1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Mar 8, 2017.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; சின்ன சின்ன மூங்கில் கூடைகளில் மந்தாரை இலைகள் மற்றும் வாழை இலைகள் வைத்து வார்ப்பார்கள் . அந்த அளவு மாவு கெட்டியாக இருக்கும். இருக்கணும். ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள் [​IMG]

    IMG-20160305-WA0031.jpg

    தேவையானவை:

    அரிசி 1 கப்
    உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
    மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
    சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
    சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
    பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
    நெய்
    உப்பு
    கறிவேப்பிலை

    செய்முறை :

    அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
    ஒரு... ஒரு மணி ஊறினால் போறும்.
    கொஞ்சம் 'கர கர' பாக அரைக்கணும் .
    இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
    உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும்.
    மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
    மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
    மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
    பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
    சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .
    தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
    வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
    இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.

    IMG-20141228-WA0001.jpg

    குறிப்பு : சாதாரணமாக இந்த 'குடலை இட்லி' என்பதை இலைகளில் தான் செய்வா [​IMG] நாங்கள் வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில் செய்வோம். இப்போவெல்லாம் இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது [​IMG] நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி கிண்ணிகளில் எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம் [​IMG]
     
    periamma likes this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @krishnaamma பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு .செய்முறை விளக்கமும் படமும் மிக அருமை
     
    krishnaamma likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you ! :)
     

Share This Page