1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதலர்தினம்

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Feb 13, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வேலனும் வள்ளியும் வயலில் வேலை எல்லாம் முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தார்கள் அவர்கள் ஊர் எல்லையில் குளம் ஒன்று உள்ளது .குளத்தங்கரையில் மிகப் பெரிய ஆல மரம் உள்ளது .பரந்து விரிந்து நீண்ட விழுதுகள் உடைய மரம் அது .மாலை நேரம் எல்லா பறவைகளும் அங்கு தான் வந்து அடையும் .பல்வேறு பறவைகளின் பல விதமான சப்தம் வேலனுக்கு மிகவும் பிடிக்கும் .மரத்தின் அருகில் வந்ததும் வள்ளி கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாம் என்று கந்தன் சொன்னார்.வள்ளி இருட்டும் முன் வீட்டுக்கு போகலாம் என்று பதில் அளித்தாள்.அட வீட்ல போய் என்ன பண்ண போறோம் .ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கணும் .அதை விட இந்த பறவைகளின் சத்தத்தை கேட்டால் சந்தோஷமா இருக்கும் .அதனாலே கொஞ்சம் இங்க உட்கார்ந்துட்டு போகலாம்னு சொல்லிட்டு தரையில் அமர்ந்தார்.வள்ளியும் அவர் அருகில் அமர்ந்தாள் .கீச்சு கீச்சுன்னு ஓரே சத்தம் .அப்ப திடீர்னு ஒரு பறவை குக்கூ குக்கூ ன்னு கூவியது .உடனே நம்ம நாயகன் வேலனுக்கு உற்சாகம் வந்து விட்டது .வள்ளி இது ஏன் இப்படி சத்தம் போடுது தெரியுமான்னு கேட்டார்.வள்ளி தெரியாதுன்னு சொல்ல ,அது தன் ஜோடியை தேடி கூவுது அப்படின்னு விளக்கம் சொன்னார்.இது ஆண் பறவையா பெண் பறவையான்னு வள்ளி கேட்டாள் .சந்தேகமே இல்லை இது ஆண் பறவை தான் ஏன்னா பெண் என்றும் தன இணையை தேடி ஓலம் இட மாட்டாள் .அமைதியாக இருந்து தான் சாதிப்பாள் என்று அவர் பதில் சொன்னார் .தன் புருஷன் இப்படி பெண்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்னு வள்ளிக்கு சந்தோஷம் .

    அடுத்து இன்னொரு பறவை இடைவெளி இல்லாமல் அலறிக்கொண்டு பறந்து சென்றது .இதற்கு அவர் அளித்த விளக்கம் அந்த பறவையை எதிரிப்பறவை துரத்துகிறது .தன்னை காப்பாற்றுமாறு தன் இனங்களை உரத்த சப்தமிட்டு கூப்பிடுது .இதை கேட்டதும் எப்படியா உனக்கு இப்படி எல்லாம் தோணுதுன்னு கேட்டுட்டு தன் புருஷனை பெருமையுடன் பார்த்தாள் .அவள் பார்வையை கண்டதும் அவர் பாட ஆரம்பித்து விட்டார் .

    ஏ புள்ளே வள்ளி என் மனதை திருடிய கள்ளி
    கஞ்சி கலயம் தலையில் வைத்து வஞ்சி நீ நடந்து வந்தா
    என் நெஞ்சம் துள்ளி வந்து உன் காலடியில் விழுகுதே
    சம்பா அரிசி பல் தெரிய கல கலன்னு நீ சிரிச்சா
    அத்தனையும் அள்ளி எடுத்து அட்சதை போட நினைக்கேன்
    செவக்க செவக்க வெத்தலை போட்டு
    நாக்கை சுழற்றி நீ அழகு பார்த்தா
    என் உசிரு சுருண்டு உன் மடியில் விழுகுதே
    முந்தானையை உதறி இடுப்பில் நீ சொருகும் போது
    என்னையும் சேர்த்துல்லா உன் இடுப்பில் சொருகி நிக்க

    அப்படின்னு கண்கள் கிறங்கி காதலுடன் தன் மனைவி வள்ளியை வேலன் பார்த்தார்.வள்ளி விடுவாளா .அவளும் தன்குரல் வரிசையை காட்ட ஆரம்பித்து விட்டாள் .

    என் ஆசை மச்சானே என் உசிரு மச்சானே
    நீ மீசையை முறுக்கும் போது
    என் உடலும் வெல வெலக்குதே
    மம்புட்டி எடுத்து நீ வரப்பு வெட்டும் போது
    உன் கைவிரல் பிடித்து முத்தம் குடுக்க தோணுதே
    நெத்தி வேர்வை நிலத்தில் விழ நீ வேலை செய்யும் போது
    என் உள்ளம் பதைக்குதே கண்ணும் தான் நிறையுதே
    நாம் பட்ட பாடு எல்லாம் வீணாக போகாமல்
    வயல் நிறைய நெற்கதிரும் நெறஞ்சு கிடக்க கண்டு
    மனசும் நெறையுதே சிரிப்பும் பெருகுதே

    என்று பாடினாள்.இதை கேட்டு வேலன் காண்டாமணி போல் சத்தம் போட்டு சிரித்தார்.பின்னணியில் பறவைகளும் பாடின.இது காதலர் தின ஸ்பெஷல் .இளைய தலைமுறையினர் ராப் பாடல் போல பாடுங்கள் ஆடுங்கள் .
     
    8 people like this.
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Aaditapochu!!! :banana :party

    VDay SPL super periamma! :thumbsup
     
    3 people like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kaniths Thanksma.Tune pottacha.
     
    3 people like this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    கதை ரொம்ப நல்லா இருக்கு மா. ஆனால் குட்டி கதையா இருக்கே மா இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே மா :-(
     
    2 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ப்ரியா .இந்த கதையை முதிய தலைமுறை போல் இளைய தலைமுறையினர் எப்படி நினைப்பார்கள் என்று எழுதலாம் என்று நினைத்தேன் .ஆனால் இரவு நேரம் அதற்கு மேல் மூளை வேலை செய்யவில்லை .
     
    3 people like this.
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Time kidaikum bothu athaoyum ezhuthungal ma. Naangal ready ma padika.
     
    1 person likes this.
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma காதலர் தினத்திற்கு பறவை களின் இசையுடன், பாடல்களையும் போட்டு அசத்தி விட்டீர்கள். சூப்பர்
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி உமா .சும்மா ஒரு கிராமிய காதலர் தினம்.நகரங்களில் ஒரு நாள் தான் காதலர் தினம் .கிராமங்களில் தினம் காதலர் தினம்
     
    5 people like this.
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    :yes::yes:
     
  10. umasivasankar

    umasivasankar IL Hall of Fame

    Messages:
    2,021
    Likes Received:
    4,948
    Trophy Points:
    300
    Gender:
    Female
    Super ma kadhalar dhina sirapu kadhai...kadhai ku nadula paatellam potu oru china kiramiya padam patha maadhri eruku.
     

Share This Page