1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice
 2. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 34

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Jan 31, 2011.

 1. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,254
  Likes Received:
  101
  Trophy Points:
  258
  Gender:
  Female
  பகுதி முப்பத்தி நாளில் ஒன்று : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி :


  பதினோராம் நாள் யுத்தம் :


  பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் களம் இறங்குவதாக சொன்னதின்படி கர்ணன் களம் இறங்கினான்.

  கர்ணனை பிரதம தளபதியாக்க ஒரு சாரர் கருத்து தெரிவித்தாலும், கர்ணன் குரு துரோணர் தளபதியாக இருக்கட்டும் எனக் கூறினான். எனவே பதிரோனாம் நாளில் இருந்து பதினைந்தாம் நாள் வரை துரோணர் தளபதியாக இருந்தார். துரியோதனன், கர்ணன் மற்றும் துரோனரிடம் எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள் என வேண்டினான்.

  தருமரை உயிருடன் பிடித்து விட்டால், அவரை மீண்டும் சூதாட வைத்து, தோற்கடித்து, ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.

  இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது. அதனால், தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துரோணர் சகட வியூகம் வகுத்தார். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

  கர்ணன் களம் இறங்குகிறான் என்றதும், கலக்கத்தில் இருந்தனர் பாண்டவ படையினர். கண்ணனின் ஆலோசைனையின் பேரில், பீமனின் மகனான கடோத்கஜனை போரிட அழைத்தனர்.

  கர்ணன் கால பதித்த இடம் எல்லாம் காலனின் ஆட்சியாகவே இருந்தது. அவன் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.

  அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார். இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான். பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.

  அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான். இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான். சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.

  இந்நிலையில் சூரியன் மறைந்தான். போர் நின்றது.

  பனிரெண்டாம் நாள் யுத்தம்:

  தருமரை உயிருடன் பிடிக்க வேண்டுமானால், அர்ஜுனர் அவர் பக்கம் இருக்கக் கூடாது எனவே அவனை திசை திருப்ப வேண்டும் என திட்டம் தீட்டி, திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மன் மற்றும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் ஆகியோர், தென்திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவாய் விட்டனர். அர்ஜுனன், பாஞ்சால நாட்டு மன்னன துருபதனின் சகோதரன் சத்தியஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சவால் விட்டவர்களை எதிர்க்கச் சென்றான்.

  மும்மரமாக நடைபெற்ற அன்றைய போரில் கண்ணனின் திறமையால், அர்ஜுனனின் ரதம், யுத்தகளத்தின் அனைத்து பகுதிகளிலும் சுழன்றது. கௌரவர்களும் வெற்றி அல்லது வீரமரணம் எனப் போரிட்டனர். திரிகர்த்த வேந்தனை வெல்ல முயற்சித்து, அது பலிக்காததால், வாயு அஸ்திரத்தை ஏவி, அனைவரையும் வீழ்த்தினான் அர்ஜுனன். அதிலே சுசர்மன் மட்டும் தப்பினான்.

  அந்தப் போரை முடித்துக் கொண்டு அர்ஜுனன், தருமரைக் காக்கும் பொருட்டு, துரோணரை எதிர்த்தான். துரோணரின் திறமை அன்றைக்கு அனைத்துப் போரையும் கவர்ந்தது. தன்னை எதிர்த்த அனைவரையும் அவர், தன் ஆற்றல் முழுவதும் காட்டி எதிர்த்தார். துரோணரை முறியடிக்க திஷ்டத்துய்மன் வந்தான். தன் மரணம் இவன் கையில் என அறிந்திருந்த துரோணர், அவனைத் தவிர்த்தார்.

  அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமை முழுதும் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாக இருந்தது. முடிவில் சத்தியஜித் மரணத்தை தழுவினான். அதைக் கண்ட விராட மன்னனின் தம்பி சதாணீகன் துரோணரை எதிர்க்க கோபமுற்ற துரோணர், ஒரே அம்பில் அவன் தலையைக் கொய்தார்.


  துரோணர், தருமரை சிறை பிடித்து விடுவாரோ என பயந்த பீமன் அங்கே வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளைப் பந்தாடினான் பீமன்.

  அங்கே பகதத்தன் தன் சுப்ரதீபம் எனும் யானையில் வந்து பீமானுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரைத் தகர்த்தது. பின்னர் அது பீமனை தன் துதிக்கையால் தூக்கி எரிய முற்பட்டது. அப்போது பீமன் அதன் மர்மஸ்தானத்தில் தாக்கினான். அந்த வலியிலும் அது அவனைக் காலால் மிதித்துக் கொள்ள முற்பட்டது. ஆனாலும் பீமன் அதனிடம் இருந்து தப்பினான். பின்னர் அந்த யானை அபிமன்யுவின் தேரை தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேறும் அதே நிலைக்கு வந்தது.

