1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    16. கடைசி நாள்

    இப்படி ஒரு நாள் பலருடைய வாழ்வில் வந்திருக்கும். மறக்கமுடியாத நாட்களில் ஒரு நாள். பள்ளி பருவத்தின் கடைசி நாள். என் வாழ்வில் அந்த நாள் வந்தது மார்ச் 21. அன்று கணக்கு பரிச்சை. பரிச்சை எழுதி முடித்து விட்டு அனைவரும் உற்ச்சாகமாக வெளியேறினர். ஏன் முகம் மட்டும் வாடி வதங்கி போய் கிடந்தது. ஒரே ஒரு காரணம் தான். ப்ரியா.. இனி அவளை சந்திக்க முடியாது. இதன் பின் காலேஜ் என்ற பெயரில் நான் எங்கு செல்ல போகிறேன் என்பது எனக்கே சரியாக தெரியாது. எக்ஸாம் சென்டரை விட்டு வெளியேறும் பொழுது அவளை பார்த்தே தீரவேண்டும் என்று வாசலிலே காத்து கிடந்தேன். அவள் வரவில்லை, ஒரு வேலை எனக்கு முன்பாகவே வெளியேறி இருக்க வேண்டும்.

    இன்றைய நாளில் எங்கள் பள்ளி பிரின்சிபால் செய்த ஒரே நல்ல விஷயம் அன்று மதியம் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைத்தது தான். எல்லாம் சம்பிரதாயமாக நடக்கும் போட்டோஷூட் தான். ஸ்டுடியோ'வில் இருந்து ஆள் வருவார்கள். ஆசிரியர் மாணவர் சகிதம் இந்த கடைசி நாளில் போட்டோ எடுத்து கொள்வோம். ஒவ்வொரு கிளாஸ் ரூமாக சென்று அணைத்து ஆசிரியர்களையும் சந்தித்து ஆசிர்வாதமும் விடையும் பெறுவோம். எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. அவளை மதியம் பார்க்கலாம். ஏதாவது பேசலாம்.

    மதியம் ஒரே உணர்ச்சி மயமாக சென்றது. இன்றோடு பிரியபோகிறோம் என்ற கவலை அனைவரையும் தொத்தி கொண்டது. எங்களுக்கு பாடம் எடுத்து ஆசிரியர்களையும் மற்ற வகுப்பில் இருக்கும் எங்களுக்கு பிடித்த ஆசிரியர்களையும் வகுப்பறைகுள்ளே சென்று சந்தித்தோம். எங்களை அனைவரும் வாழ்த்தினார்கள். நன்றாக கல்லூரியில் படித்து பள்ளிக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் என்றனர். நாங்களும் நன்றாக தலை ஆட்டினோம். அதன் பின் ஜூனியர் மாணவர்களை சந்திதோம்,. ஆள் தி பெஸ்ட் அண்ணா என்று உற்சாகமாக கூறினார்கள். என்ன என்று சொல் தெரியாமல் ஒரு சோகம் அழுத்தியது. அவளை மட்டும் அல்ல, இந்த பள்ளியை கூட பிரிய போகிறோம். பதினான்கு வருடமாய் நான் வாழ்ந்த இடம். என்னை வளர்த்த இன்னொரு வீடு. இன்றோடு இந்த பந்தம் முடிகிறது. இன்றோடு இந்த பள்ளிக்கும் எங்களுக்குமான அதிகார பூர்வமான உறவு அறுபட்டு விழுகிறது.

    'நாளை மலர்வதற்காக, இன்று உதிர்கிறோம்' என்று கவிதை ஒன்றை அவசரம் அவசரமாய் எழுதி அதை பக்கத்து கடையில் பிரிண்ட் அவுட் எடுத்து பள்ளியின் நோட்டிஸ் போர்டில் ஓட்டினோம். அதை படித்து விட்டு மற்ற வகுப்பு மாணவர்கள் கூட உணர்ச்சி வசப்பட்டு விட்டனர். இந்த களேபரத்தில் நான் அவள் வந்ததை கவனிக்க வில்லை.

    கடைசி நாள் அன்று அவள் வழக்கம் போல அழகாய் தான் இருந்தாள் (இருந்து தொலைக்கிறாள், என்ன செய்வது). எங்கள் பள்ளியின் யூனிபார்மான நீல சுடிதார், வெளிர் நிற துப்பட்டா, அவள் தலையில் அவளை போலவே அழகான ஒற்றை ரோஜா. அவளை சுற்றி அணை போட்டபடி அவளது தோழிகள். இந்த தோழிகள் தொல்லை தான் தாங்க முடியவில்லை.

