1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ஏன்?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Mar 4, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    காதல் என்பதோர் மாய வலை
    வீழ்வோர் அடைவார் பெருந்துயரை.
    அறிந்தும் அதிலே வீழ்ந்திடவே,
    பலரும் விரும்புவதேன் தினமே?

    தனையும் ஒரு பொருட்டாக,
    மதிப்பவர் உண்டென்பதுவா?
    தனக்கே தன மேல் விருப்பாக,
    இருக்கும் காரணமதுவா?

    உள்ளே பேருவகை பொங்கும்,
    அது முகத்துக்கே ஒளியேற்றும்.
    உலகம் அழகாய்த் தோன்றும்,
    தனியுலகொன்றும் இருக்கும்.

    ஒன்றாய் இருக்கத் தோன்றும்,
    தான் கரைவது இயல்பாகும்.
    நன்றே எல்லாம் நடக்கும்
    எனும் நம்பிக்கை உருவாகும்.

    தோல்வி கண்டு துவண்டும்,
    வேண்டாமெனத் தோன்றாது.
    இழந்ததை மீண்டும் மீண்டும்
    சதா நினைத்திடத் தவறாது.

    -ஸ்ரீ
     
    Last edited: Mar 4, 2011
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    காதலின் அத்தியாயம் மிக அழகு!!!
    பித்தனை பித்தாக்கும் kaadhal!!!
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your fast feedback Malar. Liked your lines in the end..... -rgs
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதலை ஏன் வச்சான்
    காளை/கன்னி மனசை ஏன் தச்சான்....
    ஏன் என்ற கேள்விக்கு ஒரு வரியில்/வார்த்தையில் பதில் சொல்ல முடியாது.
    காதல் ஆக்கவும் செய்யும். அழிக்கவும் செய்யும்.
    காதலுக்குள் அத்த்த்த்த்தனை (ஆனந்த) காந்தம்.
    அந்த ஈர்ப்புக்குள் சரி வர அறிந்து உணர்ந்து உய்திட்டால் ஏகாந்தம்.

    அலுங்காமல் அலுக்காமல்
    குலுங்காமல் குலுக்காமல்
    உள்ளது உள்ளபடியே அனுபவிக்கத் தெரிய வேண்டும்
    ஸ்ரீ
    "பஞ்"சான பஞ்சாமிர்த விளக்கம்.
    நன்றி
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your nice lines and feedback Saroj. Happy to receive it any day. -rgs
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    அழகிய காதல்...
     
  7. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    அளவிடமுடியாத இன்பத்தையும்
    உயிருருக்கும் வலியையும்...ஒருங்கே தரும்!

    காதலை உணர்ந்தோர் தவம் புரிந்தோர்.. .
    இன்னும் உணராதோர் தவம் புரிதல்வேண்டும் :cheers
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your feedback Latha. -rgs
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a moving feedback AbhiSing. -rgs
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    காதலை அற்புதமாய் சொல்லிவிட்டீர் நண்பரே :thumbsup
     

Share This Page