  யானையின் அட்டகாசம் கண்ட அர்ஜுனன் அங்கே விரைந்து வந்தான். அர்ஜுனன் பகதத்தனுடன் கடும் போர் புரிந்தான். பீமன் அந்த யானையின் மீது பாய்ந்து அதனுடன் சண்டை இட்டான். அர்ஜுனன் தன் ஒரு அம்பால் யானையின் கவசத்தை உடைக்க, அதன் பின்னர் பீமன் அந்த யானையைக் கொன்றான்.

  ஒரு கடுமையான போருக்கு பின்னர், அர்ஜுனன் எய்த ஒரு அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்றது.

  பின்னர் அர்ஜுனன் திருதிராஷ்டிர மன்னனின் மைத்துனர்கலான அசலன், விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அது அர்ஜுனனின் ஒரு ஒளிமயக் கணையால் நீங்கியது. சகுனி பயந்து வேறிடம் நோக்கி நகர்ந்தான். தருமரை பிடித்து விடலாம் என்ற துரோணரின் கனவு பலிக்கவில்லை.

  கௌரவர்கள் கலங்க, பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் ஒரு முடிவுக்கு வந்தது.

  அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன், துரோனரிடம் சென்று வாக்கு தவறியதாக கடுமையாகப் பேசினான். இதனால் துரோணர் கோபம அடைந்து, அவர்களுடன் சண்டை வேண்டாம் என ஆயிரம் முறை சொன்னபோது கேட்காத நீ இப்படி பேசாதே எனக் கூறினார். அதைக் கேட்ட துரியோதனன் பணிந்து அவரிடம் எப்படியாவது தருமரைப் பிடித்துத் தாருங்கள் என வேண்டினான்.

  அதைரியப்படாதே துரியோதனா.. நாள் ஒரு உன்னதப் போர் முறையக் கையாளப் போகிறேன். நீ எப்படியாவது அர்ஜுனனை இங்கே இல்லாமல் செய்துவிடு. பின்னர் தருமரை நான் உனக்கு பிடித்துத் தருகிறேன் என்றார்.

  துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்


  பதிமூன்றாம் நாள் யுத்தம் :


  துரோணர் தன் படைகளை பத்மவியூகத்தில் அமைத்தார். இருப்பதிலே மிகவும் சிக்கலானது இது. அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் மட்டுமே அதை உடைக்கத் தெரியும், அவர்கள் அங்கே இல்லை. துரோணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, துரியோதனன் ஆட்கள், தென்திசையில் அர்ஜுனனுக்கு அழைப்பு விடுக்க, அவன் அங்கே செல்கிறான்.

  அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. எனவே, நான்கு பாண்டவ சகோதரர்களும் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணர் இல்லாததால் அபிமன்யூவைத் தலைமையாகக் கொண்டு சக்ரவியூகத்தில் நுழைய முடிவுசெய்தனர்.

  வெகுவிரைவில் அபிமன்யூ சக்ரவியூகத்தில் நுழைந்தான். ஆனால் பாண்டவர்களின் திட்டப்படி மற்ற வீரர்கள் உள்ளே நுழையும் முன்னே, வியூகம் உடைபட்ட இடம் அடைக்கப் பட்டது ஜயத்ரதன் மூலம். சிவபெருமானிடம் பெற்ற வரத்தின் படி, ஒரு நாள் முழுதும் பாண்டவர்களை எதிர்க்கும் வலு அவருக்கு உண்டு.

  அதனால், அபிமன்யு தனி ஒருவனாய், துரோணர், கிருபர், கர்ணன், அசுவத்தாமா, துரியோதனன் ஆகியோரை எதிர்த்தான். ஆனால் விரைவிலேயே நேர்வழியில் அவனுடன் போராடி வெல்ல முடியாது என்பதை அறிந்த துரோணர், பின்னிருந்து அவனைத் தாக்கினார். அவனது தேர்க் குதிரைகளை வெட்டினார். அதைக் கண்ட அவன், வாளையும், கேடையத்தையும் எடுத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான வீரர்களை வெட்டி வீழ்த்தினான். துரோணர் பின்னிருந்து அவன் வாளை உடைக்க, கர்ணனும் அவ்வாறே அவன் கேடையத்தை உடைத்தான்.