    போட்டோ எடுப்பவரும் வந்துவிட்டார். பெஞ்சுகளை போட்டார்கள். முதல் வரிசையில் ஸ்கூல் பிரின்சிபால் மற்றும் ஆசிரியர்கள் அமர்வதற்கான சேர். அதன் பின்னே நின்றபடி பெண்கள். அவர்கள் பின்னே ஒரு பெஞ்சில் நின்றபடி ஆண்கள். உயரம் படி அனைவரையும் மாற்றி நிக்க வைத்தார் போட்டோ எடுப்பவர். ஏன் நேரம் பாருங்கள், அவள் பின்னால் வந்து நின்றேன். அவள் பின்னால் நிற்க வேண்டும் என்று நினைத்து வரவில்லை. ஏனோ அப்படி நடந்தது. 'ஏய் உன் பின்னால பாருடி என்று ரோஜா அவள் காதில் கிசுகிசுக்க, அவள் திரும்பி பார்க்காமலே என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்து கொண்டவள் போல தலையை மட்டும் ஆட்டினாள். நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை, நகர்ந்து வேறு ஒரு இடத்தில் நின்று கொண்டேன்.

    'Smile Please' என்று நம் போட்டோகிராப்பர் எங்களை எல்லாம் க்ளிக்கி விட்டு இன்னும் இரண்டு நாட்களில் போட்டோ வரும் என்று சத்தியம் செய்து விட்டு கிளம்பினர். பள்ளியின் பிரின்சிபால், எங்கள் ஆசிரியர்கள் எங்களை வாழ்த்தி அனுப்ப, நண்பர்களுக்கு கை கொடுத்து, விடை கொடுத்து அனுப்பி அனைவரும் பள்ளியின் வாசலை தாண்டி வெளியேறினோம். குபுக்கென்று ஒரு சோகம் அத்தனை பேரின் தொண்டையிலும் அடைத்து கொண்டது. மனதளவில் நான் அழுதேன். இன்னும் எத்தனை பேர் இப்படியே நினைத்தார்கள் என்று தெரியவில்லை. கடைசி நாள். இந்த பள்ளி வாழ்வு இன்றுடன் முடிகிறது.

    நான் சில நண்பர்களுடன் வாசலின் அருகே நின்றேன். அவள் அவள் தோழிகளுடன் தன சைக்கிளை தள்ளி கொண்டு சென்றாள். என்னுள் ஏதோ ஒன்று சொன்னது, 'அவள் கண்டிப்பாக திரும்பி பார்ப்பாள். அப்படி பார்த்தால் ஆவலுடன் பேசுவதற்கும் அவளை பார்பதற்கும் நிச்சயம் ஒரு வாய்ப்பு வரும்'. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தேன். ஏன் மனதில் ஓடியது நான் சொல்லாமலே என்னை சுற்றி இருந்தவர்களுக்கு புரிந்தது போல அவர்களும் என்னோடு அவளையே பார்த்தனர். தெருவின் முனை வரை அவள் சென்று விட்டாள், என்னை பார்க்கவில்லை.

    தெரு முனையை தாண்டி அவள் சைக்கில் சென்று மறைந்தது. அவள் என்னை பார்க்கவே இல்லை. அவ்வுளவுதான்.. இந்த பள்ளி வாழ்கையோடு என் காதலும் முடிந்து போனது.

    முடிந்து போனதாய் தான் நினைத்தேன்.. ஆனால் ....!
     
