1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கற்பனை குதிரை

Discussion in 'Stories in Regional Languages' started by periamma, Aug 29, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கமலினி தன் பள்ளி இறுதி தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாள் .அவள் பாட்டியும் அப்பாவும் வெளியே திண்ணையில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள் அவள் பாட்டி தன் மகனிடம் என்னப்பா உன் மகள்படிப்பு முடியப் போகுது .சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பாரு கல்யாணத்தை முடிச்சிரலாம் என்று சொன்னார்கள் .அம்மா உன் பேத்தி எவ்வளவு சொகுசா உட்கார்ந்து படிக்கிறா பாரு .நாற்காலியில் கூட தலையணை வச்சு சாஞ்சு உட்கார்ந்து இருக்குறா .அவ போற வீட்லயும் இப்படி வசதியாக வாழ வேண்டும் .அதனால பொறுமையா மாப்பிள்ளை தேடணும்னு பதில் சொல்றார் .

    இதெல்லாம் கேட்டுகிட்டு இருந்த கமலினிக்கு சிரிப்பு வருது .கொஞ்ச நாள் கழித்து ஒரு மாப்பிள்ளை ஜாதகம் கிடைக்க பொருத்தம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் .மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகம் பார்க்கிறார் .கமலினி அப்பா அவள் பாட்டியிடம் விவரம் சொல்லி அபிப்பிராயம் கேட்கிறார் .உடனே பாட்டி ஏம்ப்பா அந்த பையன் ஊர் பட்டிகாடுல்லா .அங்க போய் இவ எப்படி இருக்க முடியும்னு கேட்க ,அதற்கு அவர் அம்மா அந்த மாப்பிள்ளை பையன் வெளியூர்ல தான் வேலை பார்க்கிறார்.அதனாலே அவங்க ஊருக்கு எப்பவாது பண்டிகை விசேஷங்களுக்கு தான் போவாங்க .அதனாலே கவலைப் பட வேண்டாம்னு அம்மாவை சமாதனப் படுத்துகிறார் .

    இதற்கிடையில் கமலினி கற்பனை குதிரையை தட்டி விட ஆரம்பிச்சிட்டா .நாவல்களில் வரும் ஜமீந்தார் வீடு போல பெரிய வீடா இருக்கும் .பெரிய முற்றம், நீளமான திண்ணைகள் ,ரெண்டு மூன்று ஹால்கள் அதற்கு அடுத்து பெரிய சமையல் அறை ,வீட்டுக்கு பின் புறம் கிணறு, செடி கொடிகள் ,வேலைக்கு நெறைய ஆட்கள், காடு கழனி தோப்பு துரவுன்னு நெறைய இருக்கும்னு சந்தோஷப்பட்டாள் .ரெட்டை மாடு பூட்டிய வில்வண்டி உள்ளே பட்டு திண்டுகள் அப்படி இப்படின்னு நினைப்பை ஓட்டி கிட்டு இருந்தா .நல்ல வேளை அப்ப வகை வகையான கார்கள் இல்லை .அதனாலே அவ அந்த பக்கம் போகலை .நாட்கள் கடந்தன .கல்யாணமும் முடிந்தது .மாப்பிள்ளை வீட்டுக்கு மறு வீடு சென்றார்கள் .ஊரை பார்த்ததும் அப்படியே திகைச்சு போய் நின்னுட்டா .ஊரை சுற்றிலும் ஒரே பனை மரங்கள் .மொத்தமே ஐம்பது வீடுகள் தான் அங்கே இருந்தன .தன் புகுந்த வீட்டு வாசலில் இறங்கியதும் முகம் வாடி போய் விட்டது .கற்பனையில் வந்த வீட்டுக்கும் இதற்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லையே .கதைகளை படிச்சிட்டு நாம் இப்படி கற்பனை செய்திருக்கோமே என்று தன்னை தானே நொந்து கொண்டாள் .புதிய வாழ்வுக்கு தன்னை மாற்றி கொண்டால் .

    தலைமுறைகள் மாறினாலும் புத்தகங்களை படித்து விட்டு கற்பனை செய்வது மாறவே இல்லை .அந்தந்த காலகட்டங்களில் உள்ள நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் இவர்களை போல் மாப்பிள்ளை வேண்டும் என்ற நினைப்பும் மாறவில்லை .நான் சொன்னது சரியா ?


    இந்த கதையை படிக்காதவர்கள் படித்து பின்னூட்டம் தரவும் .
     
    GoogleGlass and Caide like this.
    Loading...

  2. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    haha correct en vishyathula romba correct :D oru oru book padichitu veeda pathi ninaikirano ilayo character than yosipen wah ipdi nalla character husband, MIL,SIL,FIL kidaipangalanu.. oru sila time iyiyo ipdi oru husband, MIL,SIL,FIL kidaika kudathunu siripu than :D book analum heroes heroines pathu solvangale "you are driving me crazy"nu antha mari oru oru book paichitu na solatha korathan :D apdi padichu yosichi inum padichikitu loose aagama irundha seri :D
     
    periamma likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Caide Thanks for sharing your views
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அம்மா கதை அருமை :)

    இன்று வரை அதே கதை தான்மா, கதை மாறவில்லை,
    காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறாமல் இருப்பது
    கதாபாத்திரங்கள் நாமே நம் எதிர்பார்ப்புகளுடன் :)
     
    periamma likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GG neenga ippa than intha kathaiyai padichingeela.manitha iyalbu maarave illai
     
    GoogleGlass likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    aamaammaa - missed it somehow
     

Share This Page