  எல்லாம் இழந்தாலும், நெஞ்சுரம் இழக்காது, ஒரு கதாயுதத்தை கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான். யுத்த விதிகளுக்கு புறம்பாகவே அபிமன்யு அழிக்கப்பட்டான்.

  தென்திசையில் எதிரிகளை அழித்துத் திரும்பிய அர்ஜுனன் இதைக் கேட்டு மயங்கி விழுந்தான். இதன் மூல காரணம் ஜயத்ரதன் என அறிந்தான். அடுத்தநாள் அந்தி சாய்வதற்குள், அவனை மடிப்பேன் அல்லது என் உயிர் மாய்ப்பேன் இது சத்தியம் என தன் காண்டீபத்தின் மீது சத்தியம் செய்தான். அப்போது அந்த ஒலியில பூமியே அதிர்ந்ததாய் கூறுவதும் உண்டு.
   
  Loading...

 2. Yashikushi

  Yashikushi Moderator IL Hall of Fame

  Messages:
  23,738
  Likes Received:
  8,583
  Trophy Points:
  615
  Gender:
  Female
  இரும்புக் கரங்கள் ஒன்றை ஓன்று முட்டி மோதும் வீரக் காட்சி
  போர் மரபுகள் மீறி உயிரைச் சாய்த்த கொடிய காட்சிகள்
  வேணி
  நாள்வாரியான யுத்த முனைப்புக் காட்சிகள்
  சுருக்கமாய் சொல்லப் பட்ட விதம் அருமை.

  மகாபாரத யுத்தம் நடந்தது மார்கழி( தனுர் ) மாதத்து அமாவாசையில்


  [​IMG]
  [​IMG]
   
  Last edited: Jan 31, 2011
 3. laddubala

  laddubala Gold IL'ite

  Messages:
  4,035
  Likes Received:
  80
  Trophy Points:
  128
  Gender:
  Female
  பதினோராம் நாள் கர்ணனது வீரத்தால் சரிந்த பாண்டவ படைகள், பின் வந்த நாளில் தருமரை பிடிக்க கௌரவர்கள் செய்த பிரயத்தினங்களும்...அது நடவாது.பதிமூன்றாம் நாள் வீர மைந்தன் அபிமன்யுவை அதர்ம வழியில்
  கொன்ற ஜாம்பவான்களும், காண்டீப ஒலியும் என அனைத்தையும் கூறிய விதம் அருமை..

  போர் நெறி தவறாது சண்டையிட வேண்டும் என்பதினை ஏன் குருமாரும் ஏனைய தீர மன்னர்களும் தவறினார்கள்???
  அப்படி அவர்கள் செயாமல் இருந்திந்தால் ஒரு வேலை அபிமன்யு சக்ரவியுகத்தில் இருந்து தப்பி இருப்பானா???


  சரோஜ் அக்கா உங்கள் படங்கள் அருமை
   
 4. devapriya

  devapriya IL Hall of Fame

  Messages:
  10,369
  Likes Received:
  1,396
  Trophy Points:
  438
  Gender:
  Female
  அருமையாக கொண்டு போகிறீர்கள் வேணி...துரோணருக்கு மதிப்பு கொடுத்து அவர் தலைமையில் போரிட ஒத்துக்கொண்டது கர்ணனின் சிறப்பு.:thumbsup:thumbsup

  வேணிம்மா கண்ணன் யுத்தக்களத்தில் இருந்தும் போர் புரியாமல் இருந்தது ஏன்? கர்ணனும் துரோணரைப் போல விதிகளை மீறி அபிமன்யுவை அழித்தது ஏன்? ஜயத்ரதன் வெற்றியடைய வேண்டும் என்பதனால் இப்படியெல்லாம் அமைந்ததா?
   
 5. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,254
  Likes Received:
  101
  Trophy Points:
  258
  Gender:
  Female
  அன்புள்ள ரோஜா,

  விட்டுப் போன விவரங்களை விளக்கமாகத் தரும் உங்கள் பாங்கு.. அது எனக்கு மிகப் பிடித்தம். கூடவே நீங்கள் இணைத்திருந்த அந்தப் படமும் அருமை.

  நாள் தவறாத உங்கள் வருகைக்கும், ஊக்கம் தரும் வரிகளுக்கும் நன்றி தோழி.
   
 6. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,254
  Likes Received:
  101
  Trophy Points:
  258
  Gender:
  Female
  அன்புள்ள ஜெயா,

  நெறி தவறாமை என்பது பாரதத்தில் இல்லவே இல்லை ஜெயா. எல்லாமே தவறித்தான் போய் இருக்கும்.