  2. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    17 நண்பன் சீனிவாசன்


    பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து வீட்டில் இருப்பது ஒரு புது வித அனுபவம். கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் தினமும் பள்ளி செல்லவேண்டும். பள்ளிக்கூடம் என்பது நம் அன்றாட வாழ்கையோடு கலந்த ஒன்று. அரையாண்டு, முழாண்டு என விடுமுறைகள் வந்தாலும் மீண்டும் பள்ளி செல்வோம், அங்கே படிக்கவேண்டும், எழுத வேண்டும் என்பது நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த விடுமுறையோ விதியாசமனதாய் இருந்தது. இது விடுமுறை மட்டுமல்ல ஆயிற்றே. இனி பள்ளிக்கே செல்லபோவது இல்லை. அடுத்தது கல்லூரி என்ற ஒரு எதிர்பார்ப்பு. என்னாகுமோ ஏதாகுமோ என்ற எதிர்பார்ப்பு கலந்த பதைபதைப்பு. கொஞ்சம் அவளை கூட நான் மறந்து போனேன் என்பது தான் உண்மை. பற்றாத குறைக்கு, ஏன் தந்தை ஒரு புதிய செல் போனை வாங்கினார். அதில் என்ன விசேஷம் என்றா கேட்கிறீர்கள். அவரது பழைய செல்போனை என்னிடம் தந்துவிட்டார். அது நம் நாட்டிற்குள் செல் போன்கல் புகுந்து இருந்த காலம். வெறும் மோனோடோன்களை கேட்பதே அன்றெல்லாம் பெரிய பொழுது போக்கு. நானும் பிச்சர் எடிட்டரில் படம் வரைவது, புதியதாய் நண்பர்களை எஸ்.எம்.எஸ்'ஸில் பிடிப்பது, சினேக் கேம் விளையாடுவது என்று பிசி அகிபோனேன்.


    மூன்று நாட்கள் பிறகு அடுத்த ஒரு புதிய அனுபவத்திற்கு தயார் ஆனேன், அது தான் என்ட்ரன்ஸ் கோச்சிங் கிளாஸ். நான் அது வரை டியூஷன் என்று எங்குமே போனது இல்லை. தாம்பரத்தில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் ஒரு மாதத்திற்கான கோச்சிங் கிளாசில் சேர்ந்தோம். சேர்ந்தோம் என்றால் யார் என்று தானே கேட்கிறீர்கள். நான், நாகேஷ் மற்றும் இன்னொரு நண்பன், அவன் பெயர் நாசர்.


    காலை விழித்ததும் கடந்த மூன்று வருடங்கள் வந்த என்ட்ரன்ஸ் கோசின் பேப்பர்களை படிப்பேன் (பின்னணியில் மிர்ச்சி சுசித்ராவின் ஹலோ சென்னை). பின்பு குளித்து சாப்பிட்டு நாசர் வீட்டிற்கு சென்றுவிடுவேன், அங்கிருந்து இருவரும் கோச்சிங் கிளாஸ். அங்கே நாகேஷ் வந்து விடுவான். காலை கணக்கு, மதியம் சாப்பாடு, பின்பு இயற்பியல், வேதியல். அங்கு இருக்கும் ஒரு வாத்தியார், 'நான் சொல்ற கேள்வியெல்லாம் படிச்சிக்கோ, கண்டிப்பா அண்ணா யுனிவர்சிட்டி தான்' என்று ஏகத்திற்கு எத்தி விடுவர். அதை நம்பி நானும் படித்து படித்து விழுந்தேன்.


    எல்லாம் இப்படி இயல்பாக தான் நடக்கும், திடீர் என்று தொலைந்தது போல் இருக்கும். என்னை சுற்றி ஏதும் பேசுவார்கள், நானும் கேட்டு கொண்டு தன் இருப்பேன், ஆனால் அது என் மூலையில் ஏறாது. எங்கிருந்தோ அவளது நினைவுகள் எனக்கு வந்துவிடும். என்ன செய்கிறாள் அவள், எங்கு இருக்கிறாள் அவள். இனி அவளை பார்க்க தான் முடியுமா. பார்த்தால் என்னிடம் பேசுவாளா. என்னை பற்றி என்ன அபிப்ராயம் இருக்கும் அவளிடம். என்னை நினைப்பாளா..


    அந்த நாட்களில் தினமும் நான் கேட்கும் பாடல்கள், காதல் ரோஜாவே, காதல் மழையே தான். போட்டு தேய்த்து விடுவேன். 'அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா, நான் நனைந்து கொண்டே எறிவதில் உனக்கு சம்மதம, அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா' என்று ஹை-பிட்சில் ஸ்ரீநிவாஸ் எனக்காகவே படுவது போல இருக்கும். அவளுக்கு என்னுடைய நினைப்பு இருக்குமா என்று நினைக்கியில் ஒரு திடும் உணர்வு பரவும். ஒரு மாதம் ஆனது இன்னும் இரு வாரங்களில் என்ட்ரன்ஸ் எக்ஸாம். நண்பர்கள் யாருக்கும் அவள் எங்கு இருக்கிறாள், எந்த கோச்சிங் சென்டரில் படிக்கிறாள் என்பது தெரியவில்லை. கண்ணா பின்னாவென்று ஒரு நிலைமையில் நான் இருந்த பொழுது தான் என் குழபத்தை தீர்க்கும் தெய்வமாய் வந்தான் நண்பன் சீனிவாசன்.


