1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கற்பனையும், காத்திருப்பும்

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Apr 19, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நாகபுரியின் ஆரஞ்சுப் பழம் உந்தன் முகமோ?
    நாகலிங்கப்பூ நினைவு முகர்கையிலே வருமோ?
    கருநாவற்பழம் இரண்டு கொண்டவை உன் விழியோ?
    கருமை அடர்ந்து மையாகக் காணும் உன் முடியோ?

    அழகான வண்ணத்துப் பூச்சிகள் பலவற்றை,
    ஆங்காங்கே செல்கையில் நான் நோக்கியதுண்டு.
    அவை அத்தனையும் சேர்ந்தாலும் உன் தோற்றத்தில்,
    அடிபட்டுப் போகும் என நான் நினைத்ததுண்டு.

    இனிப்பான கரும்பெல்லாம் உன் மழலை முன்னாலே,
    இகழப்பட்டதால், வாடி, தலை சாய்ந்திருக்குமே!.
    கசப்பான நினைவெல்லாம் உன் முகம் கண்டாலே,
    கசிந்தோட, அதனால் என் மனமும் மகிழுமே!

    நீ பிறக்கும் முன்பே ஒரு நெடும்பா இங்கே,
    எழுதப்பட்டு, உனக்காகக் காத்திருக்கிறது.
    பன்மடங்கு அதை விஞ்சும் வெண்பா நீயும்,
    வருகின்ற நாளை மனம் விழைந்திருக்கிறது.

    உன் இயல்பில் நீ இருப்பதே எனக்குப் போதும்,
    அதிலேயே, எனக்கெல்லாம் நிறையும் எப்போதும்.
    என் கற்பனை ஈடேறும் அந்நாள் வந்திடும் போது,
    எனை விடவும் மகிழ்ந்திடுவார் உலகினில் ஏது?
    -ஸ்ரீ
     
  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Ini pirakkapogum andha jeevanukkana ungal kavithai miga azhagu!!!
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your fast and nice feedback Malar. -rgs
     
  4. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    முத்து முத்து மகளே
    முகம் காணாத மகளே
    மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
    கற்பனையில் பெற்ற கண்மணியே
    நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்

    எழுதுகிறேன் ஒரு கடிதம் - பாடல் தான் நினைவுக்கு வருகிறது. மழலையை போன்ற அழகிய கவிதை .
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your nice feedback Latha. -rgs
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வரப்போகும் மழலைக்காக வந்துவிட்ட கவிதை.....அழகிய பிரசவம் :thumbsup
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your sensible feedback Devapriya. -rgs
     
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Sri,azhagana varigal....

    mazhalai enraikkume ellorukkum aanandhamana vishayamdhan...
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your nice feedback Prana. -rgs
     

Share This Page