  ஆரம்பம் முதலே... அனைத்தும் அப்படித்தான் இருக்கும். படிக்கவே தயக்கம் வரும். நிறையப் பேர் இருப்பதால், நினைவில் கொள்வதும் சிரமமாய் இருக்கும்.

  இதிலே நிறைய.. கிளைக் கதைகள் வேறு வரும். ஒரு கதாபாத்திரம் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு கிளைக் கதையாவது இருக்கும்.

  நெறி தவறி, முறை தவறி, ஒருவர் ஏதாவது செய்ய, அதற்கு அவருக்கு ஒரு சாபம் இருக்கும். இதில் நமது கண்ணன் கூட விதிவிலக்கு அல்ல. அவனுக்கும் சாபம் வந்தது.

  சிரிக்கக் கூடாத இடத்தில் ஒரு பெண் சிரித்த சிரிப்பு அதுதான் பாரதத்தின் கதை. ராஜசூயயாகம் நடந்த சபையில், பாஞ்சாலி, துரியோதனனை பார்த்து சிரித்து ஏளனச் சிரிப்புதான் இந்த சண்டைக்கே காரணம்.

  அது இல்லாமல் இருந்திருந்தால், தருமரின் அந்த யாகத்ததோடு முடிந்து போயிருக்கும் கதை.

  என்ன செய்ய??? கேட்டால், தருமம் ஜெயிக்க வேண்டும்.. அதற்காய் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என ஒத்தை வரியில் முடித்து விடுவார்கள். :bonk
   
 7. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,254
  Likes Received:
  101
  Trophy Points:
  258
  Gender:
  Female
  போர் வரப்போகுது-ன்னு முடிவு ஆனதும், பாண்டவர்களும் கௌரவர்களும் தங்களுக்கு படை சேர்க்க கெளம்பி இருப்பாங்க. ஒரே நாள்ல, துரியோதனனும், அர்ஜுனனும், கண்ணன் கிட்டே போய் இருப்பாங்க உதவி கேட்க.

  கண்ணன் தூங்கிட்டு இருப்பார். துரியோதனன் கண்ணனின் தலைப் பக்கம் உக்காந்திருக்க, அர்ஜுனன் அவர் கால் பக்கம் உக்காந்திருப்பான்.

  கண்ணன் கண் விழிச்சதும் முதலில் அர்ஜுனனை தான் பார்பார். ஆனா துரியோதனன் தான் மொதல்ல வந்திருப்பான். அப்போ கண்ணன் அர்ஜுனனுக்கு தான் முதல் உரிமை குடுப்பார். செலக்ட் பண்ண. ஆப்ஷன்ஸ் இதுதான்.

  சண்டை போடும் அவரோட படைகள் ஒரு பக்கம். சண்டை போடாம, ஆயுதம் ஏந்தாம இவர் ஒரு பக்கம்.

  அர்ஜுனனின் தேர்வு கண்ணன் தன் பக்கம் அப்டீன்றது. துரியோதனனுக்கு மோதல் உரிமை தந்திருந்தாக் கூட அவன் படைகளைத தான் கேட்ருப்பான்.

  கர்ணன் ஏன் அப்படிப் பண்ணினா-ன்னா... துரோணர் அப்படி செய்தார், கர்ணனை அப்படி செய்யத் தூண்டினார். கர்ணன் அப்படி செஞ்சது ஜயத்ரதன் வெற்றிக்கு இல்லை. துரியோதனன் வெற்றிக்காக.

  நன்றி பிரியா உனது வருகைக்கும், பதிவுக்கும்.
   
 8. Vaishnavie

  Vaishnavie Gold IL'ite

  Messages:
  2,914
  Likes Received:
  59
  Trophy Points:
  130
  Gender:
  Female
  abimanyu va rules ah meeri konrukangala...

  nerla pakura mathiriye iruku ka...
   
 9. natpudan

  natpudan Gold IL'ite

  Messages:
  8,420
  Likes Received:
  234
  Trophy Points:
  183
  Gender:
  Male
  விவரமான யூகமே வ்யூகமானதோ?

  வியூகம் வெற்றி அடைந்தால் வெற்றி வியூகம் இல்லையேல் சோகம் தான்.

  சோகம் கவுரவர்களுக்கு என வித்தித்திருக்கையில் எந்த வியூகம் வகுத்ததென்ன பயன்?

  கர்ணன் போரிட்டால் என்ன மற்றவர்கள் போரிட்டால் என்ன,
  தோல்வி தான் கவ்ரவர்களுக்கென நிச்சயிக்கப் பட்டு விட்டதே...
   
  Last edited: Feb 16, 2011

Share This Page