1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

கரை மேல் தெறித்த அலைத் துளிகள் -.

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Feb 11, 2012.

 1. mathangikkumar

  mathangikkumar Platinum IL'ite

  Messages:
  1,438
  Likes Received:
  1,656
  Trophy Points:
  283
  Gender:
  Female
  சாப்பாடு சுப்புடு  [​IMG]


  ஆங்கிலத்தில் லிவிங் டு ஈட் , ஈடிங் டு லிவ்னு இருக்கு , அதேப் போல நம்ம ஊரிலையும் சாபிட்ரதுக்குன்னே உயிர்வாழற சில சாப்பாட்டு ராமன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !


  ஆனா எத்தனப் பேருக்கு நம்ம சாப்பாடு சுப்புடுவத்தெரியும்?


  எங்கம்மா கீரைப் பண்ணிப் போட்டா, பன்னி மாதிரி தின்றியே, இப்படி சாணி மாதிரியா ஒருத்தி கீரைப் பண்ணுவா? இது வேற யாரும் இல்லை, பக்கத்துக்கு வீட்டு பன்னீர்செல்வம் தன மனைவி பங்கஜாவத் தான் இப்டி அன்பாத் திட்டறாரு. பங்கஜம் மனசுக்குள்ள, ' ஓஹோ , சாணியச் சாப்பிட்டு இருக்கார் போல இருக்கு.'

  [​IMG]


  நம்ம கடைசி வீட்டு கருனாகரனோ , பொண்டாட்டி கனகாவை, 'என்ன சமையல் பண்றே, நீ, கடுகு சரியாவே வெடிக்கலை, அதுக்குள்ள என்ன அவசரம்'? கனகா மனசுக்குள்ள, ' உம் மூஞ்சிதான் கடுகு வெடிச்சா மாதிரி இருக்கே, நிஜக் கடுகு வெடிச்சா என்ன, வெடிக்காட்டி என்னன்னு முனு முனுப்பா .

  அஞ்சா நம்பர் அம்புஜதுக்கோ அஞ்சும் மூணும் அடுக்கா வேணும். இட்லின்னா தொட்டுக்க வெங்காயம்- தக்காளி சட்னி, மொளகாப் பொடி- நல்லெண்ணெய், தேங்கா சட்னி , அப்புறம் வெங்காய சாம்பார் மைல்ட்டா , இதுல ஒண்ணுல ஒண்ணு கொறஞ்சாலும் அவ்ளோதான், அவளை சுத்தி இருக்கறவா எல்லாரும் காலி . தெனம் அதே மாதிரி வேணும்.

  [​IMG]

  கோடி வீட்டு கோகிலாக்கு கொறச்சல் ஒண்ணும் இல்ல இருந்தாலும் ஏதாவது சொட்ட சொல் சொல்லிண்டே சாப்பிடணும், அது அவ மருமக எவ்ளோதான் நல்ல நள பாகமா சமச்சிருந்தாலும் அது சரி இல்ல, இது சரி இல்லன்னு சொல்லி சாப்பிட்டா தான் சாப்பாடு செரிக்கும்! மருமக நல்லா சமைக்கிரான்னு சொல்லிட்டா தலக் கணம் வந்துடும்னு.

  பந்தா பரமசிவமோ பந்தில உக்காந்துன்ன்டு பட்டய கிளப்பறதத் தவிர வேற வேலையே எனக்கு இல்லன்னு அதே தொழிலா இருப்பார்.அவர கவனிக்கலைன்னா , போறும் யாரையும் சாப்பிட விட மாட்டார்., எப்படியாவது அமக்களம் பண்ணி ஒரு வழி பண்ணிடுவார். அவர் கூட ஒக்காந்து சாப்பிடவே யாரும் யோசிப்பார்கள்.


  [​IMG]


  சில ஏமாந்த ஏகாம்பரங்களும் இருக்காங்க , போட்டத தின்னுட்டு பேசாம போற பார்டிகள், அது உப்பு கொரச்சலோ, ஜாஸ்தியோ, ஊசிப் போனதோ, வெந்ததோ, அரைகுறை வேக்காடோ, ஏதோ இந்தப் பொழுதுக்கு, வயிறு வைகுண்டம்னு .இவர்கள் தான் சரி , எந்தக் கொறையும் இல்லாம தேமேன்னு!

  அடுத்த வீட்டு ஐயாசாமியோ , குத்தம் கண்டு பிடிக்கரதோட இல்லாம, கொறை சொல்லியே வயித்த நிரப்பறது. எப்படின்னா, 'கொஞ்சம் உப்பு ஒரு கல் தூக்கலா இருந்தா தூக்கிட்டு இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை, வாயில வக்க வழங்கலன்னு சொல்ல முடியாது'.

