1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலர் தினம்-இரண்டாம் பகுதி

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Feb 14, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ராகவனும் ரஞ்சிதாவும் வேலன் வள்ளி இருந்த ஆலமரத்தின் பின் புறம் அமர்ந்து இருந்தார்கள் .அந்த முதியவர்களின் காதல் கவிதைகளை ரசித்து சிரித்தார்கள் .வேலனும் வள்ளியும் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற பின் ரஞ்சி ராகவனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள் .ராகவ் அந்த தாத்தா ஒரு பறவை தன் இணையை தேடி கூவுகிறது என்று சொன்னார்.நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டாள் .உடனே ராகவ் அந்த பறவை சப்தமிடுவது காதலர்களுக்கான அலாரம் .இது உனக்கு தெரியாதா என்று கேலியாக சொன்னான் .சரி அடுத்த பறவை ஏன் இப்படி அலறுகிறது தெரியுமா என்று ராகவ் கேட்டதும் அது எனக்கு தெரியும் என்று ரஞ்சி சொன்னாள் .ஐயோ இந்த மனுஷன் சொல்லும் கடி ஜோக்ஸ் தாங்கலியே யாராவது என்னை காப்பாத்துங்களேன் என்று கூக்குரல் இடுது என்று ரஞ்சி சொன்னதும் ராகவ் அவளை செல்லமாக முதுகில் அடித்தான் .ஸ்பரிசம் பட்டதும் பாட்டு உதயமாகி விட்டது .

    சிறு குழந்தையாக எனை நினைத்து
    செல்ல அடி கொடுக்கும் என் அன்பனே
    உன் கள்ளச் சிரிப்பில் எனை மறந்து
    கல்லாகிப் போனேனே
    நீ கண்சிமிட்டி எனை பார்த்தால்
    என் கண்கள் சொருகி மயக்கம் வருதே
    நீ தடதட என சத்தம் ஒலிக்க
    மோட்டார் சைக்கிளில் வரும் போது
    என் இதயமும் தட தட என சத்தம் போடுதே
    என் அருகில் நீ வந்து நின்றால்
    சொர்க்கம் என் கண்ணில் தெரியுதே
    கருமையான கிராப்பு அழகா
    இல்லை கத்தி போன்ற மீசை அழகா
    அழகா என் அழகா எனை ஆளவந்த ஆணழகா
    என் உள்ளம் கவர்ந்த கள்ளழகா
    என்று பாடி முடித்தாள்

    இப்ப வருது நம் ஆண் அழகனின் பாட்டு

    ரஞ்சி என் அபரஞ்சி
    உன்னை கெஞ்சி கெஞ்சி
    கொஞ்சி கொஞ்சி
    பேச நினைத்து
    உன் அருகே வர
    அஞ்சி அஞ்சி நான் நிற்க
    நீ பாடிய பாட்டு கேட்டு
    தஞ்சமென வந்து விட்டேன்
    ஏற்று கொள் என் கண்மணி
    நீ தண்ணீர் குடம் எடுத்து
    நடந்து வரும் போது
    ஆண்டாள் தேர் அசைந்து
    வருவது போல் இருக்குதே
    தலை குனிந்து வரும் போது
    எனை நீ கண்டு கொண்டால்
    ஐந்து தலை நாகம் போல்
    சரேல் என தலை நிமிர்ந்து
    காதல் கணை வீசுகிறாயே
    வீச்சின் வீரியம் தாங்கி நிற்க
    சக்தி இன்றி தவிக்கிறேனே
    என் அன்பு சாம்ராஜ்ஜியத்தின்
    அழகு ராணியே
    பிறந்த பயன் நான் அடைந்தேன்
    நாணி நிற்கும் உன் கோலம் கண்டு

    இப்படியாக ராகவன் முடிக்க சிறு தூறலாக மழை துளிகள் விழ ஆரம்பித்தன.அவை தேவர்கள் சொரிந்த பன்னீர் துளிகள் .

    ஐயோ இவ்வளவு தான் எழுத முடிஞ்சுது .இது சிறு பிள்ளை காதல் கிறுக்கல்கள் .பொறுமையாக படியுங்கள் .இந்த பெரியம்மா ஏன் இப்படி நம்மை கொல்கிறார்கள் என்று நினைத்தால் மனதுக்குள் திட்டி விடுங்கள் .வேண்டாம் இங்கேயே பின்னூட்டமாக தந்து விடுங்கள்

    வாழ்க காதல் வளர்க அன்பு
     
    7 people like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா அழகான கவிதை யுடன் காதலர் தி ன கதையை ரசிக்க வைத்து விட்டீர்கள் . நன்றாக உள்ளது
     
    2 people like this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Romba romba nalla erunthathu ma. Pattu vazhi sonna vishayangal super.
     
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ha ha reminds my DH periamma! Unga banila marubadiyum asathiteenga! :thumbsup

    Kadhai + Paatu + Part 1, Part 2.. Oru bioscope padame otteeteenga periamma!!! :mrgreen:
     
    3 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Uma
     
    1 person likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Priya.kathai pothuma
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thanks Kaniths.Intha kathaiyai naane produce panni naane direct pannanum .
     
    4 people like this.
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hmmm.... pothum endra maname pon seiyum marunthu. Aanal innum kathaigal neiraya ezhuthungal ma.
     
    2 people like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    nice writing :)..............:clap:clap:clap
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thank you Krishnaamma.
     

Share This Page