1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்யாணம் to காதல் !!

Discussion in 'Stories in Regional Languages' started by jaga3421, Mar 18, 2012.

  1. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கதைக்குள் செல்லும் முன் ....

    அனைவருக்கும் வணக்கங்கள் !
    (வணக்கம் என்பதற்கு பன்மை உண்டா என்று தெரியவில்லை, ஒருவேளை இல்லாவிடில், இலக்கண வல்லுனர்கள் மன்னிக்கவும்)

    என் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் இந்த தளத்தில் உறைவிடம் தந்து ஊக்கபடுத்திய அனைவருக்கும் நன்றி ..

    "நிறைய வசனங்கள் வேண்டும்.. காதல் கதையாக இருக்க வேண்டும்.. சோக முடிவாக இருக்ககூடாது.. இப்படி ஒரு நெடுங்கதை வேண்டும்" என்று நெடு நாட்களாக என்னிடம் கேட்டுகொண்டிருந்த ஒரு நட்பிற்கு இந்த தொடர் கதையை dedicate (தமிழ் ல என்னனு தெரிலயே) செய்கிறேன்..

    ஒரு முழுமையான புதினம் தரவேண்டும் என்பதே என் நோக்கம். தமிழில் என் முதல் புதினத்தை indusladiesல் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கதை போகிறபோக்கில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறக்க வேண்டாம்..

    காதலில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடியும் கதைகள் பலவற்றை கேட்டிருப்போம், இங்கே கல்யாணத்தில் மட்டுமே ஆரம்பிக்கும் ஒரு உறவு எப்படி காதலெனும் கடலில் போய் சேர்கிறது என்பது தான் கதை. பயணத்தில் பங்குபெற உங்களையும் அழைக்கிறேன்..

    இந்த சிறுவனை வாழ்த்திவிட்டு படகில் ஏறுங்கள் ..

    அன்புடன்
    Jaga
     
    Last edited: Mar 18, 2012
    vaidehi71, Caide, drjobs2009 and 8 others like this.
    Loading...

  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    உங்கள் கதை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்...!!!
     
  3. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    1. திருமண மண்டபம்


    "அம்மா.. ஆரமிச்சிடாத மா.. அப்புறம் நான் இப்போவே கிளம்பி சென்னை போயிடுவேன், சொல்லிட்டேன்"

    லேப்டாபிற்குள் தலையை விட்டிருந்த அருள் கண்களை கூட திருப்பாமல் சத்தம் போட்டான்.

    "தெரியாம தான் கேட்கிறேன், நான் அப்படி என்னடா தப்பா சொல்லிட்டேன். ஏன்டா இப்படி காலையிலே கத்தற. இருபத்தி ஆறு வயசுல ஒரு பையன வச்சிக்கிட்டு அவனுக்கு பொண்ணு பாக்கணும் னு அம்மா நினைக்கறதுல என்னடா தப்பு இருக்கு. ஏன் கல்யாணத்த பத்தி பேசினா தெளிவா பதில் சொல்லமாட்டேனு அடம்பிடிக்கற ?" பரிதாபமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பொன்னி. கையில் வழக்கம் போல ஏதோ பெண்ணின் புகை படம் அல்லது புகைப்படங்கள்.

    நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தான் அருள் "என்ன மா அப்படி உனக்கு தெளிவா பதில் வேணும்.. கேளு மா.."

    மகனின் தலையை அன்போடு கோதிவிட்டாள், "இங்க பாருடா கண்ணா. உனக்கு பிடிச்சத தானட நான் செய்வேன். உனக்கு என்ன பிடிக்கும்னு ஏன்டா சொல்லமாற்ற. என்ன மாதிரி பொண்ணு பார்க்கணும்னு சொல்லேன்டா, அப்படி பார்த்து வைக்கிறேன். இல்ல நீ எந்த பொண்ண சொன்னாலும் கூட எனக்கு சம்மதம் தாண்டா.."

    "ஐயோ அம்மா, அப்படிலாம் ஒன்னும் இல்ல மா. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறமா பார்க்கலாம் தான் சொல்றேன். நீ என்னடானா எப்போ ஊர்லேந்து வந்தாலும் இதே கதையை ஆரமிச்சிடற.."

    "சரி என்னவோ பண்ணு. நேரமாச்சு பாரு, சீக்கிரம் குளிச்சிட்டு வா, முகூர்த்தத்துக்கு முன்னாடி வரலனா இந்த வசந்தி வேற கோச்சிக்குவா" துண்டை தோளில் சுற்றி அருளை குளியலறைக்குள் தள்ளினாள்.

    நம் கதாநாயகன் அருள் என்னும் அருள்மொழி குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான் என்பதால் அவனை பற்றியும் அவன் அன்புத்தாய் பொன்னி பற்றியும் தெரிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்வோம்.