  [​IMG]


  தண்டச் சோறு தண்ட பாணியோ,' ஊருல கல்யாணம், மார்ல சந்தனம்னு' எப்ப யார் யார் வீட்டுல விசேஷம் வரும், எப்படி போய் பந்தில ஒக்காரலம்னு . தண்டத்துக்கு சாப்பிடதோட இல்லாமல் , 'போன வாரம் புதுக்கோட்டை புருஷோத்தம வீட்டு கல்யாணத்துல போளி போட்டாங்க பாரு, ஆஹா, என்ன ருசி, என்ன மனம், சொட்ட சொட்ட நெய்யை விட்டு, அந்த ருசி இன்னும் வாயிலேயே இருக்கு! அப்டின்னு வாழப் பழத்துல ஊசி ஏத்தறா மாதிரி, இந்தக் கல்யாணத்துல போளி அவ்ளோ ஒண்ணும் சொல்றா மாதிரி இல்லன்னு'


  நம்ம கலக்கல் பாட்டிகல்யாணியோ , இதெல்லாம் என்ன சமையல் ,சாப்பாடு, அந்தக் காலத்துல நானும் என் மாமியாரும் எட்டூருக்கு வாசனை வரா மாதிரி சமைப்போம், இதெல்லாம் ஒரு சாப்பாடா? அப்டின்னு சொல்லி வெறும் பாயசத்தையும், வடையையும் சாப்பிட்டு வயித்தை நிரப்பிண்டு போவா.

  [​IMG]

  அடுத்தது நம்ம பிரசாதம் பாண்டி , அவன் கோயில் பிரசாதம் சாப்பிட்டே வளர்ந்தவன் , அவனை நடு ராத்திரி எழுப்பி கோயில் பிரசாதம்னு கோலி குண்டே கொடுத்தாக் கூட வாயத் திறப்பான். அவ்ளோ பித்து பிரசாதம் மேல.

  டயர் வீட்டு தம்பி தொரைவீட்டுல, டன்லப், சீயட் ,எம் ஆர் எப் னு ஒரு டயர் பாக்டரியே ஆரம்பிக்கலாம் , என்னாத்த தான் சாப்பிடுவாங்களோ , பூமியே அதிரும் , வயிறே வைகுண்டம், சோறே சொர்க்கம் னு ஒரு ஸ்லோகன் போடலாம் அவங்க வீட்டு மனிதர்களுக்கு!

  [​IMG]


  இப்படிஎல்லாம் சில பார்டிகள் இருந்தாலும் கோடி வீட்டு கல்யாணம் பொண்டாட்டி காஞ்சனா சுமாராத்தான் சமப்பா, ஆனா, கல்யாணம் புகழுவான் பாருங்க, போரவரவங்களுக்கேல்லாம் ,'போறும் போறும்னு' சொல்றா மாதிரி ஆயிடும், போராதக் கொறைக்கு, இன்னும் சாப்பிடுங்கன்னு பலவந்தப் படுத்தி போடுவான். போட்டத வீணாக்க வேண்டாமேன்னு, இலையில இருக்கறதைக் காலிப் பண்ணா ஆபத்து தான். வாயே அடைச்சுப் போயிடறா மாதிரி போட்டுடுவான், சாப்பிடற ஆளுக்கு முழிப் பிதுங்கி போயிடும்.

  வெள்ளைச்சாமி பொண்டாட்டி வெண்ணிலாவீட்டுல, வெண்டக்கா அப்டியே பச்சையா இருக்கும்,ரசத்துல மொளகாப் பொடி வாசனையே போயிருக்காது, சாதம் என்னமோ சண்டப் போட்ட புருஷன் பொண்டாட்டி மாதிரி விரச்சுண்டு இருக்கும். அதுல சாம்பாரை வுட்டா உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லன்னு அது பாட்டுக்கு ஓடிண்டு இருக்கும். சரி எதுவும் சரியில்லேன்னு வெறும் மோரைக் குடிக்காலாம்னு பார்த்தால், அதுல கடல் தண்ணிய கொண்டாந்து கலந்தாபோல உப்பு கரிக்கும், என்னவோ பூச்சி மருந்து சாப்டுட்டு வயித்தக் கழுவ ஆஸ்பத்ரியில கொடுக்கற சலைன் வாட்டர் மாதிரி!

  [​IMG]

  'நைட்டி நளினி' ( கார்த்தாலை, மத்யானம் ராத்திரி எப்பவுமே நைட்டி தான் அவளுக்கு ஏன்னு கேட்டா, அது தான் கம்பார்டப்லா இருக்காம்! இவளும் சீரியல் சீதாவும் பண்ற லூட்டி இருக்கே , அப்பப்பா ! சீரியல் சீதா ஒரு சீரியல் விடாம பாத்துட்டு, சீரியல் பாக்காதாவங்களுக்கெல்லாம் ஒரு தனி டைமே ஒதுக்கி டயலாகெல்லாம் அப்படியே ஒண்ணு கொறையாம அதே பாணில சொல்வா ! அதோட கூட யார் என்ன மாதிரி ட்ரஸ் போட்டுண்டு இருந்தாங்க, கார்ல யார் எங்க ஒக்காந்தாங்க .அதனாலேயே அவளுக்கு ஏகப்பட்ட மவுசு.இன்னும் கேக்கப் போனா , யாரவது நடிகைகள் வரலேன்னா அவளே கூட லாஸ்ட் மினிட்ல நடிக்க வரலாம்.