    எட்டாவது ஒன்பதாவது வகுப்பில் என்னோடு படித்தவன் தான் இந்த சீனிவாசன், என்னமோ அவன் எங்கள் பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே அவனுடன் நல்ல நட்பு. வீட்டிற்கு அடிக்கடி வருவான். எல்லா ஞாயிறும் என் வீட்டில் இருப்பன். பின்பு ஒன்பதாம் வகுப்பு முடிந்ததும், புதிய வாஷர்மேன் பெட்டில் , ஷீபா ஸ்கூலில் சேர்ந்து விட்டான். ஆனால் பழகிய அந்த இரு ஆண்டுகள் எங்களுக்குள் ஒரு நல்ல உறவும் ஏற்பட்டு விட்டது. மூன்று வருடங்கள் முடிந்து பின் எங்கள் ஏரியாவில் உள்ள அவனுடைய சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்படியே
    என்னையும் பார்த்து போக வந்தான்.


    'அப்புறம் டா... எப்படி இருக்க..' என ஆரம்பித்து, பள்ளி, பரிச்சை, அடுத்து என்ன எங்கே என்பது போல பேசிவிட்டு அவன் மெல்ல விஷயத்திற்கு வந்தான். "பிரியா பத்தி கேள்வி பட்டேன். நெஜமா.." என்றான்.


    நான் சிரித்தேன், "ம்ம்".


    "இப்போ என்ன நிலைமை. அவள் ஒத்துகிட்டாளா.."


    "தெரிலையே.. ஸ்கோல் அப்புறம் அவள் கிட்ட பேசறதே இல்லை.."


    "ஏன்.. முடியாது சொல்லிடாளா.."


    "அவள் எதுமே சொல்லல.. ஆனால் அவள் செஞ்சதுக்கு லாம், என்ன அர்த்தம்'னு புரியல.." சைக்கிளில் கார்ட் வைத்தது, அவள் டைரி, ஏன் டைரி முதலிய கதைகளை சொன்னேன்.


    "என்னடா சொல்ற.. இவ்ளோ நடந்துருக்கா.. அப்போ கண்டிப்பா அவளை உனக்கு பிடிச்சிருக்கு'ன்னு தான் அர்த்தம்."


    "அப்படியா". எனக்கு அவன் சொன்னதே அப்படி இனித்தது. "ஆனா எப்படி இத கன்பர்ம் பண்றது.."


    "அவள் கிட்டவே டைரெக்டா கேளு டா.." என்றான். எனக்கு அப்பொழுது தான் பட்டது, ஆமாம். அவளுடைய முடிவு என்ன என்பதை நான் கேட்கவே இல்லையே.


    கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றான், செல்லும் பொழுது எனக்கு நியாபக படுத்தினான். "மறக்காம பேசிட்டு எனக்கு சொல்லு.."


    அவன் சென்ற பின் நான் யோசனையோடு ஏன் செல்போனை எடுத்தேன். அவுடைய வீடு என்னை அழுத்தினேன். மாடிக்கு சென்ற கொண்டேன். ரிங் போனது.


    அன்று ஏப்ரல் பன்னிரண்டு !
     
    Deepu04 and meenakshijanani like this.
  3. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    18. நாளை தெரியும்


    இரண்டு மூன்று ரிங் சென்ற பிறகு, கிளிக் என்ற சத்தம். எடுக்க பட்டதும் யாரும் பேசவில்லை. அப்பொழுது மணி ஐந்தரை இருக்கும். போனை யார் வேண்டுமானுள் எடுக்கலாம். அவள் தான் எடுக்க வேண்டும் என்று இல்லை. அவள் அம்மாவாக இருக்கலாம், தங்கையாக இருக்கலாம். (அப்பாவாக இருக்க முடியாது, ஏன் என்றால் அந்த சமயம் அவலத அப்பா, வெளிநாட்டில் இருந்தார்). அவளை தவிர வேறு யாரேனும் எடுத்தால் என்ன செய்வது என்று என்னிடம் ஒரு பிளான் பி இல்லை. அட அது இருக்கட்டும், அவளே எடுத்தாலே என்ன செய்வது என்று கோடா யோசிக்கவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் கால் செய்து விட்டேன். இப்பொழுது என்ன செய்வதென்று யோசிக்கவெல்லாம் நேரமில்லை.


