக்கு

    2. ஓதிமத்தூக்கு விளக்கு

    3. தூண்டாமணி விளக்கு

    4. ஓதிம நந்தா விளக்கு

    5. கூண்டு விளக்கு

    6. புறா விளக்கு

    7. நந்தா விளக்கு

    8. சங்கிலித் தூக்கு விளக்கு

    9. கிளித்தூக்கு விளக்கு.


    பூஜைவிளக்குகள் ஒன்பது :

    சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.


    கைவிளக்குகள் ஏழு :

    கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.


    நால்வகை திக்பாலர் தீபங்கள் :

    ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.


    அஷ்டகஜ தீபங்கள் எட்டு :

    ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

    நாமும் காமாட்சி தீபம் ஏற்றி உலகத்தோர் சிறக்க வேண்டுமென வழிபடுவோம்.
    KAMATCHI LAMP.jpg
     
    Loading...

  2. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விளக்குகளை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .
    என் தாத்தா பல வித விளக்குகளை வைத்திருந்தார். உங்கள் பதிவை படித்த பின் அந்த விளக்குகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன.

    மிக நன்றி. சகோதரி.
     
    suryakala likes this.
  3. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Thank you for this post. Can you please clarify my doubt. A friend of mine says its not good to lit two kamatchi vilakku, is this true? but my mom says we should never lit a single vilakku, it should always be two. Am very much confused. Please clear my doubt.
     
    suryakala likes this.
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thanks for the useful information Surya dear
     
    suryakala likes this.
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Mam don't confuse with kamatchi vilakku and kuthu villaku. In kuthu vilakku you can lit two but in kamatchi vilakku only one lit is possible for all. Do not lit two kamatchi vilakku as your frd said is correct. your mother said is also correct in kuthu vilakku not in kamatchi vilakku.
     
    Last edited: Jan 28, 2018
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு சகோதரி @kkrish ,

    நீங்கள் நலமாக இருக்கிறிர்களா? வெகுநாட்களுக்கு பின் உங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தேன்.

    அறிவியல் ஆதாரம் நிறைந்த நமது பாரம்பரியங்களில் விளக்கு ஓர் சிறப்பான முக்கிய அம்சம்! அது பற்றி ஒரு சிறிய பதிவு உங்கள் தாத்தாவின் விளக்குகளை நினைவூட்டியது எனக்கு மிகுந்த ம்கிழ்ச்சி.

    நன்றி.
     
    Thyagarajan and kkrish like this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @stayblessed ,

    As @Bhaskaran mentioned by way of clarification. I have never come across two Kamatchi Vilakkus at the same Puja Place, where as I have seen one or more Kuttu Vilakkus at a puja place. However, our traditions are the best examples for unity with diversity. I think we should keep the tradition followed in our families as followed by our elders unless something is specifically advised by recognised Acharyas not to be practiced.
     
    Thyagarajan and stayblessed like this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @iyerviji sister,


    I am so happy to see you Viji sister after a long time in this thread!

    Hope you and your DH are fine as always. Keep in touch.
     
    iyerviji likes this.
  9. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Ya sister we are fine,thanks for your concern I have not been active as I spend my time making jewellery
     
    suryakala likes this.
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,558
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:அரும்பெரும் ஜோதி அது தான்
    காமாட்சி அருமையாக புனைந்தீர்
    தீப காட்சி தீட்டிய அன்னைக்கு,
    இன்டஸ் லேடிஸ் குத்து விளக்காய் விளங்கும்
    சௌபாக்கியவதி ஸூர்யகலா சகோதரிக்கு
    மிக்க நன்றி நன்றி நன்றி.
    அன்னை மயிலை கற்பகம் நம்பக்கம்
     
    suryakala likes this.

Share This Page