  சீதாவுக்கும், நளினிக்கும் இடையில என்ன ஒப்ந்தம்னா , சீதா சீரியல் கதை கேட்க வரவங்க எல்லாருக்கும் நளினி சமையல் கலை, சமைத்துப் பார், ருசிக்க- ரசிக்க ன்னு பாக்கிற எல்லா சமையல் நிகழ்ச்சிலேருந்து சில வகையறாக்களை , சமைச்சுக் காண்பிக்க 'எண்டர் தி அடுப்பங்கரை 'என்கிற கிளாஸ் நடத்த ரெகமன்ட் பண்ணனும். நளினிக்கு நேரம் நிறைய இருக்கறதால, எல்லா சமையல் நிகழ்ச்சியையும் ரெகார்ட் பண்ணிபின்னாடி ஒரு ட்ரையல் சமையல் செஞ்சு பிறகு கிளாஸ் எடுப்பா. ​


  [​IMG]
  வாய்ச்சவ்டால் வைத்தியும், பஞ்சாமிருத பழனிச்சாமியும் ,புளியோதரை புருஷோத்தமனும் ஒரு கூட்டணி.விதிக்கு எப்பவும் இவங்க ரெண்டு பேரையும் கிளறி விட்டு வெடிக்கப் பாக்கணும், அதுக்கு மத்யஸ்தம் பண்ண, மெனு மகாதேவனை கூப்பிட வேண்டியது.

  வைத்தி சொல்வான் ,' முருங்கக்காய் சாம்பாருக்கு, கோஸ் கறி தான் நல்லா இருக்கும் '

  பழனிச்சாமியோ ,'கோஸ் கறி நல்ல காம்பிநேசனே இல்ல, அதுக்கு, கத்தரிக்காய் எண்ண கறி தான் மாட்சிங்'

  . இதுக்கு நடுல புருஷோத்தமன்,' நீங்க ரெண்டு பேருமே தண்டம் ஒய் , முருங்கக்காய் சாம்பாருக்கு, உருளக் கரக் கறி தான் பெஸ்ட் '
  இதுக்கு மெனு மகாதேவன் வந்து பழனிச்சாமிய என்டார்ஸ் பண்ணிட்டு , மத்த வகைகளையும் சொல்வான்.

  லெமன் ரைசுக்கு உருளைக் கிழங்கு காரக் கறி, வடாம் . புளியோதரைக்கு , உருளை சிப்ஸ் , கூட வெள்ரிக்காய் தயிர் பச்சடி.
  பிசிபேலாஹூளிக்கு வேல்ரிக்கை தயிர் பச்சடி, அரிசி அப்பளாம் பொரிச்சது .

  கொண்ட கடலை பூசணிக்காய்க் கூட்டுக்கு, வெண்டக்காய் மோர்குழம்பு.

  வத்தக் குழம்புக்கு சுட்ட அரிசி, உளுந்து அப்பளாம் .

  தயிர் சாதத்தில , வெள்ரிக்காய் அப்படியே சின்ன சின்ன துண்டா நறுக்கி போட்டு, கூடவே கொஞ்சம் மாதுளம்பழம் ஒடச்சுப் போட்டு,மாங்காயை பொடிப் பொடியா நறுக்கி போட்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், கடுகு தாளிச்சுப் போட்டா ஆஹா, இன்னிகேல்லாம் நாக்குல தண்ணீ ஊர்றிண்டே இருக்கும்.


  [​IMG]


  அடைக்கு அவியல் , வெண் பொங்கலுக்கு , தயிர் பச்சடி / கத்ரிக்கா , வெங்காயம் தக்காளி கொஜ்ஜு/தேங்காய் சட்னி , உப்மாக்கு தேங்காய் சட்னி.

  குலாப் ஜாமுனுக்கு கூட ஐஸ் க்ரீம் . கேரட் ஹல்வாக்கு , குலாப் ஜாமுன் / ஐஸ் க்ரீம் .

  கச்டர்டுக்கு ஐஸ் க்ரீம் / ஜிலேபி ( நார்த் இந்தியன் )

  என்ன போறுமா லிஸ்ட்டு?

  உங்களால முடிஞ்சா கொஞ்சம் உங்களோடதையும் சேருங்க பார்க்கலாம்!

   
  1 person likes this.
  Loading...

 2. knbg

  knbg Moderator Staff Member IL Hall of Fame

  Messages:
  5,815
  Likes Received:
  5,605
  Trophy Points:
  455
  Gender:
  Female
  அன்புள்ள மாதங்கி ma'am......
  கம கமன்னு நறுமணம்......உங்கள் பதிவில்......:)
  என் vote முருங்கை காய் சாம்பாருக்கு உருளை கிழங்கு தான்.....:thumbsup
  இதே உருளை ரோஸ்ட்....வெந்தய சாம்பார் கூடவும், தக்காளி சாம்பார் கூடவும்....கலகலப்பாக கூட்டு சேரும்......:thumbsup
  பூரி- சன்னா .....
  தோசை- அவியல்.....
  நிறைய அடுக்கிடுவேன்......:spin
   

Share This Page