    "ஹல்லோ.."


    அவள் தான். அவளே தான். என்னுடைய தூக்கத்தில் கூட ஏக்கத்தை ஏற்படுத்திய ஏன் தேவதை தான். பல நாட்களாய் என் கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆடிய என் காரிகை தான். பாடம் மட்டுமே படித்து எழுதிய என் கைகளுக்கு கவிதை எழுத கற்றுகொடுத்த கவிதையே தான். நான் எதிர்பார்த்தது அவளை தான். எதிர்பார்காததும் அவளை தான். அவள் பேச்சை கேட்ட நொடி நான் சந்தோஷத்திலோ ஏக்கத்திலே திணறி ஊமையானேன்.


    "ஹலோ, யார் பேசறிங்க.."


    "ப்ரியா?", அவள் தான் என்று எனக்கும் தெரியும். ஆனால் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே..


    "ஆமா. நீங்க.." அவள் குரலில் மாற்றம் இல்லை. அதிர்ச்சியோ ஆனந்தமோ இல்லை. ஹ்ம்ம்.. என்னை அவளுக்கு தெரியவில்லை..


    "நான்.." என்னுடைய பெயரை சொன்னேன். அடுத்த நொடி அவள் மௌனம் ஆகிவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் தந்த பதில் நான் தான் அதிர்ந்து விழுந்தேன்.


    "ஹேய், நீங்களா.. எப்படி இருக்கீங்க.."


    என்னது 'ஹேய்'யா.. என்னய்யா நடக்குது இங்க. நான் மென்று முழுங்கி 'ஹாய்.. நானே தான். நல்ல இருக்கேன்.. வந்து.. நீங்க.. எப்படி.. இருக்கீங்க.."


    "ம்ம்.. நான் நல்லா இருக்கேன்.. என்ட்ரன்ஸ் கோச்சிங் எல்லாம் எப்படி போகுது.." அவள் குரலில் இருந்த உற்சாகத்தை நான் கண்டுபிடித்து விட்டேன். ஏன், ஏன்.. இந்த உற்சாகம். எனக்காக தானா..


    "நல்ல போகுது.. உங்களுக்கு எப்படி போகுது.." அவள் எங்கு படிக்கிறாள் எதுவுமே எனக்கும் தெரியாது தான். இருந்தாலும் கேட்டு வைப்போமே.


    "நான் கிளாஸ் எங்கயும் ஜாயின் பண்ணலை.. வீட்டில இருந்தே ச்சும்மா பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.."


    "ஒ.. சரி சரி.." அடுத்து என்ன கேட்பது என்று சத்தியமாக தெரியவில்லை.


    "உங்க வீட்லில யாருமே இல்லையா.."


    "இல்லையே.. எல்லாரும் இருக்காங்க.. நான் என்னோட செல்லில் இருந்து பேசறேன்.."


    "இல்லை.. அதை கேட்கல.."


    "அப்புறம்.."


    "டூ வீக்ஸா உங்க வீட்ல யாருமே இல்லை தான.." ஏதோ புதிர் போடுவது போல கேட்டாள்.. இல்லையே எல்லோரும் இங்கு தானே இருந்தோம்.


    "ஏன் கேக்கறிங்க.."


    "241966 உங்களுடைய நம்பர் தானே.." அவள் கேஷுவலாக கேட்டாள். எனக்கு குபீர் என்று சொல்ல தெரியாத உணர்வு உடலை ஊடுருவியது. ஆமாம், அது என் வீட்டு லேண்ட்லைன் தான்.


    "ஆமா.. எப்படி தெரியும்.." நான் தயங்கியபடி கேட்டேன். என்னுடைய போன் நம்பரை எங்கிருந்தோ பிடித்திருக்கிறாள். அப்படி என்றால்..


    "நான் ரெண்டு வாரமா டெய்லி கால் பண்ணிகிட்டே இருக்கேன்.. புல் ரிங் போயிட்டு கட் ஆகுது, ஆனால் யாருமே எடுக்கல.." அவ்வுளவுதான். இதற்கு மேல் என்ன வேண்டும். நின்று கொண்டு இருந்த நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். அடிப்பாவி.. கால் செய்தாயா.. எனக்கா.. பாழாய் போன டெலிபோன் இரண்டு வாரங்களாக அவுட் அப் ஆர்டரில் வேறு இருந்து தொலைந்திருக்கிறது.


    "இல்லை.. ரெண்டு வராம லைன் டெட். இன்னும் சரி பண்ணலை.."