    விழுப்புரம் அருகில் உள்ள செம்மங்கலம் என்னும் கிராமத்தில் பொன்னி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த ஊரில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அடித்தளம் கொடுத்தவள் பொன்னி. செம்மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியை தொடங்கி இன்று தலைமை ஆசிரியை நிலைக்கு உயர்ந்திருப்பவள். ஏட்டு கல்வியை விட எதார்த்தமும் எண்ண மேம்பாடும் தான் மாணவர்களுக்கு முக்கியம் என்ற கொள்கை கொண்டவள். அவள் நல்ல ஆசிரியை என்பதற்கு அந்த ஊர் இளைஞர்கள் சாட்சி என்றால் அவள் சிறந்த தாய் என்பதற்கு அவளின் மூன்று பிள்ளைகள் சாட்சி

    மூத்தவன் ஆதி, படிப்பதற்காகவே பிறந்தவன். இன்றைய தேதிக்கு அவன் பெயரின் பின்னால் இரண்டு சான் நீளத்திற்கு பட்டங்கள் இருக்கின்றன. அவனுக்கு திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று கணக்கிட்டு ஒரு பெண்ணோடு கால்கட்டு போட்டு வைத்தால், அந்த பெண் நந்தினி ஆதிக்கு மேல் இருந்தாள் (பின்குறிப்பு: நந்தினி ஒன்னரை சான் நீளம் படித்திருந்தாள்). நந்தினியை கல்யாணம் செய்துகொண்டு உயிர் வேதியலில் ஆராய்ச்சி செய்யபோகிறோம் என்று அடுத்த மாதமே அவளோடு அமெரிக்கா பறந்துவிட்டான்.

    அடுத்தவன் அருள்மொழி, பொன்னியின் பேர் சொல்லும் பிள்ளை என்றால் இவன் தான். பொன்னி மீது எல்லைகடந்த அன்பு கொண்டிருந்தான். 'பிள்ளை என்றால் இப்படி தானே இருக்கவேண்டும்' என்று கிராம அம்மாக்களின் பாசத்தையும், அவர்கள் பிள்ளைகளின் வயிற்றெரிச்சலையும் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக வாங்கிகொட்டி கொண்டிருக்கிறான். கோவை பொறியியல் கல்லூரியில் மூன்று வருடங்களுக்கு முன் கணிப்பொறி பட்டப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து போவான்.

    கடைக்குட்டி குந்தவை, வீட்டின் செல்ல பிள்ளை. பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டில் இவள் வைப்பது தான் சட்டம். இவளின் கொட்டத்தை தட்டி கேட்கவாது ஒரு மறுமகள் வரவேண்டும் என்பது நம் பொன்னியின் சமீப கால அபிப்ராயம்.

    அருள் தான் கதாநாயகன் என்று அறிவித்தாயிற்றே.. கொஞ்சம் அருளை வருணிக்கலாமே என்று சில வாசகர்கள்(கிகள்) நினைக்கலாம். கொஞ்சம் பொறுத்திருங்கள், நம் கதாநாயகியின் கண்கொண்டு அவனை பார்த்துவிடலாம். ஏன் என்றால் அருள் குளித்து முடித்து வந்துவிட்டான். பொன்னியின் பள்ளி சிநேகிதி வசந்தியின் பெண்ணுக்கு இன்று திருமணம். கல்யாணத்திற்கு அழைத்து சென்று அங்கு வரும் பெண்களை மனதிற்குள்ளே அருளோடு பொருத்தம் பார்ப்பது பொன்னியின் தற்பொழுதைய பழக்கம். இந்த விஷயம் அருளுக்கும் தெரியாமல் இல்லை, இருந்தாலும் பொன்னி சொல்லை தட்டாமல் அவள் கூப்பிடும் திருமணத்திற்கெல்லாம் சென்று கொண்டிருந்தான்.

    அடுத்த அரைமணி நேரத்தில் மண்டபத்தை அடைந்தார்கள் .

    "பொன்னீ.. எங்க வராம போயடுவியோனு நெனச்சேன், வா வா.. வாங்க தம்பி" அரக்கு நிற பட்டுப்புடவையில் அரை கிலோ நகையோடு வாசலில் நின்றுகொண்டிருந்த பெண்மணி ஓடி வந்து பொன்னியை அணைத்துகொண்டாள்.

    "உங்க வீட்ல முதல் கல்யாணம், நான் வராம இருப்பனா வசந்தி. என்னடா ஆண்டியை தெரிலயா?" என்று சும்மா இருந்த அருளை சீண்டினாள் பொன்னி.

