1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலர் தின கவிதைகள் -2

Discussion in 'Posts in Regional Languages' started by crvenkatesh, Feb 3, 2012.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கண்ணில் என்னைப் பார்த்தேன் கண்ணா
    உன்னில் என்னைப் பார்த்தேன்
    கண்டேன் அண்ட சராசரங்களும் கூடவே
    காதலி என்னையும் பார்த்தேன்

    காணும் கண்ணில் கலந்தாய் கண்ணா
    காதலி என்னில் கலந்தாய்
    வேணு கானம் இசைத்தே எந்தன்
    விரகம் நீயும் தணித்தாய்

    மெல்லத் துடித்ததென் உதடுகள்
    மாயவன் பேரைச் சொல்லியே
    கிள்ளிய பூப்போல் விழுந்த துந்தன்
    மடிமீ திந்த அல்லியே

    குன்றாக் காதல் ஒளியே
    கரையிலா இன்பக் கடலே
    என்றனை யாளும் இறைவா
    ஆனந்த வாழ்வு தர வா
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    CRV sir,
    கோபிகை மனநிலையில் ..நல்ல கவிதை.

    sriniketan
     

Share This Page