    "ஒ.. அப்படியா.." அவள் குரலில் ஏதோ ஒரு சந்தோஷம்.. என்னால் அதை நன்றாக உணர முடிந்தது.


    "என்னோட செல் போன் நம்பர நோட் பண்ணிகோங்க.." சொல்ல சொல்ல எதிலோ எழுதி கொண்டாள்.


    "அப்புறம்.. வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க.." என்னை மறித்து அவளே கேட்டாள்.


    "நல்ல இருக்காங்க.."


    "ம்ம்.."


    "ம்ம்.." அதற்குள் இருவருக்கும் பேச வார்த்தைகள் தீர்ந்து போனது. ச்சே.. என்னதான் தமிழ் படித்தும், வார்த்தைகளை தொலைக்கிறோமே.


    சற்று நேரம் மௌனம். கொலையை கொன்றது. யாரை தேடி இத்தனை நாள் ஏங்கினேன், யாரிடம் பேச இத்தனை நாள் தவமிருந்தேன், அவள் இப்பொழுது என்னுடன் பேசுகிறாள். என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறேனே. 'தம்பீ..' என்று அம்மாவின் குரல் கீழிருந்து என் சிந்தனைகளை கலைத்தது.


    "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.." அவசரமாய் பேசினேன்..


    "சொல்லுங்க.."


    "இல்லை.. இப்போ அதை பத்தி பேச உங்களுக்கு டைம் இருக்கா'ன்னு தெரியல.. நாளைக்கி கால் பண்றிங்களா.. நீங்க ப்ரீயா இருக்கப்போ.."


    "ம்ம்.. பண்றேன்.."


    "ஓகே.. மறக்காம பண்ணுங்க.. டாட்டா.." என்று வைத்துவிட்டேன். என்ன பேசுவது எப்படி கேட்பது என்று ஏதும் தெரியாததால் வைத்து விட்டேன். நாளை பேசுவாள். அப்பொழுது கேட்டு விடலாம்.
     
    Deepu04, sudhaparkavi and shinara like this.
  4. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    interesting...
     
  5. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @shinara madam..neenga innum IL la irukeengala....???
     
    1 person likes this.
  6. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ena minja ipdi ketutenga... IL vitu enga poven...
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    19. இனியெல்லாம் நலம்


    ஏப்ரல் 13, 2005


    காலையிலே எழுந்து விட்டேன். வழக்கமாக ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுவேன், நேற்று என்ட்ரன்ஸ் கிளாசில் நடத்திய பாடங்களை கொஞ்சம் படிப்பேன். அன்றைக்கு என்ன பர்ரீச்சை வைப்பார்களோ அதை கொஞ்ச நேரம் அலசுவேன். பின் எட்டு மணிக்கு குளிக்க சென்றுவிடுவேன். அப்பொழுது தான் ஒன்பது மணிக்கு என்ட்ரன்ஸ் கிளாசில் இருக்க முடியும்.


    இன்று எழுத்தும் படிக்க மனம் வரவில்லை. சும்மா பக்கங்களை திருப்பிக்கொண்டு தான் இருந்தேன். அவளிடம் நேற்று மாலை பேசியதெல்லாம் நினைவலைகளுக்குள் வந்து ஓடின. இன்று மதியம் பேசபோகிறாள். என்ன சொல்லுவாள், என்னை பற்றி சொல்லுவாள். என்னவெல்லாம் சொல்லுவாள்.. என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லுவாள். ஐயோ... நானே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லலி, நானே வெட்கபடுத்தி, நானே வெட்கப்பட்டு கொண்டேன்.


    சாப்பிடமுடியாமல் சாப்பிட்டுவிட்டு ஒரு வழியாக எண்ட்ரன்ஸ் கவகுப்பில் வந்து அமர்ந்து விட்டேன். வழக்கமாக சட்டென்று சிட்டாய் பறக்கும் நேர, இன்று அவதியாய் நகர்ந்தது. நிமிஷத்திற்கு இரு முறை கடிகாரம் பார்த்தேன். ஏன் வித்தியாசமான செய்கையை யாரும் கண்டுகொள்ளாமல் இல்லை. ஆனால் என்ட்ரன்ஸ்'க்கு இருபதோ இன்னும் இரண்டே வாரம். என்னை விட்டு அனைவரம் புத்தகத்தில் கவனத்தை செலுத்தினர். அவள் பேசுகிறேன் என்று சொன்ன ஒரு மணியும், மதியத்தோடு வந்தது. எகிறி குதித்து ஓடிவிடாமல் என் இதயத்தை பத்திரமாய் பிடித்து கொண்டு, ஏன் செல் போனின் திரையையே பார்த்து கொண்டு இருந்தேன்.