    'வீட்டுக்கு வா மா உனக்கு இருக்கு' என்கிற ரீதியில் பொன்னியை முறைத்து விட்டு, வசந்தியை பார்த்து சிரித்தான். "எப்படி இருக்கீங்க" என்று ஒரு பிட்டு போட்டு வைத்தான்.

    பொன்னியும் அருளும் உள்ளே சென்ற பிறகு வசந்தி தன் அருகில் நின்றுகொண்டிருந்த கணவனின் காதை கடித்தாள்.

    "இந்த பையனைத்தான் சொன்னேன்"

    "இப்போ உள்ள போச்சே அந்த தம்பியா..?"

    "ம்.. ம்.. பொன்னிக்கு ரெண்டாவது பையன், மெட்ராஸ்ல தான் இந்த தம்பியும் வேலை செய்யுது"

    "பார்க்க நல்ல களையா லட்சணமா தாண்டி இருக்கிறான்."

    "ஆமா இப்போ எல்லாத்தையும் சொல்லுங்க. நம்ம பொண்ணுக்கு பேசிர்க்கலாம். உங்க மாமா தான் திடுதிப்புன்னு இந்த சம்பந்தத்த கூடி வந்து சொதப்பிட்டார்."

    "சரி விடு வசந்தி, ரெண்டாவது பொண்ணு இருக்க இல்ல.." வெற்றிலையை மென்றபடி சிரித்தார்.

    "அய்ய.. நீங்களும் உங்க.. அடடே வாணி அக்கா வாங்க வாங்க.. எங்க நீங்க வராம போயிடுவிங்களோனு நெனச்சேன் கா." என்று அடுத்த ரவுன்டிற்கு தயார் ஆனாள்.

    முன் இருக்கையில் இருந்த காலி சேர்களில் இரண்டை பிடித்து அருளும் பொன்னியும் உட்கார்ந்தார்கள். அருள் தன பாக்கெட்டில் இருந்த மொய் கவரை தொட்டு பார்த்துகொண்டான். சீக்கிரம் கவர் தந்துவிட்டு பந்திக்கு போ என்று அவனுடைய வயிறு அவனை கெஞ்சிக்கொண்டிருந்ததது. ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு அருளுக்கு கல்யாணம் நடக்க போகிறது என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை..

    அடுத்த அத்தியாயம் (2) ..
     
    Last edited: Mar 19, 2012
    vaidehi71, Caide, vennila92 and 12 others like this.
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma....
    best wishes for this story ma....
    kalayanathuku aprom love panna poranga.... super....
    oru kalakkku kalakunga pa...
    arulmozhi nice name ma.... hero-ine name ???
     
  5. jaga3421

    jaga3421 Gold IL'ite

    Messages:
    224
    Likes Received:
    598
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நன்றி நித்யா & சுகன்யா..
    கதாநாயகி பெயர் தெரிவதற்கு இன்னும் ஒரு அத்தியாயம் காத்திருங்கள் :)
     
  6. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Jagaa,

    Very nice starting........unga story name ennakku romba pidichchurukku.........Apparam Hero name selection also super.....Heroine name therinjukka waiting eagerly...apparam kutti kavidai yooda arambichchadhu, azhagaa irukku... seekaram next post pannunga.....

    Vasupradha.S
     
  7. skvs

    skvs Bronze IL'ite

    Messages:
    432
    Likes Received:
    19
    Trophy Points:
    35
    Gender:
    Female
    epo keten. atleast ipovadhu arambichingale :thumbsup.. mikka nandri. :cheers
    but episodes lam regular a potrunum...
    sucessfull a indha story mudika enoda vazhthukal :)
     
    1 person likes this.
  8. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Aarambame kalakkala irukku. Super!!!!! Waiting for the next episode.

    Appadi enna than nadanthathu Arul herovagara alavukku. Seekiram next pogungapa.......
     
  9. lovelyme

    lovelyme Silver IL'ite

    Messages:
    388
    Likes Received:
    245
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Dear Jaga,

    Super super super.....

    Pinnureenga ponga... I have nothing else to say.... Please don't make us wait much....
     
  10. skvs

    skvs Bronze IL'ite

    Messages:
    432
    Likes Received:
    19
    Trophy Points:
    35
    Gender:
    Female
    hei.. ponniyin selvathoda thaakam dhana.. arulmozhi , ponnithai , kundavai nu peru ellam !! nan kandupichuten heroin name vanadhi a dhan irukum .. haha .. ena correct a

    kalyanam aagave romba time agum nu ninachen..apram dhane love arambikum.. evlo naal wait pananumo therilayenu ninachen. but next episode la sudden marriage a. kalakku kalaku
     
    2 people like this.

Share This Page