    ஒரு மணி, ஒன்னரை ஆனது. ஒன்னரை இரண்டு ஆனது. இரண்டு நான்கானது, நானும் வீட்டிற்கே சென்றுவிட்டேன். அட, கிளாஸ் முடிந்து என்னுடைய வீட்டிற்கு தான். வேக வேகமாய் முகம் கழுவிவிட்டு கட்டிலில் படுத்துகொண்டேன். அவளுக்கு காத்திருந்து காத்திருந்தே நான் கலைத்து விட்டேன். அவளுக்கே போன் பண்ணிவிடலாம் என்ற எண்ணம் தலை தூக்க, அதை நானே தட்டி அடக்கி வைத்தேன். அவள் கண்டிப்பாக பேசுவாள். ஆழமான நம்பிக்கை போகவில்லை. செல்போனை சுவரோடு ஒட்டியிருந்த ஸ்டேண்டில் வைத்து விட்டு கட்டிலில் படுத்தேன்.


    மணி 5.30 ஆன பொழுது அது நிகழ்ந்தது.


    'அவள் அழகாய் பாட ஒரு மொழி இல்லையே.. அளந்து பார்க்க பல விழி இல்லையே..' என்ற மின்னலேவின் என் மனதிற்கு பிடித்த வரிகளை, எலேக்ட்ரோனிக் இசையில் என் செல் போன் பாடியது. மின்னும் இதயத்தின் அருகில் 'பிரியா..' என்று நான் சேவ் செய்து வைத்திருந்த பெயர் திரையில் பளிச்சிட்டது. அவள் தான்.. கூப்பிட்டு விட்டாள்.


    கட்டிலில் இருந்து சடாரென பாய்ந்து அந்த செல் போனை கைப்பற்றினேன். மேல் மடியில் இருக்கும் எனது அறையின் பால்கனியில் ஒரு சேர் போட்டு அதில் உட்கார்ந்தேன் (கிழக்கு முகமாய்). செல் போனின் பச்சை பட்டனை தட்டி காதில் வைத்தேன்.


    "ஹலோ.."


    "ஹல்லோ.. நான் பிரியா பேசறேன்.." குயிலின் குரலில் அந்த தேவதை தான் பேசியது.


    "ஹாய்.. எப்படி இருக்கீங்க.. மதியம் போன் பண்றன் சொன்னீங்களே.."


    "டாக்டர் பார்க்க போயிருந்தேன், அதான் போன் பண்ண முடியல.. சாரி" உண்மையான வருத்தத்தில் அவள் குரல்.


    "டாக்டரா.. என்னாச்சு.." எனக்கு இலேசான பதற்றம்.


    "மத்யம் மாடியிலே இருந்து கீழ இறங்கி வரப்போ விழுந்துட்டேன்." சாதரணமாக சொன்னாள்.


    எனக்கு உள்ளிருந்து தூக்கி வெளியே போட்டது. "அய்யோ.. என்ன ஆச்சு, ஏதும் ரொம்ப அடி பட்டுடுச்சா.. இப்போ எப்படி இருக்குது." பதற்றத்தில் நானோ குழற ஆரம்பித்தேன்.


    "ஒன்னும் ஆகல, இலேசான அடி தான். கீழ வரப்போ கடைசி படிகட்டில தான் விழுந்தேன். அதானால பெருசா ஏதும் அடி இல்லை.."


    "ஹ்ம்ம்.. பாத்து.." அப்புறம் என்ன சொல்வது என்று தெரியாததால் அத்துடன் நிறுத்திகொண்டேன்.


    "அப்புறம்..: இடையில் தோன்றிய மௌனத்தை அவளே களைத்தாள்.


    "அப்புறம்.. சொல்லுங்க.." அடடா யோசித்து வைத்த விஷயம் எல்லாம் மண்டையை விட்டு வெளியேறி விட்டதே...


    "நீங்க தான ஏதோ சொல்லணும் சொன்னிங்க." ஏதோ குறும்புடன் கேட்பது போல தோன்றியது.


    "நீ தான்.. ப்ரியா சொல்லணும். நான் அன்னைக்கு உன்கிட்ட கேட்டேன். நீ எஸ்'ஸா நோ'வா உன்னுடைய பதிலை இன்னும் சொல்லவே இல்லை.." எப்படியோ தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டு விட்டேன்.


    "நோ சொன்ன என்ன பண்ணுவிங்க.." எனக்கு குப்பென்று வியர்த்தது.. என்ன இது எதிர்பார்காத ட்விஸ்ட்.


    நான் தயங்கினேன், "பிரியா.. நே முதல்ல.."


    நான் பேச வருகையில் அவள் இடை மறைத்து பேசினாள்.. "சரி.. எஸ்.."


    அவ்வுளவு தான்.. சுழலும் உலகம் அடுத்த இரண்டு மூன்று நொடிகள் அப்படியே நின்றது. உண்மையிலே,, ஒருவனுடைய வாழ்வில் இந்த அனுபவம் ஒரு முறை தான் கிடைக்கும்.. எனக்கு கிடைத்தது. நான் அந்த அதிர்ச்சியை ரசித்தேன், அந்த அதிர்ச்சி என்னை அதிரவைக்க அனுமதித்தேன். அதிர்ந்தேன், மகிழ்ந்தேன், இறந்தேன்.. மீண்டும் பிறந்தேன்..


    "எஸ்'ஸா.. "


    "ம்ம்.. எஸ் தான்.. இப்போ சந்தோஷமா.." என்று சிரித்துவிட்டு போனை வைத்தாள். அன்றில் இருந்து இன்று வரை என் புன்னகையின் பின்னால் இருக்கும் ஒரே காரணாமாக வாழ்ந்து வருகிறாள். என்னவள்..


    கதை முடிகிறது.. காதல் தொடங்குகிறது.. :)
     
  8. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    இத்தனை நேரம் எனது கதையை படித்து வந்த அனைவருக்கும் என் நன்றி. என் வாழ்கையை நானே திரும்பி பார்த்து எங்களை பற்றி நானே எழுதியது ஒரு சுகமான் அனுபவம். இந்த அனுபவம் எனக்கு கிடைக்க காரணமாய் இருந்த ஏன் காதலுக்கு என் நன்றி.

    இன்னும் மூன்று நாட்களில் ஏப்ரல் 13. அதாவது இந்த கதை நடந்து பத்து ஆண்டுகள்.. நினைத்து பார்க்கவே அத்தனை இனிக்கிறது. நேற்று தான் அவள் முன்பு நின்று என் காதலை கூறியது போல இருக்கிறது. அதற்குள் பத்து ஆண்டுகள்.

    பள்ளி பருவத்து காதல் கல்லூரியை தாண்டாது என்பார்கள். என் வாழ்வில், பள்ளி காதல் தான், என் வாழ்வின் ஒரே மற்றும் முதல் காதலாக அமைந்தது. எங்கள் காதல் இன்று போல என்றும் இனிமையாய் இருக்க எங்களை வாழ்த்துங்கள்.

    - பிரியமுடன் நான்..

    எங்களை பற்றி

    இந்த கதை நடந்து இரண்டு மாதத்தில் நாங்கள் கல்லூரியில் சேர்ந்தோம். நான் என் கனவு நாயகன் அப்துல் கலாமின் mitயிலும், என் பிரியா வேறு ஒரு கல்லோரியிலும் , கிட்ட தட்ட இருநூறு கிலோமீட்டர் தூரம் எங்களை பிரிக்க பிரிக்க காதலித்தோம். நான்கு வருடங்களுக்கு பின் நான் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்தேன். சிம்பிளாக நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஷக்தி என்று ஒரு அழகான ஆண் பிள்ளை எங்களுக்கு..

    நான் யார் தெரியுமா.. உலகிலே அழகான பெண்ணின் கணவன். பிரபஞ்சத்திலே அழகான பிள்ளையின் அப்பா.. இனிமையான வாழ்கை.. இந்த இனிமை எனக்கு என்றுமே ஓயாது, அவள் மடியில் தலை வைத்து நான் சாக போகும் அந்த நாள் வரும் வரை...

    ப்ரியா.. நான் உன்னை விரும்புறேன்.. :) லவ் யு மா.. உம்ம்மா
     
  9. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Super a irunthathu unga love story(life).
    Indru pol endrum nalamudan vazha ellam valla eraivanai prathikiroam:):):)
     
    yevanoOruvan likes this.
  10. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    very nice.... feeling very very happy at the end.... stay blessed brother....
     
    yevanoOruvan likes this.

Share This Page